ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
-
வன்னியில் நடைபெறும் மனித அவலத்தின் காரணமாக அவுஸ்திரேலியா, சிட்னி வாழ் 3 தமிழ் இளைஞர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் Parramatta Church St ல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை ஆகிய மூன்று தமிழ் இளைஞர்களுமே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள்:- 1. உடனடி போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் 2. போர் தளத்தில் இருக்கும் தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு தண்ணீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக வேண்டும் 3. போர் தளத்தில் தவிக்கும் தமிழ் மக்களுக்கு மருத்துவ உதவி உடனடியாக…
-
- 5 replies
- 896 views
- 1 follower
-
-
குழந்தைகள் எல்லோரும் வெள்ளையுள்ளத்துடனேயே பிறக்கின்றார்கள். பின் அவர்களது வாழ்நிலையை மாற்றி விடுவதில், சூழலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு செவ்வியில், தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனும் எண்ணம் தோன்ற, தனது நான்காவது வயதில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் ஒரு காரணம் என்று சொன்னார். இளவயதுகளில் மனதில் பதிந்து விடும் நினைவுகள் எளிதில் மறைந்துவிடுவதோ, மறக்கப்படமுடிவதோ இல்லை. தற்போது ஈழமண்ணில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலையைச் சர்வதேசங்கள் எவ்விதம் கணிக்கின்றதோ தெரியாது ஆனால் ஈழத்தின் இளைய சமூகம் புலத்திலும் புலத்திற்கு வெளியிலும் சிறிலங்காவின் இனப்படுகொலையாகவே உள்வாங்கி…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தரையிறங்கியிருக்கலாம் எனவும் இந்த அணியின் நகர்வின் போதே அலம்பில் பகுதியில் கடற்சமர் இடம்பெற்றதாகவும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 'லக்பிம' ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: முல்லைத்தீவு கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த சனிக்கிழமை (04.04.09) இரவு 11:45 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகளை அவதானித்துள்ளனர். இந்த படகுகள் வெல்லாமுனையில் இருந்து முல்லைத்தீவுக்கு வடக்காக நோக்கிச் சென்று கொண்டிருந்தன. படகுகள் மீது வயர் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் போது இரு படகுகள் சேதமடைந்த போதும் ஏனைய …
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல் [12 - April - 2009] பீஷ்மர் இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும், உடனடிப் போர்நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை நோர்வே உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 3 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையை எதிர்த்து புலம்பெயர் வாழ் தமிழ் மாணவர்கள், தமிழ்மக்களாகிய நீங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள் என்பவை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது என்று யாழ். தமிழ் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பகுதி மீதான தாக்குதல் நடைவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அனைத்துலக ரீதியாக அதிகரித்து வரும் அழுத்தங்களைத் தொடர்ந்து குறுகிய கால தாக்குதல் தவிர்ப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 12, ஏப்ரல் 2009 (10:53 IST) போர் நிறுத்தம்: இலங்கை அரசு முக்கிய ஆலோசனை போர் நிறுத்தம் குறித்து இலங்கை அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது என்றும், போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு பற்றி இதில் விவாதிக்கப்பட்டு, போர் நிறுத்தம் வரும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் வடபகுதயில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியும், அங்கு மோதல் பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர உதவிகள் உடனடியாக அனுப்பட வேண்டும் என்று கோரியும், உலகின் பல பகுதிகளில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனப்படுகொலையை கண்டித்து பிரிட்டனில் பெரும் மக்கள் பேரழுச்சி நடைபெற்றது. பிரிட்டன் வரலாற்றில் முத…
-
- 3 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் அகோர எறிகணைத் தாக்குதலை தொடங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 630 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் அரசபடைகள் வடக்குகிழக்கின் ஒவ்வொரு இடத்தைப் பிடித்த போதும், தென்னிலங்கையில் அது பௌத்த சிங்களத்தின் வரலாற்று வெற்றி என்றே புகட்டப்படுகிறது. அண்மையில் புதுக்குடியிருப்பைப் படையி னர் கைப்பற்றியிருக்கின்ற நிலையில் ரஜரட்ட இராச்சியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னரே காணப்பட்ட பண்டைய நகரமே புதுக்குடியிருப்பு என்றும், இதை மீட்டதற்காக படையினருக்கு நன்றி கூறவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவல மேதானந்த தேரர். புதுக்குடியிருப்பை சிங்கள மன்னர்களின் வரலாற்றுடன் பிணைக்கச் செய்து தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு உரிமை கொண்டõடுகின்ற முயற்சியே இது. ஒட்டுமொத்த வடக்குகிழக்கும் சிங்கள மக்களின்…
