ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இலங்கை அரசாங்கம் அங்கு வாழும் தமிழர்களைக் கடந்த வருடங்களாக அடக்கி ஒடுக்கப்பார்க்கிறது. தமிழ் மக்களைப் பல்வேறு வகைகளிற் தடைகளை அமுல்படுத்தி அவர்களை வருத்துகிறது. பொருளாதாரத் தடைகளின் மூலம் நமது மக்களைப் பட்டினியால் சாகடிக்கப் பார்க்கிறது. மனித உரிமை மீறல்கள் எங்கள் மக்களை வதைக்கின்றன. 40,000 படையினரைத் தமிழர் தாயகப் பகுதிகளில் குவித்து அங்கு நாளாந்தம் மனிதப் படுகொலைகளை நடத்திவருகிறது. எனவே இன்று 40வது ஆண்டைப் பூர்த்தி செய்கின்ற தென்னாபிரிக்கத் தமிழர் கூட்டிணைப்புக் கழகம் தென்னாபிரிக்கா அரசிடம் எமது ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோளை முன் வைக்கவேண்டும். இலங்கை அரசின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டால் அந்நாட்ன் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவரும்படி நிர்ப்ப…
-
- 0 replies
- 536 views
-
-
'இலட்சியத்தால் ஒன்றுபட்டு, எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கி விடமுடியாது!"- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். சிங்கள பௌத்தப் பேரினவாதம் மீண்டும் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையைத் தமிழர் தாயகத்தில் ஆரம்பித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும்போதே, அதுகுறித்து எந்தவித அக்கறையும் கொள்ளாது, தமிழர் தாயகப் பகுதிகளை வன்கவர்ந்து கொண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களை வஞ்சகமாகக் கொன்றும், பகிரங்கமாகவே மனித உரிமை மீறல்களைப் புரிந்து கொண்டும் வந்திருந்த மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் தன்னிச்சையாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்த பின்னர், தனது அரச பயங்கரவாதத்தை மிக உச்ச நில…
-
- 0 replies
- 729 views
-
-
கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இளைஞர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பில் கனடா அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கனடாவில் சுகாதாரம் கட்டத்துறை, பேக்கரி போன்றவற்றுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் இலங்கையர்களை அந்த தொழிலுக்காக இணைப்பத்கு அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனடா தொழிலுக்காக விரைவில் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 13 replies
- 3.1k views
-
-
* புதிய ஜனநாயகக்கட்சி அறிக்கை யுத்தத்தின் பெயரால் ஊழல் , மோசடி , அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் அதிகாரத்திலிருப்பவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் குறுக்கு வழிகளால் பெரும் செல்வந்தர்களாகியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. மறுபுறத்தே தெற்கில் வாழும் சாதாரண தொழிலாளர் விவசாயிகளின் பிள்ளைகளும் வடக்கு, கிழக்கிலுள்ள சாதாரண குடிமக்களது பிள்ளைகளும் யுத்தப் பீரங்கிக்கு தீனியாகி மாண்டு வருவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சியின் 30 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அதன் மத்திய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அந்நிய பல்தேசியக் கம்பனிகள் நாட்டின் வளங்களை கொள்ளையிட்டுச்…
-
- 0 replies
- 751 views
-
-
இராணுவத்தீர்வுக்கான செலவீனமாக தற்போது நாளொன்றுக்கு 61 கோடியே 20 இலட்சம் ரூபா இலங்கையில் செலவிடப்படுவதாக கூறியிருக்கும் ஐ.தே.க.கொழும்பு மாவட்ட எம்.பி.ரவி கருணாநாயக்கா நாட்டுக்கு ஒட்டுமொத்த அனுகூலம் கிடைக்குமாக இருந்தால் இந்தத் தொகை ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று கூறியுள்ளார். பொருளாதார யுத்தத்தில் வெற்றிபெற்றால் சகல யுத்தங்களிலும் வெற்றி பெற முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். எகிப்து, பங்களாதேஷ் நாடுகளிலுள்ள வர்த்தக சம்மேளனங்கள் அரசாங்கத்துக்காக தீர்மானம் எடுப்பதாகச் சுட்டிக்காட்டிய ரவி கருணாநாயக்கா, உள்ளூர் சம்மேளனங்கள் மத்தியில் ஐக்கியம் குறைவாக இருப்பதாகவும் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார் அரசாங்கம் 51000 கோடி ரூபா வட்ட…
-
- 0 replies
- 891 views
-
-
லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ பலியான சம்பவத்தில் படுகாயமடைந்து தனது இரு கால்களையும் இழந்த உபாலி விஜயக்கோன் என்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர், மேஜர் ஜெனரல் ஜானக பெரெராவுக்கு எதிராக வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
