ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உடைய உடன் பிறப்புக்கள் இலங்கை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தாய் பார்வதி அம்மாள் உடல் நலக் குறைவால் யாழ்.வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆயினும் அவரின் உடல் நிலை மிகவும் மோசம் என்று கூறா விட்டாலும் நம்பிக்கை ஊட்டக் கூடிய விதத்தில் இல்லை. அவர் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்கிற பேரவாவை வெளிப்படுத்தி வருகின்றார். இது அவரின் இறுதி ஆசை என்று நம்பப்படுகின்றது. தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியுமான கே.சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை வைத்தியசாலையில் பார்வதி அம்மாளை நேரில் போய…
-
- 15 replies
- 6.9k views
-
-
விமல் வீரவன்சவின் ஏறாவூர் கிளை காரியாலயம் தீக்கிரை நவ 4, 2010 அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஏறாவூர் கிளை காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடாவீதியிலுள்ள இக்காரியாலயம் இன்று மதியம் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினாலேயே தீக்கிரையாக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது. இதுவொரு அரசியல் பழிவாங்கும் சம்பவமாகும். இத்தாக்குதலை யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் யாரென இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார். சங்கதி
-
- 0 replies
- 646 views
-
-
ஜேர்மனியின் தேசிய மட்ட சாதனை மாணவர்களில் ஒருவராக தமிழ் சிறுமி! ஜேர்மனியின் தேசிய மட்ட கல்விச் சாதனையாளர்களில் ஒருவர் என்கிற பெருமை இலங்கைத் தமிழ் மாணவியான வீரசிங்கம் துர்க்கா (வயது 17) என்பவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. “talent in the country” என்கிற அங்கீகாரத்தை இவ்வருடம் அங்கு பெற்றிருக்கும் 50 மாணவர்களில் இவரும் ஒருவர். சராசரி மாணவர்களை விட அதி கூடிய திறமை உடையவர்கள் என்று இவர்கள் 50 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜேர்மனை தளமாக கொண்டு இயங்கும் Robert Bosch and Baden-Württemberg Foundation என்கிற சர்வதேச புகழ் வாய்ந்த உயர்கல்வி ஸ்தாபனத்தால்தான் இப்பெருமையும், அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. துர்க்கா இந்நிறுவனத்தின் புலமைப் பரிசிலுடன் உயர்க…
-
- 17 replies
- 1.5k views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 4, 2010 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மையமான 8 விதிகளையும் இலங்கை அங்கீகரித்திருந்தாலும், அவற்றை அமுல்படுத்தத் தவறிவிட்டது என்று சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் கூறியிருக்கிறது. உலக வர்த்தக அமைப்புக்கு சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், இலங்கை, அதன் சிறப்பு ஏற்றுமதி மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் தொழிற்துறையை அத்தியாவசியமான தொழில்கள் என்று அறிவிப்பதன் மூலம் சட்டவிரோதமாக்குவதாகவும் இந்த சம்மேளனம் கூறியிருக்கிறது. ஆண், பெண் இரு பாலாருக்கும் இடையே தரப்படும் ஊதியத்தில் வேறுபாடுகள் நிலவுவது, சிறார்களை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படுவது போன்றவ…
-
- 0 replies
- 733 views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 4, 2010 கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்திலிருந்து கனடாவிற்கு படகு மூலம் சென்ற 492 அகதிகளுள், யுத்த குற்றம் புரிந்தவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு, குடியகழ்வு சட்டத்தின்படி தீவிரவாத நபரோ யுத்தகுற்றம் புரிந்த நபரோ நாட்டினுள் அனுமதிக்கபடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு எப்போது நட்டவிரோத அமைப்புகளிற்கு பக்கபலமாக இருக்காது என கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் விக் டோஸ் தெரிவித்துள்ளார். 80 ஆயிரம் புகலிடக் கோரிக்கை வழக்குகள் இன்னமும் இடம்பெற்றுவருவதாகவும், தடுத்து…
