ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143608 topics in this forum
-
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் ர்வதே மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. மீண்டும் முழு இலங்கைத் தீவையுமே இருண்ட யுகத்துக்குள் தள்ளும் ர்வாதிகாரம் - எதேச்ாதிகாரம் - ஆட்சிப்பீடத்தில் ஸ்திரப்பட்டு வருவதையே ஜனநாயக தந்திரங்களுக்கும், ஊடக உரிமைகளுக்கும் எதிரான அராஜகங்கள் கட்டியம் கூறி உறுதிப்படுத்தி வருகின்றன. எண்பதுகளின் கடைசியிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இத்தகைய ஒரு கொடூரத்துக்குள் - அந்தகாரத்துக்குள் - தேம் மூழ்கடிக்கப்பட்டபோது, நாட்டையும் மக்களையும் அந்த அடக்குமுறை அராஜகத்திலிருந்து மீட்பதற்குக் குரல் எழுப்பியவர்களுள் முக்கியமான ஒருவரின் கைகளில் நாட்டின் நிறைவேற்றதிகாரம் இப்போது வீழ்ந்துள்ள காலகட்டத…
-
- 0 replies
- 7.1k views
-
-
லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ பலியான சம்பவத்தில் படுகாயமடைந்து தனது இரு கால்களையும் இழந்த உபாலி விஜயக்கோன் என்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர், மேஜர் ஜெனரல் ஜானக பெரெராவுக்கு எதிராக வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆள் கடத்தும் வெள்ளை வான்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாம்! கதை விடுகிறார் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கொழும்பில் ஆள் கடத்தல் நடவடிக் கைகளுக்குப் பயன்படுத்தப்படும் போலி இயக்கத் தகடுகளுடனான வெள்ளை வான்களைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகக் கடினம் என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இந்த வெள்ளைவான்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்றும் கொழும்பில் வெள்ளைவான்கள் திரி வதால் இங்கு நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு எந்தப் பாதுகாப்புப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கை யிலேயே அமைச்சர் ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடபோர் அரங்கில் தாம் சரித்திர புகழ்பெற்ற சாதனைகளை நிகழ்த்தி வருவதாக சிறிலங்கா அரசு போர்முரசறைந்து வரும் வேளையில் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியான தெளிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் ஈட்டிய பாரிய வெற்றிகளுக்கெல்லாம் பட்டாசு கொளுத்திப் பூரித்த தமிழினம், அவர்கள் தாக்குதல்களையே ஆரம்பிக்காத இக்காலப்பகுதியில் புலிகளின் மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கிழக்கு போய்விட்டதாம், மன்னார் போய்விட்டதாம். பால்ராஜ் இல்லாததால் மணலாறும் போகப்போகிறதாம் என்றெல்லாம் அரசியல் அரட்டை பேசும் மக்கள், சிறிலங்கா அரச ஊடகங்களின் போர் தொடர்பான செய்திகளின் அடிப்படையிலேயே தமது முடிவுகளை எடுத்…
-
- 20 replies
- 3.7k views
-
-
ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்– விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனவும், இதற்கான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சொத்து சேர்க்க முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து , ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினர் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருவதாக,விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாட்டால் ஈழத்தமிழர்கள் மன உழைச்…
-
- 0 replies
- 861 views
-
-
கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இளைஞர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பில் கனடா அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கனடாவில் சுகாதாரம் கட்டத்துறை, பேக்கரி போன்றவற்றுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் இலங்கையர்களை அந்த தொழிலுக்காக இணைப்பத்கு அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனடா தொழிலுக்காக விரைவில் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 13 replies
- 3.1k views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்களை நலன்புரி நிலையங்கள் என்ற பேரில் தடுத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தின் செயலை நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 629 views
-
-
கிளிநொச்சியில் இன்று மணிக்கு கரும்புலி மாவீரர்களின் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சென்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் இவான் பெய்கன்பாம், சிறிலங்கா அரச தலைவர் உட்பட அரசின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 505 views
-
-
தேசவிரோதி கருணா இலண்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டான். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். Karuna returns Former TMVP Leader Karuna Amman today returned to the country after serving a prison sentence in Britain, a TMVP official said. டெய்லிமிரர் ஆங்கிலநாளேடு
-
- 28 replies
- 4.2k views
- 1 follower
-
-
சிறிய தேர்தல்களை நடத்தி மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்தாது, முடிந்தால் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். தேவையற்ற தருணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றி பெற்று, இந்த இரண்டு மாகாணங்களில் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை வெளிகாட்டுவதே அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இந்த தேர்தலுக்கு 40 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.…
-
- 0 replies
- 486 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உடலில் தொழுநோய் ஏற்பட்டுள்ளதால், அவர் எதனையும் உணராது இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாட்டு மக்கள் குறித்து அவர் எதனையும் அறியாது இருப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அசௌகரித்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளதை நினைவூட்டிய ரங்கே பண்டரா, அவ்வாறாயின் அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினிக்குள் புகுந்து, ஊடகவியலாளர்களை தாக்கியது, அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 593 views
