ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம் adminOctober 13, 2025 செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப…
-
- 0 replies
- 121 views
-
-
13 Oct, 2025 | 02:40 PM செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
13 Oct, 2025 | 11:57 AM இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார். இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையா…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் October 12, 2025 2:19 pm விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். தொடந்தும்பேசிய அவர், 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார். “பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்க…
-
- 1 reply
- 179 views
-
-
மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம் திங்கள், 13 அக்டோபர் 2025 06:05 AM மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்ற…
-
- 0 replies
- 140 views
-
-
யாழில் வாள் வெட்டு: தேசிய மக்கள் சக்தி செயற்திட்ட இணைப்பாளர் காயம்! யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது . இச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது தும்பளை பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆக…
-
- 0 replies
- 149 views
-
-
வெலிக்கடைச் சிறையில் தமிழர் படுகொலை ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது சிங்கள எழுத்தாளர் யாழில் தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல. சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஆட்சியின் திட்டமிட்ட படுகொலையே எனச் சிங்கள எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான நந்தன வீரரட்ன தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம்பெற்ற கறுப்பு ஜூலையின் 7 நாள்கள் என்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊடகவியலாளராகச் செயற்பாட்டுக் கொண்டிருந்தேன். வடக்கு மாகாணம் இல…
-
- 0 replies
- 138 views
-
-
உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்! வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, ஒக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும் WHO தென்கிழக்கு ஆசியாவின் 78 பிராந்தியக் குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் விவாதிக்கும் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியத்தின் (SEARHEF) நிதியை விரிவுபடுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறனுக்கு (AMR) எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உல…
-
- 0 replies
- 112 views
-
-
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு! இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பரில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம். இதற்கிடையில், ஜனவரி 01 முதல் இந்த ஆண்டு இன்றுவரை நாடு 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு பணம் அனுப்பியுள்ளதாக CBSL தெ…
-
- 0 replies
- 107 views
-
-
11 Oct, 2025 | 10:54 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு வெள்ளிக்கிழமை (10) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றின் பொருள்களையும் பாடல்களாக வழங்கியுள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், அதாவது லிடியன் நாதஸ்வரத்துக்கு 9 வயதும், அமிர்தவர்ஷினிக்கு 12 வயதும் இருக்கும்போது இந்த பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 வருடங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்பு வெளியிடப்பட்ட நிலையில் பலரும் அதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை! அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம் (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 9 ஆம் திகதி 30 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர்கள் …
-
-
- 1 reply
- 208 views
-
-
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினருக்கு குறைந்த பட்சம் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தோட்டத்தில் வ…
-
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
12 Oct, 2025 | 04:32 PM கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227553
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' (Cancer Cure) குறித்து, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (SLCO) தமது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்கவுக்கு, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத் வணிகசூரிய ஒரு கடிதம் எழுதியுள்ளார். கண்டனம் அக்கடிதத்தில், "இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாதது குறித்து …
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட சிறிய பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதிபடத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி, “ஒரு சில பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைய மாணவர் உட்சேர்க்கை நடவடிக்கையில் காணப்படும் குறைபாடுகளே காரணமாகும். எனவே அவற்றை சீரமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த பாடசாலை அதே போன்று குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பல பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது. அதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்பதில்லை. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு ச…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்! 2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது. அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சுசில் ரணசிங்க : வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் பிரதி அமைச்சர்கள் அனில் ஜெயந்த பெர்னாண்டோ: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டி.பி. சரத்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் எம். எம். மொஹமட் முனீர்:…
-
-
- 4 replies
- 313 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 12:27 PM உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நாட்டை வந்தடைந்தார். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கட்டார், டோஹாவிலிருந்து இன்றைய தினம் காலை 9:40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் ஓய்வறையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவரை வரவேற்றார். கொழும்பில் நடைபெறும் 78வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார உச்சி மாநாட்டில் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதம விருந்தினராக பங்கேற்க உள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு 13 ஆம் திகதி முதல் 15 வரை கொழும்பில் நடைபெற உள்ள…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
12 Oct, 2025 | 12:51 PM (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் குறித்த பேச்சுகள் தேசிய அரசியலில் சூடுப்பிடித்துள்ள நிலையில், ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் போதே ஆணையாளர் நாயகம்…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி! 2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெறும் 2,000 பயனாளிகளுக்கு ஜனாதிபதி அடையாளமாக சில உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்திருந்தார். வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை…
-
- 0 replies
- 79 views
-
-
12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், ஐந்தாவது ஆய்வை நிறைவு செய்து நிதியை விடுவிக்க இலங்கை இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஐந்தாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு, அரசாங்கம் பின்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் அளவீடுகளுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன், கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, பலதரப்பு பங்காளிகளின் நிதி பங்களிப்புகள் பாதுகாக்கப்படுவதையும்,…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 10, 2025 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/221354/
-
- 6 replies
- 345 views
- 2 followers
-
-
Published By: Vishnu 12 Oct, 2025 | 12:24 AM அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டில் முட்டை விலை குறைப்பதற்கான முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. சங்கத் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார் போல, உற்பத்தி செலவுகள் குறைந்ததையும் சந்தை நிலைமை சீராகி வருவதையும் கருத்தில் கொண்டு, முட்டையின் விலை ரூ.10 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.18 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும். மேலும், அரசு வரி கொள்கைகள் மற்றும் தீவன விலை சீரமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விலையை மேலும் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் உடனடிய…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்! நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. மார்பகங்களில் கட்டிகள், மார்பகத்தின் தோல் மங்கலாகுதல், மார்பக வீக்கம், அசாதாரண வெளியேற்றம் அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தப்போக்கு, முலைக…
-
- 0 replies
- 140 views
-
-
Published By: Vishnu 12 Oct, 2025 | 12:32 AM ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாகவும், வேப்பங்குளம் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லையென தெரிவித்தும் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (11.10.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர். அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன் அப்பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உள்ளக மைதான கட்டடத்தொகுதி என்பன உள்ளதால் பெருமளவான மாணவர்கள் வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது. இதனையடுத்து குறித…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
11 Oct, 2025 | 03:45 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றபோதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி, கால்நடை கடத்த…
-
-
- 1 reply
- 190 views
- 1 follower
-