ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
வன்னியில் இடம்பெற்ற மோதல் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் சமரநாயக்க முகாம்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள 173 தமிழ் மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்குத் தெரிவாயுள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் …
-
- 2 replies
- 684 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளனர். 'உயிர்க்கும் தமிழீழம்' என்ற பெயரில் இந்த மாபெரும் பேரெழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் உயிர் கொடுத்து வளர்த்த தலைவன் இலட்சியம் தோற்காது என்ற கொள்கைப் பிடிப்போடு அணிதிரளுமாறும் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்கப்ப…
-
- 0 replies
- 951 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும் - பிரான்ஸ், பிரித்தானியா கண்டனம் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என, பிரான்ஸ் அரசும் கோரிக்கை விடுத்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியம் வழங்கியுள்ள 2.6 பில்லியன் நிதியுதவி மூலம், மக்கள் உடனடியாக மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என, பிரான்சின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், வவுனியா முகாம்களிற்குச் செல்ல மனிதநேய அமைப்புக்களுக்கு தடைகள் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரெஞ்சு அரசு கேட்டுள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனுடதவியை பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஆர்ஜன்ரீனா போன்ற நாடுகள் எதிர்த்திருந்த போதிலும், 70 வீதமான ஆதரவு சி…
-
- 0 replies
- 512 views
-
-
இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி ஆகியோரை மீட்க, மீன் துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர். கச்சதீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன் துறையில் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர். தொடர்ந்து கச்சதீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்…
-
- 3 replies
- 1.9k views
-
-
மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர் முயற்சிகட்கு உறுதுணையாக நிற்பதும் உலக நாடுகள் அனைத்தையும் விடப் பெருமளவில் பொருளாதார உதவி வழங்கி வருவது சீனா தான் என்று வலியுறுத்தும் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. வழமையாக முற்போக்கான ஏகாதிபத்திய விரோதத் தகவல் எதையுமே தமிழாக்குவதில் தமிழ் ஊடகவியலாளர்கட்கு அக்கறையில்லை. உலக நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் ஏதாவது இந்திய இணையத்தளத்திலிருந்தாவது அப்படியே எடுத்தாளப்பட்டு உரிய நன்றி கூறல் இல்லாமல் "நன்றி - இணையம்" என்ற சொற்களுடன் வெளிவருகின்றன. மேற்கூறிய கட்டுரை 10-05-2009 ஞாயிறு தினக்குரலில் மிகக் கவனமாகத் தமிழாக்கப் பட்டுள்ளது. இவ்வாறான அக்கறை பிற விடயங்களிலும் இனிமேற் கொண்ட…
-
- 5 replies
- 1.1k views
-
-
செய்தியாளர் கயல்விழி 27/07/2009, 12:06 பஹ்ரெயின் பிரதமர் நாளை கொழும்பு பயணம் பஹ்ரெயினின் பிரதமர் சேக் கலிபா பின் சல்மான் சிறீலங்காவிற்குச் செல்ல இருக்கின்றார். சிறீலங்கா அரசின் அழைப்பின் அடிப்படையில் நாளை கொழும்பு செல்லும் இவர், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மற்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்த இருக்கின்றார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பொருண்மியம், வர்த்தகம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. pathivu
-
- 0 replies
- 416 views
-
-
இந்தோனேஷியாவில் தப்பிச் செல்வதற்கு முயன்ற 17 இலங்கை தமிழர்கள் கைது வீரகேசரி நாளேடு 7/27/2009 9:03:49 AM - இந்தோனேஷியாவில் சட்டவிரோதமாகத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் 17 பேர் அந்த நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு லம்போக்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் சபையின் நேரடி நிருவாகத்தில் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 17 பேர் அங்கிருந்து வெளியேற முற்பட்டுள்ளனர். முகாமில் இருந்து வெளியேறிய 17 பேரில் 7 பேர் பெங்குலு பிரதேசத்திலும் ஏனைய 10 பேரும் மாகாண காவல்துறை தலைமை அலுவலகத்திலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முகாமி…
-
- 0 replies
- 470 views
-
-
இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையிலான உள்ளுர் பயணிகள் வானூர்தி சேவையை சிறிலங்கா வான்படை இன்று திங்கட்கிழமை காலை அதிகாரபூர்வமாக தொடங்கியது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்காப் படையினரின் பாதுகாப்புக்காக வெட்டி அழிக்கப்பட்ட வேலிகளை மீண்டும் புனரமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள படையினர், எல்லைகளை மட்டுமே போடுமாறும் வேலிகளை மறைத்துக் கட்டவேண்டாம் எனவும் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 340 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது சிறிலங்காப் படைகளில் இருந்து தப்பியோடியோருக்கு அந்நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 298 views
