Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, கண்டி, பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி ஒருவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவர்கள் விரிவுரைகளை இன்று காலை முதல் பகிஷ்கரித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை 2.15 மணியளவில் விரிவுரை நடந்து கொண்டிருந்த சமயம் பல்கலைக்கழகக் காவலாளி, புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி இம்மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மாணவர்கள் விரிவுரை மண்டபத்தை விட்டு வெளியே வந்த சமயம் புலனாய்வுப் பிரிவினர் அவரை ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பா…

  2. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால், தமிழினப் படுகொலையை ஒன்று சேர்ந்து நடத்தியவர்கள் இன்று இரண்டுபட்டிருப்பது அந்தப் படுகொலையை வெளிக்கொண்டுவர உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். விடுதலைப் புலிகளை அழித்தது யார்? என்ற பெருமையை வைத்துக்கொண்டு அரசியல் இலாபங்களை அடைவதில் மகிந்த சகோதர்களுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்துவருகின்றது. இந்தப் பனிப்போரை இலாபமாக்கி தேர்தலில் வெற்றிக்கனியை தாங்கள் பறித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு சரத் பொன்சேகாவை தமது வேட்பாளராக்க முனைந்த எதிர்க்கட்சியினரும் ஆடிப்போகும் அளவிற்கு சர்வதேச நெருக்கடிகள் சிக்கியிருக்கின்றார் சரத் பொன்சேகா. அமெரிக்க குடியுரிமையைக் கொண்டி…

  3. சதாசிவம் கனரத்தினம் முதல் முறையாக நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் இன்று முதல் தடவையாக நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டுள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிக்கையில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வவுனியா தடுப்பு முகாம் நோக்கி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தபோது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறீலங்கா பயங்கரவாத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறார். இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதான குற்றச்சாட்டின் பெயரில் இவர் கடந்த 6 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். முதன் முறையாக இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் …

  4. இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டது. நாட்டுக்கு ஏற்பட்ட தேசிய அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு விட்டது என்று கருதி, திருப்திப்பட்டுக் கொள்கின்றது தென்னி லங்கை. அரசுத் தலைவர்கள் அந்தச் “சாதனையை’ வெளிப் படையாகவே குறிப்பிட்டு ஆசுவாசப்பட்டுக் கொள்கின் றார்கள். ஆனால் இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தரப்பான சிறுபான்மையினரான தமிழ் மக்களின் மனநிலைமை அப்படி இல்லை. ஏதோ நிரந்தர பீதிக்குள் வீழ்ந்துவிட் டோம் என்ற பேரச்சமே அவர்களைப் பீடித்து நிற்கின்றது. இலங்கைத் தீவில் இனி, மீளமுடியாத அடிமைத்தனமே தங்கள் இனத்துக்கு சாசுவதமானது, மாற்றமுடியாதது என்ற அவநம்பிக்கை இருள் தமிழ் இனத்தின் மனதைச் சூழ்ந்து ஆக்கிரமித்து நிற்கின்றது. தங்களின் நீதி, நியாயமான அபிலாஷைகள் நிறைவு செய்யப்படப் போவதில்லை,ம…

  5. மீளக்குடியமர்த்டப்பட்ட மக்களுக்கு அண்மையில் கூடுதலான முகாம்கள், சோதனைச்சாவடிகள் என்பன அமைக்கப்பட்டு வருவதாக யாழ் செய்திகள் தெருவிக்கின்றன. இறுதிக்கட்ட போரின்போது சொல்லொணா துயரங்களையும், இழப்புக்களையும் சந்தித்து அதன் பின் 5 மாதங்களுக்கும் மேலாக தடுப்பு வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்ட பின் தற்போது சர்வ தேசத்தின் அழுத்தங்களுக்காக விடுவிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்தப் பட்ட மக்களுக்கு அண்மையிலேயே இவ்வாறான புதிய முகாம்களும், பல காவலரண்களும் அமைக்கப்பட்டுவருவதாக தெருவிக்கப்படுகிறது. போர் நிறைவுக்கு வந்துவிட்டபின்பும், யாழ் குடாநாட்டு மக்களை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டுள்ளவே ராணுவம் விரும்புவதாகவும், அங்கு மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலை…