-
- 0 replies
- 911 views
-
-
வட,கிழக்கின் குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படும் புதிய காலனித்துவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மிகவும் அபாயகரமானதாகும். இதனை தவிர்த்துக் கொள்வது அவசியமென்று கர்தினாலும் கொழும்பு மறைமாவட்ட பேராயருமான வண. மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற போது தனது கருத்துகளை முன்வைத்த பேராயர்;இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினா…
-
- 0 replies
- 555 views
-
-
கருணா பிரதி அமைச்சராக இருக்கின்றமையால் தலதா மாளிகை மீது குண்டு வீசுவதில் அரசுக்கு சிரமம் இராது! ரணில் கொழும்பில் பேச்சு வியாழன், 04 நவம்பர் 2010 10:56 ”கண்டி தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்திய புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி கருணா தற்போது மஹிந்த அரசில் பலம் வாய்ந்த ஒரு பிரதி அமைச்சர். எனவே கண்டி தலதா மாளிகை மீது மீண்டும் ஒரு குண்டுத் தாக்குதலை நடத்துவது அரசுக்கு சிரமம் ஆக இராது.” இவ்வாறு கொழும்பில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து உள்ளார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:- மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்துகின்றமைக்காகவே இந்நாட்டு மக்கள் வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
Nov 4, 2010 / பகுதி: செய்தி / போர் நிறைவு பெற்ற பின்னர் 30,000 இராணுவத்தினர் தப்பியோட்டம் சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றபோதும், இராணுவத்தினரை ஆட்கொண்டுள்ள உளவியல் பாதிப்புக்கள் நீங்கவில்லை. கடந்த வருடம் மே மாதத்தின் பின்னர் 30,000 இராணுவத்தினர் படையணிகளை விட்டு தப்பியோடியுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு இராணுவத் தலைமையகத்தை கேட்டுள்ளது. சிங்கள இனத்திற்குள் ஏற்பட்டுள்ள கட்சிப் பிளவுகள், மோதல்கள், அரசியல் தலையீடுகள், தனிப்பட்ட காரணங்கள், உளவியல் பாதிப்புக்களே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா படைத்தரப்பு படையினருக்கு போதிய விடுமுறைகளை வழங்க மறுத்து வருவதால் பெருமளவான இராணுவ…
-
- 0 replies
- 775 views
-
-
இறுதி யுத்தத்தில் காணாமல் போனோருக்கு இறப்பு அத்தாட்சிப்பத்திரம் நவ 4, 2010 காணாமற்போய் ஒரு வருடத்துக்கு மேலாக உயிர் வாழ்வதான எந்தத் தகவலும் இல்லாதவர்கள் அனைவரும் மரணமடைந்ததாகக் கருதி இறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்படவுள்ளது. அது தொடர்பான விசேட சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 09ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது. காணாமற் போனவர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான முகம் கொடுக்க நேர்ந்துள்ள அழுத்தங்களை கருத்திற் கொண்டே – அவர்கள் இறந்துவிட்டதாக சான்றிதழ் கொடுத்து தப்பித்துக்கொள்ள - அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தமிழ் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்…
-
- 0 replies
- 423 views
-
-
சண் சி கப்பலில் வந்த 492 தமிழர்களில் ஒருவர் மீது யுத்த குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. http://www.montrealgazette.com/news/Tamil+migrant+accused+crimes+held+Report/3773313/story.html இது பற்றி கருத்து தெரிவித்த கனேடிய தமிழர் பேரவை உறுப்பினர் தாம் அதிர்ச்சியடைந்துள்ளத்தையும் கனடாவின் சட்டத்தின் மீது தாம் நம்பிக்கை கொண்டுள்ளதையும் சொன்னார். இது பற்றி கனேடிய அரசு எதுவும் கூற மறுத்துவிட்டது. தொடர்புபட்ட செய்திகள் : எம்.வி. சன் சீ கப்பல் மாலுமிகள் உட்பட 36 பேர் புலிகள் என சந்தேகம்;தனியாக தடுத்து வைப்பு http://www.yarl.com/forum3/index.php?showtopic=74927 சன் சீ கப்பலின் உரிமையாளர் கஸ்தூரிராஜா குணாரொபின்சன் என்பவரே http:…
