ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
மட்டு மாவட்டத்தில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் என வர்ணிக்கப்படும் பிள்ளையானை ஆதரித்து இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மட்டு மாவட்டத்தில் உலங்குவானுர்தி மூலம் வீசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட பிள்ளையானை வெல்ல வைப்பதற்காக அரசு மும்மூரமாக பிரசாரப் பணியை மேற்கொண்டு வருகின்றனது. அரசு பெரும் பணச் செலவில் பிள்ளையான் படத்துடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கொழும்பிலிருந்து விஷேட உலங்குவானுர்தி மூலம் மட்டக்களப்புக்கு கொண்டு சென்று நேற்று முன்தினமும் நேற்றும் ஆகாயத்திலிருந்து மாவட்டம் முழுவதும வீசியுள்ளனர். எ…
-
- 2 replies
- 1.7k views
-
-
Posted on : 2008-05-08 தீவிர யுத்தத்துக்குக் கட்டியமே நாடாளுமன்ற இடைநிறுத்தம் இலங்கையின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற
-
- 0 replies
- 1k views
-
-
ரோகித பான் கீமூன் சந்திப்பு! வீரகேசரி இணையம் 5/8/2008 10:33:55 AM - போகொல்லாகம,ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் பான் கீமூனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இச்சந்திப்பு இருவருக்குமிடையில் நேற்று,நிவ்யோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய வட,கிழக்கு நிலவரங்கள் தொடர்பாகவும், இலங்கையில் ஐ.நாவின் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடபட்டதாகவும், அறிய முடிகிறது. ரோகித பான் கீமூன் சந்திப்பு
-
- 0 replies
- 760 views
-
-
கிழக்கு மாகாணசபைத்தேர்தலுக்காக 28 ஆயிரம் படையினர் [ புதன்கிழமை, 07 மே 2008, 05:46.57 PM GMT +05:30 ] கிழக்கு மாகாண சபைத்தேர்தல் பாதுகாப்புக்காக 28 ஆயிரம் துருப்புகள் பயன்படுத்தப்படவுள்ளன. அண்மைக் காலத்தில் தேர்தல் ஒன்றிற்காக கடமையில் அமர்த்தப்பட்டுள்ள அதிகூடிய பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை இதுவெனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு 28,000 பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன லக்பிமவிற்கு தெரிவித்துள்ளார்.இரகசிய பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த பாதுகாப்பு படையில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உதவிப் பொல…
-
- 0 replies
- 661 views
-
-
மனித உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை தவறிவிட்டது 08.05.2008 நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் மனிதஉரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற தவறியிருப்பதால் சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சிறிலங்காவிற்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. கடந்த இரண்டு வருடங…
-
- 0 replies
- 938 views
-
-
88ஆம் 89ஆம் ஆண்டுகளில் ஜே.வீ.பீயின் சக உறுப்பினர்களை படையினரிடம் காட்டி கொடுத்த மற்றுமொரு தலைவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் ஜே.வீ.பீயின் மருத்துவ பிரிவின் தலைவர் தம்மிக்க பத்திரண என ஜே.வீ.பீயின் நடுநிலை அணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தம்மிக்க பத்திரண என்ற இந்த வைத்தியரை ........................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6366.html
-
- 0 replies
- 1.3k views
-
-
அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஓகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைகுழுவினரால் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. -வீரகேசரி
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னாரில் படைக்காவி தகர்ப்பு! 9 படையினர் பலி! மேலும் பலர் படுகாயம் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இருந்து வட்டக்கண்டல் நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் உக்கிரமான வழி மறிப்பு தாக்குதலில் ஈடுபட்டு படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு பலத்த கனரக சூட்டாதரவுடன் முன்னேறிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து சிறீலங்காப் படையினர் டாங்கிகள் மற்றும் படைக்காவிகளையும் களமிறக்க முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். இதன் போது ஒரு படைக்காவி புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி தகர்ந்துள்ளது. இதில் பயணித்த 9 படையினர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். …
-
- 7 replies
- 1.6k views
-
-
குப்பை லொறிகளை கண்டு அதிர்ச்சியடைந்த ரணில் வீரகேசரி இணையம் 5/7/2008 10:55:35 PM - அதியுயர் பாதுகாப்பு வலயமான தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான குப்பை லொறிகளை கண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியடைந்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவ்விரு குப்பை லொறிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? என்று அங்கு காவல் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரித்த ரணில், அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரியாவிடின் தன்னிட…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிவனொளிப்பாத மலையில் சந்தேகத்துக்கு இடமான பொருள். கொத்மலையில் ஒருவர் சயனைட் உட்கொண்டு மரணம் Wednesday, 07 May 2008 மலையகத்தின் மஸ்கெலிய நல்லத்தண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ள சிவனொளிப்பாத மலையுச்சியில் காணப்பட்ட சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்ததாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பொதியில் வயர்களும் மின்கலங்களும் காணப்பட்டதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார். இந்த மலை சிவனொளிபாத மலை என்ற பெயரில் இந்துக்களின் புனித பிரதேசமாக பேணப்பட்டு வந்தது. சிவன் நடனமாடும் போது இமயமலையில் ஒரு காலையும் சிவனொளிப்பாத நிலையில் ஒரு காலையும் வைத்ததாகவும் அந்த காலின் அச்சு இன்னமும் இருப்பத…
-
- 0 replies
- 1.7k views
-
-
போர் வெறியூட்டலால் மயக்க நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள் [07 - May - 2008] வ.திருநாவுக்கரசு அண்மையில் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் அதிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடக்கிறது. அவ்வாறாயின் வாழ்க்கைச் செலவு விஷம்போல் உயர்ந்துசெல்வதன் காரணமாக திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட ஏழை எளிய மக்கள் கூட யுத்த வெறியூட்டப்பட்டதன் பயனாக எவ்வளவு தூரம் மயங்கிப்போயுள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. அதாவது யுத்தத்தில் விரைந்து வெற்றியீட்ட முடியும். அண்மையிலும் அதற்கு முந்திய காலகட்டங்களிலும், உதாரணமாக ம…