  6. அவுஸ்ரேலிய அரசாங்கம் ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ள 78 அகதிகளையும் அவுஸ்ரேலியாவுக்கு மீழ அழைத்து அவர்கள் உண்மையான அகதிகள் எனில் அவுஸ்ரேலியாவில் மீழ் குடியமர்த்த இணங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவில் பிரதமர் ரட் கெவின் அவர்களுக்கு அந்த நாட்டு மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் அதனாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படகினையும் அகதிகளையும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் அவுஸ்ரேலிய கடற்பகுதியில் இருந்து நாடு கடத்தி இந்தோனேசிய கடற்பகுதிக்குள் விட்டனர். ஆனால் இந்தோனேசிய அரசு இந்த கப்பலை ஏற்க மறுத்தமை குறிப்பிடத்தகது. http://www.nerudal.com

  7. முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப் படைகளின் பிரதானியுமான ஜென்ரல் சரத் பொன்சேகா கடமையிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜனாதிபதியிடம் கையளித்த வின்ணப்பக் கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் நன்றி : வீரகேசரி

  8. முப்படைகளின் பிரதானி என்ற பதவியிலிருந்தும், சிறிலங்கா இராணுவத்திலிருந்தும், பதவி விலகுவதற்கான இராஜினாமாக் கடிதத்தை சிறிலங்கா ஜனாபதிக்கு நேற்று அனுப்பிவைத்தார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இவரது ராஜினாமா கடிதம் கிடைத்ததை ஜனாதிபதிச் செயலகம் உறுதி செய்திருந்தது. அவரது பதவி விலகலுக்கான காரணங்களாக பதினாறு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதினாறு காரணங்களும் இப்போது ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளது. சரத் பொன்சேகா ஜனாதிபதி மீது தொடுத்திருக்கும் கனைச் சரங்களாகவோ , அல்லது குற்றச் ஷரத்துக்களாகவோ கறிப்பிடக் கூடிய அந்தப பதினாறு காரணங்களாவன; 1) விடுதலைப்புலிகளுடனாக போர் முடிவுற்ற பின்னர் அரசுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடவுள்…

    • 1 reply
    • 864 views
  9. கொழும்பு மகசின் சிறைச்சாலையில்தமிழ் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறைச்சாலை ஆணையாளர் அதனை வெறும் வாய் தர்க்கமே என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவம் உண்மையென்றும் தாம் கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் அதிகாரிகளாலும் ஏனைய கைதிகளாலும் தாம் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறியிருக்கும் சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் இது தொடர்பான உண்மை நிலையை விபரிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே வேளை மெகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற ஐக்கியதேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவிடம் தமது நிலைப்பாட்டை தமிழ்க் கைதிகள் மிகவும் கவலையாக கூறியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேல…

  10. எதிரணிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியினரின் தலைவர்கள் கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடங்களிடம் ஆசி வேண்டுவதற்காக இன்று மிகப்பெரிய வாகன பவனியில் ஆரவாரத்துடன் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கொழும்பில் பூசை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வாகன பவனியில் அனைத்து எதிரணிகளின் தலைவர்கள் வாகனத்தில் அமரவைக்கப்பட்டு கண்டியை நோக்கி பயணித்த வண்ணம் உள்ளனர் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதே நேரம் நிட்டம்புவவில் சென்று கொண்டிருந்த வாகன அணியுடன் மகிந்த அணியினர் வழி மறிப்பில் ஈடுபட்டதாகவும் இதனால் மோதல் எழுந்ததாகவும் கூறப்படுகின்றது. பின்னர் பொலிசாரின் தலையீட்டினால் இவை முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  11. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவரது அரசு மீதும் தாம் நம்பிக்கை இழந்துவிட்டார் எனத் தெரிவித்திருக்கும் ஜெனரல் பொன்சேகா, அமைச்சர்கள் பலர் தம்மை அவமரியாதை செய்துவிட்டனர் என்றும் குறைப்பட்டிருக்கிறார். ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தைப் பாதுகாப்புச் செயலாளர் ஊடாக நேற்று வியாழக்கிழமை அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதி மீதும், அரசின் மீதும் தனது நம்பிக்கை குறைவடைந்துள்ளது எனவும் அதனால் முப்படைகளின் பிரதான அதிகாரியாகத் தன்னால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாதுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதியை அவர் ஜனாதிபதி செயலகத்திற்கும் அனுப்பியுள்ளார். தமது மூன்று பக்கக் கடிதத்தில், இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான அனுமதியைக் கோரியுள்ளதுடன் தாம…

