ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
வெள்ளவத்தை வாழ் தமிழ்மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு வெள்ளவத்தை காவல் துறையினர், அப்பிரதேச வாழ் 12,000 தமிழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க தயாராகி வருகின்றனர். டிசம்பர் 26ம் திகதி தொடக்கம் இத் துண்டுப்பிரசுர நடவடிக்கை முடுக்கி விடப்பட இருக்கின்றது. குண்டுத்தாக்குதல் நடாத்துபவர்களை எப்படி இனங்காணுதல், சந்தேகத்துரியவர்களின் நடமாட்டங்களை எவ்வாறு இனங்காணுதல் போன்றவற்றிற்கான செயற்பாடுகள் பற்றி, வழங்கப்படும் துண்டுப்பிரசுத்தில், விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 2.2k views
-
-
கடந்த பல வருடங்களாக உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படாத 9 மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளில், எதிர்வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் [Monday December 24 2007 07:24:54 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே கடந்த பல வருடங்களாக உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படாத உள்ளூராட்சி சபைகளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்த இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக இலங்கை உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபை உட்பட தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 9 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆ…
-
- 0 replies
- 728 views
-
-
கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்கும் ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு புலிகள் கூறுவதையெல்லாம் அப்படியே ஏற்று தலையசைத்து விட்டு வருகின்றனர் என்று சீற்றத்துடன் கூறியிருக்கின்றார் அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க. தமிழர் தாயகப் பகுதிகளில், 'ஸ்ரீலங்காவின் கிளைமோர் தாக்குதல்கள்' போன்ற சொற்பிரயோகங்களை விடுதலைப் புலிகள் முன்வைக்கும் போது அதனை ஆட்சேபித்த ஒரு வார்த்தையேனும் ஐ.நா. பிரதிநிதிகள் கூறுவதில்லை என்று அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அரச சமாதான செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபட்டிருப்வை வருமாறு :- தமிழர் தாயகப் பகுதிகளில் ஐக்கிய நாடுகளின் பணிகள் குறித்தும், விடுதலைப்புலிகளின் படையணிகளில் உள்ள 18 வயத…
-
- 1 reply
- 1.1k views
-
-
புலிகள் கட்டுப்பட்டுப் பகுதியிலருந்து தப்பி வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 12 பொதுமக்கள் நேற்று முன்தினம் படையினரிம் தஞ்சம் அடைந்துள்ளனர் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மன்னார். பள்ளிமுனைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். 12 பேரும் சிறிய படகொன்றின் மூலம் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னார் பள்ளிமுனைக்கு வந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.??? விரபாகு ஜெயக்குமார் (வயது 45) உதயகுமார் ஜெயலக்ஷசுமி 42) உதயகுமார் தர்சினி (22) உதயகுமார் ஜெயகாந்தன் (வயது 16) வேதநாயகம் ஜெயமார்க்கன் (வயது 32) ஜெயமார்க்கன் சுஜாதா (வயது 31) …
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் நவம்பர் மாதம் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சில் காயமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் இந்திய அரசிற்கு கிடைகவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபாகரன் காயமடைந்துள்ளார். வெளிநாட்டில் அவர் மருத்துவ சிகிச்சை பெறலாம் என வெளியான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உளவியல் நடவடிக்கையென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன. விடுதலைப்புலிகளின் தலைவரின் 116 மெய்பாதுகாவலர்கள் கொல்லப்பட்டாத வெளியான செய்தியை (வேடிக்கையென) இந்தியா பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரித்தன. இலங்கை மோதலை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியப்பாதுகாப்பு வட்டாரங்களுக்கு பிரபாகரன் காயமடைந்திருந்தால் தற்போதைக்குத் தெரியவந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்…
-
- 19 replies
- 3.9k views
-
-
ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்? [Monday December 24 2007 04:37:03 PM GMT] [யாழினி] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்னர் அமைச்சரவையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கிய அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தவிருப்பதுடன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷவிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படக்கூடும் என்று நம்பகரமான வட்டா…
-
- 1 reply
- 979 views
-
-
