ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கடந்த ஏப்ரல் மாதம் மடுத் திருத்தலப் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்ததை அடுத்து மாதா திருச்சொரூபம் தேவன்பிட்டிப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாதாவின் திருச்சொரூபம் ஓமந்தை சாவடி ஊடாக வவுனியா கொண்டு வரப்பட்டுள்ளது. வவுனியாவுக்கு எடுத்து வரப்பட்ட மாதாவின் திருச்சொரூபம் மன்னார் மறை மாவட்ட ஆயரின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. படையினர் அனுமதித்தால் மடுத் திருத்தலத்திற்கு மாதா சிலையை கொண்டு செல்ல முடியும் என ஆயர் இல்லம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 725 views
-
-
கொழும்பு ஹொறணையில் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் இன்று காலை 10:30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மூனகம ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தப் பெண் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனவும், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், சிறீலங்கா காவல்துறையினர் கூறி வருகின்றனர். கொழும்பில் கைது செய்யப்படும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்கள் என சிறீலங்கா காவல்துறையினர் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/colombo-2008-07-23.html
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 543 views
-
-
மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாண களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து குரல்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டேவிட் க்ளேட்ஸ்டோன், ஆனால் மஹிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற பிரித்தானிய இராஜதந்திரியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டேவிட் க்ளேட்ஸ்டோன், இலங்கையில் தான் பணியாற்றிய காலப்பகுதி தொடர்பாக எழுதிக் கொண்டிருக்கும் நூல் குறித்து பி.பி.சியின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் பிரித்தான…
-
- 1 reply
- 848 views
-
-
தமிழர் தேசத்தின் பிரச்சினையும் - நண்பர்கள், எதிரிகள் குறித்த விவாதங்களும் -தாரகா- நமது ஊடகச் சூழலில் சமீப காலமாக இந்தியாவின் தலையீடுகள் குறித்த ஆய்வுகளும் பத்தி எழுத்துக்களும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான எழுத்துக்கள் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அதில் ஒருவகை, இனியாவது இந்தியா ஈழத் தமிழர் பிரச்சினையில் காத்திரமான (சாதகமாக) பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று கூறும் வேண்டுகோள் பாணியிலான எழுத்துக்களாக இருக்க, மற்றையவை இலங்கை அரசியலில் தலையீடு செய்துவரும் அனைத்து அன்னிய சக்திகளையும் விட இந்தியாவே மிகவும் மோசமான முறையில் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது என்று வாதிடும் பாணியிலான எழுத்துக்களாகவும…
-
- 0 replies
- 576 views
-
-
மட்டக்களப்பு காத்தன்குடி காவற்துறைப் பிரிவில் இன்று காலை இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையில் சூட்டுக் காயங்களுடன் பூநொச்சி முனைக் கிராமத்தில் காணப்பட்ட சடலம் குறித்து பிரதேச மக்கள் வழங்கிய தகவல்ன் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இனம் தெரியாதவர்களால் சுடப்பட்ட இந்த யுவதி 18 வயது மதிக்கத் தக்கவர் எனவும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 722 views
-
-
இருதமிழ் தொழிலாளர்கள் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார்கள் புதன், 23 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கொழும்பு தெகிவளை காலிவீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணியாற்றும் இரு தமிழ் பணியாளர்கள் காவல்துறையினரது உடையில் சென்றவர்களால் கடந்த திங்கட்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வெள்ளை சிற்றூர்தியில் சென்ற இவர்கள் பலவந்தமாக முத்துக்குமார் செல்வகுமார், பழனியாண்டி சண்முகராசா ஆகியோரையே கடத்திச் சென்றுள்ளதாக கடைஉரிமையாளரால் தெகிவளை காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=2306
-
- 0 replies
- 535 views
-
-
தமிழகத்தில் புலிகள் செயற்பாடுகள் மீது மேலும் நெருக்கடி Wednesday, 23 July 2008 தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்பரப்பில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழக க்யூ பிரிவினர் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களுடன் 5 சக்தி வாய்ந்த யமஹா ரக மோட்டார் என்ஜின்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்கேத்தின் பேரில் மூன்று பேரை தமிழக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். http://www.ajeevan.ch/content/view/4386/1/
