ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
(செ. சுபதர்ஷனி) "இந்தியாவின் 'மான் பார்மசூட்டிகல்' நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்: "பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தி…
-
- 0 replies
- 105 views
-
-
IOM மூலம் இலங்கையின் தங்குமிடங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது ஜப்பான்! 19 Dec, 2025 | 12:47 PM இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, சர்வதேச புலம்பெயர் அமைப்பின் [International Organization for Migration (IOM)] இலங்கைக்கான தூதரகத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்கோவுடன் இணைந்து, பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) இயக்குநர் (முனனேற்பாடுகள்) சதுர லியனாரச்சியிடம் தங்குமிடங்களை வெள்ளிக்கிழமை (19) ஒப்படைத்தார். IOM மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை உதவி, 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையதாகும், இது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நன்கொடையின் ஒரு பகுதியாகும், இதை ஜப்பான் அரசு டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் அமைப்புகளான IOM, உலக உணவுத் திட்டம் [Worl…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு! 19 Dec, 2025 | 02:15 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையை…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்! 19 Dec, 2025 | 11:45 AM மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்கான கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப…
-
- 0 replies
- 73 views
- 1 follower
-
-
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்! Published By: Digital Desk 2 19 Dec, 2025 | 10:37 AM யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை…
-
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கிருஷ்ணன் கலைச்செல்வி 18 Dec, 2025 | 05:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் அது என்றாவது ஒருநாள் அதன் பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்ற சிறந்த பாடத்தை இடம்பெற்ற அனர்த்தம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் புகட்டியுள்ளது. எனவே அதிகம் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்ட…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் ! Published By: Digital Desk 1 19 Dec, 2025 | 10:19 AM வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸார் மேல…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு! written by admin December 18, 2025 மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சிறைபிடிக்கப்பட்டுள்ளன. 🔍 சம்பவத்தின் விபரங்கள்: இடம்: மாலைத்தீவின் வடக்கு பகுதியில் உள்ள கேலா (Kelaa) தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. நேரம்: நேற்று முற்பகல் 8:30 மணியளவில், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்ப…
-
- 0 replies
- 212 views
-
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன் 18 Dec, 2025 | 05:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மலையகம் எமது தாயகம். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்…
-
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி Dec 18, 2025 - 07:57 PM கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. உடுதும்பரை பகுதியில் மண்சரிவு…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் Dec 18, 2025 - 04:48 PM 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். '119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உண்மையான…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0 - 60 கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், …
-
- 0 replies
- 185 views
-
-
18 Dec, 2025 | 02:29 PM கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரி…
-
- 0 replies
- 129 views
-
-
18 Dec, 2025 | 02:10 PM இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின்…
-
- 1 reply
- 170 views
-
-
18 Dec, 2025 | 02:18 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது. கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்…
-
- 0 replies
- 91 views
-
-
18 Dec, 2025 | 05:28 PM பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. சட…
-
- 0 replies
- 83 views
-
-
18 Dec, 2025 | 05:44 PM யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லைக் கல் நாட்டுவதாக கூறினர். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தம…
-
- 0 replies
- 93 views
-
-
18 Dec, 2025 | 05:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சேதமடைந்த புகையிரத பாதைகள் வெகுவாக புனரமைக்கப்படுகின்றன. 2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும். 2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தித்வா சூறாவளி தாக்கத்தினால் மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 107 views
-
-
18 Dec, 2025 | 06:55 PM மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் பெய்த அதிக மழை காரணமாக நுவரெலியா பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்தமையே கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாகும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர தெரிவித்தார். நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது உபாலி வணிகசேக்கர இதனை தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் பிரதி நகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உட்பட மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாநகர சபை க…
-
- 0 replies
- 147 views
-
-
டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல் 18 Dec, 2025 | 02:04 PM ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக மலையகப் பிரதேசங்கள், குறிப்பாக தோட்டப்பிரதேசங்களில் வாழும் மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமை மற்றும் அபாய நிலைகளில் வாழ்ந்துவந்த இம்மக்கள், இந்தப் பேரிடரால் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளது. அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண, புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணத் திட்டங்கள் மலையக மக்களைச் சென்றடைவதில் பல்வேறு சவால்கள் நி…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் ! 18 Dec, 2025 | 11:17 AM நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார். பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜ…
-
- 0 replies
- 165 views
-
-
யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம் 18 December 2025 யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தாங்கள் செயற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியிருந்தனர். தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர், சி…
-
- 0 replies
- 160 views
-
-
பிள்ளையானின் நெருங்கிய சகா கைது கனகராசா சரவணன் சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாட்களின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை (17) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்…
-
- 0 replies
- 178 views
-
-
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு-வெலியோயா, முல்லைத்தீவு-திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு-கொக்கிலாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டு, பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவசர நடவடிக்கையாக, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இராணுவ பொறியாளர் படையினர் உடனடி பழுதுபார்ப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். 120 அடி ந…
-
- 1 reply
- 228 views
-
-
எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்! ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் தாம் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க . நேற்று (17) இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று பிற்பகல் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக …
-
- 0 replies
- 114 views
-