-
- 0 replies
- 955 views
-
-
இருபது வருடங்களுக்கும் மேலான பல அனுபவங்களை கொண்ட எமது அமைப்பு, தமிழர் மனித உரிமை மையம், ஐ. நாவின் கோரிக்கையை நிறைவேற்ற உதவ விரும்புகின்றோம். இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்தே அண்மையில் அமைக்கப்பட்ட குழுவால் விபரங்கள் கோரப்பட்டாலும், முன்னைய மனித உரிமை மீறல்களையும் வேறைய குழுக்களிடம் சமர்ப்பிக்கலாம். to the UN Special Rapporteurs Working groups and Treaty bodies (Committees) ===================================================================== Submitting cases on human rights violations to the United Nations By: S. V. Kirubaharan Ref: PR/Nov/2010 3 November 2010 As an organisation experienced for more than two deca…
-
- 0 replies
- 888 views
-
-
வடக்கில் அரசின் நடவடிக்கைகளால் மீண்டும் மோதல் நிலையே உருவாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்குப் பிரதேசத்தில் நிர்வாகச் சேவைக்குப் பெரும்பான்மை இனத்தவர்களைச் சேர்த்துக்கொள்வது மீண்டும் இனப்பிரச்சினையை வன்முறைப் போராட்டத்துக்குத் திருப்பி விடும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு நிர்வாக சேவைகளில் சிங்களவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்வது இனப்பிரச்சினையை மேலும் கூர்மைப்படுத்தி விடும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று "உதயனு'க்குத் தெரிவித்தார். நிர்வாகச் சேவை நேர்முகப் பரீட் சைக்குத் தமிழ்மொழி மூலம் எவ ரும் தெரிவுசெய்யப்படாமை, வடக்கு மாகாணத்தில் நில அளவை உதவி யாளர்களாகச் சிங்கள…
-
- 0 replies
- 940 views
-
-
அரச நிர்வாக சேவைக்கான எழுத்துப் பரீட்சை யில் தமிழ்மொழிமூலம் தோற்றியோரில் ஒருவரேனும் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்படவில்லை. நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவான மொத்தம் 257 பேரும் சிங்கள மொழி மூலம் தோற்றியவர்களே. 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட் சையின் எழுத்துப் பரீட்சையில் பெறப்பட்ட புள்ளி களின் அடிப்படையிலேயே இந்த 257 பேர்களின் விவரமும் அறிவிக்கப்பட்டிருக் கிறது. பரீட்சைத் திணைக்களமே இந்த எழுத்துப் பரீட்சையை நடத் தியது. பரீட்சை முடிவுப்படி, சிங்கள மொழி மூலம் தோற் றிய 257 பேர் மட்டுமே இலங்கை நிர்வாக சேவைக் கான நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டி ருப்பது தமிழ்மொழி மூலம் தோற்றிய தமிழ், முஸ்லிம் பரீட்சார்த்திகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும்…
-
- 0 replies
- 756 views
-
-
இலங்கையில் கடந்த 4 ஆண்டுகளில் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு கத்தோலிக்க மதகுருமார் காணாமல்போயிருப்பதாக மட்டக்களப்பு ஆயர் கிங்ஸிலி சுவாம் பிள்ளை படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக தெரிவித்திருக்கிறார். இந்தக் காலப்பகுதியில் பல மக்கள் காணாமல் போனதாகவும், அவர்களில் 2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஒரு கத்தோலிக்க மதகுரு காணமல்போனதாகவும், அடுத்ததாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்த, 70 வயதான அருட்தந்தை ஜோசப் பிரான்ஸிஸ் அவர்கள் போர் முடிவடைந்த பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் காணமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை விரைவில் கார்டினலாக வரவுள்ள கொழு…
-
- 0 replies
- 538 views
-
-
