Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரு வாரத்திற்குள் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவேன்-மேர்வின் சில்வா! தனக்கு சந்தர்ப்பம் வழங்கும் பட்சத்தில் நாட்டில் டெங்கு நோய் பரவலை ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை தாம் ஆட்சிக்கு வந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது அரசியல்வாதிகள் இந்த திட்டத்தில் ஈடுபடவில்லை, என்றும் தற்போதைய சுகாதார அமைச்சர் எனது நண்பர், அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.என்றும் அவர் கூறினார். அத்துடன் அமைச்சர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும…

    • 5 replies
    • 257 views
  2. தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம் யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது.” – இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டி…

  3. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப…

    • 10 replies
    • 956 views
  4. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். …

    • 9 replies
    • 1.2k views
  5. காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்தக் போராட்டத்தின் அங்கமாக இருந்தவர்களிடம் சில வெளிநாட்டு சக்தியின் பங்கு இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே உரிய நேரத்தில் மேலதிக தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எங்களுடன…

  6. காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுற…

  7. குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதியின் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரியப்படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படும். இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என அம…

  8. 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் கைது !! 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் சந்தேக நபர் திருமணமானவர் என்றும் அவருக்கு எதிராக மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்த…

  9. சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்ப முயன்ற குழு கைது !! 33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2023/1331643

  10. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டம்! Vhg மே 11, 2023 இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். 15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மூன்று தசாப்த கால கொடூர உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு- அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியை தம்மிடம் மீளப் பெற்றுக்கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் நிறைவடைந்து…

  11. Published By: VISHNU 07 MAY, 2023 | 07:05 PM சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன. விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க ம…

  12. இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை இந்தியா நீடித்துள்ளது! அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்தியாவால் சுமார் 4 பில்லியன் டொலர் அவசர உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த கடன் உதவியின் ஒரு பகுதியான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்திய அரசாங்கம் நீடித்துள்ளது. …

    • 5 replies
    • 337 views
  13. Published By: VISHNU 10 MAY, 2023 | 09:02 PM இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மே 20-ஆம் திகதிக்குள் விடுவிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாரிய போராட்டம் வெடிக்கும் என இராமநாதபுரம் மீனவ சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என குறிப்பிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் இது தொடர்பான மகஜரை இந்திய மத்திய அரசின் அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக தமிழக முதலமைச்சரிடம் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 65 மீனவர்களைத் தவிர, 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தி…

  14. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை 08.30 மணியளவில் 8.80N மற்றும் 88.90Eக்கு அருகில் மையம் கொண்டது. இது இன்று மாலையில் புயலாக வலுவடைந்து பின்னர் மத்திய வங்கக் கடலில் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய…

  15. சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று நாளை இலங்கை வரவுள்ளது. கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம், இந்தாண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக IMF ஊழியர்கள் குழு மே 11 முதல் 23 ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக பங்கேற்கவுள்ளார். https://thinakkural.lk/article/252919

  16. முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கம்! Vhg மே 09, 2023 விசாரணைகள் என்ற பெயரில் முன்னாள் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு எதிர…

    • 2 replies
    • 308 views
  17. Published By: VISHNU 09 MAY, 2023 | 03:49 PM சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் இன்றையதினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது, இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர். நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள். தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை. …

  18. இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி : 10 நோயாளர்கள் கண்பார்வை இழக்க காரணம் என்கின்றார் வைத்தியர் !! கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது. கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட குறித்த 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 50 வயதுக்கும் மேற்பட்ட 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள…

  19. யாழில். அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு – குற்ற செயல்களுக்காக திருடப்படுகிறதா ? May 9, 2023 யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.. அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் காவல் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக , கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு , ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் , மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமலும், மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்…

  20. ஜனாதிபதி – தமிழ்க் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று(09) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/ஜனாதிபதி-தமிழ்க்-கூட்டம/

  21. Published By: DIGITAL DESK 5 09 MAY, 2023 | 01:50 PM ( எம்.நியூட்டன்) ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலையின் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களும் அதற்கு மேலும் மாணவர்களை அனுமதித்தல் என்னும் கல்வி அமைச்சின் முடிவானது முட்டாள்தனமானது. இதனால் கிராமப்புற பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் நகர்ப்புறம்நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகும். கிராமங்களின் நிலவளம், தொழில்வளம், …

  22. Published By: VISHNU 08 MAY, 2023 | 02:34 PM மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் தலை மன்னார் ராமேஸ்வரம் இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்ட காணொளி அடங்கிய இறுவெட்டு திங்கட்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர…

  23. Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 03:23 PM மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி குறித்த மாணவரை பலவந்தமாக ஏற்றிச் …

  24. Published By: VISHNU 09 MAY, 2023 | 07:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புள்ளிவிபரங்களின் பிரகாரம் தனிநபர் ஒருவரின் வருமானம் 13772 ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அது வறுமை நிலையாகும். அதன் பிரகாரம் தோட்டப்புறங்களின் வறுமை நிலையானது, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும் குடும்பங்களில் 50 சதவீத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்த…

  25. யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.