ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களது பதவிக்காலம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்ததைத் தொடர்ந்து குழு செயல் இழக்கும் நிலையை அடைந்துள்ளது என அதன் செயலாளர் சந்திரா எல்லாவல தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 289 views
-
-
சோராமல் தொடர்ந்தும் கனடா ரொரன்டோ 360 யூனிவேசிற்றி அவெனியுவில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 121 நாட்களைக் கடந்து தொடர்கிறது. தாயகத்தில் வதைமுகாம்களுக்குள் அவலமுறும் 3 இலட்சம் மக்களைக் காப்பாற்றவும், அவர்களை சுதந்திரமாக வாழவிடவும், மீள அவர்தம் மனைகளில் வாழ வழி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தபடி இக்கவனயீர்ப்புத் தொடர்கிறது. கனடாவில் பல தமிழ் ஊடகங்கள் இருந்தும் இந்த மக்கள் போராட்டத்தை முன்னிலைப்படுத்தாத போதும் தாயகமக்களின் வேதனையைத் தீர்ப்பதற்காக தன்னார்வம் கொண்ட மக்கள் தொடர்ந்தும் இக்கவனயீர்ப்பை நடாத்திவருவது அவர்களின் தளராத தாயகப்பற்றை அடையாளப்படுத்துகிறது.
-
- 0 replies
- 396 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் அதிகாரபூர்வ வாகனத்தை சிறிலங்கா காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 288 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 90 தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மகசீன் சிறைச்சாலையில் 96 தமிழ் கைதிகள் உள்ளபோதிலும் உடல்நிலை காரணமாக ஆறு கைதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் ஏனைய 90 கைதிகளும் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக சிறைச்சாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக மகசீன் சிறைச்சாலையில் இருந்து மலரவன் என்ற தமிழ் அரசியல் கைதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று வழங்கிய சிறப்பு நேர்காணல் வருமாறு: உங்களின் உ…
-
- 0 replies
- 249 views
-
-
இராணுவத்துக்குப் புதிதாக ஐம்பதாயிரம் பேரை திரட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன தளபதி ஜகத் ஜயசூரியா தகவல் இராணுவத்துக்குப் புதிதாக 50 ஆயிரம் பேரை சேர்த்துக் கொள் ளும் நடவடிக்கை ஆரம் பிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி லெப் டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள் ளார். வன்னியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்குத் தாங்கள் மேலும் அதிகளவில் படையினரைப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ் வொன்றின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இராணுவத் தள பதி இவற்றைக் கூறினார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் இராணுவத்துக்குப் புதிதாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பே…
-
- 0 replies
- 475 views
-
-
கொடுமை தாங்காமல் முகாம் மக்கள் சிங்களப்படையினருடன் மோதும் நிலை வரும்! வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் அளவிட முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதை அடுத்து அங்கு மக்களுக்கும் சிங்களப் படையினருக்கும் இடையில் மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளது. முகாம்களில் காணப்படும் கொடூரமான வாழ்க்கைச் சூழல் காரணமாக அங்குள்ள மக்கள் மிகப் பெரியளவில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முகாம் மக்களின் நிலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 654 views
-
-
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீள குடியமர்த்த அமைச்சர் ரிசாத் தீவிர நடவடிக்கை. யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கான வாய்ப்பு நிலைகள் குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீன், யாழ்ப்பாண அரசாங்க அதிபருடன் ஆலோசித்துள்ளார். கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானிய கல்லூரியை மறுசீரமைப்பது குறித்த அறிக்கை ஒன்றையும் யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் இருந்து கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைச்சர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு விஜயம் மேற…
-
- 0 replies
- 493 views
-
-
கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் Tuesday, 18 August 2009 கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. பரந்தன் இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம். கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப…
-
- 19 replies
- 3.4k views
-
-
தமிழகச் செய்தியாளர் அகரவேல் 21/08/2009, 18:44 நெடுமாறன் மீது தமிழகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு? ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் மீது தமிழகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புல்லாரெட்டி அவென்யூவில் நேற்று வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. விதிமுறைகளை மீறியும், அரசு உத்தரவுகளை மீறியும் பொதுக்கூட்டத்தைப் பழ.நெடுமாறன் நடத்தியதாக அவர்மீது வழக்குப் பதிவை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இவர் மீது நான்கு வெவ்வேறு குற்றச் சாட்டுகளை சுமத்தி இவ்வழக்கை தமிழகக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். பதிவு
-
- 0 replies
- 426 views
-
-
இடம்பெயர்ந்தோர் முகாமில் இருக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேரை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் எரிக் சுவாட்ஸ் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக விடுவிக்க முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் இடையில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையான பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கின்றனர் என புலனாய்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இலங்கையின் தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்;ட விடயங்களில் அமெரிக்க கோரிக்கைகளை விடுக்க முடியாது. இவர்களை விடுவித்து படையினர் மீண்டும் தமது கையில் சூடு வைத்து கொள்ள மாட்டார்கள் என பாதுகாப்பு உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்…
-
- 1 reply