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்-இரா.சம்பந்தன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது தனியாகப் பிரிந்துசென்று சுயநிர்ணய அடிப்படையில் செயற்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். விரிவு » http://www.tamilseythi.com/tamileelam/samp...2008-07-23.html தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை வழங்காது-சபை முதல்வர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை வழங்காது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால.டி.சில்வா இன்று பாராளுமன்றத்தில் ப…
-
- 0 replies
- 619 views
-
-
1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் வீரகேசரி நாளேடு 7/23/2008 9:30:23 AM - எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்…
-
- 0 replies
- 625 views
-
-
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...... 'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 14.07.2008 / நிருபர் எல்லாளன் சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் எமது மரபுவழித் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வன்கவர் செய்து எமது மக்களைத் துப்பாக்கி முனையில் அவ்வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், எமது கல்வி வளங்களை அழித்தல், 1956, 1958, 1965, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் நடந்தேறிய தமிழ…
-
- 0 replies
- 914 views
-
-
கிடைக்குமா கச்சத்தீவு? மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள், கச்சத்தீவு பிரச்னையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்னையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்னை எப்படி உருவானது? அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அப்போது அதை எதிர்க்க வில்லை என சொல்லப்படுவது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள…
-
- 0 replies
- 833 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பானது என்ன நோக்கத்தைக் கொண்டமைந்துள்ளது என்பது பற்றி எமக்குத் தெரியாது. உயிர் மற்றும் சொத்து அழிவுகளை விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சி புலிகளின் அறிவிப்பை வரவேற்கின்றது. இருப்பினும் இதனை ஏற்றுக் கொள்வதும் தவிர்ப்பதும் அரசாங்கத்தைப் பொறுத்த விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது மேற்படி யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து கேள்வியெழுப்பியபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைக் கூறினார். அவர்மேலும் கூறியதாவது, யுத்த அழிவுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தெளி…
-
- 0 replies
- 802 views
-
-
சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்தக் கொள்ளப்படும் என்றும்இ இலங்கை அந் நாடுகள் வரிசையில் இருந்து வெகு விரைவில் விரட்யடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சிவாஜிலங்கம் நேற்று பாராளுமன்றில் கூறினார். இந்த அரசு தமிழ் மக்களைக் கொலை செய்து கொண்டு தமிழர்களின் பாதுகாவலன் போல தன்னை சாவதேசத்திற்குக் காட்டிக் கொள்கிறது. பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுக்கும் அரசு உள்ள நாடு இது. என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிக் கொண்டுள்ளன. இலங்கையை ஒரு பயங்கரவாத நாடாக சர்வதேச நாடுகள் மிக விரைவில் அறிவிக்கும். அதே நேரம் எமது தமிழீழத்தையும் அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளும். தமிழர்களின் உரிமைகளை மீறுகின்ற இந்த இலங்கை சார்க் நாடுகளின் வரிசையில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழில் நேற்று இருவர் சுட்டுக்கொலை [புதன்கிழமை, 23 யூலை 2008, 07:58 மு.ப ஈழம்] [க.நித்தியா] யாழ். மாவட்டத்தில் உள்ள நெல்லியடியிலும், உரும்பிராயிலும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அடையாளம் தெரியாதோரால் மின்கல கடை உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நெல்லியடி-கொடிகாமம் வீதியில், கோவில் சந்தைக்கும் அரசடிச் சந்திக்கும் இடையில் உள்ள மின்கல கடை உரிமையாளரே சுட்டுக்கொல்லப்பட்டார். சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த ஞானேந்திரன் பார்த்தீபன் (வயது 34) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். நேற்று முற்பகல் 9:00 மணியளவில் தனது வர்த்தக நிலையைத்தை திறந்த…
-
- 0 replies
- 613 views
-
-
'உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் விரும்புகின்றறோம். இதற்கான புற நிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கிறோம். தமிழீழ தேசத்தினதும் தமிழ் மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து விட விரும்புகிறோம். இந்த நல்லெண்ண நடவடிக்கiயாக, சார்க மாநாடு நடைபெறும் ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்ககைகளற்ற அமைதி நாட்களாகக் காத்து ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தைக் கடைப்படித்;து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்." இவ்வாறு அறிவித்திருக்கின்றனர் புலிகள். நேற்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து புலிகள் வெளியிட்ட அறிக்கையிலேயே 'சார்க்' மாந…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பார்வையாளர் பகுதியில் இருந்தவேளை சபையில் சிவாஜிலிங்கம்-டக்ளஸ் வாய்ச்சண்டை [புதன்கிழமை, 23 யூலை 2008, 07:25 மு.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவுக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சென்றதுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்து அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர். அச்சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் சிறிலங்காப் படையின் துணைப் படைக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் நேற்று சார்க் மாநாட்டு…
