Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மணலாற்றுப் பகுதியில் களமுனைப் போராளிகளுக்கும், மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  2. கொழும்பில் இடம்பெற்ற ஆட்கடத்தல் மற்றும் கப்பம் பெறும் சம்பவங்களின் முக்கிய சூத்திரதாரியான வான்படையின் முன்னாள் ஸ்குவார்டன் லீடர் நிசந்த கஜநாயக்க உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 944 views
  3. மீண்டும் யுத்தம் ஆரம்பமானதற்கு பொறுப்பாளிகள் வல்லரசுகளே [18 - January - 2008] -விஜய டயஸ்- இலங்கை அரசாங்கம், இரண்டு ஆண்டுகளாக பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை முன்னெடுத்த பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002இல் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான அறிவித்தலை ஜனவரி 2ஆம் திகதி விடுத்தது. இந்த முடிவானது புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதை இலக்காகக் கொண்ட மோதல்களை மேலும் உக்கிரப்படுத்துவதற்கு களம் அமைப்பதோடு சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் 25 ஆண்டுகால மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைக் காண்பதற்குமான வாய்ப்புக்கு விளைபயனுடன் முடிவுகட்டுகிறது. அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி அதன் முடிவை கொழும்பில் உள்ள நோர்வே தூத…

  4. கொழும்பில் குண்டுப் புரளி 18.01.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா தலைநகர் கொழும்பின் யூனியன் பிளேஸ் பகுதியில் குண்டு இருப்பதாக அப்பகுதி பொலிசார் சிலமணிநேரங்களிற்கு முன்னர் தெரிவித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குண்டு செயலிளக்கும் பிரிவினர் அங்கு வரவளைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. அங்கு பதற்றமான நிலை காணப்படுவதுடன் இராணுவம், பொலிஸ் என்பன உசார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  5. வவுனியாவில் உள்ள கொறவப்பொத்தானை குடாக்கச்சக்கொடிப் பகுதியில் 14.01.08 அன்று இடம்பெற்ற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உரிமைக்குரல் எழுப்பி வந்தரான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும், 91 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.7k views
  7. வவுனியா பூவரசன் குளத்தில் நேற்று இரவு பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 9.40 மணியளவில் இத்துப்பக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில் மேரி எனும் குடும்ப பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். tamilwin.com

    • 0 replies
    • 1.1k views
  8. பலமிழந்து போயுள்ள புலிகள் அரசைக் கோபமூட்டும் வகையிலும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் எத்தகயை தாக்குல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அரசு குழம்பப் போவதில்லை. தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமே தீர்வு காண்பது என்ற அரசின் நிலப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி அமச்சர் மைத்திரிபால நேற்று தெரிவித்தார். அரச தசவல் திணக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே இதனை தெரிவித்தார். தொடர்ந்து : புலிகள் இயக்கம் பலமிழந்து போகின்ற அனைத்துச் சந்தாபத்திலும் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது புதிதல்ல. புத்தள சம்பவமும் அவ்வாறே தான் அமைந்துள்ளது. இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் அரசைக் கோபமூட…

  9. இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்ததிலிருந்து விலகியமை குறித்து சர்வதேச நாடுகள் எவையும் இலங்கை அரசைப் பிழையாக விமர்சிக்க வில்லை. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடை முறைப்படுத்தச் சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவுமில்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் அந்தச் சந்திப்பில் அவர் இது தொடர்பாக கூறியவை : யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியமையால் சர்வதேச நாடுகள் இலங்கை மீது கோபத்ததுடன் உள்ளன என்று சிலர் கூறுகின்றனர். அதில் எந்த உண்மையுமில்லை. இந்த ஒப்பந்த்தில் இருந்து நாம் விலகுவதற்கு எடுத்த தீர…

  10. இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை முட்டாள்த்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அரச பிரதிநிதி விமர்சித்திருப்பது கவலை தருகின்றது என்று சுவிஸ் ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.நாவின் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  11. முழுமையான போரைத் தொடுக்குமாறு சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுக்கு ஜே.வி.பி. கட்சியின் சார்பில் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 897 views
  12. மன்னார் மாவட்டம் மடுப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி படையினரை விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 659 views
  13. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் தாக்கல் செய்யப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 714 views
  14. முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 599 views
  15. இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை - இந்திய கடற்படைத் தளபதி மேத்தா 1/17/2008 10:24:40 PM வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது இரு நாட்டு கடற்படையினரும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்வது வழமை என்று இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளித்து வருகின்றது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா நேரடியாக உதவி அளிக்கவில்லை. கடலில் ரோந்து பணியில் ஈடுபடு…