  12. ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு உரிய நான்கு வழிகள் பற்றி மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து முன்மொழிந்துள்ளார். அதாவது இலங்கையில் வதியும் தமிழர்கள் வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், அல்லது என்ன செய்யவேண்டும் என்பதே அந்த வழிமுறைகளாகும். வழி1. மஹிந்தவை ஆதரித்தல். வழி2. சரத்பொன்சேகாவை ஆதரித்தல் (பொது எதிரணியினரின் வேட்பாளர்). வழி3. சிறுபான்மையினர் ஒரு வேட்பாளரை நிறுத்துதல். வழி4. ஜனாதிபதி தேர்தலினை புறக்கணித்தல். இந்த நான்கில் எதையாவது செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் மனோ.

    • 19 replies
    • 1.4k views
  13. இன்று காலை களனி விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டு விட்டு வெளியேற முயன்ற சரத் பொன்சேக்கா அங்கிருந்து வெளியேற முடியாமல் அரசாங்க ஆதரவாளர்களால் தடுக்கப்பட்டதாகவும் பின்னர் பாதுகாப்புப் படை மற்றும் பொலிசார் அவர்களை அப்புறப்படுத்தி சரத் பொன்சேக்கா அங்கிருந்து வெளியேற உதவியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரும் அந்தக் கும்பல் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்ததுடன் சரத் பொன்சேக்காவிற்கு எதிராகக் கோசங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கும்பல் மகிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவரும் அடிதடி அமைச்சர் என்று அறியப்பட்டவருமான மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் என்று அறியப்படுகிறது. அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் மேர்வின் ச…

  14. நீறு பூத்த நெருப்பாக ஈழ தமிழர்களின் நிலை ? இலங்கையில் 25 ஆண்டுக்கும் மேலாக நடந்த போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு தமிழர்களுக்கான பிரச்னை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த கோரிக்கைக்காக தமிழ் மக்கள் அங்கு போராடி வந்தார்களோ, அந்த கோரிக்கை கனவாக ஆகிவிட்டது. போரின் போது, இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்பம் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக இருக்கிறது. எந்த வசதியும் இல்லாமல் முகாம்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் பலர், ஓர் ஆண்டு காலத்துக்குள் பலமுறை தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டவர்கள். ஒவ்வொரு இடத்திலும், அங்குள்ள கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது, ராணுவத்தால் வலுக்கட்டாயமாக…

  15. மகசீன் சிறையில் மூன்று கைதிகள் கொலை கொழும்பு மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்யும் எண்ணத்தோடு ஆயுதங்களுடன் சிங்கள கைதிகள் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.meenagam.org/?p=3260

  16. புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆயுதங்களை புலிகள் வைத்திருந்ததனர். இலங்கை அரசு, அதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஆயுத தளபாடங்களை கண்டு அதிர்ச்சியுற்றது. புலிகளின் சொந்த தயாரிப்பான 120 மில்லிமீட்டர் "பசிலான்" ஆர்ட்டிலெறி, சீன தயாரிப்பான விமான எதிர்ப்பு பீரங்கி,அதிக சேதம் விளைவிக்க கூடிய தெர்மொபரிக் ஆயுதங்கள், என்பன கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்கள். இவற்றுடன் மோர்ட்டார்கள், ஷெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் என்பனவும் இலங்கை இராணுவத்தை வியப்பில் ஆழ்த்தின. "சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனங…

  17. இலங்கையில் 25 ஆண்டுக்கும் மேலாக நடந்த போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு தமிழர்களுக்கான பிரச்னை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த கோரிக்கைக்காக தமிழ் மக்கள் அங்கு போராடி வந்தார்களோ, அந்த கோரிக்கை கனவாக ஆகிவிட்டது. போரின் போது, இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்பம் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக இருக்கிறது. எந்த வசதியும் இல்லாமல் முகாம்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் பலர், ஓர் ஆண்டு காலத்துக்குள் பலமுறை தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டவர்கள். ஒவ்வொரு இடத்திலும், அங்குள்ள கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது, ராணுவத்தால் வலுக்கட்டாயமாக இன்னொரு இடத்துக்கு துரத்தியடிக்கப்பட்டார்கள். …