-
- 0 replies
- 847 views
-
-
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீள்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைக்கு பொறுப்பாக சிறிலங்காவின் ஓய்வுபெற்ற மூத்த இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 567 views
-
-
வடக்கில் தோழ்வியடைந்து வரும் விடுதலைப் புலிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கும் அவர்களுக்கான விநியோகங்களைத் துண்டிப்பதற்கும் ஏற்ற வகையில் வட பகுதி கடற்பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறீலங்கா கடற்படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத
-
- 1 reply
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் 7/22/2008 11:37:52 PM - விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து ஓமநதை சோதனைச்சாவடி ஊடாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மடுக்கோவில் பிரதேசத்தை இராணுவம் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்கு முன்னர், அங்கிருந்து மடுமாதாவின் சொரூபம் கத்தோலிக்க குருமார்களினால் வன்னிப்பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களையடுத்து, அங்கிருந்த மடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
செங்கலடி வர்த்தகர் கொலை சம்பவம்: ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 9 பேர் கைது [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:21 பி.ப ஈழம்] [க.நித்தியா] மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்தினுள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கருதப்படும் தமிழ் வர்த்தகர் கொலை தொடர்பில் ஈ.பி.டி.பியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர் உட்பட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட தேவதாஸ் சுரேஷ்குமார் என்ற வர்த்தகர் காணாமல் போனமை தொடர்பாக அவரது தந்தை ஏறாவூர் காவல்துறை அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். பின்னர், கடத்திச்செல்லப்பட்ட நபரின் …
-
- 1 reply
- 620 views
-
-
புலிகளின் போர் நிறுத்தம் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் கிடைக்கவில்லை - ரோகித போகல்லாகம செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள போர்நிறுத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் விடுதலைப்புலிகள் அறிவித்த சார்க் மாநாடு குறித்த ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்புத் தொடர்பாக பல சூடான விவாதங்கள் நடைபெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள போர்நிறுத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை, இந்த யுத்த நிறுத்தம் தொடர்பில் நோர்வே அரசாங…
-
- 0 replies
- 639 views
-
-
பல்லின மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என புலிகள் கோரிக்கை - சிங்கள நாளேடு செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] நடைபெறவுள்ள சார்க் மாநாட்டினை முன்னிட்டு, சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பல்லின மக்கள் வாழும் சார்க் வலய நாடுகளில் இனத்துவ அடையாளங்களை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும், பல்லின சமூகங்களுக்கும் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பயங்கரவாத கிளர்ச்சிகளை தவிர்க்க முடியும், சார்க் மாநாட்டின் நோக்கம் முற்றிலும் பிழையானதொன்றெனவும், பிராந்திய பயங்கரவாதத்தை கட்டுப்…
-
- 0 replies
- 825 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிகாரங்களை கோராத போது ஏனையோர் அதிகாரங்களை கோரிநிற்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துளளது. அமைச்சர்கள் ராஜித சேனாரட்ன, திலான் பெரேரா, மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட்குரே, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் ரஞ்சித் நவரட்ன ஆகியோர் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோரி நாட்டிற்குள் தேசிய அமைப்பு ரீதியான கருத்தொன்றை முன்னெடுத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரசார செயலாளர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளில் மூலம் புலிகளை முழுமையான ஒழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அமைச்சர்களான இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையினால் தேசிய ஐக்கியம் சீர்குலையக் கூடும். சந்திரிக்கா அரசாங்கம் அப்போது மு…
-
- 1 reply
- 1.1k views
-