ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
http://img503.imageshack.us/my.php?image=thinakkuralpm8.jpg நன்றி : தினக்குரல்
-
- 3 replies
- 2.5k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ஈழத் தமிழர் நலனைக் காக்க கோரியும் உறுதிமொழி ஏற்பு முழக்க நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியில் தமிழின மான மீட்பு இயக்கம் சார்பில் கூட்டம் நடந்தது. சென்னையை அடுத்த மறைமலைநகரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு சட்டை அணிந்து, இலங்கைத் தீவு போன்ற வடிவத்தில் நின்று கையில் தீப்பந்தம் ஏந்தி உறுதிமொழி ஏற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ’’இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் தமிழ் ஈழம் தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்’’ தெரிவித்தார். www.tamilwin.com
-
- 2 replies
- 1k views
-
-
நாட்டின் வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு இரத்தம் தோய்ந்த ஒரு காலகட்டத்தினுள் புலிகளுக்கெதிரான அரசாங்கத்தின் யுத்தம் சென்று கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் அதிகவிலை கொடுத்து மேற்கொள்ளப்படும் இந்த யுத்தம் அனைத்து இளஞ் சந்ததிக்கும் ஒரு மாறாத வடுவாக அமையப் போகிறது. அதனை காலாநிதி றொகான் எம்.ஜயதுங்க மேற்கொண்ட ஆய்வு வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவ்வாய்வு இராணுவத்துக்குள்ளிருக்கும் பல பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதுவும் குறிப்பாக 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பின்னர் 6 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 1200 படையினர் கொல்லப்பட்டதன் பின்னரான நிலைமைகளை, படையினர் முகங்கொண்ட நெருக்கடிகளை அது வெளிப்படுத்துகிறது. விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளப்பட்…
-
- 0 replies
- 909 views
-
-
தமிழர் தாயகப்பகுதியில் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் இனஅழிப்பை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் பிரான்சில் வாழும் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை பிரெஞ்சுக் காவல்துறையால் தமிழ் மக்களின் எழுச்சிப் பேரணிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரான்சின் புகழ்பெற்ற பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் உலகின் கண்களை ஈர்ப்பதாக அமைந்தது. பிரெஞ்சுத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடுங்குளிரையும் இடையிடையே வேகமெடுத்துப்பெய்த மழையையும் பொருட்படுத்தாது உணர…
-
- 0 replies
- 657 views
-
-
அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையான பத்து மாதங்களில் 1267 படையினர் கொல்லப்பட்டும் 7549 பேர் படுகாயமடைந்து போர்க்களத்திலிருந்து விலக்கப்பட்டும் உள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஆகக்கூடுதலாக 200 படையினரும் அதற்கடுத்து ஒக்ரோபர் மாத்தில் 171 படையினரும் ஓகஸ்ட் மாதத்தில் 155 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக் குறைவாக ஜனவரி மாதத்தில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் ஒக்ரோபர் மாதத்தில் ஆகக் கூடுதலாக 1122 படையினர் காயமடைந்துள்ளனர். செப்டம்பரில் 997 படையினரும் ஓகஸ்ட்டில் 983 படையினரும் காயமடைந்துள்ளனர். ஆகக் குறைவாக மே மாதத்தில் 549 படையினர் காயமடைந்துள்ளனர். இதன்படி சராசரிய…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் போரினால் அவலப்படும் மக்களை சந்தித்த யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் அடிகளார். ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [கோபி] கடந்த செவ்வாய்க்கிழமை வன்னி சென்று அங்கு இடம்பெயர்ந்து இன்னலுறும் மக்களையும், தொண்டு பணிபுரியும் குருமார்களையும் சந்தித்து கலந்துரையாடினார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுபையப்பர் ஆலயத்தில் தங்கியிருந்து, மக்களுக்கு இறை ஆசிவேண்டி விசேட திருப்பலியை ஆயர் ஒப்புக்கொடுத்துள்ளார். இதேவேளை வன்னிப்பிரதேசத்தில் தீவிரமடைந்துள்ள யுத்த நிலைமை காரணமாக அந்தப் பகுதியில் பேரவலம் ஏற்பட்டிருப்பதாகவும், அங்கு மூன்றிலிரண்டு பங்கு மக்கள் தமது சொந்த வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து, சொத்துக்கனை இழந்து, நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாகியிர…
-
- 2 replies
- 789 views
-
-
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு ?ன்வைக்கப்படுமாக இருந்தால் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் தீர்வு ஒன்று உருவாக்கப்படுமானால் விடுதலைப் புலிகளும் அதில் பங்கு கொள்ளலாம் என்று தெ?வித்த அவர், ஆயுதங்களை கீழே வைப்பது என்பது ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்படும் போது நடைபெறுகின்ற விடயமாகும். அது ஒரு புது விடயமும் அல்ல. ஆனால் ஆயுதம் எப்போது கீழே வைக்கப்படல் வேண்டும் என்…
