ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
‘மனிதாபிமான நடவடிக்கை’யால் உருவாகும் மனிதப் பேரவலம் [12 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 9:45 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்திருக்கும் கொழும்பு அரசு, அதனை யுத்தம் அல்ல என்றும், மனிதாபிமான நடவடிக்கை என்றும் சித்திரித்து உலகை ஏமாற்றுகின்றது. கொழும்பு அரசு தொடுத்திருக்கும் யுத்தத்தின் கொடூரத்தாலும், நாச செயற்பாடுகளினாலுமே வன்னிப் பெருநிலப் பரப்பில் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு இன்று மனிதப் பேரவலம் உருவாகியிருக்கின்றது என்பது வெளிப்படை. யுத்தத்தினாலும், அதைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளப் பேரழிவு என்ற அனர்த்தத்தினாலும் பல லட்சக்கணக்கில் அங்கு இடம்பெயர்ந்து பேரவலப்படும் மக்களின் தற்போதைய நிலைமையை நேரில் கண்ட உலக உணவுத்திட்ட அதிகாரி …
-
- 0 replies
- 618 views
-
-
போர் நடவடிக்கையினால் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மீண்டும் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
வீரகேசரி நாளேடு - கிளிநொச்சிஇ திருமுறிகண்டிப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலில் 20 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த மோதலில் கொல்லப்பட்ட படையினரது சடலங்களும் இதுவரையில் மீட்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இம்மோதல்களின் போது 27க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அவர்களது தகவல் பரிமாற்றங்களின் போது தெரியவந்துள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கிளிநொச்சி மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரு முனைகளிலிருந்து முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் திருமுறிகண்டி சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவ பே…
-
- 0 replies
- 1.4k views
-
-
அம்பாறை மாட்டத்தில் உள்ள திருக்கோவில் பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த சில நாட்களில் நடத்திய தேடுதலில் 28 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 452 views
-
-
சிங்களவர்களின் குரலாக தமிழ்நாட்டிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சதா ஒலித்துக் கொண்டிருக்கின்றார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
முள்ளியவளையை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 476 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கவனஈர்ப்புப் போராட்டத்தின் சில படங்கள். இதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. நன்றி. மேலும் சில படங்கள் இங்கே. http://www.thayakam.net/
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முறுகண்டி பிரதேசத்தை சிறீலங்கா இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடர்பாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் முறுகண்டியினை சிறீலங்கா இராணுவத்தின் 54வது படைப்பிரிவு இன்று காலை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/srilanka/muruka...2008-12-11.html -தமிழ்செய்தி நிருபர், கொழும்பு
-
- 9 replies
- 3.4k views
-
-
கிளிநொச்சியின் தென் எல்லைப்பகுதியான முறிகண்டிக்கு வடமேற்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 3k views
-
-
மாதகல் கடற்பரப்பில் கடற்படையின் போர் ஒத்திகை திகதி: 11.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] மாதகல், கடற்பரப்பில் சிறிலங்காப் கடற்படையினர் நேற்று இரவு 9.00 மணியில் இருந்து அதிகாலை 3.00 மணிவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இப்போர் ஒத்திகையில் நீரூந்து விசைப்படகுகள், உலங்கு வானூர்திகள் என்பன ஈடுபடுத்தப்பட்டதுடன் கரையில் இருந்து கடலைநோக்கி தொடர் எறிகணைத் தாக்குதல்கள் இப்போர் ஒத்திகையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டது. சங்கதி
-
- 0 replies
- 749 views
-
-
போர் முனையில் காயமடையும் படையினரை மன்னார் தள்ளாடி படைமுகாமிக்கு கொண்டுவரப்படுகின்றனர். வெள்ளி, 12 டிசம்பர் 2008, 23:00 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] நான்கு ஜந்து தினங்களாக உலங்குவானூர்திகள் இரவு பகலாக தாழப்பறந்து வருவதாகத் தெரியவருகிறது. போர் முனையில் காயமடையும் படையினரை மன்னார் தள்ளாடி படைமுகாமிற்கு எடுத்து வந்து சிகிச்சைக்காக தென்பகுதிக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாந்தை மேற்குப் பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதையடுத்து தற்பொழுது கிளிநொச்சியில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒருசில தினங்களாக மாந்தை…
-
- 0 replies
- 1.2k views
-
-
மானிட தர்மம் மறந்து விட்ட உலக அரசுகள் பேசும் மனித உரிமைகள்! யாருக்காக இவர்களின் மனித உரிமைகள்? நடப்பதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. யார் யார் மனித உரிமை மீறல்களைச் செய்கிறார்களோ, அவர்கள்தான் கூரை மேல் ஏறி நின்று மனித உரிமைகள் பற்றிக் கொக்கரிக்கிறார்கள். அதனால் பல உண்மைகள் ஆழப் புதைக்கப்படுகின்றன. இந்தப் புண்ணியவான்களால் தினம் தினம் புதைக்கப்படும் உண்மைகளின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு உயிர்கள் பறிக்கப்பட்டு உடலங்கள் புதைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் பூமியிலிருந்து பலவந்தமாக அகற்றப்படுகின்றன. இத்தனைக்கும் இந்த மனித உயிர்கள் பறிக்கப்படும் முன்னரே அனைத்துவித மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று விடுகின்றன. அவசரகாலச் சட்டம், தடா, பொடா போன்ற சட்டங்களை…
-
- 0 replies
- 731 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை. http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e
-
- 12 replies
- 3.3k views
-
-
ஒருபக்கம் மழைநீரும், மறுபக்கம் கண்ணீருமாக ரணமாகிக் கிடக் கிறார்கள், ஈழத் தமிழர்கள். அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கிடையே, தமிழக அனைத்துக் கட்சிக் குழு, முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த நான்காம் தேதி சந்தித்தது. அனைத்துக் கட்சிக் குழுவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசுடன் பேச மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்நாட்டுக்கு அனுப்ப பிரதமர் உறுதி அளித்தார். அந்தச் சந்திப்பின் போது பிரதமருடன் பேச, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தலா ஒரு நிமிடம் ஒதுக்கப்பட்டதாம். தன்னுடைய முறை வந்ததும், பிரதமருடன் பேசத் தொடங்கி…
