ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்கராயனில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட படையினரின் 29 உடலங்களில் இரண்டாவது தொகுதி இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
இனப் பாகுபாட்டுப் போக்கை நியாயப்படுத்தும் எத்தனங்கள் 04.09.2008 தலைநகர் கொழும்பில் தமிழர்கள் வேறுபடுத்தப்பட்டு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதைக் கடைசியாக அரச பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல ஒப்புக் கொண்டிருக்கின்றார். ""தாக்குதல் நடத்துபவர்கள் எல்லா இனக் குழுமங்களைச் சேர்ந்தோரையும் கொன்றொழிப்பவர்கள் வழமையாகத் தலைநகரில் பெரிய அளவில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் போய் ஒளிந்துகொள்ளுகின்றனர். அதனால்தான் தமிழர்களை வேறுபடுத்தி பாதுகாப்புப் பரிசீலனைக்கு அவர்களை விசேடமாக உட்படுத்தவேண்டி நேருகின்றது.'' என்று தமது கருத்துக்கு நியாயம் உரைக்கின்றார் அமைச்சர் ரம்புக்வெல. ""இது உண்மையில் இனப்பாகுபாடு அல்ல. அவர்கள…
-
- 0 replies
- 707 views
-
-
சிறீலங்காவின் தொழிலமைச்சர் மேர்வின் சில்வாவின் உத்தியோகபற்ற மெய்பாதுகாப்பாளர் ஒருவர், பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் சிறீலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றார். கொழும்பு இரவு விடுதியில் பணியாற்றும் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவு புரிந்துள்ள குற்றச்சாட்டில் ’’குடு நுவான்’’ என அழைக்கப்படும், நுவான் உதய குணதிலக்க என்பவரே தேடப்பட்டு வருகின்றார். 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் ருபவாஹினி பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மேர்வின் சில்வாவுடன், நுவான் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக MTV தொலைக்காட்சி, மற்றும் ஊடகவியலாளர் ஒருவரால் தொடரப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான வி…
-
- 0 replies
- 953 views
-
-
வீரகேசரி நாளேடு 8/31/2008 7:29:38 PM - சென்னை, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முத ல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற…
-
- 13 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களிலும் மர நிழல்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள், தங்குவதற்கான கூடாரங்கள் உட்பட தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி நீல்புகுனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவிடம் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு மைலவெட்டுவான் பகுதியில் இன்று மாலை 5:00 மணியளவில் இந்த கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு வவுணதீவுப்டபகுதியில் இராணுவம் மீது தாக்குதல் மட்டக்களப்பு வவுணதீவுப்பகுதியில் நீராடுவதற்கு சென்ற சிறீலங்கா படையினர் மீது அதிரடித் தாக்குதல் ஒன்று இன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இதன்போது ஏற்பட்ட விபரங்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. http://www.tamilskynews.com/i…
-
- 0 replies
- 664 views
-
-
பாரிசில் உள்ள யூனஸ்கோ தலைமைக் காரியலயத்தில் நேற்று புதன்கிழமை தொடங்கி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான 61 ஆவது மாநாட்டில் பிரான்சை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையமும் அதிகாரபூர்வமாக பங்கேற்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
யாழ் குடாநாட்டில் பொதுமக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. படையினரின் சோதனை நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தத் தீர்மானித்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் உதய நாணயக்கார குறிப்பிட்டார். இவ்வாறான விசேட அடையாள அட்டைகளை வழங்குவதன் மூலம் வெளியிடங்களில் இருந்து பிரதேசத்திற்குள் பிரவேசிப்போர் பற்றிய தகவல்களை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். இலத்திரனியல் முறையில் புதிய அடையாள அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேல…
-
- 0 replies
- 694 views
-
-
வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினருக்கு உத்தரவிட்டுள்ளதோடு இடம் பெயர்ந்துள்ள மக்கள் படையினரால் திறக்கப்பட்டுள்ள பாதைகள் மூலமான அரச காட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அனுரபிரிய தர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். http://www.tamilseythi.com/srilanka/Anurap...2009-08-04.html
-
- 0 replies
- 868 views
-
-
கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இன்றும் தொடரும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜே.கே.எச. சிறிலங்கா ரெலிகொம், டயலொக் போன்ற கம்பனிகளின் பங்கு விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பொதுவாகவே பங்குச் சந்தையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்து செல்வதாகவும் சொல்லப்படுகிறது. மலிங்கவும் 18.71 புள்ளிகளால் வீழ்;ச்சி அடைநதுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வன்னிக் களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் ஓங்கிவருவதும் இலங்கைப் படையினர் எதிர்கொள்ளும் பாரிய இழப்புகளினதும் தாக்கமே பங்குச் சந்தையின் இந்த திடீர் சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என பங்குச் சந்தை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். http://www.tamilskynews…
-
- 0 replies
- 1.4k views
-
-
குறைந்தது மேலும் ஒரு வருடத்திற்காவது யுத்த செலவீனங்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக திறைசேரியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர தெரிவித்தார். எனவே, வரவு-செலவுத்திட்ட தயாரிப்பின் போது பாதுகாப்புத் தவிர்ந்த ஏனைய அமைச்சுக்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அவர் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்தார். அடுத்த வருடத்துடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து 2010ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக யுத்தத்தின் பின்னரான புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக 2009ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கமளிக்கும் சந்திப்பில் ஜெயசுந்தர கூறினார். இந்தச் சந்திப்பில் வரவு-செலவுத்திட்டத்தைத…
-
- 0 replies
- 637 views
-
-
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளில் ஒருவரான ஸ்ராலினின் தாயார் இனந்தெரியாத பிள்ளையான்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.45மணியளவில் பாண்டிருப்பு சோமநாதர் வீதியில் வைத்து இராஜேஸ்வரி பனிமலர்(60வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவர். இவரது வீட்டுக்கு சென்ற பிள்ளையான்குழுவினர் மூவர் இவரை வெளியில் அழைத்து துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேணல் ஸ்ரன்லியின் தாயாராவார். இ…
