Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி சுவிற்சர்லாந்துக்கு பயணமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3  13 JAN, 2024 | 11:50 AM

image
 

உலக பொருளாதார மாநாட்டின் 54 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிற்சர்லாந்து சென்றுள்ளார்.

இந்நிகழ்வு நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 12 நாட்கள் தங்கியிருந்து மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/173851

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்து கொண்டு உகண்டாவுக்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி

13 JAN, 2024 | 01:25 PM
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று சனிக்கிழமை (13) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, சுவிட்சர்லாந்து – ஆசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை பேச்சு ஒன்றியத்தின் கூட்டத்தில் ‘எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்னும் தலைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்த உள்ளார்.

அதனையடுத்து இந்த விஜயத்தின் போது பல்வேறு பிரமுகர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதேநேரம், சுவிட்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளதோடு பல்வேறு நாடுகளில் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

குறித்த மாநாட்டினை நிறைவு செய்துகொண்டு அவர் எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173859

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடை நடுங்கி தமிழ்வின் ஏன் அரசியல்வாதி முகத்தை மறைக்கிறது? பெயர் வெளியிடவில்லை? பயமா? அல்லது வெட்டி ஒட்டிய ஊடகத்தில் இந்த விபரங்கள் கிடைக்கவில்லையா?
    • இதில யார் மறுபடி மாவுக்கட்டு போடவைத்தது?! அல்லது எல்லோருமாகச் சேர்ந்து தவறி அவருக்கு மேல விழுந்திருப்பினமோ?!
    • கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பொதிகளை நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியுள்ளார். மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் அச்சுறுத்தியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அரசியல்வாதியின் அடாவடித்தனம் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்.   பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியிருந்ததால் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல்வாதியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது, விமான நிலைய பாதுகாவலர்களை திட்டிய அரசியல்வாதி, தனது பயணத்தைத் தடுத்ததாக கூறப்படும் இரண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளையும் தனது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்ததாக மூத்த அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். தன்னுடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பொதி எடுத்து செல்பவர்களுக்கு குறைந்த பணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை அவர் கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   காவலர் மீது தாக்குதல் இதனால் ஆத்திரமடைந்த அந்த அரசியல்வாதி, தனது காலணியால் காலை மிதித்து, காதில் குத்திவிட்டு, பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ஊழியர் அரசியல்வாதிக்கு பயந்து, தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் காரணமாக, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை.  அரசியல்வாதியின் இந்த செயல் விமான நிலையம் முழுவதும் பரவியுள்ளது. எனினும் இந்த சம்பவம் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளது. https://tamilwin.com/article/tension-situation-in-katunayake-airport-1715831527
    • அமெரிக்க கப்பல் விபத்து: 50 நாட்களாக கப்பலில் சிக்கியுள்ள 20 இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெடிக்க வைக்கப்பட்ட பால்டிமோர் பாலம் கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டிப்மேன் ஜூனியர் பதவி, பிபிசி நியூஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது `டாலி’ என்ற கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து கிட்டத்தட்ட ஏழு வாரம் ஆகிவிட்டது. திங்களன்று, உடைந்த பாலத்தின் இடிபாடுகளில் இருந்து 'டாலி' என்ற கப்பலை வெளியே இழுக்க, சிறியளவில் வெடிவைத்து இடிபாடுகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பெரிய கப்பலில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட அடுத்தடுத்த வெடிப்புகள், பால்டிமோர் நகரின் புகழ்பெற்ற பிரான்சிஸ் ஸ்டாட் பாலத்தைத் துண்டுகளாகச் சிதறடித்தது. அதன் இடிபாடுகள் மேரிலாந்தின் படாப்ஸ்கோ ஆற்றில் மூழ்கின. ஏழு வாரங்களுக்கு முன், பாலத்தின் மீது கப்பல் மோதியதில், ஆறு பேர் இறந்தனர். வெடி வைத்து தகர்ப்பதால் இடிபாடுகளில் சிக்கிய கப்பலை மீட்கும் ஒரு நீண்ட செயல்முறை முடிவுக்கு வரும் என்று நிர்வாகமும் மீட்புக் குழுவினரும் நம்புகிறார்கள். இந்தக் கப்பலில் உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 21 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்று மீட்புக் குழு முழுமையாக நம்புகிறது. இருப்பினும், அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பால்டிமோர் நகரில் இருந்து புறப்பட்ட 298 மீட்டர் நீளம் கொண்ட டாலி என்ற கப்பல், இலங்கைக்குத் தனது 27வது நாள் பயணத்தைத் தொடங்கியபோது பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் மோதி கரை ஒதுங்கியது. இதனால், இந்தக் கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான டன் இரும்பு, சிமென்ட் ஆகியவை படாப்ஸ்கோ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.   அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முதல் கட்ட விசாரணை அறிக்கையில், சம்பவத்துக்கு முன்னர் கப்பலில் இரண்டு மின்தடைகள் ஏற்பட்டதாகவும், இதனால் கப்பலின் பல உபகரணங்கள் வேலை செய்யாமல் போனதும் கண்டறியப்பட்டது. விபத்து நடப்பதற்கு 10 மணிநேரத்திற்குள் கப்பலில் இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த பணியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 20 இந்தியர்கள் உட்பட 21 பேர் உள்ளனர். விசா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தரையிறங்கும் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர்கள் கரைக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். மேலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), எஃப்.பி.ஐ ஆகியவற்றின் விசாரணைகளும் அவர்கள் கப்பலில் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். திங்களன்று, பாலத்தில் சிக்கிய கப்பலை மீட்டெடுக்க, அங்கு வெடி வைத்து தகர்த்தபோதும், அந்தக் குழுவினர் கப்பலுக்குள் இருந்தனர். வெடி வைத்து இடிபாடுகளைத் தகர்க்கும் இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு முன்னர், அமெரிக்க கடலோர காவல் படை அட்மிரல் ஷானன் கில்ரேத், `` கப்பலில் இருக்கும் பணியாளர்கள் தீயணைப்புக் குழுவினருடன் கீழ் தளத்தில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் கப்பலின் ஒரு பகுதி. கப்பலைத் தொடர்ந்து இயக்குவதற்கு அவர்கள் அவசியம்,” என்று கூறினார். கப்பல் இந்த வாரம் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் 3.7 கி.மீ. தொலைவில் இருக்கும் கரைக்கு கப்பல் எப்போது கொண்டு வரப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.   'சோகமான சூழல்' பட மூலாதாரம்,GETTY IMAGES கப்பலில் உள்ள குழுவினருடன் தொடர்பில் இருப்பவர்களில் ஒருவர் ஜோசுவா மெசிக். மெசிக் பால்டிமோர் சர்வதேச கடற்படை மையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும், இது கடற்படையினரின் உரிமைகளுக்காக இயங்கி வருகிறது. மெசிக்கின் கூற்றுப்படி, எஃப்.பி.ஐ விசாரணைக்காக நிர்வாகக் குழு கப்பலில் உள்ளவர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்தது, அதன் பிறகு அவர்கள் சில வாரங்களுக்கு வெளியுலக தொடர்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டனர்.” ``அவர்களால் ஆன்லைன் வங்கியைப் பயன்படுத்த முடியாது. அவர்களால் கட்டணங்களைச் செலுத்த முடியாது. அவர்களிடம் தரவு அல்லது யாருடைய தொலைபேசி எண் எதுவும் இல்லை, எனவே இவர்கள் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பேச முடியாது. தூங்குவதற்கு முன் அவர்களின் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்கவும் முடியாது. இது உண்மையில் ஒரு சோகமான சூழல்," என்றார். கப்பலில் இருந்த பணியாளர்களின் அவல நிலை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒன்று சிங்கப்பூர் கடல்சார் அதிகாரிகள் சங்கம் மற்றொன்று சிங்கப்பூர் கடல்சார் ஊழியர்களின் அமைப்பு. மே 11 அன்று ஒரு கூட்டறிக்கையில், இந்தத் தொழிற்சங்கங்கள் "மன உளைச்சல் மற்றும் குற்றவியல் வழக்கு பற்றிய பயம் காரணமாக மக்களின் மன உறுதி குறைந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு இல்லாததால் அக்குழுவினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களின் தொலைபேசிகளை விரைவாக திருப்பித் தர வேண்டும்," என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடற்பயணிகள் சர்வதேச சங்கத்தின் தலைவர் டேவ் ஹிண்டெல் கூறுகையில், "எவ்வளவு காலம் விசாரணை நடந்தாலும், அந்தக் கப்பலில் உள்ளவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் மீறப்படக் கூடாது." "கப்பல்களில் பயணம் செய்பவர்கள் தங்கள் சொந்த