-
- 0 replies
- 736 views
-
-
வன்னியில் படையினர் நிலங்களை மீட்கின்றபோதும் புலிகளின் பாரிய எதிர்ப்புகள் தொடர்கின்றன: இக். அத்தாஸ் வன்னியில் படையினர் நிலங்களை கைப்பற்றினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் கடந்த புதன்கிழமையன்று 57 வது படைப் பிரிவினர் முன்னேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு காரணமாக பழைய நிலைகளுக்கே திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புக் காரணமாகவே கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. எனினும் படையினரின் மனோநிலை தொடர்ந்தும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக படை அத…
-
- 0 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவை நோக்கி நகரும் படையினருடன் புலிகள் கடும் மோதல் முல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருடன் விடுதலைப் புலிகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுங்கேணியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி 592 வது படையணியும் மாங்குளத்தில் இருந்து ஏ-34 வீதி வழியாக 595 வது படையணியும் முல்லைத்தீவை நெருங்கிக் கொண்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர அளம்பிலில் முகாமிட்டிருக்கும் 591 வது படையணியும் முன்னேறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவை நோக்கி செல்லும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இரு தரப்பினருக்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் வெளிவரும் ‘நிலவரம்’இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றிய…
-
- 20 replies
- 4.8k views
-
-
யாழில் சரணடைந்த இளைஞர்களை படுகொலை செய்யத் திட்டம் திகதி: 14.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ் குடாநாட்டில் சிறிலங்கா மற்றும் அதன் துணை இராணுவக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் மையத்தில் சரணடைந்துள்ள இளைஞர்களை படுகொலை செய்வதற்கு யாழ்குடாவிற்கான சிறிலங்கா இராணுவத் தளபதி தட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சரணடைந்த இளைஞர்கள் தாம் விரும்பினால், அவர்களின் வீடுகளுக்கு திரும்பலாம் என யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் கட்டளைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளதையடுத்தே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சரணடைந்திருந்து பின்னர் வீடு திரும்பிய சிலர் ஒரு சில தினங்களிலேயே படுகொலை செய்யப்பட்ட நிலையில், படையினரால் ஆபத்தென்று கூறி சரணடைந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ வைப்பகத்தின் தொடக்கத்தில் அதன் செயற்பாடுகளில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிங்கத்தின் பாதுகாப்புக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பொறுப்பு என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வைகோவையும் நெடுமாறனையும் கோமாளிகள் என தெரிவித்தமைக்கு எதிராக சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரத்தின் முன்னால் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்படுவார் என்ற இந்திய அரசாங்கத்தின் உத்தரவு தகவலை நெடுமாறன் இதன்போது குறிப்பிட்டதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து இந்திய …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அடுத்த வருடம் அமெரிக்கா சார்பான நாடுகள் தெரிவாக உள்ள நிலையில் சிறிலங்கா மீது பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 911 views
-
-
கிளிநொச்சி கனகபுரத்தில் வீடு பார்க்கச் சென்ற போது சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் நேற்று சனிக்கிழமை கொல்லப்பட்டவர்களில் மற்றொருவரின் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான உறுப்பினராக 1989 - 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணியாற்றிய சிவப்பிரகாசம் இரட்ணராஐா கடந்த வியாழக்கிழமை காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
களநிலைவரங்கள் புலிகளுக்கு சாதகமாக மாறுகின்றனவா? - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 02:04 மணி தமிழீழம் [] பயங்கரவாதத்தை தோற்கடித்து, எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியுமென்ற கேள்வி, இலங்கையில் எழுந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கவலை கொண்டுள்ளார். 1948 இல் ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாசனம், ஒரு மரணித்த சாசனமாக வாழ்வதை, அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள் புரிந்து கொள்கின்றன. இறந்தவரின் "எட்டு' வீட்டில், அவர் விரும்பிய பொருட்களை படைப்பது ஐதீகம். அதில் ஒன்றாக மனித உரிமைச் சாசனத்தையும் இணைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தச் சாசனம் எழுதப்பட்ட நாள் முதல், இற்றை வரை, அமெரிக்க உலக நாயகன், வியட்னாமில் செய்த மனித உர…
