Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையருக்கு பிரி. மேல்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது [ செவ்வாய்க்கிழமை, 05 மே 2009, 10:35.54 AM GMT +05:30 ] இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தெரியவருவதாவது:- இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி…

    • 0 replies
    • 676 views
  2. யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்குமாறு புலிகள் கோரியுள்ளனர் ‐ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் : யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வாழும் கலைப் பயிற்சி நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரியதாக வாழும் கலைப்பயிற்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்;கப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் போதியளவு உணவு மற்றும் மருந்துப் பொருள் வசதியின்றி பெரும் அவலங்களை எதிர்நோக்கி வருவத…

    • 0 replies
    • 766 views
  3. உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம் - தமிழக முதல்வர் கூறுகிறார் திகதி: 04.05.2009 // தமிழீழம் இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரி…

    • 26 replies
    • 2.7k views
  4. இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என மலேசியாவின் நீதிக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அழகிய பூங்காவாக காணப்பட்ட இலங்கை தற்போது இரத்த ஆறு ஓடும் நரகமாக மாறியுள்ள நினைத்து மனவேதனை அடையவதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற மலேசிய இந்தியர்களுடான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 20 ஆம் நுற்றாண்டு காலத்திலும் இவ்வாறான கொடுமையான போர் நடப்பது பாரிய கொடுமை. இலங்கையில் தமிழர்கள் தமது வீடுகளையும் உறவினர்களையும் வாழ்க்கையையும் இழந்து தத்தளிக்கும் காட்சிகள் மிகவும் கொடுமையானது. ப…

  5. பா.ஜ. கட்சியின் மூத்த தலைவர் வெங்கையநாயுடு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’2 லட்சம் இலங்கை தமிழர்கள், குறைந்தபட்சம் கழிவறை வசதிகூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள். ஆனால் இங்கு உண்ணாவிரதம் என்ற சில மணிநேர நாடகத்தை நடத்தி, அங்கு போர் நிறுத்தம் வந்துவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே அதுபற்றி பேசவே இல்லை. எதிர்க் கட்சிகள் செய்ய வேண்டிய உண்ணாவிரதம், பந்த் போன்ற போராட்டங்களை யாருக்கு எதிராக இவர்கள் நடத்தினார்கள்? இலங்கைத் தமிழர்களுக்கு அங்கு சமஉரிமை, அந்தஸ்து அவர்கள் நாட்டில் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தரப்பட வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளையோ தீவிரவாதத்தையோ நாங்கள் ஆ…

    • 3 replies
    • 1.5k views
  6. அம்பாறையில் புலிகளின் மற்றுமொரு தாக்குதலில் ஒரு படையினர் பலி அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக களமிறக்கப்பட்ட சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஒரு விசேட அதிரடிப்படையினர் கொல்லபட்டதோடு, மேலும் ஒருவர் படுகாமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று(05-05-2009) மதியம் நடைபெற்றுள்ளது. மூலம்: மீனகம்.கொம்

  7. வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  8. தமிழக உறவுகளே! இதையும் கொஞ்சம் பாருங்கள்! கொஞ்சமேனும் இரங்குங்கள்! இந்த காணொளியை காண்பதற்கு...

  9. கிழக்கில் புலிகளின் தாக்குதலில் இரு படையினர் பலி அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் இன்று (05.05.2009) புலிகளின் கண்ணிவெடி தாக்குதலில் இரு படையினர் பலியாகியுள்ளனர். உடும்பன்குளம் படைமுகாமிலிருந்து வீதிக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது இன்று காலை (05-05-2009) 07.55 மணியளவில் நடாத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இரண்டு சிறிலங்கா படையினர் கொல்லபட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மூலம் : மீனகம்.கொம்

  10. இவருக்கு வயது எத்தனை ? இது சிறுவர் படை சேர்ப்பு இல்லையா ? A Sri Lankan soldier looks on as he mans a bunker near the war zone in Puthukudiyiruppu, about 240 kilometers (150 miles) northeast of Colombo, Sri Lanka, Friday, April 24, 2009. (AP Photo/ Eranga Jayawardena)

    • 0 replies
    • 1.8k views
  11. மொனறாகலை மாவட்டம் புத்தள பகுதியில் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு படையினர் பலியாகியுள்ளார். இன்று (05-05-2009) காலை 09.30 மணியளவில் சிறிலங்கா படையனரின் விநியோகப்பணியில் ஈடுபட்ட உழவு ஊர்த்தி ஒன்றின் மீது நடாத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கினறன. மூலம்: மீனகம்.கொம்

  12. த‌மிழக‌த்து‌க்கு சோ‌னியா வரு‌ம் நா‌ள் து‌க்க நா‌ள் : பாரதிராஜா இலங்கை பிரச்சனையில் மவுனம் சாதித்து வரும் சோனியாகாந்தி சென்னைக்கு ஓட்டு கேட்டு வரும்போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுங்கள் என்று கூ‌றிய இய‌க்குன‌ர் பாரதிராஜா, சோனியா த‌மிழக‌த்து‌க்கு வரும்நாள் துக்க நாள் எ‌ன்று ஆவேசமாக பே‌சினா‌ர். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு திரைப்பட இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று பிரசாரம் செய்யவது என்று இந்த இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்‌றிரவு ஈரோடு ம‌க்களவை‌த் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர…

