ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
சென்னை இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக சட்டசபையில் இன்று எதிர்கட்சிகள் இன்று ஒரே நேரத்தில் பிரச்சனை எழுப்ப முயன்றதால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்ததும், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பிரச்சனையை எழுப்ப முயற்சித்தன. இலங்கை பிரச்சனை தொடர்பாக பாமக, மதிமுகஇஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜெயலலிதா பாதுகாப்பு தொடர்பாக அதிமுக மற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் பிரச்சனை எழுப்ப முயன்றன. ஆனால் பேருந்து கட்டண பிரச்சனை உள்ளிட்ட முக்கிய 5 பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளதால், வேறெந்த பிரச்சனையையும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பு - இந்திய உயர் நீதிமன்றம் வீரகேசரி இணையம் 11/11/2008 9:51:41 AM - விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளதக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலிகள் மீதான தடை தொடர்பான மனு ஒன்றை இந்திய உள்நாட்டமைச்சர் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் மத்தியில் போதுமான சாதகத்தன்மை ஏற்படாததைத் தொடர்ந்தே புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டிருப்பதாக நீதிவான் விக்ரம்ஜீத் சென் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://blog.sajeek.com/?p=444 எல்லோரும் சேர்ந்து கொள்ளியெடுத்து நெருப்பு மூட்டி பற்றியெரிய வைத்து விட்டு - இப்போ எரியூட்டிய கைகள் கூட தங்கள் கொள்ளிக் கட்டைகளை மறைத்து வைத்து விட்டு தனியே ஒரு கையை மட்டும் சுட்டிக் காட்டி அதோ அதோ அந்தக் கைதான் எரித்தது எனச் சொல்வதிலுள்ள நியாயம் என்ன ? அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து …. தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆக…
-
- 4 replies
- 1.9k views
-
-
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனின் கடிதம் இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சிலகண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒருமூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம்.
-
- 1 reply
- 915 views
-
-
கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் சதித்திட்டம்: •தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி •200 முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியுள்ளது . கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்பெறச் செய்யும் வகையிலான இரகசிய சதித்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரப் பலத்தை வலுவிழக்கச் செய்யும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் மிகவும் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் கருணாவிற்கும், முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் நிலையை …
-
- 1 reply
- 693 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுங்கள்: மன்மோகன்சிங்குக்கு இந்திய கம்யூனிஸ் கட்சி கோரிக்கை [செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2008, 04:17 மு.ப ஈழம்] [பி.கெளரி] இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சம்மதித்துள்ள நிலையில் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய மத்திய அரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று திங்கட்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பாக நான் உ…
-
- 1 reply
- 535 views
-
-
யாழில் இரு பிள்ளைகளின் தாயார் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2008, 04:54 மு.ப ஈழம்] [ப.தயாளினி] யாழ்ப்பாணத்தில் உள்ள நாயன்மார்க்கட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான சி.சுமதி (வயது 27) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த சனிக்கிழமை யாழ். மருத்துவமனைக்கு வந்த இவரை காணவில்லை என தேடிய போதே உடலமாக யாழ். மருத்துவமனையில் கண்டதாக கணவன் தெரிவித்தார். உடலம் கடந்த சனிக்கிழமை நாயன்மார்க்கட்டு குளக்கரை அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் கணவனிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தடையில் மாற்றாங்கள் ஏற்படாதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். புலிகள் தொடர்பில் ஜனநாயக மற்றம் குடியரசு கட்சிகளின் நிலைப்பாடு ஒரே விதமாக அமைந்துள்ளதெனவும் தெரிவித்த அவர், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா ஜனனாதிபதியாக தெரிவு செய்யப்பட்தன் மூலம் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நீண்டகாலமாக தொடரும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வின் மூலமே நிலையான சமாதானத்தை பெறமுடியும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும். அமெரிகாவில் 1997 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யபட்டது. வன்முறையை பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தும் புலிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