பிரித்தானியா: போர்க்குற்ற ஆதாதரங்களை சமர்ப்பிக்கும் அலுவலகங்கள் - தமிழர் பேரவை அறிவிப்பு வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்டமாக பொதுமக்களின் நலன்கருதி லண்டனின் பல பாகங்களில் அலுவலகங்களை அமைத்து, போர்க்குற்ற சாட்சியம் அளிக்க முன்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் மாவட்டத்தின் மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குஞ்சுக்குளம், மாத்தகிராமம் ஆகிய கிராமங்களில் சட்டவிரோத வேட்டைத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இக்கிராமங்களுக்கு சில நாட்களுக்கு முன் வருகை தந்திருந்த பொலிஸார் மேற்படி சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைத்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றமையுடன், வேட்டைத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றமைக்கு சட்ட ரீதியான அனுமதி பெற்றுத் தரப்படும் என்றும் வாக்குறுதி வழங்கி இருந்தனர். இதை நம்பி 20 பேர் வரையான ஆண்கள் சட்டவிரோத துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைக்கச் சென்றபோதே கைது இடம்பெற்றது. அத்துடன் துப்பாக்கிகளு…
-
- 0 replies
- 791 views
-
-
புதன்கிழமை, நவம்பர் 3, 2010 தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த அக்கறை காட்டி வருகின்றதுதாம். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது இந்தியத் தூதுவர் அசோக் காந்தா தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட எம்.பி.யும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்திருக்கிறார். அவரின் அழைப்பின்பே…
-
- 1 reply
- 728 views
-
-
கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவேந்தல் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 2-11-2010 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மாலை 6 மணி அளவில் தமிழீழத்தின் சமாதானப்புறா பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது. நிகழ்வினை பெருந்தமிழர். அம்மா கலையரசி அவர்கள் விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். மாவீரர். தமிழ்ச்செல்வனின் வீரமரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒரு நிமிட அமைதி காக்கப்பட்டது.அதை தொடர்ந்து உறுதிமொழியும், வீரவணக்கமும் நிகழ்வில் பங்குப் பெற்றோர் செலுத்தினார்கள். மாவீரர் தமிழ்செல்வன் நினைவு உரைகளை மாநில ஒருங்கிணைப்பாளார் வழக்கறிஞர்.மணிசெந்திலும், அய்யா …
-
- 0 replies
- 701 views
-
-
மீண்டு வருவோம், மீண்டும் எழுவோம் என்கிற தலையங்கத்தில் யாழ்ப்பாணத்தில் உலா வருகின்ற மிரட்டல் கடிதங்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடித முகப்பில் இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்ப்டுகின்றன. கடிதங்கள் கணனியில் அச்சிடப்பட்டு இருக்கின்றன. எல்லாளன் படையால் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் என்று கடிதத்தில் பயமுறுத்தப்பட்டு உள்ளது. கடிதங்கள் எவருடைய முகவரியில் இருந்து அனுப்பப்படுகின்றன என்பது மர்மமாகவே உள்ளது. யாழ்.குடா நாட்டில் உள்ள சன சமூக நிலையங்களின் தலைவர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. யாழில் இடம்பெறுகின்ற சமூக சீரழிவுகள், வன்னிப் போரின் அவலங்கள், நடத்தை தவறும் பெண்களுக்கான எச்சரிக்கைகள், அரச படையினருடன் இணைந்து செயற்படுவோர…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரிகேடியர் தமிழ்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருக்கு பிரான்சில் சிலை திறக்கபப்ட்டது. சிறிலங்கா அ்ரசின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்னெவில் நிறுவப்பட்டுள்ள இச்சிலைத் திறப்புவிழாவில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த சிலையினை பிரான்ஸ் பெண்ம்ணியொருவர் வடித்தமையும் கூடவே இந்த நிகழ்வில் அவரும் கலந்து கொண்டுள்ளார். தமிழ் மக்கள் சமாதானம் பெற்று வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார் அந்த ஆட்டிஸ்ற் அம்மணி VIDEO
-
- 13 replies
- 2.4k views
-
-