(2ம் இணைப்பு)துணுக்காயில் ஆழ ஊடுருவும் அணியினரால் மாணவன் சுட்டுப்படுகொலை [வியாழக்கிழமை, 03 யூலை 2008, 05:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் வேட்டைக்குச் சென்ற மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் துணுக்காய் ஐயன்குளப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:20 மணியளவில் இடம்பெற்றது. இதில் வேட்டைக்குச் சென்ற மல்லாவி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவனான இராஜகோபால் ஜீவிதன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். புதினம்
-
- 0 replies
- 659 views
-
-
ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வீரகேசரி நாளேடு 7/4/2008 8:49:22 AM - உலக உணவுத் திட்டம் ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முதல் தடவையாக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. வின் உலக உணவுத் திட்டம் (WFP) தனது பணிகளுக்காக ஐ.நா.வின் மனிதாபிமான விமான சேவை விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாமதமின்றி உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஐ.நா. விமானங்களை பயன்படுத்த உலக உணவுத் திட்டம் அனுமதியை கோரியிருந்ததாகவும் அதற்கு அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 943 views
-
-
Posted on : 2008-07-04 தமிழ் மக்களை "விடுவித்து' சிறை வைக்கும் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப் பிரதேசத்தையும் அவர்களின் பிடியிலிருந்து விடுவித்து, அரசப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையி லான இந்த அரசு மிகவும் முனைப்பாகவும் தீவிரமாகவும் உறுதியாகவும் உள்ளது. இதன் காரணமாக வன்னி மீது பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட அது தயாராகி வருவதும் வெளிப்படை. ஆனால் தமது இந்த நடவடிக்கை யுத்தமே அல்ல என்று அரசு த் தலைவர் சாதிக்கின்றார். ""அப்பாவித் தமிழர்களைப் புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கையே இது. சிலருக்கு இது யுத்தம் போலத் தெரிகின்றது. '' என்று தமது படைகள…
-
- 0 replies
- 575 views
-
-
பிரித்தானியாவில் இருந்து “கருணா” அந்தனி என்ற பெயரில் நாடு கடத்தப்பட்டமை குறித்து தேசிய பாதுகாப்பு மையத்திற்குத் தெரியாதாம் ஜ வெள்ளிக்கிழமைஇ 04 யூலை 2008இ 01:19.51 யுஆ புஆவு +05:30 ஸ பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டஇதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா நேற்றுக் கொழும்பை வந்தடைந்தபோது மாற்றுப் பெயர் ஒன்றிலேயே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஇ அந்தனி என்ற பெயரிலேயே இலங்கைக்கு வந்துள்ளார். யு எல் 504 என்ற இலக்கத்தைக்கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து வரப்பட்ட கருணாஇ இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு மத்தியில் கருணா கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். இந…
-
- 2 replies
- 1.3k views
-
-
(2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்- 2 உடலங்களும் படைப்பொருட்களும் மீட்பு [வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 உடலங்களும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியுள்ளதாவது: மன்னார் - சன்னார் பகுதிக்கும் கொடிகட்டிய ஆற்றுப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி ஊடாக நேற்று வியாழக்கிழமை…
-
- 0 replies
- 790 views
-
-
தேசவிரோதி கருணாவை பிரித்தானியா நாடு கடத்தியமை தொடர்பாகச் சர்வதேச மன்னிப்புச் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கருணாவின் மீது போர்க் குற்றத்தைச் சுமத்தக்கிடைத்த வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. கருணாவின் மீது சித்திரவதை, சட்டவிரோத நிதிசேகரிப்பு, சிறுவர்களைப் படைகளுக்கு சேர்த்தல், சித்திரவதை ஆகியவை தொடர்பாகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்படவேண்டும் எனத் தாம் கடந்த மேமாதம் 14 ஆம் திகதி மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில், பிரித்தானிய மெட்ரோபொலிட்டன் காவல்துறையினருக்கு கடிதம் எழுதிய போதும் அதற்கு பதில்கள் கிடைக்கவில்லை எனச் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கருணாவின் மீது குற்றங்களைச் சுமத்தத…
-
- 0 replies
- 747 views
-
-
கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள???, வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை பேணக் கிழக்கு மாகாணசபைக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனத் தமது கட்சி, இலங்கை அரசாங்கத்திடம் கோரவிருப்பதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரான்சிலிருந்து சென்றுள்ள பிள்ளாயானின் ஆலோசகராக செயற்படும் ஞானம் என்பவரும் அவுஸ்ரேலியாவிலிருந்து சென்றுள்ள பிள்ளாயானின் பிரத்தியேக செயலாளராக செயற்படும் ரகு என்ற கோகுலனும் சேர்ந்து சில வியாபார முதலீடுகளையும், நிலையான சொத்துக்கள் வாங்குவதற்கும் என பிள்ளாயானிடம் பணம் பெற்றுள்ளார்கள் என்று தெரிகிறது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பிரான்ஸ் வந்து லண்டன் சென்றதாகக் கூறப்படுவதற்கும் கருணாவின் நிதி பரிமாற்றங்களுடன…
-
- 0 replies
- 724 views
-
-
"முதலமைச்சர் பதவிக்காக மாகாணத் தேர்தலில் போட்டியிடுவதால் என்னையும், என் குடும்பத்தாரையும் சிலர் அச்சுறுத்துகின்றனர். ஆனால், இவற்றுக்கு நான் பயந்தவனல்ல. பல வருடங்களாக விடுதலைப் புலிகளுடன் போரிட்டவன் நான். இந்த யுத்த காலத்தில் புலிகள் கூட என் மனைவியையோ, பிள்ளைகளையோ அச்சுறுத்தவில்லை. ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றின் வேட்பாளராக நிற்க முயற்சிக்கும் போது எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்கும் ஆரம்ப முயற்சியாக இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.'' இவ்வாறு வடமத்திய மாகாண சபைக்காக ஐ.தே.க. சார்பில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார். வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை…
-
- 0 replies
- 951 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போராளிகளுக்கு ஏற்படுத்திய எழுச்சி, புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் எதிர்நோக்கும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது ஆகியன தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (01.07.08) தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி வழங்கிய நேர்காணல்(02.07.08) http://www.tamilnaatham.com/interviews20080213.html
-
- 0 replies
- 918 views
-
-
தேர்தல் நடத்தப்படவுள்ள வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் குழுவினர் 15 முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 15 முகாம்களின் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த 500 பேர் ஆயுதங்களை கொண்டுள்ளதாகவும் சேனபுர என்ற இடத்தில் உள்ள முகாமில் மாத்திரம் ஆயுதம்தாங்கிய 150 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த கிழக்கு மாகாண தேர்தலின் போது, பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் தமிழ் கிராமங்களுக்குச் சென்று பல்வேறு அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதுடன் தேர்தலுக்கு பின்னர் முஸ்லீம் பிரதேச மக்களை தாக்கியதுடன் முஸ்லீம் பிரதேச வர்த்தகர்கள் உட்பட பலரை கொலை செய்துள்ளனர். இதன் காரணமாக மோதல்கள் நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் ஊரடங்குச் சட்டத்தை …
-
- 0 replies
- 892 views
-
-
மாங்குளம் நகருக்கு அப்பாலுள்ள மல்லாவி, துணுக்காய் பகுதிகளில் இடம்பெறும் எறிகணைத் தாக்குதல்களால் பலர் இடம்பெயர்ந்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் எறிகணைத் தாக்குதல்களால் பலர் இடம்பெயர்ந்திருப்பதுடன், அந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உடனடியாக இடம்பெயரும் அச்சம் தோன்றியிருப்பதாகவும் எமில்டா சுகுமார், பி.பி.சி.க்குக் கூறினார். துணுக்காய் பிரதேச செயலாளர் அலுவலகத்தை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறும் எறிகணைத் தாக்குதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் சென்றிருப்பதாகவும், குறிப்பாக கிளிநொச்சி, மாங்குளம், முறிகண்டி ஆகிய பகுதிகளை…
-
- 0 replies
- 730 views
-
-
ஏறாவூரில் கிளைமோர் தாக்குதல் : மூன்று காவல்துறை , இரு பொதுமக்கள் காயம் வெள்ளி, 04 ஜுலை 2008 [நிருபர் வி.சிறீதரன்] வியாழக்கிழமை மாலை 8.15 மணியளவில் மட்டக்களப்பு புகையிரதநிலையத்தில் கிளைமோர் வெடித்துள்ளது. இதில் மூன்று காவல்துறையினரும் இருபொதுமக்களும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதம் இரவு 7.30 மணிக்கு தொடரூந்து நிலையத்தை விட்டகன்றுள்ளது. இதன்போது செல்வகுமார் 25, சாருரூவன் 26, ஆகிய தமிழ் காவல்துறையினரும் ஒரு சிங்கள காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமக்களில் ஒருபொதுமகனும் உள்ளடங்குவதாகவும் அவர் 16 அகவையுடைய அசார் எனவும் காயமடைந்த மற்றய பொதுமகன் 30 அகவையுடைய அப்துல் மஜீட் எனவும் தெரியவருகிறது. காயமடைந்தவ…
