ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
முதல்வர் கருணாநிதி, மீண்டும் திராவிட நாடு, தனித் தமிழ்நாடு கொள்கைகள் பற்றி பேசி பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஏதோ சேதி சொல்கிறார். மீண்டும் பிரிவினை பேசுகிறார்’ என்று நாலாப்புறமும் இருந்து கருணாநிதியை நோக்கி விமர்சனங்கள் வருகின்றன. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் திராவிடக் கொள்கைகள் சீரழிந்து போகும் என்றும் அண்மையில் முதல்வர் பேசியிருக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்டால், கூட்டணிக் கட்சிகளைப் பயமுறுத்த இப்படியெல்லாம் பேசுவது அவரது வழக்கம்தான்’’ என்றார். இதுகுறித்து தேசிய முற்போக்குத் திராவ…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும், தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலம் என்பதை அடையாளம் இன்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று பிரித்தானியா வரவுள்ளதாலும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப் படவேண்டிய விடையமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதாக இருந்தது. எனினும் நேரமின்மைக் காரணமாக அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதாக இருந்தது எனினும், அவர் ஹம்பாந்தோட்டயில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகக் கிளையை திறக்கச் சென்றுவிட்டதனால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கிளைக் காரியலாயத்தை திறந்து வைத்தவுடன் எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். .தமக்கு நேரம் இல்லையென கிருஸ்ணா கூறியதாக சுரேஸ் எம். பி. கூறியுள்ளார். இதனால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகி…
-
- 12 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதாக கூறப்படும் அத்துமீறிய குடியேற்றங்களுடன் ஒப்பிட்டு கொழும்பிலே தமிழ் பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்வது தொடர்பிலே ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து கண்டனத்துக்குரியதாகும். கொழும்பு இலங்கையின் தேசிய அரசியல் பொருளாதார தலைநகரம் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை இலங்கையின் தலைநகரமாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் கொழும்பு மாநகரமே இலங்கையின் தலைநகரமாக செயற்படுகின்றது. தமிழர்களின் கொழும்பு மாநகர இருப்பு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
உங்கள் சமர்ப்பித்தலை செய்துவிட்டீர்களா? இல்லை என்றால், இப்போதே செய்யுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: panelofexpertsregistry@un.org இறுதிப் போரில் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் இடம்பெற்றனவா தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆலோசனை வழங்க ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.. மேற்கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பான தகவல்களை அல்லது ஆதாரங்களை வரும் டிசம்பர் 15, 2010 முன்பு, 10 பக்கங்களுக்கு மேற்படாமல் சம்பர்ப்பிக்குமாறு இந்தக் குழு கேட்டுள்ளது. தனிப்பட்ட முறையிலோ, அமைப்புகளாகவோ நாம் இதைச் செய்ய முடியும். panelofexpertsregistry@un.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் விரும்பின் un@cwvhr.org முகவரிக்கு BCC செய்யவும்…
-
- 0 replies
- 905 views
-
-
அண்ணனுக்கு அன்னை! அறிவுமதியின் சிறப்புக் கவிதை தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடனின் பிந்திய இதழில் பிரபலமான கவிஞர் அறிவுமதி எழுதிய வாசிப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான கவிதையொன்று பிரசுரமாகியுள்ளது. முக்கியத்துவம் கருதி இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது... அழுகின்றேன் அம்மா உன் தூய மகன் கருவறையைத் தொழுகின்றேன் அம்மா என் இனத்தை எழுப்புதற்கே இனிய மகன் பெற்றெடுத்தாய் இன்று எழ முடியா நோய்தன்னை எதற்கம்மா தத்தெடுத்தாய்? ஈரய்ந்து மாதந்தான் உன் பிள்ளை உன் வயிற்றில் இருந்தான் பின்புஇ ஈழத் தாய் பெற்றெடுக்க காடென்னும் கருவறைக்குள் கன காலம் கன காலம் கரந்தான் தமிழருக்கே தெரியாமல் தமிழருக்கே உழைத்தான் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்ற வாரம் வரவேண்டிய எனது கதையின் இரண்டாம் பாகம் சில நாட்களைக் கடந்தே இப்பொழுது வருகின்றது. அதற்கான காரணம் எம்மக்களுக்குத் தெரியும். என்றாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு. தமிழர்களின் சிறப்புக்கும், வணக்கத்துக்குமுரிய நாளான நவம்பர் 27இல் என்னோடு களமாடி வீழ்ந்த தோழிகளனதும், தோழர்களனதும் நினைவுகளையும், எமது தேசத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரத் தெய்வங்களின் நினைவைத் தாங்கி, வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளினால் இத்தொடரினை உரிய நேரத்திற்குத் தர முடியவில்லை. எனது குடும்பம் வறுமையான குடும்பமும் இல்லை. பணக்காரக் குடும்பமும் இல்லை. