ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
தமிழ்நாடு மக்கள் வழங்கியுள்ள நிவாரணப் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வன்னி மக்கள், தமது உரிமைக்காக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டபோது, அதனைப் பெற்றுக்கொள்ளச் சென்ற மக்களிடம் தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தியாளர் கருத்துக் கேட்டிருந்தார். இதன்போது அவர்கள் கூறிய கருத்துக்கள் இந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வன்னியில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக, லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த மக்களிற்கான…
-
- 8 replies
- 1.5k views
-
-
புலம்பிக் கிடப்பது புயல்களுக்கு அழகல்ல! திகதி: 05.12.2008 // தமிழீழம் // [] - எழுதியவர் சு.ஞாலவன் யூதர்களுக்கு எதிரான வாதத்தைக் குறிக்கும் 19ம் நூற்றாண்டில் உருவாகிய அன்ரி - செமெற்றிசம் (Anti-Semitism) என்ற சொல் ஹிட்லரின் யூத இன அழிப்புடனே பிரபல்ய மடைந்ததெனினும், பலஸ்தீனத்திற்கு வெளியே யூதர்கள் வாழத் தொடங்கியதிலிருந்தே அதுவும் வேர்விடத்தொடங்கிவிட்டது. அக்காலத்திலேயே யூதர்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் வந்த காரணத்தினாலேயே அவ்வினம் உலகெங்கும் சிதறி வாழவேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக கி.பி. 70 காலப்பகுதியில் ரோம ஆட்சி நிலவிய பலஸ்தீனத்தில் யூத கலாச்சார, பண்பாட்டு, மத விழுமியங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தன. இதேபோல கி.பி. 637 …
-
- 1 reply
- 1k views
-
-
நாங்கள் எந்த நிறுவனத்தையோ, அமைப்பையோ எந்த வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புக்களையோ நம்பிப் போராட்டம் நடத்தவில்லை. எங்களது மக்களுடைய பலத்திலேயே இந்த விடுதலைப் போராட்டம் பெரியதொரு தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்ந்திருக்கின்றது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை அகற்றிவிட்டு பெரியதொரு பொருளாதாரத் தடையை ஏற்படுத்த சிங்கள அரசுகள் முயற்சிக்கின்றது. ஆனால், எங்களுடைய மக்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறு வட்டக்கச்சிக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில…
-
- 2 replies
- 942 views
-
-
வீரகேசரி இணையம் - இனிமேல் எந்தவொரு ஊடகத்திற்கோ அல்லது ஊடகவியலாளருக்கோ இடையூறு விளைவிக்க மாட்டேன் என தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். 'சிரச' தொலைக்காட்சி மட்டுமன்றி வேறு ஊடக நிறுவனங்களுக்கும் இனிமேல் தம்மால் எவ்வித இடைஞ்சல்களும் ஏற்படாதென தாம் உறுதியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். களனியில் வைத்து 'சிரச' தொலைக்காட்சி ஊடகவியலாளரைத் தாக்கி வீடியோ கருவிகளைப் பறித்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணைகளின் போது மேர்வின் சில்வாவின் சட்டத்தரணி இந்த உறுதிமொழியை நீதிமன்றில் முன்வைத்துள்ளார். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 'சிரச' தொலைக்காட்சி ஊடகவியலாளரும், எம்.ரி.வி நிறுவனத்தினரும் வழக்குத் தாக்கல் …
-
- 1 reply
- 761 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 10 ஆம் நாளுக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
செவ்விந்தியர், மஓரி போன்ற பண்டைய இனங்கள் போல சர்வதேசத்தவரால் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள். அவர்களின் பாரம்பரியங்களும் அதேபோல் பாதுகாக்கப்பட வேண்டியவைகள். வெள்ளைக்காரர்கள் வன்முறையால் கொள்ளை அடித்துக் கையேற்ற அவர்களின் உரித்துக்களை வஞ்சகமாக அபகரித்துக் கொண்ட எம் நாட்டு சிங்கள மக்கள் தலைவர்கள், காலத்திற்கு ஒரு கருத்தை வெளிப்படுத்தித் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் அவ்வுரித்துகளை திரும்பக் கொடாது ஏமாற்றி வருகின்றனர். **கலாநிதி ஆ.க.மனோகரன் எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறன்று மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் நடைபெ…
-
- 0 replies
- 831 views
-
-
யாழ்ப்பாணத்தின் முதன்மை ஆங்கில ஊடகவியலாளரான ஜோ.அரியரட்ணம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 813 views
-
-
வன்னி மக்களுக்கு தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொதிகளில் பல உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தேர்வுத்தாள்கள் வரவேண்டிய நிலையில் இன்று ஓமந்தை சோதனை நிலையத்தை சிறிலங்கா படையினர் மூடி போக்குவரத்தை தடைசெய்திருந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-
-
கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கால் 18 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
வன்னிப் பகுதிக்கு உடை மற்றும் துணி வகைகள் கொண்டு செல்ல சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு கடந்த மூன்று மாதங்களாக சிறிலங்கா அரசாங்கம் எரிபொருட்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 457 views
-
-
"பிரபாகரன் கொடுத்த வேலையை மங்கள சமரவீர தற்போது சிறப்பாக செய்துவருகின்றார். இதுவரை "தமிழ் நெட்' செய்த பணியை இப்போது மங்கள சமரவீர செய்துவருகின்றா'ரென அமைச்சரும் பாதுகாப்பு பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ""கடந்த காலங்களில் இராணுவத்தினர் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் இராணுவத்தினரின் நிலை மாற்றியமைக்கப்பட்டது. 500 இராணுவத்தினருக்கு 30 கரும்புலிகள் போதுமானவர்கள் என்று கூறப்பட்ட கருத்துகளும் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. இராணுவத்தினரை கேலி செய்த புலிகள் இன்று அழிக்கப்பட…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழக மக்களால் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