-
- 2 replies
- 911 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் ர்வதே மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. மீண்டும் முழு இலங்கைத் தீவையுமே இருண்ட யுகத்துக்குள் தள்ளும் ர்வாதிகாரம் - எதேச்ாதிகாரம் - ஆட்சிப்பீடத்தில் ஸ்திரப்பட்டு வருவதையே ஜனநாயக தந்திரங்களுக்கும், ஊடக உரிமைகளுக்கும் எதிரான அராஜகங்கள் கட்டியம் கூறி உறுதிப்படுத்தி வருகின்றன. எண்பதுகளின் கடைசியிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இத்தகைய ஒரு கொடூரத்துக்குள் - அந்தகாரத்துக்குள் - தேம் மூழ்கடிக்கப்பட்டபோது, நாட்டையும் மக்களையும் அந்த அடக்குமுறை அராஜகத்திலிருந்து மீட்பதற்குக் குரல் எழுப்பியவர்களுள் முக்கியமான ஒருவரின் கைகளில் நாட்டின் நிறைவேற்றதிகாரம் இப்போது வீழ்ந்துள்ள காலகட்டத…
-
- 0 replies
- 7k views
-
-
ராமேஸ்வரம் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதாக கூறி 270 விசைப் படகுகளையும்இ அதில் இருந்த 1080 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து கொண்டு சென்றதையடுத்து ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 270 படகுகளில் 1080 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். பிற்பகல் 3 மணியளவில் அவர்கள் கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை 40 க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் படகுகளில் இறங்கி சோதனையிட்டனர். அப்போது பல மீனவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அனைத்துப் படகுகளையும் துப்பாக்கி முனையில், தலைமன்னாருக்கு கடற்படையினர் கொண…
-
- 1 reply
- 942 views
-
-
ஆள் கடத்தும் வெள்ளை வான்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாம்! கதை விடுகிறார் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கொழும்பில் ஆள் கடத்தல் நடவடிக் கைகளுக்குப் பயன்படுத்தப்படும் போலி இயக்கத் தகடுகளுடனான வெள்ளை வான்களைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகக் கடினம் என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இந்த வெள்ளைவான்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்றும் கொழும்பில் வெள்ளைவான்கள் திரி வதால் இங்கு நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு எந்தப் பாதுகாப்புப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கை யிலேயே அமைச்சர் ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடந்த வாரம் இரவு வேளையில் வீதியில் நடந்து சென்ற வேளை மலேசிய தமிழ் பேசிய இனம் தெரியாத நபர்கள் அவ்விருவரையும் தாக்கி தகாத வார்த்தையால் பேசிய படி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துக்கூறிய முஸ்லிம் மாணவன் ஒருவர் நாங்கள் இரவு 8மணிக்கு மேல் வெளியே போவதை தவிர்க்கிறோம் ஆனால் இந்த இருவரும் சீன பெண்களை விட கவர்ச்சியான உடை அணிந்து இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதாகவும் இது குறித்து அவர்களிடம் கூறியும் புரிந்து கொள்ள வில்லை. இனியாவது திருந்தினால் சரி என்றார். மலேசியாவில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களால் பல வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.; இலங்கையில் கற்புக்கு உத்தரவாதம் இல…
-
- 4 replies
- 1.5k views
-
-
கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் ராசையா இளந்திரையனை கோடிட்டு வெளியிட்டுள்ளது. கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் விடயம் என ராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் படையினர் கைப்பற்றிய இடங்களை விரைவில் மீண்டும் கைபற்றுவதற்கு உதவிப்படைகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையி;ல் இலங்கை வான்படையினர் ஓமந்தையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சாவடிக்கு அருகில் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதன் காரணமாக, சர்வதேச ச…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்– விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனவும், இதற்கான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சொத்து சேர்க்க முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து , ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினர் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருவதாக,விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாட்டால் ஈழத்தமிழர்கள் மன உழைச்…
-
- 0 replies
- 855 views
-