ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
ஜப்பானிய அனைத்துலக வானூர்தி நிலையத்தில் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் விரல் ரேகை நேற்று சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டதுடன், அவர் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். மிக முக்கிய நபர்களுக்கு (விஐபி) வழங்கப்படும் மதிப்பு பிரதமருக்கு ஜப்பானின் நரிட்டா வானூர்தி நிலையத்தில் வழங்கப்படவில்லை என்றும் சாதாரண பயணிகள் பின்பற்றும் நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார் எனவும் அவருடன் வானூர்தியில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்தார். ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் சென்றுள்ளார். கோபேயில் இருந்த ஜப்பானிய ஆலயம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டி …
-
- 0 replies
- 489 views
-
-
பிரித்தானியாவில் புகலிடம் தேடியுள்ள தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் பிரித்தானியா இறங்கியுள்ளதை அதன் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த கண்டனங்களை வெளிவிடும் பிரித்தானியா, மறு பக்கம் அங்கு தஞ்சமடைந்துள்ள தமிழர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. தற்போதைக்கு இந்தச் சிக்கல் நடராஜா என்பவருக்கு ஏற்பட்டுள்ளது. நடராஜா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். தற்போது பிரித்தானியாவிலுள்ள இவரை பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்ப பிரித்தானிய அதிகாரிகள் கடந்த வருடம் முயற்சி செய்ததாக பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய இவர், தாம் பிரித்தானியாவில் இருந்த வேளை, 20…
-
- 1 reply
- 794 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் செயலரான இமெல்டா சுகுமாரை கிளிநொச்சிப் பணிமனைக்குச் சென்று இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. போரின்போது சேதமடைந்த கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைப் புனரமைக்கும் பணிகளை தொடங்குமாறு தனக்கு அரசினாலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் படைத்துறை அதிகாரிகளினாலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். "மாவட்டத்தில் போரினால் சேதமடைந்த மருத்துவமனைகள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபை அலுவலகங்கள், தபால் நிலையங்கள், கூட்டுறவு நிலையங்கள் போன்ற அரச கட்டடங்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எனக்கு கூறப்பட்டுள்ளது" என்றார் மாவட்ட செயலர். முல…
-
- 0 replies
- 448 views
-
-
வவுனியாவில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்காக தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த துணைப் படைக் குழுவினர் 5 தொடக்கம் 7 லட்சம் ரூபாய் வரை அறவிடுகின்றனர் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. பெரும் தொகைப் பணம் செலவிடப்பட்டு முகாம் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற தகவல் குறித்து அந்த வார ஏடு நடத்திய புலனாய்வின்போது இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. முகாமில் இருந்து வெளியே கொண்டுவரப்படும் மனிதர் வவுனியாவிற்குள்ளே விடப்படுவதாக இருந்தால் அதற்கான தொகை ஒரு லட்சம் ரூபாய். குறித்த நபரை முகாமில் இருந்து வெளியே கொண்டு வந்து அவரை கொழும்பு கட்டுநாயக்கா வானூர்தி நிலையம் வரை அழ…
-
- 0 replies
- 326 views
-
-
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது என சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக இருந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதிலும் பார்க்க முதலமைச்சராக இருந்து அதிகம் சேவையாற்ற முடியும் என தான் நம்புவதால், அந்தப் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக தேவானந்தா தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல்களுக்குப் போவதற்கு முன்னதாக வடக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் நடத்துமாறு நாம் அரச தலைவரிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு முடிவதற்குள் ஏனை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்…
-
- 0 replies
- 655 views
-
-
சிறிலங்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் விசா அனுமதிப் பத்திரம் இன்றி, பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் லண்டனுக்கு அனுப்பப்ட்டது தொடர்பாக நாட்டின் குடியேற்றத்துறை உயர்மட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கட்டுநாயக்க பயணிகள் வானூர்த்தி நிலையத்தில் பணியாற்றிய குடியகல்வு - குடிவரவு அதிகாரி ஒருவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறையான விசா இல்லாமல் பயணி மேற்கொண்டு பயணம் செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் எமது அதிகாரி தவறு செய்துவிட்டார் என குடியகல்வு - குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் பி.அபயகோன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றது. 40 வயதான அங்கயற்கண்ணி…
-
- 0 replies
- 721 views
-
-
தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வுத் திட்டத்தை சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வழங்கினால் அவருக்கு ஆதரவு அளிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நாளை திங்கட்கிழமை சந்தித்துப் பேசவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கே சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இருந்தபோதிலும் அரசுக்கு எவ்வாறான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்பதையிட்டு தகவல் எதனையும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கவில்லை.…