வேலைகள், கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைத் தங்கள் மொபைல் போனில் இருந்து செய்கிறார்கள் என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக, அவர்கள் தங்கள் குடும்பத்துக்காக தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தொலைபேசி மூலம் பணம் அனுப்புகிறார்கள். அடிப்படை விஷயங்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் மனச் சோர்வடைந்து உள்ளனர்,” என்று குறிப்பிட்டார். பால்டிமோரில் இருந்து வரும் கப்பல்களைக் கண்காணிக்கும் `அப்போஸ்டல்ஷிப் ஆஃப் தி சீ’ என்னும் திட்டத்தை நடத்தும் ஆண்ட்ரூ மிடில்டன், இரண்டு வாரங்களுக்கு முன்பு பணியாளர்களைச் சந்தித்ததாகவும், அவர்களிடம் பதற்றம் இருந்தபோதிலும், ஒரு 'நேர்மறை அணுகுமுறையை' கண்டதாகவும் பிபிசியிடம் கூறினார். அவர் கூறுகையில், "கப்பலில் இருந்த பணியாளர்களிடம் நாங்கள் சகஜமாக பேச முயன்றோம். அவர்கள் மனதில் இருந்த தயக்கத்தை நீக்கினோம். பின்னர் அவர்களின் பெயர்களைக் கேட்டோம், சொன்னார்கள். அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அவர்கள் திருமணமானவர்களா அல்லது குழந்தைகள் இருக்கிறார்களா என்று அவர்களிடம் பேசினோம். அவர்களைக் கொஞ்சம் மன உளைச்சலில் இருந்து மீட்க நகைச்சுவையாகப் பேசினோம். அவர்களும் இறுக்கமான மனநிலையில் இருந்து வெளியேறி அவர்களுக்குள் கேலி செய்து கொண்டனர்,” என்றார்.   அடுத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ”தற்போது கப்பலில் உள்ளவர்களுக்கு சிம் கார்டுகள் உடன் தற்காலிக மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் இணைய வசதி இருக்காது,” என்று மெசிக் கூறுகிறார். பல்வேறு சமூக குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலர் அவர்களுக்கு உணவுப் பொருட்கள், போர்வைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததில் அரசாங்கத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடும் `யுனிஃபைட் கமாண்ட்’ அமைப்பை பிபிசி தொடர்பு கொண்டு, கப்பலில் உள்ளவர்கள் எப்போது வீட்டிற்குச் செல்ல முடியும் என்பது குறித்துக் கேட்டது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கப்பல் துறை நிறுவனமான `சினெர்ஜி மரைன்’ செய்தித் தொடர்பாளர் டாரெல் வில்சன் பிபிசியிடம், ”மீட்புப் பணிகள் மிகச் சிறப்பாக நடக்கின்றன. பால்டிமோரில் அனுப்பப்பட்ட எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் முதல் நாளிலிருந்து அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எங்களால் இயன்றவரை, அவர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்கிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளும் கப்பல்களில் அனுப்பப்படுகின்றன, இதனால் அங்குள்ள சமையல்காரர்கள் ஓய்வெடுக்க முடியும்," என்றார். "கப்பலில் உள்ளவர்களுக்காக இந்து மத குருமார்கள் உட்படப் பல்வேறு சமயப் பிரதிநிதிகள் உணர்வுபூர்வமான ஆதரவையும் வழங்கி வருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த தைரியத்தை அளிக்கிறது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும், பணியாளர்கள் எப்போது கப்பலைவிட்டு வெளியேறுவார்கள் என்பதை அவரால் கூற முடியவில்லை. விசாரணை நடந்து வருவதாகவும், இவர்கள் அளவுக்கு கப்பலைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது என்பதால் அவர்களை கப்பலில் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். "கப்பலில் இருக்கும் பணியாளர்கள் கப்பலின் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. கப்பல் பாலத்தில் இருந்து வெளியேறியவுடன், அதில் சிக்கி இருப்பவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதற்காக கப்பலில் ஏறிச் செல்வேன்" என மெசிக் கூறுகிறார். அதன் பிறகு, கப்பலில் இருப்பவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (5 பேர்) விரைவில் கடற்கரையில் தரையிறங்கத் தேவையான பாஸ்களை பெறுவார்கள் என்று அவர் நம்புகிறார். இருப்பினும், அவர்களின் செயல்பாடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக, அவர்கள் கடலோரப் பகுதியில் இருக்கும்போது எப்போதும் அவர்களுடன் ஒரு பாதுகாவலர் இருக்க வேண்டும். அவர் மேலும் கூறுகையில் "கப்பலில் உள்ளவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய முயல்கிறேன். கப்பலின் கேப்டன் போன்ற சில பணியாளர்கள் இயல்பாக அமைதியாக உட்காருவதை விரும்புகின்றனர். நாங்கள் அவர்களை சுதந்திரமாக திறந்தவெளி காற்றைச் சுவாசிக்க உதவ விரும்புகிறோம். அவர்கள் எல்லா நேரமும் கப்பலுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/ckdqd8qpg72o
    • தனியே பெண்காவலர்களுடன் கொண்டு போகும்போதே தெரிந்திருக்கணும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.