-
-
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலினைக் கண்காணிக்க பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான குழு (சி.எம்.ஈ.பி) ஆகிய இரு உள்நாட்டுக் கண்காணிப்புக்குழுக்களுக்கு மாத்திரமே இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு குழுக்களிலும் ஒவ்வொரு உறுப்பினர்களே வாக்களிப்பு நிலையங்களினுள் இருப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின்படி யாழ்.மாநகரசபைத் தேர்தலில் ஒரு இலட்சத்து 412 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இதற்காக 70 வாக்களிப்பு நிலையங்களும் 35 மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்.மாநகரசபைத் தேர்தலில் வாக்களிப்பத…
-
- 1 reply
- 397 views
-
-
நிபந்தனையுடன் கூடிய பெரும் நிதி உதவியை அனைத்துலக நாணய நிதியம் வழங்கியுள்ள நிலையில், சிறிலங்கா அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
சிறிலங்கா தரைப்டையின் 55 ஆவது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சேவையில் இருந்து ஓய்வு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
ஆபாச இணையதளங்கள் சிறிலங்காவில் தடை – சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் படங்கள், வீடியோக்கள் கொண்டுள்ள சுமார் 12 ஆபாச இணையத்தளங்களைத் தடைசெய்யும்படி சிறிலங்கா தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணையத்துக்கு (TRC) சிறிலங்கா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் பலவற்றை இந்த தளங்கள் கொண்டிருப்பதாகவும், இலவசமாக அணுகக்கூடியதாக இருப்பதால் அனைவரும் அவற்றைப் பார்க்கிறார்கள் என்றும் போலீசார் முறையிட்டதாலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கொழும்பு குற்றவியல் நீதிபதி நிஷாந்த கப்புராச்சி கூறியுள்ளார். வலைத்தளத்தின் சொந்தக்காரர்கள் இந்தத் தளங்களை 14 நாட்களுக்குள் தடுக…
-
- 16 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா தரைப்படையின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள லெப். ஜெனரல் ஜெகத் ஜயசூர்யவை, பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக கைது செய்வதற்கு முன்னாள் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெரும் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு பெருந்திரளான பக்தர்கள் குவிந்திருக்க கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 801 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்தவுடன் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக அதன் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் தெரிவித்திருக்கின்றார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கத்துடனேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவித்த கிசோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் குழு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் பொதுவான ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவித்த அவர், ஈ.பி.டி.பி., புளெ…
-
- 0 replies
- 351 views
-
-
இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக என நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் என குழுவின் தலைவர் பேராசிரியர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். பல வருட காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அமர்வுகளைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு இந்த வாரத்தில் முன்வைக்கப்படவிருக்கும் இந்த இறுதி அறிக்கையில், அரசியல் அமைப்பில் செய்யப்பட வேண்டிய பல திருத்தங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரங்களைக்கொண்ட அரச தலைவர் ஆட்சி முறை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சிமுறையை நடைமுறைக்குக் கொண்டுவர…
-
- 0 replies
- 375 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 292 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
வவுனியா தேர்தல் தொகுதியை அனுராதபுர தேர்தல் மாவட்டத்துடன் இணைப்பதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிய பலர் தென்பகுதிக்கு வந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து முகாம் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அவசர உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழற்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்.இந
-
- 4 replies
- 1.1k views
-
-
வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மூன்று லட்சம் பேரும் அவர்களின் சொந்த இடங்களில் 180 நாட்களுக்குள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று இந்தியாவுக்கு சிறிலங்கா அரசு உறுதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பேருவளை பகுதியில் இரு முஸ்லிம் மதப் பிரிவினரிமையே ஏற்பட்ட மோதல்களையடுத்து 28 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் வன்முறைகள் உருவாகுவதைத் தடுப்பதற்காக படையினரும் காவல்துறையினரும் தொடர்ந்தும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவு
-
- 0 replies
- 354 views
-