ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளைக் கையாண்டவிதம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரண்டாவது பதவிக் காலத்தை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. இலங்கையின் மனிதாபிமான அவலத்தை சிறப்பான முறையில் பான் கீ மூன் கையாளவில்லை என்ற கருத்து பல நாடுகள் மத்தியில் குறிப்பாக மேற்குலக நாடுகள் மத்தியில் நிலவுகின்றது. இந்நிலையில் அவரது இரண்டாவது பதவிக் காலத்திற்கான வாய்ப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரிகள் மத்தியில் பலத்த கேள்வி எழுந்துள்ளது என 'வாசிங்ரன் போஸ்ட்' நாளேடு தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் அந்த நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகள் வருமாறு: போர் நடந்து கொண்டிருந்தபோது பொதுமக்களின் உயிரிழப்புக்களைக் குறைக்க…
-
- 3 replies
- 457 views
-
-
சிறிலங்காவில் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமை கண்டித்து, அறவழிப் போராட்டமாக, இன்று ரயில் மறியல் போராட்டத்தினை நடத்துகின்றோம். இது ஆரம்ப கட்ட அறநிலைப் போராட்டமே. இதற்குரிய சரியான தீர்வு கிடைக்காவிடின், இலங்கைத் தூதரகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். சென்னையில் பெரியார் திடலில், ரயில் மறியல் போராட்டத்திற்காக திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி தலைமையில், திராவிட கழகத்தைச் சேர்ந்த கருஞ்சட்டை தொண்டர்கள் கூடினார்கள். தலைவர் கி.வீரமணி, தலைமையில், கோசங்களை எழுப்பியவாறே புறப்பட்டனர். ஈ.வி.கே…
-
- 5 replies
- 920 views
-
-
வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கான படைப் பயிற்சி நிலையங்களை அமைக்கப்போவதாக சிறிலங்கா தரைப் படைத் தளபதி ஜகத் ஜயசூரிய அறிவித்திருப்பதையடுத்து இந்தியத் தரப்பு குழப்படைந்திருப்பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள ஆசிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஆதிக்கப் போட்டியை எவ்வாறு திறமையாகவும் தந்திரோபயமாகவும் பயன்படுத்தி அதனைத் தமக்கு சாதகமாகக்கிக்கொள்வது என மகிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெயிலி மிரர்' ஆங்கில நாளேடு விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதில் முக்கியமான பகுத…
-
- 11 replies
- 1.5k views
-
-
பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தின பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கருத்துரைத்த பாக்கியசோதி சரவணமுத்து, வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய தன்னை ஒரு மணிநேரம் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார். சிறிலங்காவுக்கு வரும் பொழுது தன்னை கைது செய்யும்படி கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்கா இரகசிய பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்ததாக கைது செய்தவர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில் தன்னிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு மண…
-
- 1 reply
- 688 views
-
-
வன்னி வதை முகாம் தமிழர் விடுதலை இயக்கம் ‘வன்னி வதை முகாம் தமிழர் விடுதலை இயக்கம்’ என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் முகாமுக்குள் வதைபடுவதோடு விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை சித்திர வதை செய்து சுட்டுக் கொல்லும் செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. உடடினயாக தமிழர்களைக் காப்பாற்ற இந்தப் பிரச்சினைக்காக சர்வதேச மட்டத்தில் அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்டு 31 அன்று மாலை 4 மணி யளவில் சென்னையில் கூடியது. ‘மக்கள் கண்காணிப்பகம்’ ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்), விடுதலை இராசேந்திரன் (பெரியார் திராவிடர் கழகம்),…
-
- 0 replies
- 972 views
-
-
இடம்பெயர்ந்த முகாம்களில் சுத்தமற்ற குடிநீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கொலரா மற்றும் வயிற்றோட்டம் காரணமாகவே அதிகளவானோர் உயிரிழப்பதாகவும் அவர்கள் வாழும் சுற்றுச்சூழலே அடுத்தபடியான அதிக உயிரிழப்பிற்கு காரணம் எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். ஷமுகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டறியும் மத்திய நிலையம்| என்ற அமைப்பினால் அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஷஷதென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் மக்களின் 40 ஆயிரம் பேரில் ஒருவர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். என்ற போதிலும் இலங்கையில் இந்த நிலைமையானது 4…
-
- 1 reply
- 693 views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் உறுதி வழங்கியதற்கமைய அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 150 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவெனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஷஷவரவு செலவுத் திட்டத்தின் மூலமாக அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிக…
-
- 0 replies
- 631 views
-
-
அமெரிக்க புலனாய்வுத் துறையின் (cia) அதிகாரிகள் சிலர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் டுயயெ நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இந்தியப் புலனாய்வுப் பிரிவான ஷறோ|வினால், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள தகவலுக்கமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை அறியமுடியாதுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். எவ்வாறாயினும், இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் காணப்படும…