-
- 1 reply
- 751 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்ததினால் மக்கள் வாழும் கூடாரங்களிற்குள்ளும் மலசல கூடங்களுக்குள்ளும் கிணற்றினுள்ளும் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் மக்கள் உணவினை சமைத்து உண்ணக் கூட முடியாதுள்ளது. எறிகணை தொடர்ந்து விழுந்து வெடிப்பதால் நீர் நிறைந்த பதுங்கு குழிகளில் மக்கள் கூடுதலான நேரம் இருக்கிறார்கள். அத்துடன் இங்கு ஒரு கிலோ சீனி 1500 ரூபாவாகவும், பூடு ஒரு கிலோ 7000 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவாகவும், தேங்காய் ஒன்று 900 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 250 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப…
-
- 0 replies
- 823 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 332 views
-
-
-
12/04/2009, 00:53 [] ஆனந்தபுரம் சமர் தோற்றுவித்துள்ள அதிர்வலைகள் - வேல்ஸிலிருந்து அருஷ் அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திரும்பும் முகமாக பல நகர்வுகளை எதிரும்புதி ருமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வ துண்டு. தற்போது இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு அனைத்துலக நாணய நிதியத்தை நம்பியுள்ள அரசு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளினால் பலத்த அதி ருப்தி அடைந்துள்ளது. இலங்கை அரசு தனது கையிருப்பு நிதியை செலவிட்டு தனது நாணயத்தின் பெறுமதியை தக்கவைக்க முற்படுவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துலக நாணய நிதியத்தின் முதலாவது நிபந்தனை. அதனை விட வன்னி யில் நடைபெற்றுவரும் போர் மற்றும் அங்கு தோன்றியுள்ள மனித பேரவலம் தொடர்பாக வும் மேற…
-
- 0 replies
- 1.8k views
-
-
வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது:எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் புகார் வீரகேசரி வாரவெளியீடு 4/12/2009 9:50:05 AM - இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…
-
- 0 replies
- 531 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வரும் போராட்டங்களினால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பிரித்தானியாவில் உள்ள தேம்ஸ் பௌத்த நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பிரித்தானிய காவல்துறையினர் பாதுகாப்புக்களை வழங்க மறுத்ததனால் கைவிடப்பட்டுள்ளன. இக்கொண்டாட்டங்களில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ரஜபக்சவின் சகோதரரும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தித்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கனடாவில் நடைபெறும் தமிழ்…
-
- 0 replies
- 550 views
-
-
நான்காவது ஈழப் போராட்டத்தின் மிகவும் மூர்க்கமான சமர்களை வன்னி தற்போது சந்தித்துக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 515 views
-
-
புலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் றிச்சார்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே றிட்சார்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ???வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார்…
-
- 2 replies
- 996 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பகுதி மீதான தாக்குதல் நடைவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அனைத்துலக ரீதியாக அதிகரித்து வரும் அழுத்தங்களைத் தொடர்ந்து குறுகிய கால தாக்குதல் தவிர்ப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த ஒரு வார காலமாக நடத்திவரும் கவனயீர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும், அமெரிக்காவும் இந்த விடயம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. அதேவேளையில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது த…
-
- 0 replies
- 771 views
-
-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இரு நாட்களுக்கு தாக்குதல்களை மட்டுப்படுத்துமாறு ("restrict their operations") சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது முப்படைகளுக்கும் நேரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இரு நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது முப்படைகளுக்கும் நேரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசு 69 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்வதே இதன் நோக்கம். அதன் மூலம் சிறிலங்கா தொடர்பான நல்லெண்ணங்களை அமெரிக்காவ…
-
- 0 replies
- 434 views
-
-
வவுனியாவுக்கு செல்வதற்கும் அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிடுவதற்கும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தனவுக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
"சோனியா காந்தியானால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் எமது மக்களைப் பழி தீர்த்த்துக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 565 views
-