எங்குமில்லைப் பாதுகாப்பு! யாழ். மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்து யாழ். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த இரு பொதுமக்களை சிறிலங்காப்படையினர் கடத்திச்சென்றுள்ளமை நீதிமன்றத்தாலோ அன்றிச்சிறைச்சாலைகளிலோ கூட தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதையே வெளிக்காட்டி நிற்கின்றது. சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தமிழ்க்; கைதிகள் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் ஒன்றும் புதியதொன்றல்லத்தான். சிறைச்சாலை அதிகாரிகளின் வன்முறை, சிறையிலுள்ள சிங்களக் காடையர்களின் வன்முறை, வெளியிலுள்ள காடையர்கள் கடந்த காலத்தில் சிறைக்குள் புகுந்து தாக்குதல் என்ற வகையில் பலதடவை தமிழ்க்கைதிகள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர்…
-
- 1 reply
- 1.5k views
-
-
திருமலை கடற்படைத் தளத்தில் உந்துகணை வெடித்தது: 20 கடற் படையினர் காயம் திருகோணமலை துறைமுகக் கடற்படைத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை டோரா அதிவேகக் பீரங்கி வேக பீரங்கி கடற்படைகலம் ஒன்றில் உந்துகணை ஒன்றைப் பொருத்த முற்பட்டபோது அதுவெடித்துள்ளது. இதன்போது 20 கடற் படையினர் காயமடைந்ததோடு டோராவேக பீரங்கிக் கலமும் சிறுசேதற்கு உள்ளாகியமையும் தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் மழையினால் 156,000பேர் பாதிப்பு 9,355 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் தஞ்சம் [Monday December 24 2007 04:34:31 PM GMT] [யாழினி] அடை மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 9355 குடும்பங்களைச் சேர்ந்த 35650 பேர் 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 211 குடும்பங்களைச் சேர்ந்த 865 பேரும் கோறளைப் பற்று மத்திய பிரிவில் 2100 குடும்பங்களைச்சேர்ந்த 8475 பேரும், ஓட்டமாவடி பிரிவில் 2631 குடும்பங்களைச் சேர்ந்த 10231 பேரும், கிரான் பிரிவில் 895 குடும்பங்களைச் சேர்ந்த 3169 பேரும், செங்கலடிபிரிவில் 2114 குடும்பங்களைச் சேர்ந்த 8289 பேரும…
-
- 0 replies
- 743 views
-
-
வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியா- மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியிலிருந்து ஒமந்தைக்கு அப்பால் செல்லும் நோயாளர் காவு ஊர்திகள் சிறிலங்காப் படையினரால் அனுமதிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைப் போக்கவேண்டும் என்று கிளிநொச்சி பொது மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முறையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 660 views
-
-
கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் வழிகாட்டலில் கொழும்பில் படையினரின் சோதனை நிலையங்கள் அகற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, யாழ். மாவட்டத்திலும் கள நிலைமைகளுக்கு ஏற்ப சோதனை நிலையங்களை மாற்றி அமைத்து மக்களின் அசௌகரியங்களைத் தவிர்க்க வேண்டும். பலாலியில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் யாழ். மாவட்ட நீதிபதி. இ.த.விக்னராஜா இவ்விடயத்தை படைத் தரப்பினரிடம் வலியுறுத்தினார். கொழும்பில் பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்ட சோதனை நிலையங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. அந்த அறிவுறுத்தல்களை வழிகாட்டல்களை பின்பற்றி யாழ்ப்பாணத்திலும் மக்களுக்கு வசதி செய்யப்படவேண்டும். மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்று மாவட்ட நீதிபதி…
-
- 0 replies
- 860 views
-
-
. குடாநாட்டில் பலாலி, பருத்தித்துறை, தென்மராட்சி ஆகிய பிரதான பாதைகளில் படையினரின் தொடரணிகள் ஒழுங்கு முறையின்றிச் செல்வதல் மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் அடுத்த மாதத்தில் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டப் பயணத்துக்குப் பாதுகாப்பு அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்களையும் கஷ்டங்களையும் நீக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். பலாலியில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றின்போது, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இந்த வாக்குறுதிகளை அளித்தார். பலாலி படைத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் குடாநாட்டில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தளபதிக்கு எடுத்து…
-
- 0 replies
- 950 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவின் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 760 views
-
-
மேலதிக செலவுகளை சமாளிக்க அதிக பணம் அச்சிடுவதால் அடுத்தாண்டில் பணவீக்கம் பெருமளவில் அதிகரிக்கும் [24 - December - 2007] * அமைச்சர் பந்துல எச்சரிக்கை அரசின் மேலதிக செலவுகளை சமாளிக்க அதிகளவு பணத்தை அச்சிடுவதால் எதிர்வரும் ஆண்டில் நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரிக்குமென்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது; தனது செலவுகளை சமாளிப்பதற்காக அதிக பணத்தை அச்சிடும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக அரசு தனது செலவுகளை சமாளிப்பதற்காக மேலதிகமான பணத்தை அச்சிட்டு வந்துள்ளது. இது பணவீக்கத்தை கடுமையாக அதிகரித்திருந்தது. இதனை ஈடுகட்டும் பொருட்…
-
- 0 replies
- 930 views
-
-
