ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
ஞாயிறு 16-03-2008 23:42 மணி தமிழீழம் [நிலாமகன்] சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நேற்று சனிக்கிழமை கண்டனப் பேரணி ஒன்றி யேர்மனியில் இடம்பெற்றுள்ளது. யேர்மனி டுசில்வோவ் நகரில் தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2.15 மணிக்கு ஆரம்பித்த கண்டனப் பேரணி டுசில்டோவ் பாராளுமன்றத்தில் நிறைவுக்கு வந்தது. பேரணியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களா, அரசியல் படுகொலைகள். ஊடகவியலாளர் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள், பொதுமக்கள் மீதான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இடப்பெயர்வுகள், தன்னார்வ தொண்டு நிறுவுவனங்கள் மீதான தாக்குதல்கள் என …
-
- 7 replies
- 1.2k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2008, 06:12 மு.ப ஈழம் பி.கெளரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 3 மாதங்களாக சிறிலங்காவில் பெரும் புதிரை எற்படுத்தியிருந்தார். அதாவது அவர் இறந்துவிட்டதான அல்லது காயமடைந…
-
- 8 replies
- 4.2k views
-
-
கிழக்கு மாகாணசைபத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நாளை மறுதினம் செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ தீர்மானமொன்றை எடுக்க உள்ளதாகத் தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். கிழக்குத் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு பிராந்தியத் தலைவர் நவ்சாட் ஏ மஜீத்துடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டும் என கட்சிக்குள் அழுத்தங்கள் பரவலாக எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுக…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமான கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்த எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டுமென்ற வேண்டுகோள்களும் வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளன. தமிழ்,முஸ்லிம் மக்களின் சார்பில் பொது அமைப்புகளின் பிரதி நிதிகள், புத்தி ஜீவிகள், மத அமைப்புகள் இதற்கான வேண்டுகோள்களை விடுத்திருப்பதுடன், முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாக பெரும்பான்மையினத்தவரை குடியேற்றும் நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புனிதப் பிரதேசம், உயர்பாதுகாப்பு வல…
-
- 2 replies
- 961 views
-
-
மடுவை பிடிப்பதற்கான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துவிட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இந்தப் பாரிய படை நடவடிக்கையில் படையினர் இறங்கியிருந்தனர். ஆனால், மடுவை நெருங்க இன்னும் பல தடைகளைத் தாண்டவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் முயற்சியென்பதால் இலக்கை அடைய அரசும் படையினரும் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும். கிழக்கை பாரிய எதிர்ப்பின்றி கைப்பற்றியது போல் வடக்கையும் சுலபமாகக் கைப்பற்றிவிட முடியுமென அரசு கருதியது. இதனால், கடந்த வருட முற்பகுதியில் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது படையினர் தங்கள் முழுப்பலத்தையும் முழு வளத்தையும் ஒன்றுபடுத்தி வடக்கே பல களமுனைகளை ஒரேநேரத்தில் திறந்…
-
- 1 reply
- 2.4k views
-
-
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா வின் சகோதரரும், இலங்கையின் முன்னாள் இரு பிரதமர்களினதும் மகனான அனுரா பண்டாரநாயக்கா மரணமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சில காலமாக நோய் காரணமாக வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கபட்டிருந்தார். ஜானா
-
- 13 replies
- 2.4k views
-
-
வெளிநாடு செல்வதற்காக தாயாருடன் தங்கியிருந்த இளைஞன் கடத்தல் பொலிஸ் சீருடையில் வந்தோர் கைவரிசை 3/16/2008 7:42:02 PM வீரகேசரி நாளேடு - வெளிநாடு செல்வதற்காக கொழும்பு, சங்கமித்த மாவத்தையில் தாயாருடன் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றுக்காலை 7 மணியளவில் வெள்ளைவானில் வந்த பொலிஸ் சீருடை அணிந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்றுக்காலை 250 7363 எனும் இலக்கமுடைய வானில் வந்த பொலிஸ் சீருடை அணிந்தவர்கள் வீட்டினை தட்டித் திறந்து குறித்த இளைஞனை பலவந்தமாக வானில் இழுத்து ஏற்றிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா அருண்ராஜா (வயது 21 ) என்ற இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். இதுகுறித்து இளைஞனது தாயார் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் மு…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளவத்தை பகுதியில் பஸ்ஸில் குண்டுப் புரளி 3/16/2008 7:35:16 PM வீரகேசரி நாளேடு - கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று ஏற்பட்ட குண்டுப் புரளியினால் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. புறக்கோட்டையிலிருந்து பாணந்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பஸ் வண்டியில் காணப்பட்ட பொதி ஒன்றினையடுத்து வெள்ளவத்தை ஹேலிங்வூட் இடத்திற்கு முன்பாக குறித்த பஸ் நிறுத்தப்பட்டதுடன் அந்த பஸ்ஸிலிருந்த பயணகள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் நின்ற மக்களும் சிதறியடித்து ஓடியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் பரபரப்பும் ஏற்பட்டது. நேற்று பிற்ப…
