Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்களப் படையினரால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொலி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிறிலங்கா சிறிதளவு அழுத்தங்களையே எதிர்கொள்ளும். அது தொடர்பில் எந்தவித விசாரணைகளும் நடத்தப்படாது என அந்நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அனைத்துலக பிரான்ஸ் வானொலிக்கு வழங்கிய நோர்காணலில் அவர் தெரிவித்த விபரங்கள் வருமாறு: அண்மையில் சிறிலங்காவுக்கான ஜனநாயக ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களால் வெளியிடப்பட்ட காணொலி விடுதலைப் புலிகளின் அனுதாபிகளால் போலியாகத் தயாரிக்கப்பட்டது. அது முற்றிலும் கற்பனையான ஒன்று. சிறிலங்காவை மையப்படுத்தி எத்தனை அனைத்துலக விசார…

    • 0 replies
    • 405 views
  2. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு விடுத்த உத்தரவு தொடர்பில் சிறிலங்கா அதிகாரிகளுக்கும் யுனிசெஃப் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபட்டார் என்ற காரணத்தால் ஜேம்ஸ் எல்டரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது. "சிறிலங்கா அரசு தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நாம் கடும் அதிருப்தியடைந்து இருக்கின்றோம். சந்தேகத்திற்கு இடமின்றி அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று யுனிசெஃப் அமைப்பின் பிராந்திய தகவல் தொடர்பு தலைமை அதிகாரி சாரா குரோவ் தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 403 views
  3. அமெரிக்கா உட்பட பல நாடுகள் கடுமையாகக் கண்டித்தபோதும் தமிழ் ஊடகவியலாளரான ஜே.எஸ்.திசநாயகத்திற்கு அண்மையில் விதிக்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனை நாட்டின் ஊடகத்துறையின் கைகளை மேலும் இறுக்கிக் கட்டிப்போடுவதற்கே வழிவகுத்துள்ளது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் அறிவிக்கப்படாத தணிக்கை முறை கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு ஊடகங்கள் மீதான கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்துள்ளதாக ஏஎஃப்பி கருத்துத் தெரிவித்துள்ளது. திசநாயகத்தின் தண்டனைக்கு எதிராக பல்வேறு தரப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அவை அனைத்தையும் சிறிலங்கா வெளிவிவகாரத்துறை ஒதுக்கித் தள்ளிவிட்டது. இத்தகைய கருத்துக்கள் …

    • 0 replies
    • 370 views
  4. புலம்பெயர்ந்த தமிழர்களுடன் அமெ ரிக்க அரச அதிகாரிகள் உத்தியோக ரீதியில் சந் தித்துக் கலந்துரையாடியதாலேயே நியு யோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த கலந்துகொள்ளாதிருக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக " த நேஷன்"ஆங்கில வாரப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 16 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அங்கம் வகிக்கும் " அமெரிக்க தமிழ் அர சியல் செயலவை" என்னும் அமைப்பு அண் மையில் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி அமைச்சர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துக் கலந்துரையாடியது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் மூரேயும் கொழும் பில் இருந்து செய்மதி மூலமாக இணைந்திருந்தார். இச்சந்த…

  5. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளரும் சட்டவாளருமான விஸ்வநாதன் உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர் வெளித்தெரியக்கூடிய, தமக்கு ஆபத்தான தலைவராக உருத்திரகுமாரன் உருவெடுப்பார் என சிறிலங்கா அஞ்சுகின்றது. இதனாலேயே அண்மையில், தமிழர்கள் சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்படும் காணொலி வெளியிடப்பட்டதன் பின்னணியில் உருத்திரகுமாரன் இருந்தார் எனவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சிங்கள ஊடகவியலாளர்களுக்கு பணம் கொடுத்து அந்தக் காணொலியை அவர் வெளியிட வை…