-
- 0 replies
- 1.9k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் பிள்ளையான் தமது கட்சியின் அலுவலகம் ஒன்றினை திறப்பதற்கு முயன்றபோது கருணா குழுவினர் இன்று காலை கல்வீசி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதன் காரணமாக ஓரிரு மணித்தியாலங்கள் பதட்ட நிலை காணப்பட்டது. இருப்பினும் சிங்கள பொலிசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது. ஆனால் மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட காரியாலயம் அடுத்த சில நாட்களில் அக்கரைபற்றில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://parantan.com/pranthannews/
-
- 1 reply
- 799 views
-
-
செய்தியாளர் சத்தியன் 01/09/2009, 14:00 தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் - நோர்வேயில் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நோர்வே பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் நோர்வே நாட்டில்ன அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆராய்ச்சிக்காக நேற்று திங்கட்கிழமை இரு நாள் பயணமாக நோர்வே நாட்டுக்குப் பான் கீ மூன் வந்திருந்தார். நோர்வே நாட்டுப் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போதே இலங்கை விவகாரம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் பான் கீ மூனுக்கு விளக்கம் அளித்துள்ளார். சந்திப்ப…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 20க்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் பாதுகாப்பிற்காக 2,400 பாதுகாப்பு ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இதனால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 1,500 காவல்துறையினரும், 500 இராணுவச் சிப்பாய்களும், மேலும் 400 பாதுகாப்பு ஊழியர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுவரையில் இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்தப் போட்டித் தொடரின் பாதுகாப்பிற்கே அதிகளவு செலவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்காக இந்தளவு பாரிய பாதுகாப்பு தேவையற்றதெனவும், இதுவ…
-
- 1 reply
- 655 views
-
-
சிறிலங்கா, நியூசிலாந்து மற்றும் இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு துடுப்பாட்டப் போட்டிகள் செப்ரெம்பர் மாதம் 8 ஆம் நாள் தொடக்கம் 14 ஆம் நாள் வரை சிறிலங்காவில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 543 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஜே.வி.பி. நாளேடான 'லங்கா'வில் பணிபுரியும் மூன்று ஊடகவியலாளர்கள் தென்பகுதியில் உள்ள தெல்தெனியாவில் இன்று புதன்கிழமை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்மாகாண சபை தேர்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக 'லங்கா' நாளேட்டின் ஆசிரியர் தெரிவித்தார். இருந்தபோதிலும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றுக்குள் முன் அனுமதி பெறாமல் பிரவேசித்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். புதினம்
-
- 0 replies
- 396 views
-
-
அனைத்துலக தர நிர்ணயத்திற்கும் அதிகமான சாவுகள் வன்னி தடுப்பு முகாம்களில் நிகழ்வதாக ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினால் திரட்டி தமது உறவுகளுக்காக அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் பாவனைக்கு உகந்தவையா என்பதை சிறிலங்கா தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒரு மாதத்தின் பின்னர் சோதனையிடவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 552 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் முயற்சியில் கூட்டமைப்புக்குள் இருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
வலி.வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாட்டைத் துரித மாக முன்னெடுப்பதற்காக உயர்மட்ட மாநாடு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. நீதி அமைச்சர் மிலிந்த மொறகொட இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார். கொழும்பு சென்றிருந்த யாழ்.மேல் நீதி மன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவுடன் நடத் திய கலந்துரையாடலை அடுத்தே இந்த உயர் மட்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. உயர்நீதி மன்றத்தினால் மீள்குடியமர்வு தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட குழுவின் தலைவர் என்ற வகையில் மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா , இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல் களின் விவரங்களை அமைச்சருக்கு எடுத்து விளக்கினார். இறுதியாக இடம்பெற்ற கலந்துரை யாடலின் போது தெல்லிப்பழை அரசினர் வைத்தியச…
-
- 0 replies
- 497 views
-
-