-
- 1 reply
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகம், கைக்குண்டு தாக்குதல் வீரகேசரி இணையம் 12/14/2008 11:15:35 AM - மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் அவரது கணவரும் மகளும் படுகாயமடைந்தனர். ஆரையம்பதியிலுள்ள மனோகர் (45) ஆசிரியரின் மனைவியே துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவராவார். மனோகரன் ஆசிரியரும் அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனோகரன் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இவாகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் செறுள்ளனர். ஆசிரியரின் மனைவி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார…
-
- 0 replies
- 628 views
-
-
சிறிலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 08:54 மணி தமிழீழம் [மையூரன் ] ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அடுத்த வருடம் அமெரிக்கா சார்பான நாடுகள் தெரிவாக உள்ள நிலையில் சிறிலங்கா மீது பாதுகாப்பு சபையில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு சார்பான ஒஸ்ரியா, ஜப்பான், மெக்சிகோ, உகண்டா, துருக்கி போன்ற ஐந்து நாடுகள் அடுத்த வருடம் நிரந்தமற்ற பாதுகாப்பு சபை உறுப்பினர்களாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு தெரிவாக உள்ளன. 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் கொழும்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும…
-
- 0 replies
- 697 views
-
-
ஆசிய நாடுகளிலேயே இலங்கைதான் அதிகூடிய விலையில் பெற்றோலை விற்கிறது. மாலைதீவுகளில் இலங்கை ரூபா 73.50க்கு பெற்றோல் விற்கப்படும் அதேவேளை, இலங்கையில் ஒரு லீற்றர் 122 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் பெற்றோல் விலையை இலங்கை அரசாங்கம் 35ரூபாவால் குறைத்துள்ளபோதும், இன்னமும் தெற்காசியாவிலேயே பெற்றோல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கையே இருக்கிறது. அண்டை நாடான இந்தியாவில் பெற்றோல் லீற்றர் ஒன்று 100 இலங்கை ரூபாவுக்கும், பாக்கிஸ்தானில் இது 80.60க்கும், பூட்டானில் 94.60க்கும், நேபாளத்தில் 119க்கும், பங்களாதேஸில் 120க்கும் விற்கப்படுகிறது. டீசலுக்கு அதிகளவு உதவித்தொகை வழங்குவதாலேயே பெற்றோல் விலையை இதற்குமேல் குறைக்க முடியாதிருப்பதாக இலங்…
-
- 0 replies
- 666 views
-
-
வீரகேசரி நாளேடு - வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளினால் சூழப்பட்டுள்ளது. மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். விடுதலைப் புலிகளில் 2,500 பேரே எஞ்சியுள்ளனர். எனினும், புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. இதனால் தான் படைத்தரப்பு இழப்புக்களை சந்தித்து வருகின்றது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "பிஸ்னஸ் டுடே' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போ…
-
- 5 replies
- 1.5k views
-
-
அனைத்துலகத்தை ஏமாற்றும் முயற்சியாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட அரச தலைவர் ஆணைக்குழுக்கள் எதுவித முன்னேற்றமும் இன்றி காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
இடப்பெயர்வினால் திணறும் கிளிநொச்சி மாவட்டம்: சுகாதாரப் பணிப்பாளர் [ஞாயிற்றுக்கிழமை, 14 டிசெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தின் பொது மருத்துவமனை உட்பட்ட பத்து மருத்துவமனைகள் இடம்பெயர்ந்து இயங்குவதுடன் 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் இம்மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர் என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட மாவட்ட நிலவர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையில் 44 ஆயிரத்து 893 பேர் தவிர ஏனையவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர். 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் கிளிநொச்சி மாவட்டத்த…
-
- 1 reply
- 585 views
-
-
மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்!-சண். தவராஜா- தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் - மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் - செல்நெறியைத் தீர்மானிப்பதில் தேசியத் தலைவருக்கு அடுத்ததாக அதிகம் செல்வாக்குச் செலுத்திய ஒரு தனிநபரைக் …
-
- 1 reply
- 621 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-