-
- 11 replies
- 4.3k views
-
-
வன்னியில் நீண்ட காலத்துக்கு பாடசாலைகளைத் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். வன்னி மீது சீறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால்,வன்னியில் உள்ள பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை எற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். படை நடவடிக்கையால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/tamileelam/vann...2008-08-04.html
-
- 0 replies
- 554 views
-
-
விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளார். வன்னி நிலைமை குறித்து அவர் பி.பி.சி.க்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்......... நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் இன்று வன்னி மக்களுக்கும் எமக்கும் இல்லை. இருப்பினும் கடிதம் மூலம் சிலர் தமது துன்பங்களை எழுதி அனுப்பியுள்ளனர். தாங்கள் இடம்பெயர்ந்து தங்குவதற்கான இடங்களை தேடிய வேளையில் கூட ஆழ ஊடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை மேற்கொள்வதால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபடுகின்ற அரச ஊழியர்கள் கூ…
-
- 13 replies
- 3.8k views
-
-
புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம் [வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 09:57 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நாச்சிக்குடா மற்றும் வன்னேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்களை திசை திருப்புவதற்காகவும் முல்லைத்தீவில் படகு தாக்கப்பட்டது எனும் பொய்ப்பிரச்சாரத்தில் சிறிலங்கா வான்படை ஈ…
-
- 1 reply
- 1.5k views
-
-
வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களு
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபாகரனையும் யுத்தத்தையும் காட்டி அரசு மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது -ஐ.தே.க. குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 9/4/2008 9:28:20 AM - காலங்கடந்த இரத்தப் பரிமாற்று சுத்திகரிப்பு உறைகள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைகளை மூடி மறைப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் சுகாதார அமைச்சரும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா முயற்சி செய்து வருகிறார். பிரபாகரனையும், யுத்தத்தையும் காட்டி அரசாங்கம் மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது என்று ஐ.தே. கட்சி குற்றம் சாட்டுகிறது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே. கட்சி எம்.பி டாக்டர் ஜயலத் ஜயவர்தன இக்குற்றச்சாட்டை ச…
-
- 0 replies
- 760 views
-
-
2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட படையினரின் 29 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றும்…
-
- 12 replies
- 5.4k views
- 1 follower
-
-
மணலாறு சிலோன் தியேட்டர் பகுதி ஊடாக சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னி களமுனைகளில் கைப்பற்றப்பட்ட சிறீலங்கா படையினரது 19 உடலங்களை மக்கள் தற்பொழுது பார்வையிட்டு வருவதாக, எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற மோதல்களில் நாச்சிக்குடா, மற்றும் வன்னேரிக்குளம் 8ஆம் கட்டை பிரதேசங்களில் இந்த உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இன்று அல்லது நாளை இந்த உடலங்கள் செஞ்சிலுவை அனைத்துலக சங்கம் ஊடாக சிறீலங்கா படையினரிடம் கையளிப்படவுள்ளன. கிளிநொச்சி நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் மொத்தம் 75 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 100 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. படங்களை பார்வைய…
-
- 11 replies
- 3.5k views
-
-
கிளிநொச்சி நாச்சிக்குடாவிலும், வன்னேரியிலும் 75 படையினர் கொல்லப்பட்டு, மேலும் 101 படையினர் காயமடைந்துள்ள நிலையில், சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாவிற்குச் சென்றுள்ளார். வன்னக்கான சிறீலங்கா படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பிராந்தியத் தளபதிகள் அனைவரும் களமுனை நிலவரம் தொடர்பாக இதன்போது விளக்கியுள்ளனர். வன்னியில் தற்பொழுது விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலைச் சந்தித்துவரும் அனைத்துப் படைப் பிரிவுகளின் தளபதிகளும் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். படங்களை பார்க்க....... http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 4 replies
- 2.9k views
-
-
வன்னியில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பான களநிலைவரத்தை அறிந்துகொள்வதற்காக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, நேற்று செவ்வாய்க்கிழமை வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். வன்னியின் பிந்திய நிலைவரங்கள் குறித்துக் கேட்டறிந்துகொண்ட அவர், இராணுவத் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்படாதவகையில் எதிரிகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தியிருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், வன்னியில் இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் திருப்தி வெளியிட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/srilanka/sarath...2008-09-03.…
-
- 0 replies
- 1.9k views
-
-
மனிதாபிமான உதவிகளை வழங்கும் அரசின் முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு - ஐ.நா. அலுவலகம் அறிக்கை வீரகேசரி நாளேடு 9/3/2008 7:35:00 PM - வன்னியில் தங்கியிருப்போருக்கும் வன்னியிலிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னிப் பிராந்திய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுதந்திரமாக நகர்வதற்கு வழிவகுக்கும் நோக்கில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலை இலங்கைக்கான…
-
- 0 replies
- 770 views
-
-
அம்பாறை உடும்பன்குள வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 852 views
-
-
கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் தமிழர்கள்தனித்து இலக்குவைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கும் அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பயங்கரவாதத் தாக்குதல்களாலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது ஒன்றும் ரோஜா படுக்கையல்ல. சில சிக்கல்களுக்கும் முகம்கொடுக்கவேண்டியிருக்கு
-
- 0 replies
- 732 views
-