-
-
நெருக்கடியான சூழலிலும் மாணவர்களின் கல்வி பெரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பேரவாக்கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 560 views
-
-
சத்தியதின் சுவர்கள் கரும்புலிகள் நாள்
-
- 2 replies
- 817 views
-
-
துணுக்காய்: கிளைமோர் தாக்குதலில் வேட்டைக்குச் சென்றவர் பலி [வியாழக்கிழமை, 03 யூலை 2008, 05:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் வேட்டைக்குச் சென்ற ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதல் துணுக்காய் ஐயன்கன்குளப்பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் வேட்டைக்குச் சென்ற இராஜகோபால் ஜீவிதன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். புதினம்
-
- 0 replies
- 487 views
-
-
புலம் பெயர்ந்து வாழ் நிலையில் தமிழ் மக்களாகிய நாம் பல விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது. குழப்ப நிலையில் உள்ள நாம் பல விடயங்களை தவறாக உணர்ந்துள்ளோம். இந்திய அரசு வடக்கையும் கிழக்கையும் இணைத்தே அரசாள வேண்டுமென்று விரும்புகின்றார்கள். ஆனாலோ, இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் பி¡¢த்து ஒரு 21ம் நூற்றாண்டு சா¢த்திரத்தைப் படைத்திருக்கின்றது. இதன் குறிக்கோள் என்ன? கிழக்கில் உள்ள தமிழ் மக்களை இன ¡£தியாக சிங்கள இனத்தினுள்ளே உறிஞ்சி எடுப்பதுதான். அது மாத்திரமல்ல; குடி ஏற்றுவதன் மூலம் கிழக்கை சிங்கள மயமாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள். ஒரு சில கால கட்டத்தில் கிழக்கே வாழ் தமிழர் தங்களுடைய பெயா¢ல் ஒரு இரு எழுத்துக்களை நீக்கி விட்டு தாங்களும் சிங்கள மக்கள் என்று கூறத் தயங…
-
- 0 replies
- 823 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்கான ஜீ.எஸ்.பியினை மேலும் நீடிக்க வேண்டாமென பல தரப்பட்ட குழுக்களிடமிருந்தும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் அதிகளவில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
-
- 16 replies
- 2k views
-
-
ராமேஸ்வரம் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதாக கூறி 270 விசைப் படகுகளையும்இ அதில் இருந்த 1080 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து கொண்டு சென்றதையடுத்து ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 270 படகுகளில் 1080 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். பிற்பகல் 3 மணியளவில் அவர்கள் கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை 40 க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் படகுகளில் இறங்கி சோதனையிட்டனர். அப்போது பல மீனவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அனைத்துப் படகுகளையும் துப்பாக்கி முனையில், தலைமன்னாருக்கு கடற்படையினர் கொண…
-
- 1 reply
- 947 views
-
-
ஊடகவியலாளர்கள் உட்பட சிலர் அரசியல் தஞ்சம்கோரி நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக தம்மீது தாமே தாக்குதல்கள் நடத்துவதாக அரசாங்கத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு விண்ணப்பித்திருக்கும் ஊடவியலாளர்கள் தொடர்பான பெயர்களும், விபரங்களும் அரசாங்கத்துக்குக் கிடைத்திருப்பதாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறியுள்ளார். 'நேஷன்' பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட பின்னரே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகவியலாளர்கள் கூறியமைக்குப் பதிலளித்த அமைச்சர், நொயரின் விடயம் அவ்வாறு இல்லையெனவும், வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக…
-
- 4 replies
- 891 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்களை நலன்புரி நிலையங்கள் என்ற பேரில் தடுத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தின் செயலை நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
பொதுமக்களுக்கு காவல்துறையினரால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு இணைப்பு குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையிலான காவல் துறை அதிகாரிகள் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தராதரம் பார்க்காது பாரபட்சமற்ற ரீதியில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சேவையாற்றுவதனை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், காவ…
-
- 0 replies
- 601 views
-
-
கச்சத்தீவுக் கடற்பகுதியில் நேற்று சுமார் 200 படகுகளில் உள்ள ஆயிரம் இந்திய மீனவர்கள், இலங்கைப்படையினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர். இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்தார்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறிது நேரத்தில் படகுகளும் மீனவர்களும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்வின் இணையம்
-
- 0 replies
- 912 views
-
-
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கக் கூடாது என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து க்யூ பிரிவு…
-
- 1 reply
- 853 views
-
-
இடம்பெயர்ந்து வரும் அப்பாவித் தமிழ் மக்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.வடக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 400க்கும் மேற்பட்ட சிவிலியன்களை அரசாங்கம் நியாயமற்ற ரீதியில் தடுத்து வைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 2008ம் ஆண்டு மார்ச் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இடம்பெயரும் மக்களை சமூக நலத்திட்டங்கள் என்ற போர்வையில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளது. இலங்கை இராணுவப்படையினர் குறித்த இடம்பெயர்ந்த மக்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நாளொன்றுக்கு 30 பேருக்க…
-
- 0 replies
- 555 views
-