- 806 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 21/08/2009, 13:02 பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு கொலை அச்சுறுத்தல்! இலங்கையில் மாற்று கொள்கை மத்திய நிலையத்தின் நிறைவேற்ற பணிப்பாளர் கலாநிதி பாக்கிசோதி சரவனமுத்துவிற்கு இனம் தெரியாதோர் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை எழுத்து மூலம் எழுதப்பட்ட கடிதம் ஒன்று அவரின் வதிவிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதிலேயே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள், அரசாங்கத்திற்கு எதிரான வழக்குத் தாக்கல்கள், அரசாங்கத்திற்கு எதிரான பரப்புரைகளை பாக்கிசோதி சரவணமுத்து மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு
-
- 0 replies
- 406 views
-
-
இராணுவத் தளபதியாக இருந்தபோது ஜெனரல் சரத் பொன்சேகாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரி, இராணுவத் தலைமையக வளாகத்திற்குள் அழைத்துவந்த சரத் பொன்சேகாவின் சமையற்காரர் ஹனீபா நம் கடந்த 16ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் உயிரிழந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்த தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியாக இது இருக்கக் கூடும் என பொன்செகா முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு வழமைபோல் எமது மின்னஞ்சலுக்கும் பிரதியொன்றை அனுப்பியுள்ளனர். எனினும், சரத் பொன்சேகா மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக குண்டுதாரியை அழைத்துவந்த முஸ்லிம் பிரஜையான பொன்சேகாவின் சமையல்கார் …
-
- 0 replies
- 1.6k views
-
-
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை கொழும்பிற்கு ஏ9 வீதியூடாகக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரூடாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைக்குத் தேவையான மருந்துகள் ஏ9 வீதியூடாக சுகாதார அமைச்சின் லொறிகள் மூலம் கொண்டுவரப்படுவதால் வைத்தியசாலைக்கு தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதாகவும் வைத்தியசாலையின் பாவனையில் உள்ள இரண்டு லொறிகளில் ஏ9 வீதியூடாக பொருட்களைக் கொண்டு வருவதற்கும் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெவித்துள்ளது.
-
- 1 reply
- 534 views
-
-
வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் அவர்களின் சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதன் மலேசியாவில் கடத்தப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை இப்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றத
-
- 2 replies
- 771 views
-
-
சிறிலங்காவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் பல மாத காலமாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தம்மை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி நாளை சனிக்கிழமை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 260 views
-
-
சிறிலங்காவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் பல மாத காலமாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தம்மை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி நாளை சனிக்கிழமை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் மிக்க தமிழினம், மிகப்பெரும் நெருக்கடியையும், அறைகூவல்களையும் எதிர்நோக்கியுள்ளது. இலங்கையில் பூர்வீகக் குடியினரான ஈழத் தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருகிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்தக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுக்காலம் அறவழியிலும் 30 ஆண்டுக்காலம் மறவழியிலும் போராடினார்கள். கடந்த 60 ஆண்டுக்காலத்தில் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய…
-
- 0 replies
- 867 views
-
-
தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள மாலைதீவில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் 'த ரெலிகிராப்' நாளேடு தெரிவித்திருக்கின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் - குறிப்பாக இந்தியாவைச் சுற்றிவளைப்பதுபோல இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா தொடர்ச்சியாக முகாம்களை அமைத்து வருவதையிட்டு இந்தியா விழிப்படைந்திருக்கின்றது. பாகிஸ்தானின் கெளடார் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை அமைத்துவரும் சீனா, இங்கு தமது அணுவாயுத நீர்மூழ்கிகளை வைத்திருப்பதற்குத் திட்டமிடுகின்றது. இதனைவிட சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மற்றும் பங்களாதேசிலும் துறைமுகங்களை அபிவிர…
-
- 1 reply
- 596 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் திரைப்படம் இயக்கவுள்ளார். படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி பெங்களூரைச் சேர்ந்த இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் திரைப்படம் இயக்கவுள்ளார். படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 526 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச அடுத்த பொதுத் தேர்தலில் குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் இருந்து அரசியலுக்குள் நுழைவதற்குத் திட்டமிட்டுள்ளார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
சிறிலங்காவின் எல்லா நிறைவேற்று அதிகார அரச தலைவர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருக்கின்றன. அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த அரசே மிக மோசமானது என்று தெரிவித்தார் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவருமான மங்கள சமரவீர. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 303 views
-
-
கிளிநொச்சியிலும் திருகோணமலையிலும் இரு தொழில் வலயங்களை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்து விட்டன என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடைமுறைப்படுத்துவதே தனது நோக்கம் என்று இந்தியாவுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
வெளிநாடுகளைச் சேர்ந்த படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு சிறிலங்கா தரைப்படையினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு என முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் புதிய படைத்துறைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-