    • 6 replies
    • 1.3k views
  16. வெள்ளி 18-01-2008 01:59 மணி தமிழீழம் [மயூரன்] தனமாவில பின்தங்கிய கிராமத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி : 3 வர் காயம் தனமாவில கலவாகல பின்தங்கிய கிராமத்தில் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் (17 ஜனவரி) துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நால்வர் காயமடைந்து தனமாவெல வைத்தியசாலையில்அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வைத்தியசாலை வட்டார தகவலின்படி காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நால்வரில் ஒருவர் காயம் காரணமாக இறந்துள்ளதாகவும் மற்றும் மூவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  17. Posted on : 2008-01-18 சுயாதீனக் கண்காணிப்பை வலியுறுத்தும் சம்பவங்கள் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாக செயலிழந்துபோகும் தறுவாயில் தென்னிலங்கையில், மொனறாகலை மாவட்டத்தில், புத்தளப் பகுதியில் இடம்பெற்ற மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்கள் நெஞ்சை அதிரவைப்பன. இருவேறு தாக்குதல்களில் முப்பதுக்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர்கள் குரூரமாகக் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. அறுபத்தியைந்துக்கும் அதிகமானோர் படுகாயமுற்று அந்தரிக்கின்றனர். என்ன நோக்கத்துக்காக, யார் செய்திருந்தாலும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய கோரத் தாக்குதல்களும், குரூர நடவடிக்கைகளும் நியாயப்படுத்த முடியாதவை. வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. ச…

  18. அமெரிக்கக் கடற்படை உயரதிகாரி இங்கு கடற்படைத் தளபதியுடன் பேச்சு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பகுதிக்கான தளபதி அட்மிரல் றொபேர்ட் எவ். வில்லார்ட் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரனாகொடவை நேற்று வியாழக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் கடல் பாதுகாப்பு ஆகியன குறித்து ஆராயப்பட்டது எனக் கூறப்பட்டது. இலங்கைக் கடற்படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கத் தளபதி இச்சந்திப்பின்போது பாராட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விஜயத்தின்போது அட்மிரல் வில்லார்ட் அமெரிக்காவினால் சமீபத்தில் …

    • 5 replies
    • 1.1k views
  19. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 16.01.08 அன்று ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....eea208541a643e7

  20. யூரோ நாணயத் தாள்களுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது வெளிநாட்டிலிருந்து பெருந்தொகையான யூரோ நாணயத்தாள்களை இலங்கைக்குக் கொண்டுவந்த ஒருவர் நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானம் மூலம் வந்த விமான சேவை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரே கட்டுநாயக்கா சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நபரில் சந்தேகம் கொண்ட சுங்கத்திணைக்கள அதிகாரிகள் அவரின் உடைமைகளைச் சோதனையிட்டபோது பெருந்தொகையான யூரோ நாணயத்தாள்களை கைப்பற்றினர். இதன் இலங்கைப் பெறுமதி 66 லட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது என சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வ…

  21. முழுமையான யுத்தம் என்பது புலிகளின் ஏமாற்று வித்தை [17 - January - 2008] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் அமைப்பு கிழக்கிலும் மன்னாரிலும் தமது கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களை மட்டுமல்ல, அவர்களின் முன்னணித் தலைவர்களாகிய அரசியற்பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் , புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது தலைவர் சாள்ஸ் போன்ற முக்கிய தலைவர்களைக் கூட இழந்துவிட்டது. இவ்வாறு பெரும் பிரதேசப் பரப்பையும் முன்னணித் தலைவர்களையும் பாதுகாக்க முடியாத புலிகள் இயக்கத் தலைமைத்துவம் அரச படையினருடனான ஒரு முழுமையான யுத்தத்துக்குச் செல்ல முடியாத அளவுக்கு பலமற்ற நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் அரச படையினருக்கு எதிராக புலிகள் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க முடியாது எனவும் அதற்கான ஆட்…

  22. வெள்ளி 18-01-2008 01:18 மணி தமிழீழம் [மதுசன்] யாழ்.இருபாலையில் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதல். யாழ்.இருபாலைப் பகுதி நேற்று சிறீலங்காப்படையிரால் சுற்றி வளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தேடுதல் வேட்டையின் போது வீடு வீடாகச்சென்று படையினர் சோதனை நடத்தியதாகவும் . இந் நடவடிக்கையின் போது வீடொன்றை படையினர் சோதனையிட முற்பட்ட போது அவ்வீட்டில் உள்இருந்த இளைஞர் ஒருவர் படையினரை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி விட்டு சயனைட் அருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com

  23. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து, 4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளது சிறிலங்கா அரசு. “சமாதானம்” என்று, வார்த்தை அளவில்தானும் எஞ்சியிருந்த விடயமும் ஒருவாறு முடிவுக்கு வந்து, யுத்தம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் 16ம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட 4வது ஈழ யுத்தம் ஆரம்பமாக உள்ளது. 4ம் கட்ட ஈழ யுத்தம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் உண்மையிலேயே மிகச் சிறந்த திட்டம்தான். கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டு, யாழ்பாணத்தை தனது கைகளில் வைத்துக்கொண்டு, வன்னி மீது படையெடுப்பது என்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம். விபரம் அறிய.... http://murasam.ch/content/view/3778/232/

    • 37 replies
    • 7.2k views
  24. மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல் மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கியுள்ளது. (மேலதிக விபரம் விரைவில்) நன்றி : பதிவு.

    • 9 replies
    • 2.4k views
  25. இந்து ஆலயத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு 1/17/2008 9:47:12 PM வீரகேசரி இணையம் - ஆரையம்பதி கடற்கரை வீதியிலுள்ள பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்துக்குள் புகுந்த குழுவினர் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், ஆரையம்பதி திருநீற்றுக் கேணியில் தமிழர் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஒன்றினைந்து விடுத்த அழைப்பினை ஏற்று நடைபெற்ற ஹர்த்தாலினால் மட்டக்களப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரில் சுற்றுப்புறங்களிலும் கடைகள் அடைத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.