    • 0 replies
    • 1k views
  13. போர் நிறுத்தம் கொண்டுவர அனுசரணைப் பணி செய்யுங்கள்! ரவிசங்கர் குருஜியிடம் புலிகள் கோரிக்கை இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனுசரணைப் பணிபுரியுமாறு இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று குருஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று இந்தியச் செய்தி ஏஜென்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன. மோதல் பிரதேசத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எ…

    • 0 replies
    • 605 views
  14. இலங்கை ஜனாதிபதி, கோத்தபாய, பசில், இராணுவத்தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச போர் குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும்: புருஸ் பெய்ன் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர் குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அமெரிக்காவின் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ் பெய்ன் கோரியுள்ளார். அமெரிக்காவின் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச போர் குற்றச்சாட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளது. இது தொடர்பில், அமைப்பின் ஆலோசகர் புருஸ்…

    • 0 replies
    • 660 views
  15. ஈழத் தமிழ் உறவுகளுக்கு ஒரு தமிழகத்து உறவின் மடல்- பூங்குழலி என் அன்பான உறவுகளே, உங்களுடன் நேரடியாகப் பழகிய காலங்களில் உங்களின் உண்மையான அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவள் நான். அந்த அன்பை மனதில் தேக்கி வைத்து இந்த மடலினை எழுதுகிறேன். 1980-களின் முற்பகுதியில் நான் சிறுமியாக இருந்த போது, "பாலியல் வல்லுறவு" என்ற சொல்லின் பொருள் தெரியா மலேயே அது கொடூரமானது என்பதை உணர முடிந்தது. ஏனெனில் எங்கோ நாலாம் பக்கத்தின் மூலையில் வரக் கூடிய கொலை, பாலியல் வல்லுறவு செய்திகள் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வந்தது அந்த காலக்கட்டத்தில்தான். அது ஈழத்தை முன்னிட்டு. அவைதான் கொலை போன்றே "பாலியல் வல்லுறவு" என்று ஊடகங்களால் விளிக்கப்பட்ட வன் புணர்ச்சியும் கொடூரமானது என்ப…

    • 1 reply
    • 945 views
  16. தமிழர்களை கைது செய்வது கடத்துவது மற்றும் காணாமல் போவது போன்ற சிறிலங்கா படையினரினதும் ஆயுதக் குழுக்களினதும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு துணை புரியும் அவசரகாலச் சட்டம் 74 வாக்குகளினால் மேலும் ஒரு மாத காலத்திற்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 332 views
  17. ’’தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன். இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன். இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை, ஒருமைப்பாடு இல்லையா?. யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன். நான் இப்போது இந்தியா உள்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம…

    • 0 replies
    • 1.7k views
  18. சிதம்பரத்தின் கூட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை புகழ்ந்து பேசிய இளைஞன் - காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார் திகதி: 04.05.2009 // தமிழீழம் தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்ட வாலிபர் ஒருவர், மரக்கட்டையை தூக்கி எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மத்திய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாட…

    • 9 replies
    • 2.1k views
  19. கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த 'அடங்காப்பற்று' நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 341 views
  20. ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போல்------: ஜெ.வுக்கு வந்த கொலைமிரட்டல் கடிதம் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அக்கடிதத்தில், ‘’நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து…

    • 4 replies
    • 1.8k views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொக்காவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திக்குப் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் இராணுவ வட்டாரங்கள், தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் வேறு வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தன. செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட சிலின் - 143 ரக வானூர்திகளையே விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த…

  22. வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் தொடர்ந்தும் அதிகாரபூர்வமற்ற வகையில் ஆராயப்பட்டு, ஊடகங்களுக்கும் அது தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

    • 0 replies
    • 806 views
  23. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தமிழ்க் கட்சிகள் இன்று மாலை சந்தித்து வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கின்றன. இச்சந்திப்பில் கலந்துகொள்வதா இல்லையா என்பதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் முடிவெடுக்கவில்லை எனவும் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இது தொடர்பாக கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்று கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்ப…

    • 0 replies
    • 490 views
  24. சிறிலங்காவில் உள்ள சிங்களக் கடும் போக்காளர்களின் தீவிரமான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரித்தானியாவின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு சிறிலங்காவுக்கான தமது இரண்டு நாள் பயணத்தை தொடங்கியிருக்கின்றது. போர் இடம்பெறும் பகுதியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாகவும் சிறிலங்கா அரசுடனும் அதிகாரிகளுடனும் ஆராய்வதுதான் இவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும். நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு வந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண் முக்கியமானவர். சிறிலங்காவுக்கான தமது சிறப்…

    • 0 replies
    • 760 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.