ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு Mar 9, 2026 - 10:52 PM இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். 281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும். 329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூப…
-
-
- 6 replies
- 345 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 02:40 PM நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல், பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படக்கூடும். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புற சூழலில் அதிக நேரம் செலவிடும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாகக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக வெப்பநிலையினால் சிற…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்! Mar 9, 2026 - 08:40 PM 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மின் விநியோகப் பணிகளுக்கான பொறுப்பு எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட்டுக்கு (EDL)மாற்றப்பட்டுள்ளது. மின்விநியோகத் துறையினுள் வினைத்திறன், நம்பகத்தன்மை மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக EDL நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பதிலளிக்கக்கூடிய மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக்…
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது - நீதியமைச்சர் Published By: Vishnu 09 Mar, 2026 | 04:08 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது.கல்வி தகைமையை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்படும். நியமனத்தின் பின்னர் நீதியமைச்சின் ஊடாக போதுமான பயிற்சிகள் வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டில் சமாதான நீதவான்களுக்கான பயிற்சி வழங்குதல், தற்போதுள்ள சமாதான நீதவான்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் புதிதாக நியமிக்கப்படும் சமாதான நீதவான்களின் எண்ணிக்கை மற்றும் சமாதான நீதவான் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியி…
-
- 1 reply
- 152 views
- 1 follower
-
-
09 Mar, 2026 | 04:21 AM (இராஜதுரை ஹஷான்) கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருக்கும் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்த…
-
- 0 replies
- 116 views
-
-
Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 12:56 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் அதிக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால், வெதுப்பக வண்டிகளுக்கென பிரத்தியேகமானதொரு ஒலியை ஏற்கனவே வழங்கியிருந்த போதிலும் அதன…
-
-
- 4 replies
- 361 views
- 1 follower
-
-
09 Mar, 2026 | 04:35 PM யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 865 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர். அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். யாழ். க…
-
- 0 replies
- 144 views
-
-
09 Mar, 2026 | 04:47 PM உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலை மாற்றங்களை எதிர்கொள்ளும் பலமான நிலையில் இலங்கை தற்போது உள்ளதாகவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், இலங்கை தற்போது மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அக்காலத்தில் 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன், மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை விடவும் சாதகமான நிலையில் உள்ளது. மேலும், பூச்சிய நிலையை நெருங்கியி…
-
- 0 replies
- 76 views
-
-
09 Mar, 2026 | 05:27 PM (எம்.நியூட்டன்) சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள…
-
- 0 replies
- 93 views
-
-
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னிரெண்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கி…
-
- 0 replies
- 98 views
-
-
தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு Published By: Vishnu 09 Mar, 2026 | 03:53 AM இலங்கையின் 5ஆவது தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.South Asians & Diaspora நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 10 ஆயிரம் பேரிடம் முன்னெடுக்கப்படவுள்ள இக்கள ஆய்வின் மூலம், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களின் வாய் சுகாதார நிலை தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. இதற்காக வீடுகளுக்கும் பாடசாலைக…
-
- 2 replies
- 143 views
- 1 follower
-
-
மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம். adminMarch 9, 2026 தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன் அவர்கள் VMCT கலை மன்றத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில் VMCT கலை மன்றத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என…
-
- 0 replies
- 84 views
-
-
சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து Published By: Vishnu 09 Mar, 2026 | 12:52 AM (க.சிவலிங்கமூர்த்தி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை' எனும் தொனிப்பொருளில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் ஏற்பாடு செய்த விசேட மாநாடு ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 115 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் பெண்களின் உரிமைகள் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பெண்களின் உண்மையான விடுதலைக்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. நிகழ்வில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் ஹேமமா…
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! இன்றையதினம் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். குறித்த மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள் தொகுதி திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது அதிலிருந்து 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து சோதன…
-
- 0 replies
- 147 views
-
-
முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் March 8, 2026 3:30 pm சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வுறவுகள், இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர். இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட இடமான வட்டுவாகல் பாலம், வலி சுமந்த ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. அங்கு கூடியிருந்த பெருந்திரளான தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக…
-
- 1 reply
- 143 views
- 1 follower
-
-
கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; ரவிகரன் கடிதம்! முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உ…
-
- 0 replies
- 102 views
-
-
யுத்தத்தில் காணாமல் போன உறவுகளின் நிலையை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார 08 Mar, 2026 | 11:29 AM (இராஜதுரை ஹஷான்) யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை. காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.காணாமல் போனோர் பற்றியவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள்.இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வு…
-
- 0 replies
- 108 views
-
-
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை 08 Mar, 2026 | 02:13 PM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹே…
-
- 0 replies
- 97 views
-
-
எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர் இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவினரும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னிலைப்படுத்துவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும், அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகப் பெண்கள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பது குறித்து நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் ஒரு இயக்கமே இது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம். பெ…
-
- 0 replies
- 109 views
-
-
குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம் தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயி…
-
- 1 reply
- 118 views
-
-
யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்! adminMarch 7, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர். கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொ…
-
- 0 replies
- 81 views
-
-
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்! adminMarch 7, 2026 பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, சுமார் நான்கு மாதங்களின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட “சிவகங்கை” பயணிகள் படகு, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. அதன் பின்னர், 92 பயணிகளுடன் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி பயணித்ததாக…
-
- 0 replies
- 80 views
-
-
டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி Published By: Digital Desk 1 08 Mar, 2026 | 08:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் மேற்கொண்ட முதலாவது இந்தியப் பயணத்தை அடுத்து, கட்சிக்குள் நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ரில்வின் சில்வா, தனது பயணம் தொடர்பான விவரங்களைக் கட்சியினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் இறுதியில், மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி உடனடியாகத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது…
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை! Published By: Digital Desk 1 07 Mar, 2026 | 03:53 PM மேற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பானிய தற்காப்புப் படையின் போர்க்கப்பலில் திடீரென நோய்வாய்ப்பட்ட வீரர் ஒருவர், இலங்கை கடற்படையினரின் துரித நடவடிக்கையினால் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்குச் சொந்தமான "JMSDF ONAMI" என்ற போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய குழு உறுப்பினர் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, கப்பல்…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம் Mar 7, 2026 - 04:32 PM அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்பதால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயன்முறைக்காகத் தகுதியுடைய 2,993,558 நபர்கள் ஏற்கனவே தமது தகவல்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்களின் தகவல்களை உறுதி…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-