ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளியேறியதன் மூலம் அரசாங்கத்தை காப்பாற்றியதற்காக ஜே.வி.பி.க்கு அரசாங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 673 views
-
-
அரசியல் மயப்படுத்தப்படும் விடுதலைப்புலிகள் விவகாரம் -கலைஞன்- விடுதலைப்புலிகளின் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை புலிகள் தொடர்பாக தமிழக ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வரும் செய்திகளால் தமிழக பொலிஸார் குழப்பநிலையடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்திய இராணுவ, கடற்படைத்தளபதிகளின் கருத்துக்கள் கடற்புலி முக்கியஸ்தர்களின் கைதுகள், அவர்கள் வெளியிட்டு வரும் பரபரப்புத் தகவல்கள் அது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் சூடான சுவாரஸ்யமான அறிக்கைகள் ஊடகங்களின் ஊகங்களென கடந்தவாரம் தமிழகமே பரபரப்பாகக் காணப்பட்டது…
-
- 0 replies
- 876 views
-
-
பெரும் போருக்கு கட்டியம் கூறும் `யுத்த பட்ஜெட்' டின் வெற்றி -விதுரன்- யுத்தத்திற்கான வரவு - செலவுத் திட்டத்தை அரசு நிறைவேற்றிவிட்டது.தென் பகுதி மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையை விட வடபகுதி மக்களை அடக்கியொடுக்கி அடிபணிய வைத்துவிட வேண்டுமென்பதில் இந்த அரசுடன் ஜே.வி.பி.யும் தீவிரம் காட்டியது. இதனால் தான், தமிழினத்தை கொன்று குவிப்பதற்கான வரவு -செலவுத்திட்டதிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மலையக மக்கள் முன்னணியும் ஆதரவளித்தபோதும், அரசு கவிழ்ந்துவிடக்கூடாதென்பதற்
-
- 0 replies
- 659 views
-
-
"தமிழரை தலைநிமிர வைக்கும் வெற்றி விரைவில்" திருப்பூர் மாநாட்டில் "உலகப் பெருந் தமிழர்" காசி ஆனந்தன் முழக்கம் தமிழர்களுக்கு உலகில் இரண்டு நாடுகள் தாய்நாடுகள். ஒன்று தமிழ்நாடு. மற்றொன்று தமிழீழ நாடு. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயசு, மியான்மர், தென்ஆப்ரிக்கா போன்றவை எல்லாம் பிழைக்கப் போன நாடுகள். இருந்தாலும் தமிழ்த் தேசிய இனமாக தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழ் இனமாக மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு போன்ற நாடுகளிலும் நாம் வாழ்ந்து வருகிறோம். இரு தேசிய இனங்களாக வாழ்கின்ற இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் நடக்கின்ற நிகழ்வு எந்த அளவுக்கு பக்கத்தில் உள்ள நாட்டில் எப்படி உலுக்கும் என்பதைச் சிவாசிலிங்கம் அவர்கள் பேசியபோது நீங்கள் எழுப்பிய கரவொலி காட்டிய உணர்வலைகள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு புன்னகை-கோடி கண்ணீர்த்துளிகள்- சூரிய தீபன் கிளிநொச்சி போயிருக்கிறீர்களா? தமிழீழத்தின் தலைமையிடமாய் தவிர்க்க முடியாத தற்காலிகத்தில் இயங்குகிற கிளிநொச்சி. பார்க்க வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது கொழும்பிலிருந்து அனுராத புரம் கடந்து, மதவாச்சி, வவுனியா, புளியங்குளம் தாண்டி, யாழ்ப்பாணம் செல்லுகிற ஏ-9 சாலையில் இருக்கிறது என்ற வெறும் நில அளவைக் கணக்கல்ல-அது. "அதிகாரத்தின் வளர்ச்சி தர்க்க ரீதியாக தவிர்க்க முடியாத வகையில் அதிகாரத்தை அழிக்கும் உணர்வையும் வளர்த்தெடுக்கிறது." - பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் ழான் போத்ரியா கூறுவதுபோல் இனவெறியின் அழிவு எங்கிருந்து நிகழப்போகிறதோ, அந்த மையத்தில் இருக்கிறது கிளிநொச்சி. ஆதிக்க மேலாண்மைகள் எப் …
-
- 1 reply
- 811 views
-
-