உயிர் அச்சுறுத்தல் - குடாநாட்டு மக்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடையும் பரிதாப நிலை தொடர்கிறது: உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பணிமனையில் சரணடையும் யாழ்ப்பாண வாசிகளின் பரிதாப நிலை தொடர்கிறது. யாழ்- பலாலி வீதியின் கந்தர்மடத்தை சேர்ந்த 27 வயதான ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் -மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (நவூ) சரணடைந்துள்ளார். இலங்கை இராணுவத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். சரணடைந்தவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தங்கவைப்பட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் கட்டுப்பாட…
-
- 1 reply
- 680 views
-
-
வவுனியா நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் 11/11/2008 10:16:05 AM - வவுனியா நகர் மற்றும் ஏனைய பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். விடுதலை புலிகளின் மாவீரர் தினம் நெருங்கி கொண்டு இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நகர் பகுதிக்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன் ஒருகட்டமாக நேற்றைய தினம் வவுனியா நகர் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது நகர் பகுதிக்கு வந்த அனைத்து மக்களிடமும் தேசிய …
-
- 0 replies
- 909 views
-
-
டக்ளசின் சமூக சேவை திகதி: 11.11.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] ஈ.பி.டி.பி குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் சமூக சேவைகள் அமைச்சின் ஊடாக, கணவரை இழந்த பெண்களுக்கு வழங்கப்படுவதற்கென்று யாழ்ப்பாணம் எடுத்து வந்த 750 தையல் மெசின்களை ஈ.பி.டி.பியினர் யாழில் தனியார் கடை ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளனர். இதுஇவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு சிறிலங்கா படையினரால் பொருட்கள் சூரையாடப்பட்டுள்ளன. சங்கதி
-
- 1 reply
- 1.2k views
-
-
வாக்குறுதி அளித்து ஏமாற்றும் கொழும்பின் இராஜதந்திரப்போக்கு [11 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 10:20 மு.ப இலங்கை] இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி - ஈழத் தமி ழர் தாயகத்தின் மீது தென்னிலங்கை அரசு தொடுத் திருக்கும் கொடூர யுத்தத்தை ஒட்டி - தமிழகத்தில் கிளர்ந் தெழுந்துள்ள உணர்வெழுச்சியைக் கண்டு, வியப்புற்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, சூறாவளிப் புயலாக வீசும் அந்த எழுச்சியுடன் இயைந்து தாமும் தமது தி.மு.கவும் செயற்படாவிட்டால் அந்தப் புயல் தமது தரப் பைத் தூக்கியடித்துப் பந்தாடி சிதைத்துச் சின்னா பின்னமாக்கிவிடும் என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டார். அந்த உணர்வெழுச்சியோடு சேர்ந்து - அதற்கு ஆதரவு தந்து - செயற்படுகின்றவர் போலத் தம்மைக் காட்டிக் கொள்வதற்காக ஈழத் தமி…
-
- 0 replies
- 783 views
-
-
மத்திய அரசு நினைத்தால், ஒரே நாளில் போர் நிறுத்தம்-முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தல் சென்னை: இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கு, அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் நிறுத்தம் என்பது இருசாராரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று தான் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி உள்ளார். இதனிடையே, இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். இலங்கை பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது என்றும், சமரச பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்…
-
- 0 replies
- 795 views
-
-
என்னால் முடிந்தவரை இதை செய்துள்ளேன்...நண்பர்கள் எவரேனும் முடிந்தால் இதை இன்னும் ரசிக்கும்படி மாற்றவும்.....நன்றி. ---------------------------------------------------------------- ---------------------------------------------------------------------
-
- 0 replies
- 720 views
-
-
தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி;களை கைது செய்ய கருணா அரசிடம் கோரிக்கை : கிழக்கில் தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களில் மாத்திரம் தமது கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் வன்முறையை நிறுத்த அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி, ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ள வேளையில், விடுதலைப்புலிகள் சிற்சில இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை செய்து வருவதால், க…
-
- 11 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் சரணடைய வேண்டும் என நிபந்தனை விதிப்பது குழந்தைகளிடம் அம்புலிமாமா காட்டுவது போன்றது. என த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட பா.உ எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார். புலிகள் பலவீனம் அடைந்து விட்டதாகக் கூறுவது தவறானது. அவர்கள் தேவையின் அடிப்படையில் காலத்தின் தேவை கருதி சில நிலப்பரப்பை விட்டு விட்டு பின்நகர்ந்துள்ளனர். என்ற அவர் மேலும் : இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் பொய்ப் பிரசாரத்தின் மூலம் அரசு மீண்டுமொருமுறை ஏமாற்ற முயற்சித்துள்ளது. எம்மைப் பொறுத்த வரையில் இதனை ஒரு போருக்கான வரவு - செலவுத் திட்டமாகவே நாம் பார்க்கின்றோம். அரசு யுத்தத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனாலேயே இந்த வருடத்தை விட அடுத்த வருட பாது…
-
- 0 replies
- 972 views
-
-