ஊடகவியலாளர் திஸநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் இருபது வருட கடூ ழியச் சிறைத்தண்டனைத் தீர்ப்பை இலங் கையின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஊடகவியலாளர் திஸநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் இருபது வருட கடூ ழியச் சிறைத்தண்டனைத் தீர்ப்பை இலங் கையின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றிய மைக்கவேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப் பகப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் இக்கோரிக்கையை கண்காணிப்பகத்தின் சார்பாக முன்வைத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு பிரபல ஊடகவியலாளரான திஸநாயகத்துக்கு எதிரான வழக்கு நடவடிக்கையைக் கைவிட்டு விடவேண்டும் என்றும் அவர் க…
-
- 0 replies
- 560 views
-
-
இந்தியா - சிறிலங்கா இடையே கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் ஒன்று விரைவில் கைச்சாத்திடப்பட உள்ளது என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 287 views
-
-
வன்னியில் கைதான ஐந்தாவது தமிழ் மருத்துவரும் பிணையில் விடுவிப்பு வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை, அரசுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை வெளிநாட்டு செய்தி முகவர்களுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாவது தமிழ் மருத்துவரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் எஸ்.சிவபாலன் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து மருத்துவர் இரண்டு இலட்சம் ரூபா உறுதிப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருடன் தடுத்து வை…
-
- 0 replies
- 569 views
-
-
சிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரபல அரசியல், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து வெளிநாட்டுப் பயணம் ஒன்றை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பும்போது கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு குற்றப் புலனாய்வுத்துறையினரால் கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த பாக்கியசோதி சரவணமுத்து இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்து, குடிவரவுப் பகுதியைத் தாண்டிவந்து கொண்டிருந்தபோதே குற்றப் புலனாய்வுத்துறையினரால் மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக வானூர்தி …
-
- 0 replies
- 684 views
-
-
20 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் பிரபல ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்துக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கேட்டுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. 'நோத் ஈஸ்ட் ஹெரால்ட்' இதழில் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் திசநாயகத்துக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை வழங்கியதையடுத்து, வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அனைத்துலக அமைப்புக்கள் பலவற்றின் பிரதிநிதிகள் இந்த தீர்ப்பு தொடர்பாக தமது அதிருப்தியை வெளிவிவகார அமைச்சரிடம் நேரடியாகவே தெரியப்படுத்தியிருக்கின்றா
-
- 1 reply
- 353 views
-
-
இலங்கைக்கு இந்தியக் கிரிக்கெட் குழு: தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல் மதுரை, ஆக. 31: இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் குழு செல்லத்தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஜோயல்பவுல் அந்தோணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முத்தரப்பு போட்டிகள் செப்.8 முதல் 13-ம் தேதிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை அமைப்புகளை வடபகுதியில் அனுமதிக்கவில்லை. சர்வதேசச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருள்களை இலங்கை பயன்படுத்தி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் 12 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தற…
-
- 3 replies
- 750 views
-
-
2005ஆம் ஆண்டின் ஜுன் 03ஆம் திகதி நான் சனல் 4இன் செய்தியறையிலிருந்து ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வீடியோவில் ஆறு பொஸ்னிய முஸ்லிம் ஆண்கள் இழித்துரைக்கப்பட்டு சேர்பிய இராணுவத்தினரால் செரபிரனிக்கா எனும் இடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்னர். அந்தத் துணை இராணுவக் குழுவினர் கைது செய்திருந்தவர்களை ஏளனஞ் செய்தனர். சித்திரவதைக்குள்ளாக்கினர். அவர்கள் சிகரெட் புகைத்துக் கொண்டும் கேலிப் பேச்சுப் பேசிக் கொண்டுமிருந்தனர். அவற்றைப் படம் பிடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பாளன் தனது ஹன்டிகம் கமெராவின் பற்றறி சக்தியிழந்து கொண்டு போகிறது என்றும், அதற்கு முன்னர் படம் பிடித்து முடித்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழப்பிரச்னைக்காக விஜய், விஜயகாந்த் போராட்டம் நடத்தியதுண்டா?: பாமக on 01-09-2009 00:38 விஜய், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், ஈழப் பிரச்னைக்காக ஏதாவது போராட்டம் நடத்தியதுண்டா? என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் நடந்த அக்கட்சிக் கூட்டதில் பேசிய அவர், தகுதியும் திறமையும் இல்லாத நடிகர்கள் இன்று அரசியல் பிரவேசம் செய்து வருகின்றனர். இவர்களில் எத்தனை பேர் சமூக முன்னேற்றத்திற்காக போராட்டம் செய்து சிறை சென்றனர் என, கூற முடியுமா? ஒரு சம்மன் அனுப்பியதற்கே கூச்சலிடும் விஜயகாந்த் போன்றவர்களால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும் என்பதை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விஜய், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், ஈழப் பிரச்னைக்காக ஏதா…
-
- 3 replies
- 1.2k views
-