Posted on : 2007-12-24 அரசின் முழு நோக்கமும் மூலோபாயமும் சமாதானத்தை அடைவதற்கு இராணுவத் தந்திரோபாயங் கள் நாடப்படுவது குறித்து, இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை தெரிவித்திருக்கிறது. நாளைய நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஆயர்கள் தமது கவலையை வெளிப்படுத்தி யுள்ளனர். மனித மாண்புகளும் சம உரிமைகளும் நிச்சயமாக்கப் படாத வரையில் சமய, இன, மொழி ரீதியில் பாரபட்சங்கள் காட் டப்படுகின்ற வரை நாட்டில் ஒற்றுமை, சாந்தி, சமாதானம் போன்றவற்றை எட்டவே முடியாது. சமாதானத்தை அடைவதற்கு, இப்போது நடைபெறும் ஆக்ரோஷமான சண்டைக்குரிய காரணங்கள் முதலில் களை யப்படவேண்டும். ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அதற்காக எடுத்த முயற்சிகள் அரசியல்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை: "லக்பிம" வார ஏடு [ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007, 11:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறிலங்காப் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தென்னிலங்கை வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. "லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது: அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மிகப்பெரும் கேள்விகளை படை அதிகாரிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் மிகவும் நவீன ஆயுதங்…
-
- 9 replies
- 2.5k views
-
-
நம்மவர்கள் சிலர் அரசியல் ஆய்வு செய்கின்றோம் என்று, செய்கின்ற சில வேலைகளாலும், போராட்டத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. நாம் தேவையான விடயங்களில் அமைதி காத்து, எதிரிக்குத் தகவல் போகாமல் காப்பது தான் இன்றைக்குத் தேவை. http://www.pathivu.com/?ucat=avasiya_arikkai&file=211207
-
- 15 replies
- 2.8k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகமோசமாக அதிகரித்து வருகையில இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகமொன்றைத் திறப்பதற்கான ஆதரவைத் திரட்டும் நோக்கில் மனித உரிமைககள் கண்காணிப்பகம் உலகளாவிய ரீதியில் பெரும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இதன் முதற் கட்டமாக இதன் அமைப்பாளாகள் அமெரிக்காபுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டின் ஆதரவைப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இலங்கையில் தினமும் நடைபெறும் பேரதிர்ச்சி தரக்கூடிய கொலைகள் மற்றும் காணமற் போதல் கள் தொடர்பாக இலங்கை அரசு மிகவும் குறைந்தளவிலேயே விசாரணைகளை மேற்கொள்வதால் அது குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதே தங்களது வருகையின் நோக்கமென அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் செயற்திறனற்ற பாரளுமன்றின் கீழ் மனித…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஞாயிறு 23-12-2007 22:37 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்காவுக்கு அமெரிக்காவுக்கு பதிலாக ரஷ்யா ஆயுத உதவி அமெரிக்காவின் செனட்சபை சிறீலங்காவுக்கான ஆயத வழங்கலை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொண்டிருக்கின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஷ்யா சிறீலங்காவுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராகின்றது. ஜெனரல் விலாட்மீர் மொல்டன்ஸ்கு தலைமையில், ரஷ்யநாட்டின் உயர் இராணுவ தர பேச்சுவார்த்தைக் குழு, கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவையும், இராணுவ ஆணையாளர் சரத் பொன்சேகாவையும், விமானப் படை உயர் அதிகாரி ருசான் குணதிலகவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தலைமை தாங்கிய விலாட்மீர் மொல்டன்ஸ்கு என்பவரே செஸ்னிய மக்களுக்கு எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
கடல்கோளின் பின்னரான மூன்று வருடங்களில்....? [23 - December - 2007] [Font Size - A - A - A] இலங்கை உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பல நாடுகளை உலுக்கிய கடல்கோள் அனர்த்தத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. அனர்த்தத்தில் பலியான 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உலகம் சோகத்துடன் நினைவு கூர விருக்கிறது. நினைவுக்கெட்டிய சரித்திரத்தில் உலகம் முன்னென்றுமே எதிர்நோக்கியிராத பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவித்த கடல் கோளினால் அவலத்துக்குள்ளான ஒவ்வொரு தேசத்தினதும் ஒவ்வொரு கரையோரக் கிராமத்தினதும் புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் இந்த மூன்று வருடகாலத்தில் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்சிக் குழுப் பிரதிநிதிகள் குழுவானது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
ஞாயிறு 23-12-2007 15:35 மணி தமிழீழம் [சிறீதரன்] மன்னார் சந்தைப்பகுதியில் சிறீலங்கா படையினரின் அடாவடித்தனம் சிறீலங்கா காவல்துறையினரும் படையினரும் இன்று காலை கூட்டாக 7 மணியளவில் மன்னார் சந்தைப்பகுதியில் அமைந்துள்ள நடைபாதையோர வியாபாரநிலையங்கள் உட்பட 100ற்கு மேற்பட்ட கடைகளை அடித்தும் நொருக்கியும் குறைந்தது 80 தமிழ் முஸ்லீம் வர்த்தகர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது. சனிக்கிழமை இரவு இப்பகுதியில் சிகரெட் வாங்குவதற்கு சென்ற சிறீலங்கா காவல்துறையைசேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்
-
- 3 replies
- 1.6k views
-