ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை தூதுவர்கள் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சர்வதேச சட்டங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிவிலக்கை அடுத்த வருடத்துக்கும் நீடிப்பதற்கு அவசியமான மனித உரிமை விடயங்கள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை இந்தக் குழு கண்காணிக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை தூதுவர்களான நெதர்லாந்தைச் சேர்ந்த அர்ஜன் ஹம்பேர்க், சுவீடனைச் சேர்ந்த நோர்லான்டர் மற்றும் ஸ்பெய்னைச் சேர்ந்த ஸ்கோபா ஆகியோர் அடங்கிய குழு ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்…
-
- 0 replies
- 1k views
-
-
தென்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவ மதகுருமார் கிளிநொச்சி சென்று மடு தேவாலயப் பகுதியை மோதல் இல்லாத புனித பிரதேசமாகப் பேணுமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து மடு மாதாவின் திருச்சொரூபம் தேவன்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இராணுவத்தினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றியுள்ள போதும் அங்கு காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு இணங்கியுள்ளனர். இந்த நிலையில், மடு தேவாலயப் பகுதியை புனித பிரதேசமாக மதிக்குமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுப்பதற்கு தென்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் கிளிநொச்சி செல்வதற்கு ஏற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2008-05-28 அப்பாவிகளை இலக்கு வைப்பது கண்டிக்கப்பட வேண்டியதே! ""பொதுமக்களை இலக்கு வைக்காதீர்கள். அப்பாவிகளை இலக்கு வைக்கக் கூடாது என்பதைப் பயங்கரவாதிகளுக்கு ஊடகங்களும் எடுத்துச் சொல்லவேண்டும்.'' இவ்வாறு பத்திரிகைகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஊடகவியலாளர்கள் குறிப்பாக ஊடகப் பொறுப்பாளர்கள் முன்னெடுக்கவேண்டிய முக்கிய பணி ஒன்றை நினைவூட்டியிருக்கின்றார் இலங்கைத் தேசத்தின் ஜனாதிபதி. சரி. இந்தப் பணியை முன்னெடுப்பதற்குப் பொறுப்பான ஊடகங்கள் இவ்வேலையை எப்படிச் செய்யப்போகின்றன என்பதே கேள்வி. அப்பணியைச் செய்வதற்கு ஊடகப் பொறுப்பாளர்களுக்கு சில வரைவிலக்கணங்கள் தெரிந்திருப்பது புரிந்திருப்பது அவசியமானது…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டமை, கிழக்கை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமே - புத்திஜீவிகள், கல்விமான்கள் அதிருப்தி ! May 27,2008 கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சு ஏனைய மாகாணங்களில் உள்ளதுபோல், முதலமைச்சரின் கீழ் கொண்டு வரப்படாது தனியான அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து புத்திஜீவிகளும் கல்விமான்களும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். இது கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ள புத்திஜீவிகள், இதற்கு முன்னோடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இம்மாகாணத்தில் மாகாண சபை உறுப்பி…
-
- 0 replies
- 869 views
-
-
தொழிற்றுறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் கோட்டாவை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் எதுவிதமான கோரிக்கையும் இதுவரை விடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன இணைப்பு மற்றும் தகவல்துறை தொடர்பான பிரதித் தலைவர் மாகொட் வெல்ட்ஸ்ஹோம், வெளிநாட்டு தொடர்பான ஆணையாளர் பெனீட்டா பொரோ மற்றும் வர்த்தக ஆணையாளர் பீட்டர் மெண்டெல்சன் ஆகியோரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில…
-
- 1 reply
- 970 views
-
-
தனித்தமிழ் இராச்சியம் என்ற கோரிக்கை தொடர்பாக வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - புருஸ் பீன் Tuesday, 27 May 2008 ஒரே இலங்கைக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்வுத் திட்டத்திற்கு 95 வீதமான தமிழர்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் கருத்து வெகுசன வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பீன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இயங்கும் தமிழர் அமைப்பின் சட்டத்தரணியான புருஸ் பீன் இந்த சவாலை விடுத்துள்ளார். இதன்படி, 5 வீதமான மக்களே பிரபாகரனுக்கு ஆதரவு வழங்குவதாகவும், இதனால் தனித்தமிழ் இராச்சியம் என்ற கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளக், சண்டே ஒப்சர்வர் பத்திரிக…
