ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
தற்போதைய களநிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணல் நன்றி: தமிழ்நாதம்
-
- 20 replies
- 4.7k views
-
-
தமிழகத் தேர்தற்களத்தின் பிரச்சாரக் களத்தில், இறுதிக்ட்டப்பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருகிறார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து. திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவுள்ளார். சென்னைத் தீவுத்திடலில் இன்று மாலை இப்பிரச்சாரக் கூட்டம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சோனியாந்தியின் வருகையை முன்னிட்டு இப்பிரதேசங்களிலெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆயிரக் கணக்கான பொலிசார் சென்னையின் பல பாகங்களிலும் குவிக்கபட்எருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஈழத்தமிழரர் பிரச்சனையில் அநீதியாக நடந்து கொண்டது மட்டுமல்லாது, அவர்களுக்காகக் குரல் கொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேச சமூகத்திடம் விடுதலைப்புலிகள் சர்வதேச வழிமுறைகளில் செயற்பட கோரிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 2000ற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிறீலங்கா அரசாங்கம் பொதுமக்கள் மீது எறிகணை குண்டுதாக்குதல்களை நடாத்துகின்றது. இதுபோர்க்குற்றமாகும் மற்றும் அரச பயங்கரவாதம் எனவும் விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர தொடர்புகளுக்கு பொறுப்பான திரு.எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஐநா மற்றறும் சர்வதேச சமூகம் ஆபத்திற்குள் இருக்கும் பொதுமக்கi பாதுகாக்கும் தமது கடமையில் இருந்து தவறியுள்ளதால் மிகவும் மனவிரக்தியடைந்துள்ளனர். கடந்த காலங்களில் ஏனைய சர்வதேச முரண்பாடுகள் நிகழ்ந்த பகுதிகளில் ஐநா மற்றும் ச…
-
- 0 replies
- 898 views
-
-
"முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கை அரசு மாற்று வழிகளை நாட நாம் வழிவகுத்து விடக்கூடாது * இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது சாத்தியமில்லை சென்னையில் இந்திய பிரதமர் அறிவிப்பு சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றுக்கு இராணுவத்தை அனுப்புவது எளிதான காரியமல்லவென்று தெரிவித்திருக்கும் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே தாங்கள் விரும்புவதாகக் கூறியிருக்கின்றார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதியைப் பார்வையிட குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்ட கலாநிதி மன்மோகன் சிங் செய்தியாளர் மகாநாடொன்றிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். பொதுத் தேர்தலின் பின்னர் தனது ச…
-
- 1 reply
- 1k views
-
-
நியூயார்க் : இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக ஐநா சபையின் நிபுணர்குழு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. ஐநா நிபுணர்கள் ஆனந்த் குரோவர், பிலிப் ஆல்ஸ்டன் உள்ளிட்டோர் இன்று நியூயார்க்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்படுகொலை குறித்தும், அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச அளவில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அங்கு தற்போது மனிதாபிமானமற்ற போக்கு நிலவிவருவதாகவும், சண்டையில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், உண்மை நிலவரம் பற்றி இலங்கை அரசு இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருவது கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவி…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாதுகாப்பு வலய பகுதி மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தினால், கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் மைக் ஒவன்ஸ் விடுத்துள்ள அச்சுறுத்தல் குறித்து, இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மைக் ஒவன்ஸ் இலங்கையின் பொதுமக்கள் பற்றி குறிப்பிடும் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அமெரிக்க இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த உரிமையுமில்லை என அரசாங்கத்தின் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளுடன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவே கண்ணீர் விடுகிறது - மோடி இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். பாஜகவுக்கு ஆதரவாக நரேந்திர மோடி நேற்று தமிழகத்தில் பிரசாரம் செய்தார். முதலில் கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் நாகர்கோவிலில் பேசினார். அங்குள்ள நாகராஜா கோவில் திடலி்ல் நடந்த தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் பேசிய மோடி, பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு, பாரத நாட்டின் தென்கோடியில் வாழும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு எனது வணக்கம் என தமிழில் பேசினார். பின்னர் மோடி பேசிய…
-
- 0 replies
- 599 views
-
-
ராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அரசாங்கம் கூறுகின்ற விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தாயாமாஸ்ரருக்கு விரைவில் நாடாளுமன்றப் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பேரியல் அஸ்ரப்பின் தேசிய முன்னணி நுவாக் கட்சியின் பிரதி அமைச்சர் சேகு இஸிதீனைப் பதவி விலகுமாறும் அவருக்கு வெளிநாடொன்றின் உயர் ஸ்தானிகர் பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு சேகு இஸிதீன் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாயாமாஸ்ரருக்கு நாடாளுமன்றப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. www.globaltamilnews.net
-
- 0 replies
- 656 views
-
-
இலங்கை படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் சர்வதேச யுத்தமாக மாறியுள்ளதாக புதிய இடதுசாரி முன்னனியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தை விட யுத்தம் ஒன்று சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சர்தேச ரீதியில் இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. ராஜதந்திரிகள் தொடர்ந்தும் இலங்கைக்கு விஜயம் செய்து, யுத்தத்தை நிறுத்துவதில் காட்டு அக்கறை மூலம் இது தெளிவாக புலப்படுகிறது எனவும் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் இந்த யுத்தத்திற்கு ஏதுவான காரணங்களுக்கு சரியான தீர்வை வழங்காது போனால், எதிர்காலத்திலும் இவ்வாறான யுத…
-
- 0 replies
- 811 views
-
-
யாழ்க்குடாநாட்டிலுள்ள முகாம்களில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களில் புனர்வாழ்வு என்ற பெயரில் வடிகட்டல்கள் தொடர்கின்றன. தற்போது மிருசுவிலிலுள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இருந்து 67க்கும் அதிகமான பெண்கள் இவ்வாறு புனர்வாழ்வுக்கென படை உயர் அதிகாரிகளின் பிரசின்னத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த நடவடிக்கைகளின் போது படையினரால் கொண்டு செல்லப்பட்ட பேரூந்துகளில் ஏற யுவதிகள் மறுத்ததனையடுத்து பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டு அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலய ராணுவ கட்டுப்பாட்டிலுள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அண்மையில் குறித்த மிருசுவில் ரோமன் கத்தோலிக்க முகாமி…
-
- 0 replies
- 646 views
-
-
உலகின் 'உறங்காத நகர்' என அழைக்கப்படும் நியூயோர்க் நகரின் மையத்தில் - உலகின் சந்தி என அழைக்கப்படும் 'ரைம்ஸ் சதுக்க'த்தில் - போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான சுடர்வணக்க நிகழ்வினை அமெரிக்கத் தமிழர்கள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலையை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்: கஜேந்திரன் வேண்டுகோள் சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான அப்பட்டமான இனப்படுகொலையை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம் பெற்ற கண்மூடித்தனமான தாக்குதலில் 2000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் மேலும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்தும் உள்ளதாகவும் இந்தக் கணம் வரை சுமார் 850 ற்கும் அதிகமான காயமடைந்தவர்கள் வைத்திசாலை அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாகவு…
-
- 1 reply
- 410 views
-
-
தற்போதைய களமுனை சிறிலங்கா படையினருக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மோதல்கள் ஒரு உக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில் களமுனை ஒரு பாலைவனத்தின் அமைப்பை ஒத்ததாக மாற்றம் அடைந்துள்ளது. மணல் புயல்களும், அதிக வெப்பமும் படையினருக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதனால் படையினர் இரவிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். படையினர் வெளியான களமுனைகளில் அதிக பாதுகாப்புக்கள் இன்றி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் அவர்கள் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் சில படையினரே குறிபார்த்து சுடும் தாக்…
-
- 0 replies
- 939 views
-
-
ஈழப் பிரச்சினையைத் தொடாமல் பிரசாரம் செய்ய முடியாத நிலை கே.ஜி.மகாதேவா இந்தியாவின் பதினைந்தாவது பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் ஆறு நாட்களில் அறிவிக்கப்படும் நிலையில், மத்திய அரசின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் இறுதிக்கட்ட தமிழ்நாடு வாக்களிப்பு இவ்வாரம் பதின்மூன்றாம் திகதி அரங்கேறுகிறது! பொதுக்கொள்கையற்ற பதவி ஆசைக் கூட்டணிகள் நாடு பூராகவும் சிதறிக் கிடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, தமிழ் உணர்வாளர்களின் பன்முகச் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறது! தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகித்து, தமிழகத்தில் பதினைந்து தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி; முக்கிய எதிர்க்கட்சியா…
-
- 0 replies
- 646 views
-
-