இந்த நாட்டில் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவதற்கு யாரும் இல்லை. இந் நாட்டு மக்கள் அனைவரும் சிங்கள வர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற லெப் டினன்ட் கேணல் அனில் அமரசேகர தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று முன்தினம் சாட்சியமளித்த போதே அவர் இவ் வாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது. உலகில் 115 மில்லியன் தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அரசுரிமையுடன் ஒரு நாடு இல்லை. தமிழகத்தில் 65 மில்லியன் தமிழர்கள் இருந்தாலும் அது இந்தியாவின் ஒரு மாநிலமாக மட்டுமே உள்ளது. தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டம் முதலில் 1960களில் இந்தியாவில் …
-
- 1 reply
- 1.3k views
-
-
இராணுவத்தினரால் கடுமையாகத்தாக்கப்பட்;ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு இளைஞர்கள் இராணுவப்புலனாய்வுப்பிரிவினரால் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர் இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 23 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அச்சுவேலி பஸ்தரிப்பு நிலையத்தில் இரண்டு குடிகாரர்களுக்கிடையில் சண்டை நடைபெற்றுள்ளது இதன்போது அப்பகுதியில்நின்றுகொண்டிருந்த இராணுவப்புலானாய்வுப்பிரிவினைச் சேர்நத ஒருவர் அவர்களை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர் இதன்போது குடிகாரர்கள் இருவரும் சேர்ந்து இராணுவப்புலனாய்வினைச்சேர்ந்தவரை அடிக்க அடிதாங்க முடியாமல் அவர் அருகிலுள்ள பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தின் எ…
-
- 6 replies
- 2.4k views
-
-
”தன்னுடைய சிங்கள இனத்தின் அடித்தட்டு மக்களுக்கே இன்னும் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர முன்வராத சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ, அவர் மூலமாகவே பேரழிவைச் சந்தித்துள்ள எமது இரத்த உறவுகளுக்குப் புனர்வாழ்வு தருவார் என்று நம்புவது மூடத்தனமாகும்! “ நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. முறைப்படி சிறிலங்கா அரசு தான் எமது மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய வேண்டும்” என்று எண்ணுவது அதைவிட மூடத்தனமாகும்!” என அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழருவி தனது நவம்பர் மாத இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. ”அழிவும் பேரழிவும்” என்ற தலையங்கத்தில் தமிழருவி எழுதிய ஆசிரியர் தலையங்கத்தின் முழுவடிவம் வருமாறு: “அழிவும் பேரழிவும்!” விடுதலைப் …
-
- 1 reply
- 749 views
-
-
சிங்களவர்களை குடியேற்ற யாழில் 12,000 வீடுகள், சீன அரசின் உதவியுடன் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்! புதன், 03 நவம்பர் 2010 15:02 யாழ். மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களில் முன்னர் வசித்தனர் என்று உரிமை கோரும் சிங்களக் குடும்பங்களை அங்கு குடியேற்ற அரசு தீர்மானித்துள்ளது. மணியம்தோட்டம், கொழும்புத்துறை போன்ற இடங்களில் இவர்கள் குடியேற்றப்படவுள்ளனர். இதற்காக யாழில் 12,000 வீடுகள் சீன அரசின் உதவியுடன் விரைவில் நிர்மாணிக்கப்பட உள்ளன. tamilcnn.com
-
- 0 replies
- 793 views
-
-
யாழ். நூலகத்தில் தென்னிலங்கையர்களால் காடைத்தனம் என்பது உண்மைக்குப் புறம்பானது:யாழ். முதல்வர் யாழ். நூல் நிலயத்தினுள் அத்துமீறி புகுந்த தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களால் காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டதும் நூல்கள் தூக்கி வீசப்பட்டது என்பதும் உண்மைக்கு புறம்பானதாகும் என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- யாழ் மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொதுசன நூலகம் சம்பந்தமாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைச் செய்திகள், பேசப்படும் செய்திகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு மாநகர முதல்வர் என்ற வகையில் எனக்குள்ளது என்பதனால் உண்மை நிலையை தெளிவுபடுத்த…
-
- 2 replies
- 898 views
-