இலங்கை பிரச்சனை: சொதப்பும் அதிகாரிகள்-ராமதாஸ் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2008, 10:55 டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுவதில் சிரமம் இருந்தால் இதை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் தற்போதுள்ள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சனையின் ஆழம் தெரிந்த தமிழர்கள் இடம்பெறும் ஒரு ஆலோசனைக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற குழுவில் இடம் பெற்ற ராமதாஸ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தெற்கைக் கவர்ந்திழுக்கும் போர் வெ(ற்)றிப் பொறி! [05 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 9:05 மு.ப இலங்கை] ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு அடக்குமுறையாலும், ஆயுதப் பலத்தாலும் முடிவு கட்டத் தீர்மானித்துவிட்ட கொழும்பு அரசு, அதனால் போர் முனைப்பில் தீவிரமாக நிற்கின்றது என்பது இன்று வெளிப்படையானது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அவர்களை நிரந்தரமாக அடிமைகளாக்கும் நோக்குக் கொண்ட இந்த இன அழிப்புப் போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, அவர்களை நிரந்தர அகதிகளாக்கி, அவர்களின் சமூக, பொருளாதார வாழ்வையும், அடிப்படைக் கட்டுமானங்களையும் அடியோடு சீரழித்து, தமிழர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பேரவலத்தைக் கொடுத்து நிற்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகள் மீது கொடூர ய…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் நியமிக்கப்பட வேண்டும் - அலிக் அலுவிஹரே: ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அலிக் அலுவிஹரே தெரிவித்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பதற்கான சகல தகுதிகளும் சஜித் பிரேமதாஸவிடம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது யோசனை குறித்த எழுத்து மூல கோரிக்கையொன்றை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அலுவிஹரே அனுப்பி வைத்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவர் பொறுப்பிற்கு சஜித் பிரேமதாஸவை நியமிப்பதன் மூலம் கட்சிக்கு வலு சேர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது இன்றியம…
-
- 0 replies
- 630 views
-
-
ACF தொண்டு ஊழியர்கள் படுகொலைச் சம்பவம் குறித்து பாதுகாப்பு தரப்பிலிருந்து முரண்பட்ட சாட்சியங்கள: மூதூரில் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு தரப்பினர் அளித்து வரும் சாட்சியங்கள் முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு சாட்சியமளித்த அதிகாரிகள் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். படுகொலைச் சம்பவம் குறித்து வடக்கு கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு 6ம் திகதி அறிவிக்கப்பட்டதாக நேற்றைய தினம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. எனினும்…
-
- 0 replies
- 582 views
-
-
யுத்த நிறுத்தம் குறித்து கலந்துரையாட விரைவில் பிரணாப் இலங்கைக்கு விஜயம் செய்வார் – கருணாநிதி: இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் குறித்த மகஜர் ஒன்றை தமிழக அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரிடம் கையளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கூட்…
-
- 0 replies
- 516 views
-
-
வன்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினரின் 120 உடலங்கள் கொழும்பில் உள்ள இரண்டு மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்;தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கக்க கோரி, எதிர்வரும் 8ம் திகதி, அரவாணிகள் உண்ணாவிரத, ஒப்பாரி போராட்டம் நடத்தவுள்ளனர். இது குறித்து, அரவாணிகள் அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது : இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருக்கின்றன. குடும்பத்தை விட்டு, சமூதாயத்தை விட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு அகதிகளுடைய கண்ணீரின் வலி தெரியும். அரவாணிகள் அமைப்பின் சார்பில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு, மேற்படி போரட்டம் நடைபெறவுள்ளது. உண்ணாவிரதத்தை கணிமொழி எம்.பி. ஆரம்பித்து வைப்பார். எமது ஒரு நாள் வருமானத்தை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணமாக வழங்க …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசிடமும் பிரதமரிடமும் முறையிடுவது இதுவே கடைசித்தடவை. இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மக்களின் கடும் கோபத்தை மத்திய அரசு சந்திக நேரிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நேற்று தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் டில்லியில் பிரதமரை சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசியுள்ளனர். இச்சந்திப்பு குறித்து டில்லியில் நிருபர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள தா.பாண்டியன் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் : இலங்கையில் போர்நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்திடும் நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 941 views
-
-
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் ஜனநாயக செயற்பாட்டுக்கு பெரும் தடை என்கிறது - EPDP: http://www.globaltamilnews.net/tamil_news....=2975&cat=1 கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் ஜனநாயக செயற்பாட்டுக்கு பெரும் தடையாகும் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகள் ஜனநாயகச் செயற்பாட்டுக்கு பெரும் தடையாகும். நடைபெறும் படுகொலைகளைச் செய்திகளாக அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைவதாகவும் தமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொளவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு விடுவிக்கப்பட்ட போது மக்கள் விடுதலை பெற்ற உணர்வோடும் எதிர்கால நம்பிக்கைகளோ…
-
- 1 reply
- 690 views
-
-
தயவு செய்து youtube இல் காணொளிகளை தரப்படுத்துவதுடன் கருத்துகளையும் பதிந்து விடுங்கள்
-
- 0 replies
- 763 views
-