ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி புனித தெரேசாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட பாலன் பிறப்புக் காட்சி அடிமைச்சங்கிலியுடன் கூடிய கையில் பாலன் பிறப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டமையாலே ஆழிப்பேரலை மீளமைப்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டன என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியா ஓமந்தை போக்குவரத்துப் பாதையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கிளிநொச்சி பொது மருத்துவமனையின் நோயாளர் வாகனத்தை வவுனியாவில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என்று கிளிநொச்சி பொது மருத்தவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்தி தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 834 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை "நசுக்கப் போகிறேன்" என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 887 views
-
-
தாயகத்தில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 939 views
-
-
25.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3cb83dacb17b0af
-
- 0 replies
- 1.3k views
-
-
திருகோணமலை பிரதேசத்தின் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான கடற்கரைச்சேனையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
மணலாறு சிலோன் தியேட்டர் மண்கிண்டிமலைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்கள் நினைவாகவும், கள்ளப்பாட்டுப் பகுதியில் சாவடைந்த விளையாட்டு வீரர்கள் நினைவாகவும் கள்ளப்பாட்டு இளைஞர் கழகத்தால் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 602 views
-
-
இன்று நண்பகலுக்கு சற்று முன்னாதாக நெடுந்தீவிற்கு தெற்காக உள்ள கடற்பரப்பில் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே கடுமையான சமர் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 16 படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் படகுஅணிக்கு எதிராக கடற்படையினர் தாக்குதலை நடத்திவருவதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சமர் குறித்த விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. Sea Tigers destroy SLN Dvora attack craft in the seas off Delft island [TamilNet, Wednesday, 26 December 2007, 08:07 GMT] A Sri Lanka Navy Dvora Fast Attac…
-
- 27 replies
- 5.5k views
-
-
பாலியல் வல்லுறவுக்கு பின்இளம்பெண் படுகொலை-சுந்தரபுரம் பகுதியில் சம்பவம் வீரகேசரி நாளேடு வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இருந்து கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுபநாயகி சிங்கராசா என்ற இந்தப் பெண் கற்குளம் என்னுமிடத்தில் காட்டுப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்றவர்களினால் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இந்தச் சடலம் உறவினர்களினால் வவுனியா பொலிஸார் மூலமாக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டு சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் …
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted on : 2007-12-26 உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தமிழர் தாயகத்தில் செல்லாதா? ""நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமின்றி நிலைநாட்டப்படுவது போலக் காட்டப்படவும் வேண்டும்.'' என்பது நீதித்துறையின் உயர் வாசகமாகும். ஆனால், இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை இத்தீவின் சிறுபான்மையினரான தமிழருக்கு அதன் நியாயமான அரவணைப்பு எட்டாக்கனியோ என்ற அங்கலாய்ப்புத்தான் அம்மக்களுக்கு உள்ளது. பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி, அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரச் செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதத்தில் இறுக்கமான இரும்புச்சட்டப் பெட்டகம் போல அமைந்திருக்கின்றது இலங்கை அரசமைப்பும் அதன் சட்டங்களும். தமிழர் தரப்பின் இசைவின்றி இணக்கமின்றி பெரும்பான்மைச் சிங்களவர்களின் தன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்காவில் 12 பேருடன் இந்தோனேசிய கடற்கலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.3k views
-
-
கிழக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் நடத்துவதனை எதிர்த்து வழக்குத் தொடர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
கடினமான எதுவுமில்லை இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ். குடாநாட்டில் தொடர்ந்து எவ்வாறு கொலைகள் இடம் பெறுகின்றன என்பதை விளங்கிக்கொள்வது கடினமானதாகவுள்ளது என கொழும்புப் பேராயர் டுலிப் டி சிக்கேரா" குறிப்பிடப்பட்டுள்ளமையானது பேராயர் தமது உணர்வுகளை வெளியிடத் தயக்கம் காட்டுவதாகவே கொள்ளத்தக்கது. ஏனெனில் யாழ். குடாநாட்டில் இன்று இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள், கொள்ளைகள் யாவற்றிற்கும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆயுதபடையினருமே ஆகும். இதனைப் புரிந்துகொள்வது என்பது ஒரு கடினமான விடயமோ காரியமோ அல்ல. யாழ். குடாநாடு 1996 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா ஆயுதப்படையினரின் பூரண கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனை நாம் கூறவில்லை…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
