ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
இலங்கையில் காணாமல் போதல்கள் இன்னமும் தொடர்கின்றன என்று சர்வதேச யூரிகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச யூரிகள் சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான Gerald Staberock இவ்வாறு சர்வதேச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போதல்கள் வகைதொகையின்றி இடம்பெற்றன. எமக்கு கிடைத்து வருகின்ற தகவல்களின்படி இக்காணாமல் போதல்கள் அங்கு தொடரத்தான் செய்கின்றன என்றார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9755:2010-09-05-13-21-57&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 1 reply
- 649 views
-
-
எனக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம்: சந்திரிகா அச்சம் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி குறித்து தாம் கருத்து தெரிவித்தால் தமக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அச்சம் தெரிவித்துள்ளார். 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி மற்றும் முழுமையாக ஜனநாயக மீறல் ஆகும் என தெரிவித்துள்ள அவர், 2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையும் அடங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என தெரிவித்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ் இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் என…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 5, செப்டம்பர் 2010 (22:21 IST) வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்: சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்-காசிஆனந்தன் நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், ‘’2 லட்சம் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமற்று கொன்று குவித்தது சிங்களராணுவம். ஈழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்களுக்கு திணிக்கப்பட்டது. அதனா…
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் மற்றும் பொக்கனைப் பகுதிகளில் அரச படையினர் விமானப்படை முகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.ஏற்கனவே தரைப் படையினரும் இங்கு நிலைகொண்டுள்ளார்கள். இப்பகுதிகளில் இருந்து கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் இச்சூழ்நிலையில் மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படைத் தரப்பினர் இவர்களை விசுவமடு,கல்லாறு,மயில்வாகனபுரம் போன்ற பகுதிகளில் குடியமர்த்த முயற்சிக்கின்றனர்.ஆயினும் இம்மக்கள் இம்மாற்று ஏற்பாட்டுக்கு இணங்கவில்லை. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9763:2010-09-05-1…
-
- 0 replies
- 629 views
-
-
இந்திய இராணுவ தளபதி வி.கே சிங் உட்பட ஐந்து பேர் அடங்கிய அந்நாட்டு இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று மதியம் 2.30 மணியவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த இக்குழுவினருக்கு விமான நிலையத்தில் வைத்து செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இவர்களை எதிர்கொண்டு வரவேற்றார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9764:2010-09-05-16-04-49&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675
-
- 0 replies
- 770 views
-
-
அரேபியர் காலத்துக்கு உரித்தானதாக மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கிராமத்தின் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள பெருக்க மரம் தென்னிலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மன்னாருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. Biobab என்பது இதன் பெயர். இப்பெருக்க மரம் தென்னாசியாவிலேயே மிகப் பெரிய சுற்றளவை உடையது. மிகவும் பிரமாண்டமானதாக மட்டுமன்றி அழகான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதை வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். இம்மரத்தின் அகலச் சுற்றளவு 19 .5 மீற்றர் ஆகவும்,நீளம் 7.5 மீற்றர் ஆகவும் காணப்படுகிறது. இம் மரத்தை மன்னார் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றன…
-
- 3 replies
- 1.9k views
-
-
எம்.வி.சன்.சி கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்து இருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் பெரும்பாலானோருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கின்றமைக்கு நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன என்று கனடாவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் ஊகங்கள் வெளியிட்டுள்ளன. இத்தமிழர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்களை மிகவும் சாதகமான முறையிலேயே கனேடிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என்று அச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையர்களுக்கு கனடாவில் அரசியல் தஞ்சம் கிடைக்கின்றமைக்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் ஏராளம் என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த காலங்களில் அகதி அந்தஸ்து கிடைக்கப் பெற்றி…