    • 0 replies
    • 514 views
  6. சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தபோதும் செக் குடியரசு நான்காம் கட்ட ஈழப் போரின் முக்கிய காலப் பகுதியில் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரி-55 ரக டாங்கிகள் நாற்பதை அது வழங்கியுள்ளது. செக் குடியரசைச் சேர்ந்த ஆயுத விற்பனை முகவரான மிச்சல் சிமாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிப்படையான சண்டை நடைபெறும் இடங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. செக் குடியரசு ஒன்றியத்தின் உறுப்பு நாடாகையால் இந்தத் தடை அதற்கும் பொருந்தும். இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசுக்கும் அது ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது. ஆனாலும் இவற்றை எல்லாம் மீறி ந…

    • 0 replies
    • 302 views
  7. ஊடகவியலாளர்களை முடக்குவதற்கும் மாணவர்கள் மற்றும் அரசுக்கு எதிரான அரசியல் செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுமாயின் அதற்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பாகத் தீர்மானம் ஒன்றை எடுக்கப்போவதாக சிறிலங்காவின் மூன்றாவது பெரிய கட்சி என வர்ணிக்கப்படும் ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் அதனை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பாக அதற்கு முன்னதாக தாம் தீர்மானிக்கப் போவதாகவும் ஜே.வி.பி. நேற்று அறிவித்திருக்கின்றது. அவசரகாலச் சட்ட நடைமுறைக்கு இவ்வளவு காலமும் ஆதரவு வழங்கிவந்த ஜே.வி.பி., நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவித்தலை வெளி…

    • 0 replies
    • 456 views
  8. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஐந்து முக்கிய விடயங்கள் தொடர்பாக முக்கியமாகப் பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்த கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர், இவை தொடர்பாக அரச தலைவரின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக அமைந்துள்ளது என்பதைப் பொறுத்தே தமது அடுத்த கட்ட நடவடிக்கை அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். அரச தலைவருடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய பேச்சுக்கள் கொழும்பில் உள்ள அரச தலைவரின் செயலகத்தில் பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் முக்கிய உறுப்பினர்களை உள்ளடக்கிய …

    • 0 replies
    • 539 views
  9. 'சனல் - 4' வெளியிட்ட காணொலி தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக சிறிலங்கா அரசின் மூத்த பிரதிநிதி ஒருவர் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்துவிட்ட பின்னர், இப்போது அந்த அமைப்பின் பிரச்சார இயந்திரத்தினால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய நிலைமையில் தாம் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரச்சார உத்திகளால் அனைத்துலக சமூகம் தவறான முறையில் வழிநடத்தப்படக்கூடாது எனவும் கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தகவல் தெரிவித்த அவர் வலியுறு…

    • 0 replies
    • 493 views
  10. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதிய மூத்த அதிகாரி ஜேம்ஸ் எல்டரின் விசா பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து சிறிலங்கா அரசிடம் யுனிசெஃப் விளக்கம் கேட்டுள்ளது. இத்தகைய வெளியேற்றம் ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தமட்டில் வழமைக்கு மாறானது என்று தெரிவித்தார் யுனிசெஃப் அமைப்பின் பிராந்திய தகவல் தொடர்பு அதிகாரி சாரா குரோவ். "இது ஒரு அபூர்வ நிகழ்வு" என்றார் அவர். நான்கு மாதங்களுக்கு முன்னர் அனைத்துலக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஜேம்ஸ் எல்டர், போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமான நிலையில் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய கருத்துக்காகவே அவர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்…

    • 0 replies
    • 489 views
  11. எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் : திடுக்கிடும் தகவல் on 05-09-2009 18:54 சமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகளை, இலங்கைக்கான ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு சேனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டிருந்தது. அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம், தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார். இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன்தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க்குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கை அரசின் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு முறை தமிழர்கள…