-
- 1 reply
- 939 views
-
-
சர்வாதிகார ஆட்சியை நோக்கி அரசாங்கம் செல்கின்றது: ரணில் குற்றச்சாட்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. அனைத்தையும் மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள். சர்வாதிகார ஆட்சியை நோக்கி அவர்கள் செல்கின்றார்கள் என்பதையே இவை அனைததும் புலப்படுத்துகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அரசாங்கத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றத்துக்குச் சென்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்குத் தெரிந்திருக்கவ…
-
- 1 reply
- 781 views
-
-
மாகாண தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மட்டக்களப்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் இன்னும் பத்து நிமிடங்கள் பறந்திருந்தால் வானிலேயே வெடித்து சிதறியிருக்கும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். விமானப்படை விமானி ஹெலிகொப்டரை எதுவித ஆபத்துமின்றி சாதூரியமாக தரையிறக்கியமையினால் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நானும் உயிருடன் இருக்கின்றோம் என்றும் அவர் சொன்னார். ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 784 views
-
-
பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதனை அடுத்து குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலம், காலம் தாழ்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராயும் குழு எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, ஜெனீவாவில் கூடவுள்ளது. அந்த கூட்டத்தின் போது சமர்ப்பிக்கக்கூடிய வகையில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்த வரைவுத்திட்ட ப…
-
- 0 replies
- 691 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்களுக்கு.............................. http://isoorya.blogspot.co…
-
- 4 replies
- 1.5k views
-
-
மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியிலிருந்து கவச ஊர்திகள் சகிதம் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 706 views
-
-
கிழக்கில் வாழும் 300-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் "கிழக்கின் விடியல்" என்ற போர்வையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 798 views
-
-
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகருத்திருக்கின்ற நிலையில், அரசாங்க செலவினங்களும் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் பொது மக்களின் பார்வை எவ்வாறு இருக்கிறது என்பது பற்றிய அறிக்கை ஒன்றினை எல்.எம்.டி சஞ்சிகை வெளியிட்டுள்ளது. " நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருக்கின்றபோதிலும், எல்லோரும் ஒரு விடயத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களின் சமூக, மத, நம்பிக்கைகள் எவ்வாறிருப்பினும், எம்மிடம் பேசிய 80 வீதமான மக்கள் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனும் கருத்தில் ஒன்றுபடுகின்றனர்" என எல்.எம்.டி சஞ்சிகையின் மே மாத இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவினம் ஏற்றுக்கொள்ளத்தக்…
-
- 1 reply
- 731 views
-
-
வீமல் வீரவன்ஸ தரப்பினர் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். இந்த மாநாட்டில் விமல் அணியை சேர்ந்த மேல் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பெல்லன, சபரகமுவ மாகாண சபையின் உறுப்பினர் பிரியஞ்சித் விதாரண ஆகியோர் ஜே.வீ.பீயின் மீது குற்றச்சாட்டுகiளை முன்வைத்ததை அடுத்து, ஊடக மாநாட்டில் குழம்பமான நிலையேற்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மெனராகலை மெதகம பிரதேச சபை உறுப்பினர் உமறு லெப்பே நியாஸ் இந்த ஊடக மாநாடு ஜே.வீ.பீக்கு எதிரான சூழ்ச்சி எனவும் மொனராகலை பிரதேச கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளக்கும் நோக்கில் தான் இங்கு அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தொண்டு அடிப்படையில், எதுவித பொருளாத…
-
- 1 reply
- 942 views
-
-
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2008 - பிரசுர நேரம் 16:43 ஜிஎம்டி செய்தியரங்கம் விஜயகாந்த் தமிழோசை இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த். புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரி…
-
- 29 replies
- 4.5k views
-
-
கிழக்கு தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 803 views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஆயுதங்களை கொண்டு இயக்கும் பிள்ளையான் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை தேர்தலுக்கு முன்னர் களையுமாறு கோரி ராஜகிரிய தேர்தல் திணைக்களத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று காலை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தற்போது ஜயவர்தனபுர கோடடை மாநகர சபையின், குப்பை காவி வண்டிகள் இரண்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், குப்பையும் கொட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
மியான்மாரிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி 06.05.2008 / நிருபர் எல்லாளன் மியான்மார் நாட்டிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. சூறாவளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு பேரிடர் நிகழ்ந்துள்ளதாகவும் உலகநாடுகளின் உதவி ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் மியான்மார் அறிவித்துள்ளநிலையில் சிறிலங்காவின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை மியான்மாரிலிருந்து வரவிருந்த அரிசிக்கப்பல்களை அவசரமாக எதிர்பார்த்திருந்த கொழும்பு அரசாங்கத்திற்கு அங்கே ஏற்பட்ட சூறாவளிப் பேரழிவுகள் ஒரு பின்னடைவை கொடுத்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மாரில் பேரழிவிற்குள்ளாகியுள்ள இடங்களுள் இரண்டு நெல் உற்பத்தியில் பிரதான மையங்களாகும். http://www.sank…
-
- 8 replies
- 1.8k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்க தெரவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 502 views
-