-
- 0 replies
- 467 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முன்னெடுத்த சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அவர் தற்போது வகித்துவரும் கூட்டுப் படைத் தளபதி பதவிக்கு மேலதிகமாக மற்றொரு உயர் பதவியும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை புதிய பதவி குறித்த விபரங்கள் வெளிவிடப்படமாட்டாது. எனினும் பொன்சேகாவின் பல்துறை ஆற்றலுக்கு அந்தப் பதவி பொருத்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமைதிக் காலத்திலும்கூட அவரது சேவையை நாடு பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான சூழலை அந்தப் பதவி ஏற்படுத்திக் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதினம்
-
- 0 replies
- 333 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த உயர் அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு திடீர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ள சிறிலங்கா அரசு, அதற்காக அவருக்கு இரண்டு வார காலக்கெடுவையும் விதித்திருக்கின்றது. அவரின் 'விசா'வை இரத்துச் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் உடனடியாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத போதிலும், வவுனியா முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சீற்றத்தை ஏற்படுத்தியதையடுத்தே இவ்வாறான அதிரடி நடவடிக்கையில் சிறிலங்கா அரசு இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) ஒரு மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் என்பரே இரு வார காலத்துக்…
-
- 1 reply
- 531 views
-
-
சிறிலங்கா தரைப்படை புலனாய்வுத்துறையின் தளபதியாக இருந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர மேஜர் ஜெனரலாகத் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். நான்காவது ஈழப் போரில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புக்காக அவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். கெய்டிக்கு அனுப்பப்பட்ட சிறிலங்கா அமைதிப் படையின் முதல் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தவர் அமல் கருணாசேகர. காலாட்படையின் மிகச் சிறப்பான தளபதியாக அங்கு அவர் பணியாற்றினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், பிரபாகரன் மற்றும் புலிகளின் ஏனைய தலைவர்களின் மறைவிடங்கள் மீது வான்படையினர் மேற்கொண்ட தாக…
-
- 0 replies
- 423 views
-
-
கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள் * இவ் விடயம் 05. 09. 2009, (சனி), தமிழீழ நேரம் 6:31க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி kpவிடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்ற…
-
- 7 replies
- 2.4k views
-
-
சனிக்கிழமை, 5, செப்டம்பர் 2009 (23:7 IST) இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் ஸ்லோவாகியா இயந்திரங்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்ற ஸ்லோவாகியா நாட்டிலிருந்து 2 நவீனரக இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இயந்திரங்கள் தானாகவே இயங்குபவை. 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் நின்றுகொண்டு இவற்றை இயக்க முடியும். கண்ணி வெடிகளை நிபுணர்களைக் கொண்டுதான் அகற்றுவார்கள். ஆனால் சமயத்தில் அவர்களுடைய உயிருக்கோ, உடல் உறுப்புகளுக்கோ கண்ணிவெடிகள் ஆபத்தை ஏற்படுத்திவிடும். இதன் அருகில் ஆள்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லாததால் மனித உயிரிழப்போ, காயமோ…
-
- 2 replies
- 529 views
-
-
திகில் திட்டத்தில் சிங்கள அரசு பொன்சேகா வயிற்றில் புளி! ''ராஜசேகர ரெட்டியை காணவில்லை!'' என இந்திய மீடியாக்கள் பதறிக் கொண்டி ருந்த நேரத்தில், ''ஃபொன்சேகாவை காணவில்லை...'' என்கிற பரபரப்பு இலங்கை முழுக்கப் பரவிப் பதற்றத்தைக் கிளப்பியது. ''இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் கூட்டுப் படைத்தளபதியான ஃபொன் சேகாவுக்கும் இடையே நடக்கிற பனிப்போர்தான் இந்தப் பர பரப்புக்கு காரணம்...'' என்று கொழும்பிலிருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றி கொழும்பில் இருக்கும் விவரமறிந்த வட்டாரங்களில் பேசினோம். ''புலிகளை ஒழிக்கும் வரை ஃபொன்சேகாவை ராணுவத் தளபதியாக வைத்து தட்டிக் கொடுத்த ராஜபக்ஷே சகோதரர்கள், இப்போது அவரை ஒழித்துக் கட்ட தீவிரமாகி விட்டார்கள். 'புலிகளை அடியோடு அழித்து, 60 …
-
- 0 replies
- 1.2k views
-
-
பொய்களின் வடிவங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம் திகதி: 04.09.2009 // தமிழீழம் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜன…
-
- 3 replies
- 1.4k views
-
-
சீனாவும் சிறிலங்காவும் புடம்போடப்பட்ட நண்பர்கள் எனத் தெரிவித்திருக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக சீனா மேற்கொண்ட உதவிகளுக்கு சீனாவிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து உரையாடியபோதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இப்போது புடம்போடப்பட்ட நண்பர்களாகி உள்ளனர் என்று தெரிவித்தார் மகிந்த ராஜபக்ச. சீனாவின் கொள்கைகளுக்கு சிறிலங்கா எப்போதுமே ஆதரவாக நின்றுள்ளது எனக் கூறிய அவர், அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரி…
-
- 0 replies
