ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
வடபகுதியில் உள்ள இரண்டு பிரதான உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்று இன்று தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக சிறிலங்கா அரசு விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
வவுனியாவின் 35 கிராமங்களில் 3000 பேரை மீளக்குடியேற்ற நடவடிக்கை : பசில் ராஜபக்ஷ வீரகேசரி இணையம் 7/27/2009 11:33:07 AM - வவுனியா மாவட்டத்தின் 35 கிராமங்களில் 3000 பேரை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதியளவில் மீளக்குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக வவுனியாவில் மதிப்பீட்டு கூட்டம் ஒன்று இடம்பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். விவசாயம், …
-
- 2 replies
- 547 views
-
-
யேர்மனி சோலிங்கனில் கொடிய புற்றுநோயால் காலமான கந்தையா உதயகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 577 views
-
-
யுத்தம் காரணமாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 280000 பொதுமக்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. அகதி முகாம்களில் தமிழ் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. உக்கிர மோதல்களின் காரணமாக 2008ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சமடைந்த பொதுமக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அகதிகளை சுதந்திரமாக இடம்நகர்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதன் மூலம் சர்வதேச சட்டங்களை அரசாங்கம் மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அகதி முகாம்களில் உள்ள சொற்பளவான முதியவர்கள் மட்டுமே இதுவரையில் விடுதலை …
-
- 0 replies
- 421 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிடுவதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையை ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
வீரகேசரி இணையம் - பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடனும் சமத்துவத்துடனும் தமிழ் மக்கள் வாழ வேண்டும். இதற்காக நாம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றோம். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அரசியல் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன எனக் கூறி வரும் அரசாங்கத்தின் கூற்றைப் பொய்ப்பித்து உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டத்தக்க வகையில் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன…
-
- 6 replies
- 938 views
-
-
தொடரின் அண்மைய பதிவு---- அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் நக்கீரனுக்காக எழுதியது ஒருவகையில் இருளின் காலமே நமக்கு நம்பிக்கையாகவும் ஆயிற்று. நக்கீரன் வாசகர்கள் அத்தகு நம்பிக்கையின் குறியீடாக மாறியதையும் வரலாற்றிற்காய் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். ஈரோட்டிலிருந்து ஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர், ""ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான் பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை... எந்தப் படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்'' என்றார். இந்த உரையாடல் நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப் படித்துவிட்டுப் பேசினார். இரு வாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்த…
-
- 2 replies
- 1k views
-
-
போர் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், சிறுவர்களுக்கு ஆபத்தான ஒரு நாடாகவே சிறிலங்கா உள்ளது என சிறுவர்களைப் படைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிரான கூட்டமைப்பு (the Coalition to Stop the Use of Child Soldiers) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 561 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் அல்லறுகின்ற மக்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடனும் தாம் பேசத் தயாராக இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகின்ற அரசியல் முனைப்புகளை தாம் வரவேற்பதாகவும் அதன் பின்னர் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் விரிவான ,காட்டமான , பன்மைத்தன்மையான ஜனநாயகத்தையும் வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை அது விடுத்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களில் உள்ள வன்னி மக்களின் உடனடித் தேவைகள் தொடர்பாக எ…
-
- 0 replies
- 735 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய நிலை - சொ.யோகரூபன் - தமிழ்த் தேசிய அரசியல் இராணுவ ரீதியில் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அரசியல் ரீதியில்; தோற்கடிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசு தற்போது இறங்கியிருக்கின்றது. தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லாத நிலையிலும், ஆயுதப் போராட்டம் ஏதோவொரு வகையில் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் தாயகத்தில் தமிழ்த் தேசிய அரசியலைத் தாங்கிப் பிடிப்பனவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் ஊடகங்களும் தான் உள்ளன. இன்று அவை இரண்டையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் முயற்சி இரண்டு வழிகளில் இடம்பெறுகின்றன.…
-
- 0 replies
- 772 views
-
-