-
- 0 replies
- 572 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விசாரிக்க தனியான சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட எம்.பி பா.அரியநேத்திரன் வலியுறுத்தி உள்ளார். இதன் மூலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் உட்பட அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த முடியும் என்று விளக்கி சட்ட மா அதிபருக்கும், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவுக்கும் விரிவான கடிதம் அனுப்பி வைத்துள்ளார். நாடாளாவிய ரீதியில் பல சிறைச்சாலைகளிலும் ஒட்டுமொத்தமாக 765 தமிழ் அரசியல் கைதிகளின் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் விரைவான விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரி உள்ளார். அவ…
-
- 0 replies
- 408 views
-
-
1990 ஆம் ஆண்டு போர்ச் சூழலின் போது உயிர் அபாயம் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தங்கியிருந்த குடும்பங்களின் 174 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனபோதிலும் இவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. இச்சம்பவத்தின் நினைவாக இருபது ஆண்டு நிறைவு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி 158 பேரும் 23 ஆம் திகதி 16 பேரும் சீருடையினரால் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதாக கருதப்படுகின்ற போதிலும் தமது பிள்ளைகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்; மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் நினைத்து ஆத்ம சாந்திக்கான கிரியைகளில் ஈடுபட்டனர். ஆன போதிலும் தமது மக்கள் சிறைச்சாலைக…
-
- 0 replies
- 508 views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 4, 2010 மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் வாழ்ந்து வந்த 80 சீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனக் குடி வரவு குடியகல்வுத் திணைக்களம் தெரி வித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட விசேட திட்டத்தின் அடிப்படையில் குறித்த சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் யூ.வீ.நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீனாவிலிருந்து முதன்முறையாக அந்நாட்டின் விமானமொன்று நேரடிப் பயணமாக இலங்கை வந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் யுனான் மாநில ஆள…
-
- 6 replies
- 712 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 5, 2010 ஈழ நாதம் மஹிந்த இராஜபக்ஷ வார இறுதியில் பதுளை மாவட்டம் சென்ற வேளை அவரது நடமாட்டங்களை கண்காணித்தார்கள் என்ற பேரில் இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இந்த இரு இளைஞர்களும் தற்போது பயங்கரவாத தடுப்பு பொலிசாரிடம் கையளிக்கபப்ட்டுள்ளனர். ஆனால் இந்த இளைஞர்கள் பதுளை மாவட்டத்தில் உள்ள புத்த கோயிலை பார்க்கவே வந்ததாக கூறியுள்ளனர் என வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். ஈழ நாதம்
-
- 1 reply
- 748 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 5, 2010 ஈழ நாதம் பாகிஸ்தான் - இந்திய எல்லை மாகாணமான சிக்கிம் என்ற பிரதேசத்தில் பதினோராயிரம் சீன இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த படைக்குவிப்பிற்கு பின்னர் சீன அரச ஊடகம் ஒன்றில் அந்த பகுதியினை வட பாகிஸ்தானிற்கு சொந்தமானது என்றும் அறிவித்திருந்தது. இதனை அறிந்த இந்தியா அதிர்ச்சியுற்றது. உடனடியாக சீனாவில் உள்ள தமது தூதுவர் ஊடாக இந்தியா அதிருப்தியினை சீன அரசுக்கு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சீன அரச ஊடகம் அந்த செய்தியினை எடுத்து விட்டதாகவும் ஆனால் உத்தியோக பூர்வ ரீதியில் தமது கவலைக்கு பதில் தரவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது. சீனா குவித்த படைகளை இன்னமும் மீழ பெறவில்லை. அது ஒரு படைகுவிப்பு அல்ல என்றும் ஆனால் பாகிஸ்தானில் …
-
- 0 replies
- 771 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 5, 2010 ஈழ நாதம் மஹிந்தவின் அரசமைப்பு மாற்றத்திற்கு புத்திஜீவிகளின் எதிர்ப்பு வலுத்து வருகின்றது. மஹிந்தவின் அமைச்சரவைக்குள்ளேயே இந்த எதிர்ப்பு வலுத்து வருகின்றது. அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ண பாலா, அமைச்சர் டாக்டர் டியூ குணசேகரா உட்பட பலர் எதிர்ப்பு காட்டி வருகின்ரனர். இதன் மூலம் தம் பதவிகளையும் துறக்க தயாராக உள்ளதாக கூறுகின்ரனர் இந்த அமைச்சர்கள். இதே வேளை மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் பல சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்புக்கள் யாப்பு சீர்திருத்தத்தினை எதிர்த்து பல கண்டன அறிக்கைகளை விட்டுள்ளதுடன் கொழும்பில் ஓர் மா நாட்டையும் ஏற்பாடு செய்துள்ளனர். ஈழ நாதம்
