ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார். நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொது மன்னிப்பு வழ…
-
- 0 replies
- 604 views
-
-
15 JAN, 2024 | 01:01 PM யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை சிறுமிக்கு கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் . இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் கூறுகின்ற…
-
- 0 replies
- 634 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 JAN, 2024 | 04:07 PM அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம் சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருணாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, அதைப் போலவே, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தியின் கண்டி …
-
- 3 replies
- 607 views
- 1 follower
-
-
13 JAN, 2024 | 09:34 PM மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகிய இருவரும் இன்று சனிக்கிழமை (13) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சிறைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த நவம்பர் மாதம் இறந்தவர்களை நினைவேந்தல் செய்த காரணத்தால் மட்டும் இவர்கள் ஆறு பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்க…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு விஜயங்கள், எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்பு ஆகியவற்றிற்காக 200 மில்லியன் ரூபாவை மேலதிக ஒதுக்கீடாக பாராளுமன்றத்தின் அனுமதியை கோரியிருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிதி ஒழுக்கத்தை முதலில் கடைப்பிடிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்த அவர், வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு இவ்வளவு பாரிய தொகையை ஒதுக்குவதற்கு முன் பாராளுமன்றமும் ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 229 views
- 1 follower
-
-
14 JAN, 2024 | 11:47 AM வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 23 இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
14 JAN, 2024 | 12:47 PM கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்ப்பாசன வாய்க்காலுக்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று (13) இரவு இடம்பெற்றதாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுஷன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஷ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜமீல் விசாரணைகளை மேற்கொண்டார்.…
-
- 0 replies
- 518 views
- 1 follower
-
-
மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் பாதியளவு வெளியாட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிக்க அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுகின்றது. வெளியாட்களுக்கு வீடுகள் வழங்கக் கூடாது என எத்தன…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
09 JAN, 2024 | 11:36 AM நாட்டில் வற் வரி அதிகரித்த நிலையில் பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் சீனி, உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோதுமை மா, பருப்பு மற்றும் சில அரிசி வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. இதன்படி , 300 ரூபாவாக இருந்த பருப்பு 1 கிலோ 350 ரூபாவாகவும், 290 ரூபாவாக இருந்த சீனி 1 கிலோ 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன. https://www.virakesari.lk/article/173486
-
- 3 replies
- 792 views
- 1 follower
-
-
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானி வெளியீடு! Published By: VISHNU 14 JAN, 2024 | 11:31 AM வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, கல்வி அமைச்சுக்கு இரண்டு பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சுகாதார அமைச்சுக்காக 21 டபிள் கெப் வாகனங்கள் இறக்…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 11:56 AM பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பயணிகள் பேரூந்துகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கொட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துமாறும் அதன்படி பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா…
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 11:12 AM ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி முதல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு வருகைதரவுள்ளார். சுனிச்சி சுசுகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது" என சுசுகி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172530
-
- 6 replies
- 547 views
- 1 follower
-
-
13 JAN, 2024 | 09:30 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை இன்று சனிக்கிழமை (13) முன்வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீளாய்வு செய்து,சிவில் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மின்கட்டணம் திருத்தம் தொடர்பான அறிக்கை மின்சார சபையிடம் சமர்ப்பிக்கப்படும் என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைத்துள்ள நிலையில் நீர்மின்னுற்பத்தியின் ஊடாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்கட்டணத்தை குறைப…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
14 JAN, 2024 | 06:42 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிரக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது - அருட்தந்தை மா.சத்திவேல் 13 JAN, 2024 | 11:03 AM ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று சனிக்கிழமை (13 ) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அப்போராட்டத்திற்கு உந்து சக்தி…
-
- 1 reply
- 436 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 11:50 AM உலக பொருளாதார மாநாட்டின் 54 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிற்சர்லாந்து சென்றுள்ளார். இந்நிகழ்வு நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 12 நாட்கள் தங்கியிருந்து மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/173851
-
- 1 reply
- 495 views
- 1 follower
-
-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் நம் மரபில் உண்டு. உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவானே. கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகிறது. அப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் சூரியன் காலச் சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலத்தில் ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டை உத்தராயனம், தட்சிணாயனம் என இரண்…
-
- 1 reply
- 949 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 DEC, 2023 | 07:00 PM (நா.தனுஜா) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார். அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்…
-
- 10 replies
- 848 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று 12ஆம் தேதி விடுத்த அறிக்கையின்படி, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மொத்தம் 53,641 குடும்பங்களை…
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 JAN, 2024 | 03:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன? நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. நாமல் ராஜபக்ஷக்கு எவ்வாறு அரச இல்லத்தை வழங்க முடியும். ராஜபக்ஷர்கள் இன்றும் அரச இல்லங்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) …
-
- 2 replies
- 312 views
- 1 follower
-
-
13 JAN, 2024 | 02:34 PM இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் பழைய எலுவாங்குளம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் மன்னார் வீதியின் பழைய எலுவாங்குளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பழைய எலுவாங்குளம் பிராதன வீதியிலிருந்து கலா ஓயா பாலம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பெற்றுள்ளது. அத்துடன் பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் அப்பகுதியிலுள்ள மக்கள…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குராேத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்…
-
- 5 replies
- 329 views
- 1 follower
-
-
காஸாப் பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஒருநாட்டை நிறுவி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது என்றும், இரண்டு நாடுகள் நிறுவப்பட்டு அந்த இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படுவதன் ஊடாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலையால், காஸா முனையில் ஏற்பட்டுள்ள போர்நிலை தொடர்பிலும் அங்கு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பிலும் தற்காலத்தில் உலகெங்கும் விவாதங்கள் தீவிரம்பெற ஆரம்பித்திருக்கின்றன. இது எ…
-
- 1 reply
- 327 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 DEC, 2023 | 02:30 PM தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் அங்கு ஆஜராகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172505
-
- 4 replies
- 353 views
- 1 follower
-
-
ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் : ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா 12 JAN, 2024 | 07:43 PM ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC), இப்போது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (ACA) கீழ் அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் க…
-
- 1 reply
- 356 views
- 1 follower
-