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகருக்கு நவீன ஆடம்பர கார், சாரதிகளுக்கு சம்பளம் நிலுவை லண்டனிலிருக்கும் ஷ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் திருமதி ஷேணுதா செனவிரத்ன சில மாதங்களின் முன்னர் அதி நவீன ஆடம்பர மோட்டார் வாகனமாகிய ஜகுவர் காரை விலைக்கு வாங்கினார். இதற்காக முப்பதாயிரம் பவுண் (ஷ்ரீலங்கா ரூபா பெறுமதியில் 8.5 மில்லியன்) செலவுசெய்து அவர் அந்த அதிநவீன ஆடம்பரக் காரைக் கொள்வனவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவருக்காக பிரிட்டிஷ் பவுண் 30,000 செலவிட்டு (அப்போதைய ஷ்ரீலங்கா ரூபா பெறுமதி 7.5 மில்லியன்) நவீன ஆடம்பர வாகனமாகிய ஈ240 மேர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் மீண்டும் மேற்படி ஜகுவர் ஆடம்பர வாகனத்தை உயர்ஸ்தானிகர் ஷேணுதா விலைக்கு வாங்கியுள்ளார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
16.03.2008 - நிருபர் எல்லாளன் நெதர்லாந்து தமிழர் ஒன்றியத்தால் சிவனேசன் படுகொலையைக்கண்டித்து நெதர்லாந்தின் வெளிநாட்டமைச்சிற்கு அனுப்பப்பட்ட கண்டனக்கடிதத்திற்கு நெதர்லாந்து அரசானது பதிலை அனுப்பியுள்ளது. அதில்இ 07-03-2008 அன்று வெளிநாட்டு அமைச்சிற்கும் அபிவிருத்தி அமைச்சிற்கும் அனுப்பிய உங்கள்கடிதம் கிடைத்தது. நன்றி. நாங்கள் இலங்கையில் நடைபெறும் பலாத்காரமான தாக்குதல்களையும் சிவனேசன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலையும் கடுமையாகக் கண்டிக்கிறோம். உள்நாட்டு பிரச்சனைக்கு ஆயுதத்தீர்வு முடிவல்ல. நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஏனைய சர்வதேசநாடுகளான நோர்வே, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகள் பேச்சுவார்ததை மூலம் எல்லோராலும் எற்கக்கூடிய தீர்வை காணுமாறு அழுத்தத்தை கொடுத்து வந்தோம்…
-
- 0 replies
- 749 views
-
-
இராணுவத் தளபதி வவுனியா விஜயம் 16.03.2008 / நிருபர் வானதி இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முனதினம் வெள்ளிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்து களமுனைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். வவுனியாவிலுள்ள வன்னிக்கான இராணுவக் கட்டளைத் தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி அங்கு நடைபெற்ற சந்திப்பில் வன்னிக்கான படையணித்தளபதிகள் மற்றும் கட்டளைத் தளபதிகள் கலந்து கொண்டு களமுனை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். இந்தச் சந்திப்பில் மன்னார் மற்றும் மணலாறு படையணிகளின் தளபதிகளும் கலந்து கொண்டு போர்க்கள நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது வன்னியில் இடம்பெறும் படை நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து வீடியோ படவிளக்…
-
- 2 replies
- 818 views
-
-
கொட்டாஞ்சேனையில் தமிழர் கடத்தல். 16.03.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் தமிழர் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை வெள்ளை வானில் வந்த நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் வசிக்கும் கோவிந்தசாமி ராஜநாதன் என்ற 65 வயதுடைய தமிழரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இந்நபரை வெள்ளை வானில் வந்த ஆயுதம் தரித்த நபர்கள் கடத்திச் சென்றுள்ளார்கள். இந்நபர்கள் தாங்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்துள்ளதாகவும் இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்கள். இது தொடர்பாக கடத்தப்பட்ட ராஜநாதனின் சகோதரர் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கொட்…
-
- 0 replies
- 662 views
-
-
Posted on : 2008-03-16 அமெரிக்கா மீது சீறும் இலங்கை உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான். அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு. உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம். இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெ…
-
- 6 replies
- 2.3k views
-
-
தொடக்கப்பட்டு 11 மாதத்தில் 3 பில்லியெண் ரூபாய்களை விழுங்கி நட்டத்தில் இயங்கிகொண்டு இருகின்றது மிகின் லங்கா விமான சேவை இந்திய மத்திய கிழக்கு பயணிகளை இலக்குவைத்து மிகின் லங்கா விமான சேவை தொடக்கப்பட்டது.இதன் நிர்வாக இயக்குனர்கள் இலங்கை அரச அதிபரின் குடும்பத்தினர் நண்பர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாணவர்களால் நிரப்பட்டது குறிப்பிடதக்கது.மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய,விமானப்படை தளபதி ரொசான் குணத்திலக்க,அரச அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ,அரச அதிபரின் இன்னொரு செயலாளர் சச்சின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் நிர்வாக இயக்குணர் சபையில் அங்கம் வகிக்கின்றனர் 1.5 பில்லியென் ரூபாய் கடனை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடனும்.500 மில்லியென் ரூபாயினை லங்கா புத்திர வங்கிலும் 1 பில்லியென்…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, "இலங்கை மண்" வானொலி நாடக ஆசிரியரான படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், "மாமனிதர்" விருது வழங்கி மதிப்பளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.9k views