- 478 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக பிரித்தானியா குற்றம் சாட்டி வரும் அதேவேளை, தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து இரட்டை வேடம் போடுகின்றது என அகதி நிலை கோரி விண்ணப்பித்திருந்த தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனது அகதி நிலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான அனுமதியை பிரித்தானிய உயர் நீதிமன்றம் வழங்குவதற்கு முன்னதாக தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முயற்சிக்கின்றது என விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான நடராஜா தெரிவித்தார். "எனது அப்பா 2007 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டார். அப்போது நான் அங்கு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு நான் அங்கு இருந்தபோது கடத்தப்பட்டு மிக மோசமாகத் துன்புறுத…
-
- 0 replies
- 415 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்க உள்ளது. பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் தலைவர்களுக்கான கலாநிதி பட்டம் வழங்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், நிகழ்வில் அரச தலைவர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வார் என மட்டும் அரச தலைவர் செயலகம் உறுதிப்படுத்தியது. அண்மையில் நடந்த, பல்கலைக்கழப் பேரவைக் கூட்டத்தில் அரச தலைவருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் கௌரவ கலாநிதி பட்டம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் இறைமை, நிலபுல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாது…
-
- 0 replies
- 337 views
-
-
முன்னாள் சமாதானத் தூதுவரும் நோர்வே சுற்றுச் சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் கூட இந்த உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் கோத்தபாய கூறினார். ஐக்கிய நாடுகள் சபை கூட அந்தக் காணொலி தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறி ஒதுக்கிவிட்டது எனக் கூறிய கோத்தபாய, 'சனல் - 4' வெளியிட்ட காணொலி குறித்து விசாரணை நடத்த வேண்டியது எமது தேவையல்ல. ஆனால், அது பற்றி அனைத்துலகம் விசாரணைகளை நடத்திக்கொள்ளட்டும்" என்றார். புதினம்
-
- 0 replies
- 426 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் முகமாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகம் பொய்யான பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவ்வாறான ஒரு முயற்சியே பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சியாகும். அதில் சித்திரிக்கப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு நவீன தொழிநுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிலையம் கூறியது. இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல கைச்சாத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 559 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மாளிகாவத்தைப் பகுதியில் அண்மையில் சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பாஜியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பாவி இளைஞர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்கின்றனர் எனத் தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜியின் படுகொலையை அடுத்து அவரது குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்பாவி இளைஞர்கள் என அப்பகுதிப் பொதுமக்கள் கூறுகின்றனர். அப்பாவி இளைஞர்களைக் கைது செய்யும் காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசுக்கு எதிராக பல்வேறு ஆர்…
-
- 0 replies
- 420 views
-
-
இது தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய சென்னை ஊடகவியலாளர் சங்கம் அதனை சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்திடம் கையளித்துள்ளது. ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை தீர்ப்பை மீறுவதற்கானதோ அல்லது இல்லாது செய்வதற்கானதோ அதிகாரத்தை சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டுச் சட்டங்கள் வழங்கவில்லை எனத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஆர்.மோகன், அரச தலைவர் இதில் தலையிட வேண்டும் என்றார். அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து திசநாயகம் மேன்முறையீடு செய்யும் வரையில் அவரை பிணையில் விடுவிப்பதற்கு அரசு தேவையான அனுசரணைகளை வழங்கவேண்டும் என்றும் பிரதித் தூதுவரிடம் சென்னை ஊடகவியலாளர் சங்கம் கோரியுள்ளது. தமிழர்களுடனான கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவர்களின் வீடுகளை மீளக் கட்டி எழுப்…
-
- 0 replies
- 346 views
-
-
ஒரே தலைவர் என்ற நிலையை ஒழித்து, தமிழீழ விடுதலை இயக்கத்தினை (ரெலோ) வழிநடத்துவதற்கு என 12 பேர் கொண்ட நடவடிக்கைத் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கையில் நடைபெற்ற போரின் போது, சட்டத்துக்கு முரணான படு கொலைகள் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வகைகூற வேண்டியது அவசியம். அதேபோன்று இவ் விடயத்தில் ஒளிவுமறைவு இலங்கையில் நடைபெற்ற போரின் போது, சட்டத்துக்கு முரணான படு கொலைகள் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வகைகூற வேண்டியது அவசியம். அதேபோன்று இவ் விடயத்தில் ஒளிவுமறைவு இல்லாமல் அரசு, வெளிப்படையாக இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வாறு இலங் கையின் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருடன் இங்கு நடத்திய சந்திப்பில் எடுத்துரைத்தார். இலங்கையில் நல்லிணக்கம் ஏற…
-
- 0 replies
- 461 views
-
-
சிறிலங்காவுடன் தனது அணுவாயுத தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தூரியத்தைப் பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பான சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வருமாறு இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதிகளில் தாராளமாகக் காணப்படும் தூரியத்தைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாகவே இந்தியத் தரப்பினருடன் ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இது தெ…
-
- 0 replies
- 577 views
-