-
- 0 replies
- 518 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 5, 2010 ஈழ நாதம் பிரித்தானிய சைவகோயில்களின் ஒன்றியம் தனது 13 வது மாநாட்டை இலண்டனில் நேற்று (04/09/2010) நடாத்தியது. ஆச்வே முருகன் கோவிலில் நடைபெற்ற இந்த மா நாட்டில் பல தென் இந்திய சமைய வித்துவான்கள் உட்பட ஓர் சாமியாரும் கலந்து கொண்டார். மா நாட்டின் இரண்டாவது நாள் இன்று லூசியம் சிவன் கோவிலில் நடக்க விருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாநாட்டில் சிறப்பசம் என்னவெனில் அதன் நோக்கங்களில் முதன்மையானது தாயகத்தில் உள்ள சிறார்களுக்கு எப்படி உதவுவது? இரண்டாவது அங்கு உள்ள சைவ கோயில்களின் அழிவுகளை திரட்டுதல், வழிபாட்டு உரிமை மீறலை வெளிக்கொண்டுவரல், சிங்கள பெளத்த மத ஆக்கிரமிப்பை வெளிக்கொண்டுவரல் ஆகிய விடயங்கள் அமைந்தன. எடுத்துக்காட்டாக கிளி நொச்சியில்…
-
- 0 replies
- 671 views
-
-
”சொந்த மகளை ஒருபோதுமே கண்ணால் பார்க்க முடியாத நிலையில் யுத்தத்தால் வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றார் எனது கணவன். கடந்த 14 வருட காலமாக குருடராக வாழ்கின்றார். 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் செல் துண்டுகள் அவரது கண்களின் பார்வையை முற்றாக பறித்து விட்டன. அன்று முதல் சுய தொழில் செய்துதான் குடும்பத்தை பாதுகாத்து வந்திருக்கின்றேன். ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தம் எமது வாழ்வாதாரத்தை ஒரேயடியாகத் தொலைத்து விட்டது.எமது எட்டு வயது மகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் எம்மை ஒவ்வொரு நாளும் உயிருடன் வதைத்து வருகின்றன. ” இப்படி அவரின் ஆதங்கங்களைக் கொட்டினார் கனகலிங்கம் லோகேஸ்வரி (வயது 43). கிளிநொச்சியில் உள்ள புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர்.இக்கிராமத்…
-
- 0 replies
- 747 views
-
-
உலகத்தின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் உள்ளமெல்லாம் இருக்கும் ஒரே தீர்வு தனித் தமிழ்ஈழம் தான்: வை.கோ திகதி:05.09.2010, 'போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்'' என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியுமே.... ...வார்த்தை விமர்சனங்களைப் பாய்ச்ச ஆரம்பித்திருப்பது, தமிழீழ ஆதரவாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! கே.பி-யின் புதிய குற்றச்சாட்டுகளுக்கு ஜூனியர் விகடனுக்கு வைகோ வழங்கிய செவ்வி: கேள்வி: தமிழீழம் என்பது அழிந்துபோன இலட்சியம் எ…
-
- 0 replies
- 603 views
-
-
தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட் சியமாகக் கருதுகி றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம். கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் நேற்றுச் சாட்சியமளித்த டக்கு கூறியுள்ளார். இந்த நாட்டின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்கள் உறுதியான கரங்களை நீட்டி அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும், இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக அந்த நாட்டு அரசினால் பார்க்கப்படுகின்றார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அரசின் பயங்கரவாத இலக்காகவே இருந்து வருகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார். ஒக்ஸ்ஃபாம் நிறுவன முன் நாள் தொண்டரும் கனேடிய பிரஜையுமாகிய ஸ்டீபன் என்பவர். தான் ஒன்றரை வருடம் சிறிலங்காவில் இருந்ததாகவும் அந்த அனுபவத்தின்படி போர் முடிந்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்ரார்கள். தமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் மதிப்பதில்லை, அங்கு உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். நான் கனடாவில் இப்போது இருக்கின்றேன். எனக்கு தெரியும் இங்கு வந்து சேர்ந்த 490 அகதிகளை பல பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கின்றன. கனேடியர்கள் தாம் கொடுக்கும் வரிப்பணம் பற்றி …
-
- 6 replies
- 681 views
-
-
தமிழக பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் படங்கள் துணியால் மறைப்பு இன்று மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் வே.பிரபாகரன் படங்கள் மூடுதுணியால் மூடப்பட்டுள்ளது. மேலதிக 44 படங்கள் http://meenakam.com/?p=6780