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தது. வன்னி மண்ணில் சிங்களவனின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் எந்தவித துன்பமுமின்றி மகிழ்ச்சியாகவே வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னிப்போர் மர்மங்கள் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை.. இன்று உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஊடகங்களில் முன்னணி இடம் பிடித்துள்ளது விக்கிலாக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள். உலகத்தில் உள்ள 38 நாடுகளின் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் சேகரித்த இரகசிய தகவல்கள் விக்கிலாக்ஸ் இணையம் மூலம் அமெரிக்காவிலிருந்து கசியவிடப்பட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டிலிருந்து இலாபநோக்கற்ற முறையில் இயங்கிவரும் விக்கிலாக்ஸ் தனது பணியை மேலும் தொடர்ந்தால் சிறீலங்கா – இந்தியா போன்ற நாடுகள் வன்னிப்போரில் வகித்த உண்மைப் பாத்திரங்களையும் உலகால் அறிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை தனக்குள் ஒரு நிஜமான கொள்கையை வகுத்துக் கொண்டு வெளிநாடுகளை எவ்வாறு கையாண்டது என்ற விபரங்கள் அடங்க…
-
- 11 replies
- 3k views
-
-
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளைக் காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டு முதல் முசளி, மன்னார் நகர்புரம், மடு, மாந்தை மற்றும் மன்னார் சுற்றுவட்டாரங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபின தேவைப்பாடுகளை இந்த செஞ்சிலுவை சங்கத்தினர் கிளைக்காரியாலயம் முன்னெடுத்து வந்தனர். மேலும், இன்றிலிருந்து குடும்களிற்கான உதவி விஜய செயற்திட்டத்தினை இலங்கை செஞ்சிலுவை நமூகத்தினர் இல.25, பீல்ட் வீதி, சின்னக்கடையில் (தொடர்பிலக்கம் - 024-3245287) அமைத்திருக்கும் கிளைக் காரியாலயம் மூலம் முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை உறவினர்…
-
- 0 replies
- 378 views
-
-
அரச எதிர்ப்புக் கொள்கையைத் தற்காலிகமாகவேனும் கைவிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு அமைவாக தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை எதிர்ப்பதில்லை என்றும் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதனால், நேற்று மாலை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட இறுதி வாக் கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அது விலகிக் கொண்டது. "மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தம் முடன் அரசு ஆக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.' எனக் கட்சி நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள…
-
- 0 replies
- 522 views
-
-
மட்டு. போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கொடூரம்! செவ்வாய், 30 நவம்பர் 2010 11:06 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல தவறுகள் இடம்பெற்று வருவதாக அங்குள்ள மக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி முதல் குழந்தை பிரசவிப்புக்காக சென்ற திருமதி. சர்மிளா இம்தியாஸ் வயது 26 என்ற இளம் பெண்ணிற்கு வைத்தியசாலையில் பல இன்னல்களும் விரும்பத்தகாத சம்பவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பிரசவ அறைக்குள் சென்ற இவரை அங்கிருக்கும் உதவி வைத்தியர் தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியது மட்டுமன்றி, உதவி தாதியர்கள் அடித்தும் இருக்கிறார்கள். முதல் குழந்தை என்பதால் ஒன்றும் புரியாத நிலையில் இருந்த சர்மிளா த…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருக்கோவில் கடற்கரைக்குக் குளிக்கச் சென்ற இரு இளைஞர்களை காணவில்லை _ வீரகேசரி இணையம் 11/30/2010 11:41:29 AM அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். தம்பிளுவில் 2 ஐச் சேர்ந்த சிவசோதி ரோஜன் மற்றும் பதுளையைச் சேர்ந்த செல்வக்குமார் ஆகிய இருவருமே இவ்வாறு காணமால் போயுள்ளனர். இவர்களை தேடும்பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
-
- 0 replies
- 391 views
-
-
அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும் - அரியநேத்திரன் எம்.பி.காட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-30 07:48:31| யாழ்ப்பாணம்] அகிம்சைப் போராட்டத்தின் போது சிங்களத் தலைவர்கள் உரிய அரசியல் தீர்வு வழங்காததன் காரணமாகவே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என் பதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அந்த யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த விடயங்களுக்கு அரசியல் தீர்வு வழங் கப்படாவிட்டால் மீண்டுமொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட் டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிக…
-
- 0 replies
- 388 views
-
-
நோர்வே கண்ணி வெடி அகற்றும் சுவிஸ் பவுண்டேசன் ‐ ஹலோ ரஸ்ட் ஆகிய அமைப்புகளுடன் இரு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது 30 November 10 01:40 am (BST) கண்ணி வெடி அகற்றும் சுவிஸ் பவுண்டேசனுடனும் ஹலோ ரஸ்ட் அமைப்புடனும் இரண்டு ஒப்பந்தங்களை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்ரற்ட் கைச்சாத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்களின் கீழ் கண்ணிவெடி அகற்றும் சுவிஸ் பவுண்டேசனுக்கு 125 மில்லியன் ரூபாய்களும் ஹலோ ரஸ்ட் அமைப்பிற்கு 112 மில்லியன் ரூபாய்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உதவுவதாக அமையும். மன்னார், வவுனியா, முல்லைத் தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைக்கு என இந்நிறுவன…
-
- 0 replies
- 286 views
-
-
‘‘புலிகள் மீதான தடையை உடைக்க முடியும்!’’ புளித்துப்போன காரணங்களைச் சொல்லித்தான் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா தடையை நீட்டித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010 06:22 டெல்லி, சென்னை, ஊட்டி என விசாரணை நடத்தி… விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை சமீபத்தில் நியாயப்படுத்தியிருக்கிறார் விசாரணைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியுமான விக்ரம்ஜித் சென். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது பற்றி இன்னும் அறிவிக்காத நிலையில்… தானே அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் மூத்த வழக்கறிஞரான கருப்பன். புற்றுநோயால் தாக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்…
-
- 0 replies
- 544 views
-
-
சம்பந்தன் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் [30 நவம்பர் 2010, செவ்வாய்க்கிழமை 6:55 மு.ப இலங்கை] கொழும்பு, நவ.30 தமிழ்த்தேசியக் கூட்மைப் பின் தலைவர் இரா. சம்பந்தன் சுகவீனமுற்றநிலையில் நேற்று முன்தினம் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இருதயக் கோளாறு காரணமாக ஏற்க னவே தமிழ்நாட்டில் சிகிச்சை பெற் றிருந்த அவர் மீண்டும் அங்கு செல்லவேண் டிய நிலை யில் திடீரென பாதிப்புக்கு ஆளானார். இதேவேளை இந்தியத் தூது வர் அசோக் கே.காந்த் நேற்று வைத்தியசாலைக்குச் சென்று சம்பந்தனின் நலன் குறித்து கேட்டறிந்து கொண்டார். கூட் டமைப்பு நாடாளுமன்ற உறுப்பி னர்களும் தலைவர் சம்பந்த னைச் சந்தித்து குசலம் விசா ரித்தனர். uthayan
-
- 0 replies
- 606 views
-
-
செவ்வாய்க்கிழமை, 30, நவம்பர் 2010 (11:8 IST) சென்னை:இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீனவர்கள் மகாபலிபுரம் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தது கடலோர காவல்படை. கைது செய்யப்பட்ட 11 பேரும் சென்னை காசிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை மீனவர்களின் 2 படகுகளும், 5,500கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. nakkheeran
-
- 0 replies
- 242 views
-
-
பத்திரிகைச் செய்தி 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 2 ஆம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று (29.11.2010) கூடி ஆராய்ந்தது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது தமிழ் மக்களுக்கு விசேடமாக இடம்பெயர்ந்து இன்னல் உற்று இருக்கும் மக்களுக்கு எந்த விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதுதான் தனது முன்னுரிமையென அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளில் அரசாங்கத்தின் இக்கூற்று எந்த வித்திலும் பிரதிபலிக்கவில்லை. வடக்கு கிழக்கை சேர்ந்த எமது மக்கள் பல வருடங்களாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்ப…
-
- 0 replies
- 432 views
-
-