  18. ஓய்வு பெறுவதற்கான தனது இராஜனமா கடிதத்தை ஒப்படைத்த சரத் பொன்சேகா தான் இன்னும் இராணுவப் பதவியில் இருப்பதாகவும் சீருடையை கழற்றிய பின்னரே தமது முடிவை அறிவிப்ப தாகவும் கூறியுள்ளார். கடிதத்தினை ஒப்படைத்த பின்னர் களனி விஹாரைக்கு சென்ற சரத் பொன்சேகா அங்கு வழிபாடு செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்“இதுவரையும் தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட்டேன். இனியும் அவ்வாறுதான் செயற்படுவேன். அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனது சாதாரண பதவிக்காலத்திலும் பார்க்க நான்கு வருடங்கள் அதிகமாக சேவை செய்துள்ளேன். நான் மிகுந்த சந்தோசத்துடனேயே எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட…

    • 9 replies
    • 1.2k views
  19. ஜெனீவாவில் நவம்பர் 11 முதல் 13 வரை நடக்கும் ஐநா சிறுபான்மையினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பைப் பெற்றுள்ள ஒரே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தான் மட்டுமே என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது: “சிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப்பும்” என்கிற பொருளில் நடைபெறுகின்ற இந்தக் கருத்தரங்கில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். சிறுபான்மையினரக் விவகாரங்களுக்கான சுயாதீன நிபுணர் என்ற பொறுப்பில் உள்ள மெக்டோனால்ட் அவர்களின் தனிப்பட்ட அழைப்பு …

  20. ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராடவைத்தான்" என்பதிலிருக்கிறது 10/11/2009 "அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம்புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எ…

  21. கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் ஏதிலிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது. ஆனால் இந்தோனேசியா அரசு ஏதிலிகளை ஏற்பது என்ற ஐ.நா வின் அறிக்கையில் கையோப்பமிடவில்லை. இவ் ஏதிலிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் ஏதிலித்தஞ்சம் அளிக்க வேண்டி நீங்கள் ‘YES’ என்பதற்கு வாக்களியுங்கள். இங்கே உடனடியாக வாக்களியுங்கள் http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ aus_poll_explain மேலே உள்ள மாதிரிப் படத்தில் உள்ளவாறு “Yes, it’s our duty to help them“ என்ற கட்டத்தை தெரிவு செய்து “Submit” என்ற தொடுப்பில் சுடக்கினால் உங்கள் வாக்கு பதிவு…

  22. பாதுகாப்பு சேவைகளில் முக்கிய பதவிகளிலிருந்த சரத் பொன்சேக்காவின் உறவினர்கள் வேறு பிரிவுகளிற்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படி அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராகவிருந்த சரத் பொன்சேக்காவின் மருமகனான சரத் முனசிங்க போக்குவரத்துப் பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் சரத் பொன்சேக்காவின் மருமகனின் தந்தையான சிசில் பெரேராவும் உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கிணங்கவே இந்த மாற்றங்கள் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி : http://www.tamilstar.org/news/tamil/

    • 0 replies
    • 1.1k views
  23. சரத் பொன்சேகா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து களனி விஹாரைக்கு சென்ற சரத் அங்கு பிக்குகள் ஆதரவாளர்களுடன் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி் ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும் திரண்ட வண்ணம் இருக்கின்றார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று இரவு தனது எதிர்கால செயற்பாடு பற்றி சரத் பத்திரிகையாளர்களுக்கு செவ்வி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  24. பாலவர்ணம் தமிழரானதால் ஏற்பட்ட மாற்றம் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய 11 November 09 10:15 pm (BST) பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை. பாலவர்ணம் சிவகுமார் கொழும்பு இரத்மலான பிரதேசத்தில் வாழ்ந்துவந்தார். ஊவாவில் பிறந்த அவரை பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கவில்லை. கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் யுத்தம் நடைபெற்ற ப…

    • 9 replies
    • 1.3k views
  25. தேசிய சுதந்திர முன்னணியில் ஏற்பட்ட பிளவைப் போன்று, ஜாதிக ஹெல உறுமயவிலும பிளவு ஏற்பட உள்ளது:‐ தேசிய சுதந்திர முன்னணியில் ஏற்பட்ட பிளவைப் போன்று, ஜாதிக ஹெல உறுமயவிலும பிளவு ஏற்பட உள்ளதுடன், அதில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள உள்ள இவர்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ள அந்த கட்சியின் தலைவரான ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதேவேளை நேற்று முன்தினம் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகிக் கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக்க மற்றும் கமல் தேசப்பிரிய ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.