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோ காட்சிகளை பார்வையிட்ட தமிழ் இளைஞர்கள் நால்வரை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்ப் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய், ஊறணி பிள்ளையார் பிரதேசத்தில் வைத்து இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகள் முடுக்கி விட்டுள்ளார்கள். இந்த வீடியோ காட்சிகளை இவர்களுக்கு வழங்கிய நபரையும் கைது செய்கின்றமைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9688:2010-09-04-08-33-48&catid=54:2009-12-16-09-39-33&…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிப் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். காலை 5.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றுள்ளது. ”ஒன்றாக போராடுவோம்”, ”அரசமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்” என்கிற தலைப்புகளிலான சுவரொட்டிகளை இவர்கள் ஒட்டிக் கொண்டிருந்தபோதே யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அவர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் படங்களை இச்செய்தியுடன் இணைத்துள்ளோம். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9681:2010-09-04-08-07-12&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 1 reply
- 950 views
-
-
இலங்கைத் தமிழர்கள் 52 பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தனர் என்கிற சந்தேகத்தில் இலங்கையர் ஒருவரை தமிழ்நாடு- திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தில் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அங்கு தனியார் விடுதி ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கின்றனர் என நெல்லை மாவட்ட கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. பொலிஸார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது அங்கு இலங்கையைச் சேர்ந்த 39 ஆண்களும், 9 பெண்களும், 5 குழந்தைகளும் இருந்தனர். இவர்கள் இந்தியா வருகின்றமைக்கு விசா பெற்று இருந்தனர். சிலர் கடவுச்சீட்டும் வைத்து உள்ளனர். சிலர் கடவுச்சீட்டை வைத்திருக்கவில்லை. பொலிஸார் கேட்டபோது சென்னையில் இருக்கின்றனர் என கூறினார்கள். உடனே பொலிஸார் சென்னைக்…
-
- 1 reply
- 706 views
-
-
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள சுண்ணக்கல் பாறைகள் தொடர்ச்சியாக அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் இருந்து கீரிமலை கோவிலுக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் இவ்வாறு சுண்ணக்கற்கள் பெருமளவில் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. கடற்கரையை அண்டி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 8 கிலோமீற்றர் சதுரப்பரப்பு பகுதியில் 40 அடிக்கும் அதிகமான பகுதியிலும் சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றால் நிலத்தடி நன்னீர் அகழப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே வந்து தேங்கி நிற்கின்றது வீ. வீ கருணாரட்ண என்கிற தனியார் கம்பனி இப்பகுதிகளில் சுண்ணக்கற்களை அகழ்ந்தெடுத்து வருகின்றது. பாரிய இயந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
கிழக்குக் காடுகளில் புதையல் இருப்பதாக ஒரு கோஷ்டியினர் அதைத் தேடி அலைவது குறித்து முன்னரே செய்திகள் வந்திருந்தன. அங்குள்ள அடர்ந்த காடுகளுக்குள் காணப்படும் புராதன தொல்பொருள் சின்னங்களைத் தோண்டி எடுத்து விற்பனை செய்தல், பல இடங்களில் முகாமிட்டு சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது போல் கஞ்சா சாகுபடி செய்தல், கருங்காலி, முதிரை ஆகிய மரங்களை வெட்டி, முகாமிட்டு மரக்குற்றிகளாகவும் பலகைகளாகவும் அறுத்து கொழும்புக்கு கடத்திச் செல்லுதல் ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது போலீஸ் தரப்புக் கூறியுள்ளது.கிழக்குப் பிரதேசத்திலுள்ள காடுகளில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, தொல்பொருள் சின்னங்கள் உள்ள இடங்கள…
-
- 0 replies
- 817 views
-
-
அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களான 508 இளைஞர், யுவதிகள் இன்று சனிக்கிழமை பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள். வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இவ்வைபவம் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித முனி சொய்சா இந்நிகழவில் கலந்து கொண்டு 508 பேரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தார். விடுதலை செய்யப்பட்டவர்களில் 246 பேர் அண்மையில் இடம்பெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் ஆவர். விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் மணம் முடித்து வைக்கப்பட்ட 50 தம்பதிகளும் அடங்குகின்றார்கள். இ…
-
- 0 replies
- 752 views
-