Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாணத்தில் இருந்து முதலீட்டாளர்கள் திரும்பி செல்கின்றனர்! adminOctober 8, 2025 வடமாகாணத்தில் முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். பிரதேச சபைகளில் பணியாற்றுபவர்களின் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பல்வேறு அனுமதிகள் தாமதமடைவதாக சுட்டிக்காட்டுகின்றார்கள். மக்களுக்கான சேவைகளை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும். தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். திண்மக் கழிவு அகற்றல் உள்ளூராட்சி மன்றங்களுக்க…

  2. வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகேநபர் குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு , இளைஞனை கைது செய்தனர். அதன் போது வீட்டில் இருந்து கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் , ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குற்றச்ச…

  3. Published By: Vishnu 07 Oct, 2025 | 07:29 PM (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படல் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம்…

  4. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று காலை, குறித்த பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் இருந்த வேளை, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி, தனது உடமையில் 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, அவரை நீதிமன்றத்தில் …

  5. 07 Oct, 2025 | 01:59 PM உதவித் தொகை வழங்கும் அமைப்பாக அன்றி நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் ஒரு அமைப்பாக சமுர்த்தி அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்று சமுர்த்தியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது சமுர்த்தி தொழிற் சங்க சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கீர்த்தி பண்டார கிவுல்தெனிய இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபையை வங்குரோத்து நிலைக்கு தள்ளினர். கடந்த ஆட்சி காலத்திலும் ஐ.எம்.எப் இன் நலனில் நாட்டம் காட்டிய அவர்கள் சமுர்த்தி அதிகார சபையை கலைக்கும் நிலைக்கு வழிகாட்டினர் என்றார். அகில இல…

  6. இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதுடன் கணிசமாக வறுமையும் உயர்ந்துள்ளதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீட்சியை வலுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை, அவசர கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொது செலவினம் தொடர்பான சிறந்த இலக்கு என்பன தேவைப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. இலங்கை பொருளாதாரமானது 2025 ஆம் ஆண்டில் தொழில்துறையின் வளர்ச்சியினால் 4.6 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை கா…

  7. முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாத உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (7) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். சில முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திய வாகனங்களை தற்போது ஒப்படைத்துள்ளனர். எனினும் அது அந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற விடயங்கள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக…

  8. நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்டமாக 70வீடுகளும் இரண்டாம் கட்டமாக 28வீடுகளும் அமைக்கப்பதற்கான நிதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டதாக 70மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டின் உரிமையாளர்களிடம் கையளித்திருக்கின்றோம். அதனைவிட இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில் உள்ளீர்க்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்…

  9. பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் October 7, 2025 0 நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் நிலப் பத்திர மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நில மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அத்தகைய ஒரு வழக்கறிஞரை கைது செய்யும் நோக்கத்துடன், காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் ஞாயிற்றுக்கிழமை(05), நுழைந்து, வீட்டிற்குள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தின்…

  10. ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 07 Oct, 2025 | 12:25 PM 38 வருடம் நடைமுறைப்படுத்தாத 13ம் திருத்தத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தற்போது அமுல்படுத்த கோருவது ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி முடக்குவதற்காகவே என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 13ம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்க…

      • Like
    • 2 replies
    • 175 views
  11. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது! 07 Oct, 2025 | 02:01 PM இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட பாதீடு யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் கடந்த செப்டெம்பர் மாதம் 18,ஆம் திகதி அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த தொகை சுமார் ஒரு கோடியே என்பது இலட்சம் (18 மில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான கடந்த ஒக்டோபர் 1, 2025 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வந…

  12. இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும். எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 1. எச்…

  13. இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, அமர்வில் அறிவித்துள்ளார். எனினும், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக் கொள்வதாக, அவைத் தலைவர் தெரிவித்தார். அதன்படி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றைக் கொண்ட குழுவால் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அல்பேனியா, ஆஸ்திரியா, கோஸ்டார…

  14. யாழில் புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம்! adminOctober 7, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், வைபர் பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும் , அதற்காக 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும் என சில பெண்களின் புகைப்படங்களில், அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட புகைப்படங்களை விளம்பரமாக பிரசுரிக்கின்றனர். அவற்றை நம்பி சில அந்த விளம்பரங்களில் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை கேட்கும…

  15. யாழில். சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்! adminOctober 7, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொறுப்பதிகாரிகள் தொடர்பில் காவற்துறை தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/221251/

    • 1 reply
    • 163 views
  16. wp-content/litespeed/avatar/2684735edbe524bb22324f0d9738aa29.jpg?ver=1759301393 Madawala News14 hours ago 0 2 minutes read wp-content/uploads/2025/10/Picsart_25-10-06_13-48-50-155-780x993.jpg அம்பாறை மாவட்டம் தமன பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பன்னல்கம கிராம மக்கள் அனைவரும் பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி கடனாளிகளாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு, பன்னல்கம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அருணலு பஹன்சிலு என்ற பெயரில் விளக்கு திரிகளை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இது ஒரு பத்தி தயாரிக்கும் தொழிலாகத் தொடங்கப்பட்டது, மேலும் கிராம மக்களுக்கும் அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருவர் ரூ. 50,000 தொகையை வைப்பீடு செய்யும்போது…

  17. இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீ…

  18. என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா October 6, 2025 12:41 pm கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்க…

    • 2 replies
    • 245 views
  19. 06 Oct, 2025 | 04:50 PM அகில இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உச்ச மகாநாயக்கரான மதீஹே பன்னசீஹ மகாநாயக்க சுவாமிந்திரசாவின் தலைமையில் நிறுவப்பட்ட விபாசி பௌத்த மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 68 இலட்சம் ரூபாய். இதற்காக சுகாதார அமைச்சகம் 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை மருத்துவமனை சேவைகள் சபை செலவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு கடற…

  20. 06 Oct, 2025 | 12:37 PM யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227014

  21. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆகாயத்தில் இருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' கடந்த முதலாம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும். 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தற்போது டி.வி தெரணவில் காணலாம். https://adaderanatamil.lk/news/cmgemvr3e00upo29n4hy1mbv1

  22. Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 02:28 PM பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிள…

  23. நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன் 06 Oct, 2025 | 10:34 AM நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத…

  24. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் ! 06 Oct, 2025 | 10:41 AM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்…

  25. பெரும் மக்கள் கூட்டத்தையும் பெரும் கல்விசமூகத்தையும் கொண்டிருக்ககூடிய வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் தெரிவு அல்லத அதில் உள்வாங்கியவர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாக மாறியதாக கருதப்படுகின்றது. இந்தநிலையில் தமிழர் பகுதிகளில தமிழ் கட்சிகள் வென்றிருந்தால் ஐ.நா ஆணையாளரின் வருகை கூட மாறியிருக்கும் என்று பிரித்தானிய தமிழர்பேரவையின் மனிதஉரிமைகள் இணைப்பாளர் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நாவில் தமிழ் மக்களுக்கான பின்னடைவிற்கான முழுபொறுப்பையும் தமிழரசுக்கட்சி ஏற்க வேண்டும். தமிழரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.