வடக்கின் ஒரு பகுதியில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் முகாம்களுக்குள் அடைபட்டிருக்க, யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் பிரதான கட்சியான பொதுசன ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, சுயேட்சைக் குழு - 1, சுயேட்சைக் குழு - 2 ஆகியன போட்டியிடுகின்றன. சில கட்சிகள் மாநகரத்தில் உள்ள அரச மற்றும் தனியார்களுக்கு சொந்தமான சுவர்களை தங்களின் சுவரொட்டிகளால் நிரப்பி அழகு பார்க்கின்றன. இது தவிர வீடு வீடாக சென்றும் தங்களுக்கு வாக்குகள் கேட்கத் தொடகியுள்ளனர். கட்சிகள் தேர்தல் தொடர்பாக செய்யும் ஆரவாரங்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் ப…
-
- 1 reply
- 389 views
-
-
புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை எடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாரும் வரவில்லையாம். இதனால் அந்தப் பொருட்களை ஏலம் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அடைக்கப்பட்டன. அவை சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் நிறுவனத்திடம் ஒப்படை…
-
- 3 replies
- 940 views
-
-
செய்தியாளர் சத்தியன் 28/07/2009, 21:45 வடக்கில் 60 ஆயிரம் படையினரின் குடும்பங்களை குடியேற்றத் திட்டம் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பில் ஒன்றான வடக்கில் சிறீலங்காப் படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் குடும்பங்களை சிறீலங்கா அரசாங்கம் குடியேற்றத் திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மாளிகையை மேற்கோள்காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன. வன்னியில் இறுதி யுத்தத்தில் 3 இலட்சம் வரையிலான தமிழர்கள் வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் செய்யாது, இழுத்தடிக்கப்படும் காலப்பகுதியில் படையினரின் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறீலங்கா அரச ஊழியர்களுக்கான வீட்…
-
- 0 replies
- 677 views
-
-
தமிழ் இளைஞர்கள் 8 பேர் கொழும்பில் கைது இன்று செவ்வாய்க்கிழமை காலையில் கொழும்பு எட்டியாவத்தைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்து 8 தமிழ் இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். இந்த இளைஞர்களை இப்போது கொட்டாஞ்சேனை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் உறவினர்களால் கூறப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த தேடுதல் நடவடிக்கையானது கடந்த இரு நாட்களாக எட்டியாவத்தை பகுதியில் தொடர்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. http://www.meenagam.org/?p=6649
-
- 0 replies
- 674 views
-
-
விடுதலைப் புலி உறுப்பினரும் அவரது தந்தையும் கொழும்பில் கைது வவுனியா தடுப்பு முகாமிலிருந்து தப்பி வந்த புலி உறுப்பினர் ஒருவரையும், அவரை கொழும்புக்கு அழைத்துவந்த தந்தையையும் கொழும்பு மத்திய பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது. தந்தையார் ஒரு சிங்களவர் என்றும், இவர் சிறுவனாக இருந்தபோதே பெற்றோரால் நொச்சியகமவிலிருந்த தமிழ் வணிகர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டதாகவும் எனவே அந்த தமிழ் வணிகர் இவருக்கு தமிழ்ப் பெயர் சூட்டி வளர்த்ததாகவும் விசாரணைகளில் அறியப்பட்டுள்ளது. பின்னர் சுகாதார அமைச்சில் சாரதியாகப் பணியாற்றிய இவர் தமிழ் பெண் ஒருவரையே மணந்து கொண்டார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் இன அழிப்பை தமிழ்நாடு தலைவர்கள் சிலர் உதாசீனம் செய்கின்றனர் – சிவாஜிலிங்கம் ஈழத்தில் தமிழ் மக்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை, இந்திய மத்திய, மாநில அரசுகளிலுள்ள தமிழ்நாடு தலைவர்கள் சிலர் உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ள “தமிழர் தன்மானப் பாசறையின்” தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் 50,000 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், பன்னாட்டு சமூகம் அது பற்றி பாராமுகமாக இருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 686 views
-
-
போர் முடிந்தும் சிறுவர்களது உரிமைகள் பேணப்படவில்லை – சிறுவர் உரிமைகள் அமைப்பு இலங்கையில் போர் முடிந்துள்ளபோதும் சிறுவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்வதால் அவர்களின் உரிமைகள் ஆபத்தான நிலையிலேயே உள்ளனவென்று அமெரிக்காவில் இயங்கும் சிறுவர் உரிமைகள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் சிறுவர்களை படைகளில் இணைப்பதைத் தடுக்கும் சிறுவர் உரிமைகள் அமைப்பானது, வவுனியா தடுப்பு முகாம்களில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தடுப்பு முகாம்களிலுள்ள சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டு அச்சிறுவர்களைக் காக்கும் நடவடிக்கைகளை உடனும் இலங்கை அரசு செயற்படுத்தவேண்டும் என அழுத்தம் கொடுக்…
-
- 0 replies
- 845 views
-
-
கொக்குவிலில் மயக்க மருந்து தெளித்து வீட்டில் கொள்ளை வீரகேசரி இணையம் 7/28/2009 2:45:05 PM - வீட்டார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் மயக்க மருந்து தெளித்து பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவமொன்று கொக்குவில் மேற்குப் பத்தானை ஒழுங்கையில் நேற்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது : நள்ளிரவு வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த வேளையில் உள் நுழைந்த கொள்ளையர்கள், மயக்க மருந்தை தெளித்துவிட்டு வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, டெக், றேடியோ, கையடக்கத் தொலைபேசி உட்பட மற்றும் பல பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ள அலுமாரிகளும் உடைக்கப்பட்டுள்ளன. தங்க நகைகள் புதைத்து வை…
