Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசாங்கம் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் தமிழ் மொழியிலான பாதுகாப்பு இணையத்தளத்தில் வைரஸ் இருப்பதை புலம் பெயர் கணணி நிபுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்திற்கு செல்வோரின் கணணியில் TROJAN Js/Xilos வைரஸ் தாமாகவே உள்நுளைந்து கணணியின் IP முகவரி , மற்றும் இரகசிய தகவல்களை எடுத்துச் செல்கிறது. ANTI-VIRUS எனப்படும் பாதுகாப்பு மென் பொருள் உங்கள் கணணியில் இருந்தால் கூட இவை உங்கள் கணணியை தாக்கவல்லதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வைரஸ் உள்நுளைந்து உங்கள் இரகசிய தகவல்களை திரட்டியபின்னர் ADOBE மென்பொருளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நீங்கள் உபயோகிக்கும் இணையம் மூலமாகவே வெளியில் சென்று வைரஸை இயக்கும் இலங்கை அரசிற்கு தக…

  2. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு அரசாங்க மருத்துவமனையும் பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன. இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், முல்லைத்தீவு மாஞ்சோலை, முள்ளியவளை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்த எறிகணை தாக்குதல்களின்போது பொது வைத்தியசாலை பாதிக்கப்பட்டதையடுத்து, அது செயலிழந்துள்ளதாக அந்த வைத்தி்யசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வி.சண்முகராஜா தெரிவிக்கின்றார். …

  3. தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆள இடமளியோம் - வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் திகதி: 15.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். …

  4. படை அணிவகுப்பைப் பார்வைவயிடச் சென்றபோது வீதி விபத்து - 11 பேர் காயம் திங்கள், 15 டிசம்பர் 2008, 17:25 மணி தமிழீழம் [தாயகன்] புத்தளம் - அநுராதபுரம் வீதியில் இன்று காலை இடம்பெற்ற ஊர்தி விபத்தில் பொதுமக்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறீலங்கா புதிய படையணியின் அணிவகுப்பைப் பார்வையிடச்சென்றபோது இன்று காலை 8:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. காயமமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் படை உறுப்பினர்களா, அல்லது உறவினர்களா என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இவர்கள் பயணித்த சிற்றூந்து கருவலகஸ்வேவ பகுதியில் பாரவூர்தியுடன் மோதியுள்ளது. pathivu

  5. இலங்கையில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 15.12.2008 திங்கள் அன்று மதியம் 12.30 மணியளவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள்,சமுதாய இயக்கத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜீ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் யூ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ…

  6. மும்பை தாக்குதல் காரணமாக இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது அரசு. இந்நிலையில், கண்காணிப்பு குறைவாக இருக்கும் தமிழகத்தின் தென்பகுதி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவ வாய்ப்புள்ளது" என்கிறார் இலங்கை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். எப்படி? "இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள், பாகிஸ்தானில் இருந்து மட்டும் திட்டமிடப்படுவதில்லை. நேபாளம், பங்களாதேஷ், இலங்கையில் இருந்தும் ஐ.எஸ்.ஐ. செயல்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டது, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகளைப் பலப்படுத்தத்தான் என்பது அங்கே எல்லோருக்கும் தெரியும். 2006ஆம் ஆண்டு பஷீர்வாலியைக் கொலை செய்யும…

  7. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை கொரில்லா அமைப்புக்களோ, பயங்கரவாதிகளோ பயன்படுத்ததாக ஆயுதமான விமானத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தியிருக்கும் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலமானது பிராந்திய விவகாரமாக நோக்கப்படுவதாக பாதுகாப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் திறை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என இந்திய விமானப்படை…

  8. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 445 views
  9. தீவிர மொழிப் பற்றும், ஆழமான இன உணர்வும் கொண்டு தமிழின எழுச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய மாம்பழம் என எல்லோராலும் அழைக்கப்பட்ட தேவதாசன் அன்ரனி அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் காலமானார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 937 views
  10. கிளிநொச்சி மீதான தாக்குதலும் அரசின் எதிர்பார்ப்பும் ஜெயராஜ் கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் / கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான ஃஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணய மாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள…

    • 0 replies
    • 2.5k views
  11. பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்காவை அழைக்க பாகிஸ்தான் துடுப்பாட்ட சபை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 394 views
  12. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது குற்றம் சுமத்தும் வகையிலான குற்றப்பத்திரம் ஒன்றை, அமெரிக்காவின் புதிய ஒபாமா அரசின் நீதித் திணக்களத்திடம் அடுத்த மாதம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்டடிருக்கின்றன. என்று அமெரிக்காவின் முன்னாள் பிரதி இணை சட்ட மா அதிபர் புரூஸ் பெய்ன் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற கோட்டாபயவுக்கும், அமெரிக்கவில் நிரந்தரமாக வசிப்பதற்கான 'கீறின் கார்ட்' அனுமதி பெற்ற சரத் பொன்சேகாவிற்கும் எதிராக இது விடயத்தில் நானூறு பக்க குற்றப்பத்திரம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். தமி…

  13. புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பொலிஸ் உயரதிகாரி உட்பட மூன்று பொலிஸார் கைது வீரகேசரி இணையம் 12/15/2008 9:54:02 AM - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வந்தார்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் உயரதிகாரி மேல் மாகாண விசேட பொலிஸ் செயற்பாட்டுப் பிரிவில் முக்கிய பதவி வகிப்பவராவார். ஏனைய இருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.கைதுசெய்ய