மட்டக்களப்பு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது [Wednesday December 26 2007 12:10:51 AM GMT] [யாழ் வாணன்] கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய மட்டக்கள ப்பு மாவட்டம் நேற்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்றும் நேற்று முன்தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த பிரதேசங்களிலும் மழை பெய்யாததினால் வெள்ள நீர் வடிந்து காணப்பட்டதுடன் வீதிகளின் போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியிருந்தது. மட்டக்களப்பு பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான போக்குவரத்து நேற்று வழமைபோன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டு அகதி முகாம்கள் மற்…
-
- 0 replies
- 805 views
-
-
மட்டக்களப்பு தேர்தல் மக்களின் கண்களில் மண்தூவும் நடவடிக்கை - ஐ.தே.க [Wednesday December 26 2007 12:07:03 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அவசர அவசரமாக நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது மக்களின் கண்களில் மண்ணை தூவும் நடவடிக்கையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை. அங்கு மோதல்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் மக்களுக்கு அளித்துள்ள நத்தார் பரிசே மாவிலை அதிகரிப்பாகும். மாவிலை அதிகரிப்பின் மூலம் மக்களின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்…
-
- 0 replies
- 621 views
-
-
விடுதலைப்புலிகளிடம் சகல வசதிகளும் உண்டு பிரபாகரன் தமிழகம் வர வாய்ப்பே இல்லை கடலோர காவல்படை அதிகாரி தகவல் [Wednesday December 26 2007 12:05:09 AM GMT] [யாழ் வாணன்] விடுதலைப் புலிகளிடம் சகல வசதி களும் உண்டு. எனவே புலிகளின் தலைவர் தமிழகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வருகை தந்த கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது: இலங்கை போரில் சமீபத்தில் காயப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களிடம் சகல வசதிகளும் உள்ளன. …
-
- 4 replies
- 2.2k views
-
-
பாதுகாப்பு குறைக்கப்பட்டமை பிரபாகரனின் குழுவிற்கு பாதை வெட்டும் செயலாகும் வீரகேசரி நாளேடு பொலிஸ் மா அதிபருக்கு அனுர பண்டாரநாயக்க எம்.பி.கடிதம் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை என்னை கொலைச்செய்வதற்காக பிரபாகரனின் குழுவிற்கு பாதையை வெட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் மா அதிபரும் ஆலோசனை வழங்கியோருமே முழு மையாக பொறுப்பு கூறவேண்டும் என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனுர பண்டார நாயக்க தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அனுப்பிவைத்து அவசர கடிதத்திலேயே அனுர பண்டாரநாயக்க எம்…
-
- 4 replies
- 1.9k views
-
-
சமாதானத்தின் தேவன் [ உதயன் ] - [ Dec 25, 2007 05:00 GMT ] இன்று கிறிஸ்மஸ் தினம். சமாதானத்தின் தேவன் அவதரித்த நந்நாள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறார்கள். விடுதலையின்றித் தவிக்கும் மனுக்குலத்தின் ஆத்ம விடுதலைக்காகத் தம்மையே மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க வந்த கிறிஸ்து பிறந்த தினம்தான் இன்று. சமாதானத்துக்காக மானுட அமைதிக்காக தன் சொல்லாலும், செயலாலும், ஜீவனாலும் நற்பணி புரிந்த எமது ஆண்டவர் அதற்காகவே தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார் என்பதே அவரது வாழ்வுகாட்டும் சிறப்பாகும். மேசியாவாகிய இயேசு பிறந்ததோ வறிய ஒரு குடும்பத்திலேயே. அதுவும் அகஸ்து அரசனிட்ட அராஜகக் கட்டளைப்படி யோசேப் தனது மனைவியான மரியாளுடன் தனது பிறப்பிடத்துக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் போர் சூழ்நிலை குறித்து நத்தார் செய்தியில் பாப்பரசர் கவலை வீரகேசரி நாளேடு வத்திக்கான் நகர், பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய் நத்தார் தின செய்தியில் இலங்கையின் போர்ச் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.சூடானிலிரு
-
- 5 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் இரண்டு சடலம் மீட்பு. [Tuesday December 25 2007 10:13:29 AM GMT] [pathma] வவுனியா றாகேந்திரகுளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கும் 9.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பொலிசாரால் இரண்டு ஆண்களின் சடலங்களை மீட்டுள்ளனர். இவ்விரு சடலங்களில் ஒருவருடைய உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றைய சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காணப்பட்டவர். ஐயம்பிள்ளை சடநந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன http://tamilwin.net/article.php?artiId=589...;token=dispNews
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களான மா, சீனி மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 820 views
-