  12. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக் கொழும்பு அரசு அறிவித்துள்ள இன்றைய சூழலில், தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்த சூனிய நிலைக்குள் அரசியல் அந்தகாரத்துக்குள் சிக்கி, நிலை தெரியாமல், வழிபுரியாமல் தவிக்கின்றார்கள் என்று பல தரப்பிலும் பிரபலாபிக்கப்படுகின்றது. இந்த இக்கட்டு நிலைமையில் இருந்து தமிழர்களை மீட்டு எதிர்கால சுபிட்சம் நோக்கி வழிநடத்துவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும், ஐக் கியப்பட்டும் செயற்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக் கைகள் முன் வைக்கப்படுகின்றன. நல்ல விடயம் தான். இன்றைய நிலையில் தமிழர்களின் ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டு ஏதேனும் சாதிக்கமுடி யுமா, மக்களை அழிவில் இருந்து பாதுகாத்து மீட்டுக் …

  13. சிறிலங்கா அரச படையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேரின் புனர்வாழ்வுக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகம் உதவிகளைச் செய்ய வேண்டும் என சிறிலங்கா அரசு கேட்டுள்ளது. இந்த இளைஞர்களுக்கு புனர்வாழ்வு வழங்க முடியும் என்பதில் சிறிலங்கா புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க நம்பிக்கை வைத்துள்ளார். தமது ஆணையகம் உள்ளூர் வர்த்தகர்களுடனும் அனைத்துலக அமைப்பைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவ அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தற்சமயம் வெளிப்படையாகப் புலிகளை நாம் அழித்து விட்டோம். ஆனால், இந்த இளைஞர்கள் நீண்ட காலமாக புலிக…

  14. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்ணிவெடிகளை அகற்றியுள்ள இடங்களில் கரையோரப் பிரதேசங்களில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் தகவல்களுக்கமைய, இந்தத் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அடுத்து கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட உறுதிப்படுத்தப்படும் பிரதேசங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களைக் குடியமர்த்தாது அரசாங்கம் வேறு சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றது. 375 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றுப் பண…

  15. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 06/09/2009, 14:07 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – மகிந்த நாளை சந்திப்பு! இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துமாறு பேசுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். வடக்கில் இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் குடியமர்த்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். நாளை நடபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, என்.சிறீகாந்தா, சுரேஸ் பிரேம…

  16. இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அந்நாடு பிளவடைந்து போகாமல் இருப்பதற்கும் தமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாஷை, இடையூறாக இருப்பது போன்றதொரு கருத்து நிலை உலவ விடப்பட்டுள்ளது.இந்திய நலனிற்கு இசைவானதொரு அரசியல் நியாயத்தை ஈழத் தமிழ் மக்கள் முன்வைத்து, அதனடிப்படையில் ஓர் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அனுசரணையும் ஆசீர்வாதமும் அப்போராட்டத்திற்கு முழுமையாகக் கிடைக்குமென்று சில புதிய சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள். இந்தியா உடையாமல் இருப்பதற்கு ஈழத் தமிழினத்தின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டுமென்பதை விட, தாயகக் கோட்பாட்டையும், தன்னாட்சிக் கோரிக்கையினையும் தவிர்த்து, மாகாண சபைகளை ஏற்றுக் கொண்டால் போதுமென்பதே, இந்திய கொள்கை வ…

  17. சிறிலங்காவுடன் தனது அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தோரியத்தைப் பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பான சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வருமாறு இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதிகளில் தாராளமாகக் காணப்படும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாகவே இந்தியத் தரப்பினருடன் ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்ப…

  18. ஞாயிற்றுக்கிழமை, 6, செப்டம்பர் 2009 (11:17 IST) ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும், அவரது தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோதபய ராஜபக்சேவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாத்து அனைத்து சமூகங்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியதாக கூறி அவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் வழக்கப்படுகிறது. நக்கீரன்

  19. ஈழத் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான் உண்டு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார ஏடு தெரிவித்துள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' வெளியிட்ட காணொலியில் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் காட்சி தொடர்பாக குமுதத்தில் வெளிவரும் அரசு கேள்வி - பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கேள்வி கேட்டுள்ளார். அந்தக் கேள்வியும் பதிலும் வருமாறு: ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக்காட்சியைப் பார்த்தீர்களா? அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லியிருக்கிறாரே நம்பலாமா? கிருஷ்ணாக்கள், நாராயணன்கள், மேனன்…