-
-
சொல்லாமல் சொல்லி விட்டு சென்ற செய்தி! அனைவரும் அங்கு அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையில் இருக்க திடீர் என அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! அவர்கள் யாருமே ஏதிர்பாராத ஒருவர் அங்கு திடீர் என்று வருகை தந்ததே அவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி. துன்பத்திலும் ஒரு சிறு சந்தோசம் என்பார்களே அந்த விதமான ஒரு அதிர்ச்சி கலந்த சந்தோசம். www.orunews.com
-
- 3 replies
- 2.1k views
-
-
இவை யார் எண்டு சொல்லுங்கோ பாப்பம் இவைதான் Members of the Civil Defence Force (CDF) ஆம் Members of the Civil Defence Force (CDF), known as Home Guards are seen engaging a ‘Shramadana’ campaign at Peliyagoda to clear the roadsides of foliage and unauthorized structures that pose security threats. The CDF has taken over the security of the Peliyagoda Katunayake air port road. Daily Mirror
-
- 3 replies
- 2.4k views
-
-
வவுனியாவில் கிளேமோர்: படைச்சிப்பாய் பலி நால்வர் காயம். 16.03.2008 / நிருபர் எல்லாளன் வவுனியாவில் கிளேமோர்த்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை வீதிரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த படையினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 883 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல் விழுந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆசியா நோக்கி திரும்பும் உலகின் கவனம் 3/16/2008 9:30:14 AM வீரகேசரி வாரவெளியீடு - கொசோவா மேற்கொண்ட சுதந்திரப் பிரகடனம் தொடர்பான ஆரவாரங்கள் அடங்குவதற்கு இடையில் மேற்குலகம் தமது நேட்டோ கூட்டணியில் பல்கன் நாடுகளில் மூன்றை இணைத்துக் கொள்வதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளன. அல்பேனியா, குறோசியா மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளை நேட்டோ கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கொசோவாவின் சுதந்திரத்துடன் பல்கன் பிராந்தியத்தில் ஏறத்தாள முடிவுக்கு வரும் மேற்குலகத்தின் பூகோள அரசியல் தற்போது ஆசியக் கண்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சீனாவின் அதிகாரத்தின் கீழிருந்து வரும் தாய்வான் தன்னை ஒரு முழுமையான சுதந்திர நாடாக ஐ.நா.வின் உதவியுடன் எதிர்வரும் 2…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா விமானப்படைக்கு உயர் தொழில்நுட்ப மிக் 29 ரக விமானங்கள் விரைவில் கிடைக்க உள்ளதாகவும் அதற்கான பூர்வாக பேச்சுவார்த்தைகள் ரஷ்சியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறீலங்கா தெரிவித்துள்ளது. இந்த கொள்வனவின் கீழ் 4 மிக் 29SM வகை போர் விமானங்களும் 1 மிக் 29UB போர் விமானமும் பெறப்பட உள்ளன. இரவிலும் பகலிலும் தாக்குதலில் ஈடுபடக் கூடியதும் தரை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் சக்தியும் இவ்விமானங்களுக்கு உண்டு. இந்தியா போன்ற நாடுகளின் பிரதான தாக்குதல் விமானங்களாக இவை விளங்குகின்றன. தற்போது சிறீலங்கா மிக் 27 ரக போர் விமானங்களையும் இஸ்ரேலிய கிபீர் விமானங்களையும் கொண்டு தமிழர் தாயகப் பிரதேசங்கள் மீது குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் இந்த மிக் 29களின் வரவு அமைய…
-
- 13 replies
- 3.2k views
-
-
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 3/16/2008 9:53:00 AM மன்னார் நிருபர் - மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இன்று காலை 6.30 மணியளவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துப்பாக்கி பிரயோகத்தின் போது சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் இன்ரறு காலை 7 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பெயர் விபரம் இதுவரை வெளியாகவி…
-
- 0 replies
- 706 views
-
-
ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு
-
- 0 replies
- 981 views
-
-
இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை 3/15/2008 12:02:29 AM வீரகேசரி இணையம் - இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இவ்வாரம் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, அமெரிக்க இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நாட்டின் சமகால நிலைமைகளை பிரதிப்பலிப்பதாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர், இது குறித்து தாம் மிகுந்த க…
-
- 6 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு சிங்களவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலுமே இவ்விருவரும் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே தயானந்த என்பவர் 1,468 விருப்பு வாக்குகளைப் பெற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே நந்தசிறி என்பவர் 722 விருப்பு வாக்குகளைப் பெற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் மங்களகம என்ற சிங்களக் குடியேற்றத்திட்டத்தை சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு மாவட…
-
- 4 replies
- 1.8k views
-