-
- 11 replies
- 4k views
-
-
இன ஒழிப்பு இடம்பெறும் நாடுகளின் சிகப்பு சமிக்ஞை பட்டியலில் இலங்கைக்கு முக்கிய இடம் - ஐநா கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை: உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் இன ஒழிப்புக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டுமென இன ஒழிப்புக்கு எதிரான அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பலமுனைகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலமே இன ஒழிப்பை ஓரளவுக்காவது தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் செயலகமும், பாதுகாப்புப் பேரவையும் இன ஒழிப்புக்கு எதிராக அதிக முனைப்புடன் செயற்பட வேண்டும் என இன ஒழிப்புக்கு எதிரான அமைப்பின் திட்டப் பணிப்பாளர் ஜில் சாவிட் தெரிவித்துள்ளார். இன ஒழிப்பு இடம்பெறக்கூடிய நாடுகள் குறித்து சிகப்பு…
-
- 4 replies
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு 12/11/2008 8:25:49 PM - இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தீர்வு ஏற்படாததால், ரஜினிகாந்த் இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாடவில்லை. சுல்தான் தி வொறியர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, ஹைதராபாத் சென்றுள்ளார். ரஜினிகாந் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெளியூர் சென்று விடுவார். இந்த வருடம் பிறந்தநாளை சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படாததால், பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று அவர் விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். அங்கு சுல்தான் தி வொறியர் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார்
-
- 0 replies
- 821 views
-
-
கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 3.9k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் தொப்பிகல பகுதியை அண்மித்துள்ள பத்து கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த மிதிவெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இது தொடர்பான உத்தரவாதப் பத்திரங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று கிரான் பேரில்லாவெளி பிரதேசத்தில் நடைபெற்றது. அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இப்பணிக்கான நிதியுதவிகளை வழங்கியிருந்தது. கூளாவடி, கிழங்குப்பளை, காக்கிளாஞ் சோலை, 6ஆம் கட்டை, தடானை, மட்டப்புல் தோட்டம், ஈச்சையடி, பேரில்லாவெளி, கிருமிச்சையடிகுடா, மற்றும் பனிக்கஞ்சேனை ஆகிய கிராமங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட்டதற்கான உத்தரவாத பத்திரங்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த …
-
- 0 replies
- 894 views
-
-
இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள கணனிமயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் கேள்விப் பத்திரத்தை முறைகேடான வகையில் பாகிஸ்தானின் நெட்ரா நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கத்தின் பொறுப்பு மிக்கவர்கள் சிலர் மேற்கொள்ளும் முயற்சி குறித்து இந்தியா தனது கவலையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது. இந்தக் கேள்விப் பத்திரம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதன் மூலம் முழு இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் சென்றடையும் என தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் தாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வரும் போது, இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய முக்கியமான பொ…
-
- 13 replies
- 4.4k views
-
-
மோசமான வீழ்ச்சியை நோக்கி தேசத்தின் பொருளாதாரப் போக்கு [11 டிசம்பர் 2008, வியாழக்கிழமை 8:10 மு.ப இலங்கை] ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானது மாதிரி’ - ‘உலக்கை தேய்ந்து உளிப்பிடியானமை போல’ - இலங்கையின் பொருளாதாரம் குட்டிச்சுவராகிப் போய் நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது என்ற நெருடலான செய்தியை நாசூக்காகத் தெரிவித்திருக்கின்றது உலகவங்கி. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டில் - 2008 இல் - 7.5 வீதமாக இருக்கும் என இலங்கையின் பொருளாதாரப் பண்டிதர்கள் எதிர்வு கூறிய நிலையில் அது இப்போது 6 வீதத்தைக் கூட எட்டவில்லை என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நிதி அமைச்சர் என்ற முறையில் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 886 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்வதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 19 replies
- 2.2k views
-
-
ஈழம் அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 09/12/2008 செவ்வாய் கிழமை புதுவைத் தமிழ்சங்கத்தில் நடைபெற்றது.தோழர்.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈழம் அறியவேண்டிய உண்மைகள் என்ற நூலை புதுவை மாநில முன்னாள் அமைச்சரும்,ம.தி.மு.க மாநில அமைப்பாளருமான நா.மணிமாறன் வெளியீட, விடுதலை சிறுத்தைகள் அமைப்புச் செயளாளர் சு.பாவாணன் பெற்றுக் கொண்டார். மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து கருத்தரங்க சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில், ஈழப்பிரச்னை, ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டு...இது தமிழ்நாட்டு பிரச்னையாக இருப்பதால், இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.…
-
- 1 reply
- 929 views
-
-
காலித்துறைமுகம் திடீரென மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே மூடப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று காலத்துறைமுகத்தினுள் ஊடுருவி இருப்பதனாலே மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் விரைவில்......... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 2.6k views
-
-
கிளிநொச்சிக்கு மேற்குப்புறமாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற மோதல்களில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பை மேற்கோள் காட்டி கொழும்பில் இருந்து இயங்கி வரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 520 views
-