ஐ.நா.சபையின் பராமுகமும் இந்தியாவின் போர் முகமும் - சி.இதயச்சந்திரன் கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் மனிதாபிமான யுத்தத்தை நடத்துகிறோம் என்று அரச தரப்பு கூறுவதை உறுதிப்படுத்தக் கூடிய சர்வதேச நபர்கள், எவருமே அப்பிரதேசத்தில் இல்லை. ஐ.நா. சபை வெளியிட்ட செய்மதிக்கோள் படங்களை அந்த சபையே ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. தவறுதலாக அதனை வெளியிட்டாலும் அம்மண்ணில் தப்பு நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ளும் திராணியும் ஐ.நா. சபைக்கு இல்லாதிருப்பது சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின் மீது வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்து தடை விதிக்கலாம். ஆனாலும் அறிவியல் பூர்வமான செய்மதிக்கோள் சாட்சிப்பதிவுகளின் மீது சீனாவினால் "வெட்டு வா…
-
- 0 replies
- 561 views
-
-
பிரபாகரன் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லையாம்: சொல்கிறார் விஜயகாந்த் தமிழ்நாட்டில் வெளிவரும் கிழமை இதழுக்கு தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த் அளித்த பேட்டியில் “பிரபாகரன் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை” என்றுக்கூறியுள்ளார். அந்த இதழில் ஈழம் பற்றிய கேள்விக்கான அவரது பதிலை கீழே கொடுத்துள்ளோம். கேள்வி: இந்தத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினை ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா? பதில்: ” நான் அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு கலைஞனாக என் மன்றத் தொண்டர்களுடன் இலங்கைப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தியவன் என்ற முறையிலும் சொல்கிறேன். இந்த தேதலில் இலங்கைப் பிரச்னை நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்”. கேள்வி: இலங்கைப் பிரச்னைக்காக…
-
- 10 replies
- 2.5k views
-
-
ஐக்கியமானதும், சமஷ்டியானதுமான இலங்கை என்ற கட்டமைப்புக்குள், தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழர்களுக்கு இராணுவத் தீர்வு ஒருபோதும் தீர்வாக அமையப் போவதில்லை. இதனால் தமிழ் பேசுகின்ற சிறுபான்மை மக்களின் உண்மையான சட்ட மற்றும் அரசியல் இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்வது கட்டாயமானது." இது ஐக்கிய சமஷ்டி முறைமை கட்டமைப்பின் ஊடாகவே சமாதானமான முறையில் முன்னெடுக்க முடியும்" என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழ்வின்
-
- 5 replies
- 671 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொல்ல கனரக ஆயுதம்தான் வேண்டுமா என்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 630 views
-
-
திருகோணமலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட பிரித்தானிய 'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் மூவரும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவசரமாக நாடு கடத்தப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையே இலங்கையிலும் தொடரும் Stratfor தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மரபு ரீதியான யுத்தம் நிறைவடைந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை இலங்கையிலும் தொடரும் என பிரபல அமெரிக்க ஆய்வு மையமான ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவுவதனைப் போன்றே நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டப் பின்னரும் இலங்கையின் பல பகுதிகளிலும் தாக்குதல் அச்சம் தொடரும் என குறிப்பிடப்படுகிறது. அரசாங்கப் படையினர் நிலப்பரப்புக்களை கைப்பற்றியதன் பின்னர் மக்களுடன…
-
- 0 replies
- 506 views
-
-
வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைப் பீடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக படைத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது: வன்னி களமுனையில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த அனுராதபுரம் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 59 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரசன்னா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டளையின் கீழ் இயங்கிவந்த 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் சாகி கலகே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக ந…
-
- 0 replies
- 815 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையினை நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவுக்கு கடந்த வாரம் மேற்கொண்ட பயணம் தொடர்பானா தகவல்களை பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோர் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் வெளியிட உள்ளனர். சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்கள் தொடாபான தகவல்களை அவர்கள் சபையில் தெரிவிப்பார்கள். போர…
-
- 0 replies
- 433 views
-
-
இலங்கை பிரச்சினை என்பது வெறும் தமிழர்கள் பிரச்சினை அல்ல என்று விசுவ இந்து பரிசத்தின் அகில இந்திய தலைவர் அசோக் சிங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அசோக் சிங்கல் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து வருகிறது. இலங்கை நாட்டில் இருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசால் முடியவில்லை. இலங்கையில் இன்று நடப்பது போன்றே கிழக்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் அகதிகளாய் வந்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் வங்காளதேசம் உருவா…
-
- 0 replies
- 526 views
-