-
- 0 replies
- 882 views
-
-
ஜே.வி.பி.யின் 5ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருந்த கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க திடீரென தமிழில் பேசத் தொடங்கினார். இதன்போது சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுடன் நட்புறவுடன் பழக வேண்டும். இதன்?லமே இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனக் கூறினார். 5ஆவது தேசிய மாநாடு நடந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடத்தில் தமிழ் மொழியில் ஒருசில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டே சோமவங்ச அமரசிங்க தமிழ் மொழியில் பேசத்தொடங்கினார். அவர் தொடர்ந்தும் தமிழில் பேசுகையில் கூறியதாவது: அன்பார்ந்த தோழர்களே இனவாதம் இல்லாத ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏனென…
-
- 4 replies
- 1.7k views
-
-
கொழும்பு நகரின் கதிரேசன் வீதியில் நேற்று (மே27) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரவு 8.30 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனம்தெரியாத நபர்களால் சுடப்பட்டவர் பாலாஜி லொட்ஜ் உரிமையாளரான 56 வயதுடைய எஸ் முத்தையாபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வியாபார நிலையத்தின் முன்பாக நின்றுகொண்டிருந்த இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய வேளை 100 மீற்றருக்குட்பட்ட பகுதியில் காவற்துறை மற்றும் படையினர் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு பெற்றாவில் வீரமைலன் மண்டப உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் முஸ்லிம் மக்களை எனது குழுவினரே கடத்திச் சென்றனர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையான் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள பதற்றமான சூழ்நிலைகளைத் தொடர்ந்து அங்கு தமது பணிகளை இடைநிறுத்துவதற்கு அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் தீர்மானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐந்த சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஷாந்த ஹப்புவாராய்ச்சி உத்தரவிட்டுள்ளார். ஐந்து சந்தேகநபர்களான மாணிக்கம் தமிழினியன், ரட்ணம் ஜனகன், ஐயர் ராஜ்குமார், சிவராஜ் சிவராம் மற்றும் காளிமுத்து திருக்குமார் ஆகியோர் குறிப்பிட்ட காலத்துக்கு தடுப்புக்காவலில் தடுத்துவைக்கப்பட்டமையால் அவர்களை விடுவிக்குமாறு நேற்று திங்கட்கிழமை கொழும்பு நீதிமன்றம் சட்டமா அதிபருக்குப் பணிப்புரை விடுத்தது. சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சொலிசிட்ட ஜென்ரல், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளார். கதிர்காமரின் வீட்டைப் புகைப்…
-
- 0 replies
- 726 views
-
-
வீரகேசரி நாளேடு - இந்த ஆண்டின் தொடக்கம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரையான காலப் பகுதியில் புலிகள் மற்றும் இராணுவத்தினரது 189 சடலங்களை உரிய தரப்புக்களிடம் கையளித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவித்த ஐ.சி.ஆர். சி.யின் உயர் அதிகாரியொருவர் மோதலில் பலியான வீரர்களின் சடலங்களை கைப்பற்ற நேருமிடத்து அதனை உரிய தரப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜெனீவா சமவாயம் தெரிவிக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே ஐ.சி.ஆர்.சி. மோதலில் பலியானோரின் சடலங்களை உரிய தரப்புக்களிடம் ஒப்படைத்து வருகின்றது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை இரு தரப்பினரது 189 சடலங்களை உரிய தரப்புக்களிடம் கையளித்துள்ளோம். மன்னார்…
-
- 3 replies
- 1.1k views
-
-
'நேற்று காத்தான்குடி, இன்று ஏறாவூர், நாளை ஓட்டமாவடியா? என்ற கேள்வியோடு, பீதியோடு நிம்மதியற்று வாழும் நிலை மட்டக்களப்பு மாவட்டத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான அச்ச வாழ்வை ஏற்படுத்தியமைக்கான முழுப்பொறுப்பும் அரசையே சாரும். அதே வேளை, தமிழ்ப்பேசும் சமூகங்களிடையே இவ்வாறான பிரச்சினைகளைத் தூண்டி விடுவதில் சிங்களம் வெற்றி பெற்றுள்ளது'. இவ்வாறு ஆதங்கத்துடன் தெரிவித்தார் மட்டு.மாவட்டத் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்று உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன். மட்டு.மாவட்டமத்தில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழல் நிலை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 22ம் திகதி காத்தான்குடியில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொ…