  14. 60 ரூபாவாக விற்கப்பட்ட பச்சை மிளகாய் 800 ரூபா 40 ரூபாவாக விற்கப்பட்ட கத்தரிக்காய் 400 ரூபா 80 ரூபாவாக விற்கப்பட்ட உருளைக்கிழங்கும் 400 ரூபா தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபா ஒரு கிலோ மீனின் விலை 600 ரூபா யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பானது குடாநாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் ஏனைய அமைப்புகளும் குற்றம் சுமத்தியுள்ளன. குடாநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிசாக் காற்று மற்றும் அடைமழை காரணமாகவும் போதியளவில் கப்பல் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படாமையும் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு மீண்டும் …

  15. ஒரு கடிதம் : போர்முனை அன்புக்குரியவர்களே! முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது. 'தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்' என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது. அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன - அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார்.அந்த வழியில் அவர் - ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு - நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல். பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடி…

  16. விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைபெற்ற முயற்சி. திங்கள், 15 டிசம்பர் 2008, 23:13 மணி தமிழீழம் [மையூரன் ] விடுதலைப் புலிகள் யாழ்குடா நாட்டைக் கைபெற்ற முயற்சி எடுத்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளதாக வாரவெளியீடான சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டு்ள்ளது. வன்னியில் போர் உக்கிரமடைந்துள்ள வேளையில் யாழ்ப்பாணத்திலுள்ள படையினர் மீது தாக்குதல் நடாத்தி, யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான முன்னேற்பாட்டில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் படையினருக்கான நெருக்கடி அதிகரிப்பதாகவும், விடுதலைப் புலிகள் தமது அனுபவம் மிக்க படையணிகளை தாக்குதலிற்கு பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாகவும், இதனால் போரின் தன்மை மாற ஆரம…

  17. பிரபாகரனை பாதுகாப்பதற்கு சர்வதேச மட்டத்தில் சதி தேசபற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 12/14/2008 8:54:35 PM - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கி, படையினர் கிளிநொச்சியை கைப்பற்றுவதைத் தடுத்து பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தடுக்க மக்கள் ஓரணியில் திரளவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றிணைந்தே இந்த சதித் திட்டத்தினை மேற்கொள்கின்றன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் …

  18. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் - மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் - செல்நெறியைத் தீர்மானிப்பதில் தேசியத் தலைவருக்கு அடுத்ததாக அதிகம் செல்வாக்குச் செலுத்திய ஒரு தனிநபரைக் கண்டறிவராகில் அது ~தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தைத் தவிர வேறு ய…

  19. உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றது உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு இராணுவத்துடனும் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு இலங்கைப் படைவீரர்கள் திறமையானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இராணுவ வெற்றிகள் போற்றத் தக்க விதத்தில் அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்த சிங்க ரெஜிமண்ட் வீரர்களை நினைவு கூறும் வகையில் அம்பேபுஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை இராணு…

  20. ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் உரையாடிய நண்பன் ஒருவன் இணைப்பை துண்டிக்கும் முன் கூறிய இறுதி வாக்கியம் எனது நித்திரையை தொலைத்து விட்…

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சி இந்தியர்களை பிழையான முறையில் வழிநடத்தியுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவன் சங்கரி தெரிவித்துள்ளான். இந்தியர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறுபிள்ளைத் தனமாக கருத்துக்களை தமிழகத்தில் தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தால், வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்…

  22. கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பு? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த கருணாவிற்கு எதிர்காலத்தில் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படக் கூடுமென அரசாங்க வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிய கரு ஜயசூரியவின் வெற்றிடத்திற்கு கருணா நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு தமிழ் மக்களை அமைச்சரவை ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சுப் பதவி அமைச்சர் சரத் அமுனுகமவிற்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் ப…

  23. சிறீலங்கா அரசுக்கு அமெரிக்க அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான படைத்துறை உதவிகளைப் புரிந்துள்ளது. அமெரிக்க அரசு கடந்த 2006, 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆயுத விற்பனை மற்றும் படைத்துறை உதவிகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. 2008ஆம் ஆண்டுப் போரில் அமெரிக்காவின் ஆயுதங்கள் (U.S Weapons at War 2008) என்ற தலைப்பில் புதிய அமெரிக்க மையத்தினால் (New America Foundation) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா 2007ஆம் ஆண்டு ஆயுத விற்பனையில் 23 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($23 billion), 2008ஆம் ஆண்டு 32 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($32 billion) ஆயுத விற்பனையில் பெற…

  24. மோசமான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இலங்கை வீரகேசரி வாரவெளியீடு 12/14/2008 5:46:58 PM - இன அழிப்பை எதிர்கொள்ளும் முதல் எட்டு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இன அழிப்பைத் தடுக்கும் வகையில் ஐ.நா. வின் சார்பில் அமைக்கப்பட்ட அமைப்பு 5 வெவ்வேறு சுட்டிகளைக் கொண்டு இந்தப் பட்டியலைத் தயாரித்திருந்தது. இந்த 5 சுட்டிகளி லுமே இலங்கை முதல் 8 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த அமைப்பு 33 நாடுகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தது. இதில் மிக வும் ஆபத்துள்ள நாடுகளை "சிவப்பு எச்ச ரிக்கை' நாடுகள் என்றும் அடுத்த நிலையில் உள்ள நாடுகளை "ஒரேஞ்ச் எச்சரிக்கை' நாடு கள் என்றும் வகைப்படுத்தியுள்ளது. இலங்கை "சிவப்பு எச்சரிக்கை' நாடுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.