தம்பி பிரபா ஆரம்ப காலத்தில் என் வீட்டில் தான் இருந்தார். ஒருநாள் இலங்கைக்கு போகும் போது என்னுடைய இளைய மகன், சித்தப்பா என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னான். அதற்கு பிரபாகரன், 'நீ என்னோடு வந்துவிட்டால் அப்பா, அம்மாவை யார் பார்ப்பார்கள?'; என்று சொல்லி அழைக்காமலேயே போய் விட்டார். அப்படி ஒருவேணைள அவனை அழைத்துப் போய் இருந்தால், அங்கு நடக்கும் விடுதலைப் போரில், என் மகன் வீரமரணம் அடைந்திருபான். ஆனால், அவ்வாறில்லாமல் இங்கு விபத்தில் இறந்துவிட்டான். நீங்கள் தமிழனாக, இந்தியனாக, மனிதனாக இருங்கள். 1974 இல் இருந்து 1983 ஆம் ஆண்டு வரை அங்கு ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 13 டாக்டர் பட்டம் பெற்றவர் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செஞ் சோலை கிராமத்தில்…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சிக்கு மேற்கே கிராஞ்சியை கைப்பற்றிவிட்டோம்: சிறிலங்கா படைத்தரப்பு [செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2008, 05:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சிக்கு மேற்கே பேய்முனைப் பகுதியில் கிராஞ்சிப் பிரதேசத்தை நேற்று திங்கட்கிழமை காலை கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" நாளேடு வெளியிட்டுள்ள செய்தி: மன்னார் - பூநகரி வீதியில் (~ஏ-32|) அந்த வீதிக்கு மேற்காகவுள்ள கிராஞ்சிப் பகுதியை நேற்று காலை அதிரடிப்படை - 1 கைப்பற்றியது. நீண்ட நாட்களாக இந்தப் பகுதியில் புலிகளுடன் தந்திரமாக மோதல்களில் ஈடுபட்டு வந்த படையினரே நேற்று காலை கிராஞ்சி பகுதியை தம் வசப்படுத்தினர். மேற்கு கரையோரத்தில் …
-
- 1 reply
- 1k views
-
-
(உரையின் ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது.)சென்னைச் சேப்பாக்கம் மைதானத்தில், 09.11.08 அன்று, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சின்னத்திரைக் கலைஞர்கள் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தமிழீழம் அமைவதை எப்பொழுதும் இந்திய அரசு விரும்பவில்லை. அதற்காகவே இந்தியாவும், அமெரிக்காவும், அவற்றைப் பின்தொடரும் ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டார். அவரது முழுமையான உரையின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 0 replies
- 1k views
-
-
தற்போதைய நிலையில் சமஷ்டி தீர்வினை வழங்கினாலும் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். தமிழீழமே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
Foreign Policy Options in Sri Lanka - And the risk of Sri Lanka falling sway to outside powers By T S GOPI RETHINARAJ THE OVERARCHING goal of India’s policy toward Sri Lanka since the 1950s was to prevent any hostile power getting a foothold in the neighbourhood. In line with this objective India pursued various policies some of them at the expense of Sri Lankan Tamil interests over the years to placate the Sinhalese leadership. This includes bartering away the citizenship rights of over 600,000 Tamils who had settled there during colonial times and acquiescence to racial discriminatory policies followed by successive Sri Lankan governments. Even the brief s…
-
- 0 replies
- 923 views
-
-
ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 9௧1௨008 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் சிரீராம் திரையரங்கம் முன்பு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாவட்ட பிரதிநிதி சி.கே.பழனிச்சாமி,ம.தி.மு.க வெளியீட்டு துணைச்செயலாளர் இல.தனபால், ஒன்றியசெயலாளர் அறிவரசு, இந்திய பொதுவுடமைக்கட்சியின் ஒன்றியசெயலாளர் வி குணசேகரன்,நகரச்செயலாளர் ஞானமூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலித்தங்கம்,பெருமாள்,தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் க.தேவேந்திரன்,மற்றும் செ.வெள்ளிமலை,வே.கோபால்,சாஜித், கதிரவன்,சண்முகசுந்தரம், பன்னீர்செல்வம்,மணிமாறன…
-
- 0 replies
- 706 views
-
-
ஐயா கலைஞரே.தமிழினமா? ஈனப்பதவியா? கடைசியில் எதனை எழுதக் கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது, இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் அழுத்தங்களுக்கு இணங்கி யுத்த நிறுத்தம் ஏற்படுமென்றால் அது கிழக்கு மாகாணத்தின் இயல்பு நிலையை முற்று முழுதாக பாதித்து விடும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியுமான பிள்ளையான் கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து இந்தியாவின் அதிகளவு கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. கிழக்கின் இயல்புநிலை குறித்தும் இந்தியத் தலைவர்கள் அதிகளவு அறிந்ததில்லை. மன்மோகன் சிங்கை சந்திக்க பல முயற்சிகளை மேற்கொண்டோம். இவற்றின் பின்னணியிலேயே யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இந்தியா வ…
-
- 9 replies
- 2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போர் நிறுத்தம் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டியது எனக் கூறியிருந்தேன். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே "இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்திவிட முடியும். இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்'' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இலங்கைப் பிரச்னைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. …
-
- 0 replies
- 821 views
-