-
- 0 replies
- 582 views
-
-
நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அரச தலைவர் மகந்த ராஜபக்ச, கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டு மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 536 views
-
-
ஜேவியின் புதிய தலைவராக சோமவன்ச அமசிங்க மீண்டும் தெரிவு புதன், 28 மே 2008 [நிருபர் அ.மயூரன்] ஜேவிபியின் புதிய தலைவராக மீண்டும் சோமவன்ச அமரசிங்க ஜேவிபி கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள சுகந்ததாச உள்ளரங்க விளையாட்டரங்கி்ல் இடம்பெற் ஜேவிபியின் 5வது தேசிய மாட்நாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. 5வது தேசிய மாட்நாட்டில் அமைப்பில் தலைவர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் புதிய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என ஜேவிபின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அறிவித்திந்தார். இந்த நிலையில் புதிய நியமனங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. தலைவர்: சோமவன்ச அமரசிங்க பொதுச் செயலாளர்: ரில்வின் சில்வா பரப்புரைச் செயலாளர்: விஜித ஹேரத்தும் பாராளுமன்றக் குழுத்…
-
- 0 replies
- 678 views
-
-
தமிழீழத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "உயிரம்புகள்" திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி. இத் திரைப்படம் விரைவில் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்பட உள்ளது.
-
- 8 replies
- 2.3k views
-
-
இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது. ஒரு மனிதாபிமான வேண்டுகோள் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டும், கடத்தப்பட்டவரை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரோ இல்லையோ இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும், இ…
-
- 10 replies
- 3.6k views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் மாண்டுவண்டி ஊர்வலம் புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் 13வது தடவையாக எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு மோசமான முறையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரித்திருப்பது இதுவே முதற்தடவையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 2 ½ வருடங்களுக்குள் 13 தடவைகள் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுவிட்டன. 13 என்பத…
-
- 0 replies
- 875 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 896 views
-
-
பொதுமக்களுக்கு எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, போருக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ஆனையிறவு தாக்குதல் பற்றி கூறுகிறார்
-
- 0 replies
- 2.3k views
-
-
-
அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது. இந்த தீர்மானம் அரபு நாடுகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டால்ää இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் ட…
-
- 14 replies
- 2.7k views
-
-
சொ.அமிர்தலிங்கம் வறுமையானது பல பரிமாணங்களைக் கொண்டது. தங்கள் அடிப்படைத் தேவைகள் தன்னும் பூர்த்தி செய்ய முடியாத வருமானமுடையவர்கள் வறியவர்கள். அத்துடன், அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாத தனிப்பட்டவர்களும் வறியவர்கள். எனவே, வறுமையானது நுகர்வுத் தேவையின் ஒரு குறைந்த தொகுதியைப் பெறக்கூடிய குடும்பமொன்றின் திறனை மையமாகக் கொண்டது. நுகர்வுத் தேவையின் குறைந்த தொகுதியைப் பெற முடியாத வருமானமுடைய குடும்பமும் வறுமைக்குரிய குடும்பமாகும். இலங்கையில் வறுமை பற்றிய தகவல்களைச் சேகரிக்க குடிசன மதிப்பீடும் புள்ளிவிபரத்திணைக்களத் தரவுகளுமே பெரும்பாலும் உதவுகின்றன. 1991 இற்கும் 1995 இற்கும் இடையிலான 5 வருட வறுமையானது உயர் வறுமைக்கோட்டின் பிரகாரம் 33 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்ந்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அயர்லாந்தில் "அயர்லாந்து அமைதி முயற்சி தரும் பாடங்களும், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும்" எனும் தலைப்பில் பொதுக்கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 734 views
-