  20. சனல் 4" தொலைக் காட்சியில் இலங்கை இராணுவச் சிப்பாய்கள் தமிழர்களை சுட்டுக் கொல்வதாகக் காண் பிக்கப்பட்ட வீடியோப் படம், செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்சி என்று முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த ஐலண்ட் " ஆங்கிலப் பத்திரிகை நேற்றுச் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் குறிப்பிட்ட வீடியோ காட்சி செயற்கையாக உருவாக்கப்பட்டது; பொய்யானது என்று கூறியுள்ளது என்று கூறியுள்ள பாதுகாப்பு செயலாளர் இது குறித்து மேலும் " ஐலண்ட்" பத்திரிகைக்குத் தெரிவித்த தாவது: குறிப்பிட்ட வீடியோக் காட்சியில் இலங்கை அரசாங்கத்துக்கு மாசு உண்டாக்குவதற்காக செயற்கையாக உர…

  21. சிங்களப் படையினரால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொலியை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத சிறு குழுவினரான சிங்களவர்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு எதிராக லண்டனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'சனல் - 4' நிறுவனம் ஒரு பொய் செய்திச் சேவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் தாங்கி இருந்தனர். "'சனல் - 4' நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும்", "மில்லர் என்றால் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் என்று அர்த்தம்", "'சனல் - 4' ஒளிபரப்பு வெட்கக்கேடான பொய்", "இனிமேல் நாம் எப்படி 'சனல் - 4' செய்திகளை நம்புவது", "'சனல் - 4' இன் பிந்திய செய…

    • 0 replies
    • 539 views
  22. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதிவழியாக பஸ்களில் பிரயாணம் செய்ய, இராணுவத்தினரின் அனுமதியைப் பெறுவதற்காக முதல் நாள் இரவு 10.00 மணிக்கே பயணிகள் டோக்கன் பெறுவதற்காக கியூவில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து தினசரி சுமார் 10 பஸ்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு வவுனியாவுக்கு வந்து மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்றன. இந்த பஸ்களில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதியைப் பெறுவதற்கு தினசரி 500 நம்பர்கள் காலையிலேயே டோக்கனாக வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன் பெறாதவர்கள் தமது யாழ். பயணத்…

  23. தமிழகத்தைச் சேர்ந்த 27 அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி வழங்கி வந்தார்கள் என்று ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். இந்தத்தலைவர்கள் மீது இந்திய உளவுப்பிரிவினர் விசாரணைகள் மேற்கொள்ளவேண் டும் என்றும் அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளார். இலங்கையில் மீள்குடியமர்வு மற்றும் அனர்த்த நிவாரண அமைக்கர் ரிசாத்பதியுதீன் விடுதலைப்புலிகளிடம் பண உதவி பெற்றவர்களின் விவரத்தைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்றும் சுப்பிரமணிய சுவாமி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும் விடுதலைப் புலிகளிடம் இருந்து நிதி உதவி பெற்றுவந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சி.பி. ஐ அமைப்பின் தலைமையில் குழு ஒன…

  24. பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான "சுல்பிகார்' இன்னும் சில தினங்களில் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரக பேச்சாளர் ஒருவர் தெவித்துள்ளார். நட்புறவான இவ்விரு நாடுகளினதும் கடற்படைகளின் நெருக்கமான செயற்பாட்டுக்கு இவ்விஜயம் வாய்ப்பாக அமையும் எனவும் அப்பேச்சாளர் தெவித்துள்ளார். பிராந்திய நாடுகளுக்கான இத்தகைய விஜயம் வழக்கமானதொன்றாகும். ஆனால் அவசரகால சவால்கள், பாதுகாப்பு பலப்படுத்தல் மற்றும் தேசிய நலன்கள் போன்றவற்றின் காரணமாக இத்தகைய விஜயங்கள் அதிகத்துள்ளன என பாகிஸ்தான் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் தெவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாக்கிஸ்தான் படைகளுக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்க மறைமுக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. http://appa…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.