தமிழ் மக்களை கவர்ந்துள்ள சர்வதேச நீதி உலகில் மனித உமைச் செயற்பாட்டாளர்கள், நிறுவனங்களால் நடைமுறைப் படுத்த முடியாமல் தவிக்கும் விடயம் என்னவெனில், பல சர்வதேச சட்டங்கள், நவீன மயப்படுத்தப்பட்ட நீதித் துறைகள் போன்றவை செயற்பாட்டிலிருந்தும் சர்வதேச குற்றங்களான சித்திரவதை, ஓர் இனத்தை பூண்டோடு அழித்தல், மனிதாபிமான போர் குற்றங்கள் என்பன தொடர்ந்து அதிகரித்து வருகின்ற மையேயாகும். இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து (1945) அமைக்கப்பட்ட ‘‘நியூரம் பேர்க் விசாரணைகள்’’ 1948 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமை பிரகடனம், இனத்தை பூண்டோடு அழிப்பதற்கு எதிரான பிரகடனம் ஆகிய வழிமுறையில் பல புதிய சர்வதேச ஆவணங்கள், பிரகடனங்கள் உருவாகின. சர்வதேச நீதியின் வரவிலக்கணம் மிகவும் சிக்கலானது. கல்வ…
-
- 0 replies
- 605 views
-
-
மொன்றியலில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் உறுதியுடன் திரண்டு வீரவணக்கம் செலுத்தினர் பல்லாயிரம் மக்கள் கார்த்திகை 28, 2010 ஞாயிற்றுக்கிழமை கனடா மொன்றியல் மாநகரில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. மொன்றியலில் அமைந்துள்ள “ சென் மேரி ஆன்” பாடசாலை மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நினைவுத்தூபிகளாலும் மஞ்சள் சிவப்பு கொடிகளாலும் அலங்கரிங்கப்பட்டிருந்த மண்டபம் நிரம்பி வழிய வருகைதந்திருந்த மக்கள் மாவீரர்களுக்கு மலர்வணக்கமும் தீபவணக்கமும் செலுத்தி அவர்கள் இலட்சியக்கனவை நிறைவேற்றுவோம் என உறுதியெடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ரொரன்ரோவில் இருந்து வருகைதந்திருந்த வானம் பாடிகள் எ…
-
- 0 replies
- 416 views
-
-
தனிச்சிங்களத்தில் கடிதங்கள் - சிறீலங்கா அதிகாரிகள் உத்தரவு நவ 29, 2010 சிறீலங்காவின் துறைமுக அதிகார சபையில் இருந்து அரச தலைவர் செயலகத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் தனிச் சிங்களத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என புதிதாக நியமனம் பெற்ற துறைமுக அதிகார சபையின் செயலாளர் சுஜதா கூரே உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள மொழியில் தயாரிக்கப்படும் கடிதத்தின் மொழிபெயர்ப்புக்கள் பின்னிணைப்பாக இணைக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். புதிதாக நியமனம் பெற்ற பின்னர் தனது திணைக்கள அதிகாரிகளிடம் பேசும்போதே அவர்; இதனை தெரிவித்துள்ளார். சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் நாடுமுழுவதும் பரப்பும் நபர்களே மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சியில் உயர் பதவியில் இர…
-
- 2 replies
- 797 views
-
-
மாவீரர் நாளில் திருச்சியில் கிளிநொச்சி நகர் திறப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலையில் சனிக்கிழமை(27-11-2010) தேசியத்தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள், நாம்தமிழர் கட்சி கொடியேற்றம், கிளிநொச்சி நகர் திறப்புவிழா, கிளிநொச்சி நகர் பெயர் பலகை திறப்பு என ஐம்பெரும் விழாவாக நாம் தமிழர் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. விழாவில் நாம் தமிழர் கட்சி புகழேந்தி தலைமை ஏற்றார் , வரவேற்பு அமுதன்,வாழ்த்துரை பண்டியத்தமிழன், தொடக்கவுரை இரா.பிரபு, உணர்வுரை மனோகரன், நிறைவுரை துரை. மேலதிக படங்களுக்கு.... http://meenakam.com/2010/11/29/14954.html
-
- 3 replies
- 2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான மெதமுலனவில் அரசாங்கத்துக்கெதிரான புகைச்சல் ஆரம்பித்துள்ளது. இதுவரை காலமும் ஹம்பாந்தோட்டையின் மெதமுலனையும் அதன் அயல் பிரதேசங்களும் என்றாலே சிறீ லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த வேறு கட்சிகளுக்கு ஆதரவாளர்கள் இல்லை எனுமளவுக்கு முற்றுமுழுக்க ஜனாதிபதியின் கோட்டையாக திகழ்ந்தது. அதுவும் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் அரசாங்கத்தின் எந்தவொரு திட்டத்துக்கும் எதிரான குரல்கள் அங்கிருந்து வெளிக்கிளம்பவில்லை. அந்தளவுக்கு அங்கே கட்சி விசுவாசமும் அதற்கப்பால் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் கெடுபிடியும் ஆழப் பதிந்திருந்தது. இவ்வாறான நிலையில் இன்று மெதமுலனைப் பிரதேசத்தின் அயல் பிரதேசமான பெலியத்தை பிரதேச சபையில் நடைபெற்ற 2011ம…
-
- 0 replies
- 768 views
-
-
தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார். ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த…
-
- 0 replies
- 443 views
-
-
ஜனாதிபதி சற்றுமுன் லண்டன் பயணம் வீரகேசரி இணையம் 11/29/2010 4:17:36 PM ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.
-
- 11 replies
- 1.3k views
-