-
- 1 reply
- 603 views
-
-
செய்தியாளர் கயல்விழி 28/07/2009, 15:23 தென் கொரியாவிலுள்ள இலங்கையர் திருப்பி அனுப்பப்படுவர் தென் கொரியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் உட்பட பலர் திருப்பி அனுப்பப்பட இருப்பதாக, அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேபாளத்தில் இருந்தே அதிகமானோர் தஞ்சம் கோரியிருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து சீனா, மியன்மார், சிறீலங்கா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 107 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்ச அனுமதி வழங்கியுள்ள தென் கொரிய அரசு, ஏனைய 700 பேரை திருப்பி அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. பதிவு
-
- 0 replies
- 650 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 28/07/2009, 15:35 யாழ் - கொழும்பு வான் போக்குவரத்தில் அமைச்சுக்களிடையே முரண்பாடு யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான பயணிகள் வானூர்தி சேவை தொடர்ந்து நடத்தப்படும் என, சிறீலங்கா வான் படையினர் அறிவித்துள்ளனர். இந்த சேவை நிறுத்தப்பட வேண்டும் என, சிறீலங்கா வான் போக்குவரத்துச் சபையினால் பணிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை ஏற்றுக்கொள்ள வான் படையினர் மறுத்துள்ளனர். வானூர்தி சேவைக்கான சான்றிதழ் வான் படையினரிடம் இல்லை எனத் தெரிவித்தே, சிறீலங்கா வான் போக்குவரத்துச் சபையினால் குறிப்பிட்ட அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், போர் காலத்தில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைவாக தாம் இந்த சேவையை மேற்கொண்டு …
-
- 0 replies
- 394 views
-
-
செய்தியாளர் தாயகன் 28/07/2009, 15:11 வடக்கு கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள் வலுப்படுத்தப்படுகின்றன தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்ற சிறீலங்கா அதிபரது மூத்த ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்ச, அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். வடக்கு – கிழக்பைப் பிரிக்கும் நோக்குடன் மணலாற்றில் ஏற்கனவே குறிப்பிட்டளவு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்த போதிலும், போர் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த சிங்கள மக்களை உடனடியாக மீளக்…
-
- 0 replies
- 386 views
-
-
பன்மைத்துவத்தை ஏற்ப்படுத்தி ஜனநாயகத்தை கட்டி எழுப்பி தமிழ் மக்களின் இழந்த வாழ்வை மீட்க அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்கும்படி யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் வேண்டி நிற்கிறோம். அரை நூற்றாண்டுக்கு மேல் அனைத்து போராட்ட வழிமுறைகளிலும் பேராடிய ஈழத்தமிழ் மக்கள் இன்று நிலை மாறும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளார்கள். தமிழ் மக்களின் கடந்த கால போராட்ட அனுபவங்களை பாடமாகக் கொண்டு நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உரியதான புதிய அரசியல் வழி முறைகளை மேற் கொள்ள வேண்டி அவசியத்தில் தமி;ழ சமூகம் இன்றுள்ளது. இதில் முதலாவதாக தகவல் யுகத்தில் எல்லா வகையான தொடர்புர்;களையும் துண்டிக்கப்பட்டிருக்கும் வன்னி அகதி மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டும்., அடுத்து முஸ்லீம் மக்கள் உள்ளடங…
-
- 1 reply
- 546 views
-
-
வவுனியா அகதிமுகாம்களை பார்வையிட்ட அமெரிக்க உதவி அமைச்சர் கவலை தெரிவிப்பு 8 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவிப்பு [28 யூலை 2009, செவ்வாய்க்கிழமை 5:00 மு.ப இலங்கை] இராணுவத்தின் மேற்பார்வையில் நடத் தப்படும் வவுனியா அகதி முகாம்களின் நிலைமை குறித்து அமெரிக்காவின் அகதி களுக்கான உதவி அமைச்சர் எரிக் பி. சுவாட்ஸ் பெரும் கவ லையும் அதிருப்தியும் வெளியிட்டுள் ளார். அங்கு அதிருப்தி தரும் பிரச்சினைகள் உள்ளன. அங்கு மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட வேண் டும். இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கை யானவர்கள் முகாம்களுக்குள்ளேயே முடங் கிக் கிடக்கும் அவல நிலை உள்ளது. மனிக்பாம் முகாம் பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் கொழும்புக்கு திரும்பிய அமெரிக்க உதவி அமைச்சர் நேற்று நடத்திய …
-
- 0 replies
- 702 views
-
-
மூன்று தசாப்த காலத்திற்கும் மேலான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்களின் வாழ்க்கை முட்கம்பிவேலிச் சிறைகளுக்குள்ளும் அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலும் ஆயுதம் தாங்கிய படையினரின் தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு, கெடுபிடி, விசாரணை போன்ற பல்வேறு அபாயகரமான சூழலுக்குள்ளேயே இன்னமும் அமுக்கி வைத்துள்ளதையே தொடரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன. வன்னியின் மிகப்பெரும் உக்கிரமான இறுதி யுத்தத்தின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்து இடம்பெயர்ந்தவர்களில் மிகப்பெருமளவிலானோர் சுமார் மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் யாழ். குட…
-
- 2 replies
- 724 views
-