"தமிழன் வளம் பெறுவதே - தமிழ் வளர வழியாகும்" உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பழ. நெடுமாறன் தலைமையுரை இந்த ஆண்டு மாநாட்டினை எந்தத் தலைப்பை மையமாக வைத்து நடத்துவது என்று நாங்கள் யோசித்த போது இன்றைக்கு தமிழர்களின் தொழில் வணிக வளர்ச்சியை மையமாக வைத்து நடத்தலாம் என்று முடிவு செய்தோம். அரசியலும் பொருளாதாரமும் இணை பிரியாதவை-பிரிக்க முடியாதவை . எந்த ஒரு இனம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறதோ அந்த இனத்தின் மொழிக்கு ஒரு மரியாதை நிச்சயமாக ஏற்படும். இன்றைக்கு ஆங்கிலம் உலகம் பூராவும் செல்வாக்கு செலுத்துகிறது என்று சொன்னால் அதற்கு முதன்மையான காரணம் - பிரிட்டிசு ஏகாதிபத்தியம் பல நாடுகளை அடக்கி ஆண்டது, அங்கெல்லாம் ஆங்கிலத்தை அவர்கள் கட்டாயமாக்கினார்கள் என்பது ஒன்று.…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் சமாதானத்திற்கு சாவு மணி அடிப்பதில் சர்வதேசத்தின் பங்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் போரை விரும்புகின்றனர். கருத்துக்கணிப்பின் படி 87.3 வீதமான மக்கள் போரை விரும்புகின்றனர் என்று கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு உச்சகதியில் இருக்கும் இத்தருணத்தில் போருக்கான ஆதரவு என்பது எவ்வாறு சாத்தியம் என்று கேள்வி எழுகின்றது. வாழ்க்கைச் செலவுகள் உச்ச கதியில் இருப்பதே போருக்கான ஆதரவாக மாறுகின்றது என்பதும் ஒரு உண்மை. அரசு மீதான மக்களின் விசனத்தை போருக்கான ஆதரவாக மாற்றுவதே சிங்களத்தலைமையின் கெட்டித்தனமாக உள்ளது. வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு என்பது மக்களின் இழப்பாக கருதப்படுகின்றது இருந்தும் கிழக்கு வெற்றி என்…
-
- 5 replies
- 3.2k views
-
-
இளம் தமிழ் குடும்பஸ்தர் வெட்டிக் கொலைஆயிலியடிச்சேனையில் சம்பவம் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலி பாய்ந்த பாலம் ஆயிலியடிச் சேனை பகுதியில் வைத்து இளம் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கிரான் பிரதான வீதியின் குறுக்குத் தெருவொன்றில் வசித்து வந்ததாகக் கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா குணசேகரம் (33 வயது) என்றழைக்கப்படும் குடும்பஸ்தரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டவராவர். மேற்படி பிரதேசத்தில் கம்புகள் வெட்டி வருவதற்காக இவரும், இவருடைய நண்பன் ஒருவருமாக இருவரும் அங்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற இவர்கள் வயல் பிரதேசம் ஒன்றில் இருந்த மரம் ஒன்றில் கம்புகளை வெட்டிக் கொண்டிருக்கும்போது இவர் கூரிய ஆயுதம…
-
- 0 replies
- 838 views
-
-
''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் தொடரும் - ரணில் ''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் அடுத்தாண்டு சனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என ஜக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று ஹம்பகா மாவட்டத்தில் இடம்பெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் 52வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை அரசாங்கத்திடம் ஆதரவுடன் மகிந்த அரசாங்கம் பலாத்கார ஆட்சியை நடத்திவருகின்றது. ஊழல் மோசடிகள் நிறைந்த "ராஜபக்ஷ கம்பனி' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டத்தை ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ளோம். மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வீத…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 16-12-2007 22:24 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய இராணுவ உயர்குழு கொழும்பிற்கு பயணம் நாளை திங்கட்கிழமை மூன்று நாள் பயணமாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவக்குழு கொழும்பு செல்லவிருக்கிறது. இவர்கள் வான் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் இவர்கள் சிறீலங்காவின் வான் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்காவிற்கு நிபுணத்துவ உதவிகள் வழங்கக்கூடும் எனவும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பாக உடன்பாடு தொடர்பிலும் மீள்பரிசீலணை செய்யகூடும் எனவும் கொழும்பு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்குழுவினர் சிறீலங்காவின் உயர் பாதுகாப்பு அலுவலர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/ind…
-
- 16 replies
- 2.5k views
-
-
ஞாயிறு 16-12-2007 21:10 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீ லங்கா விமானப்படைக்கு விமான எதிர்த்தாக்குதல் நடத்தும் வலிமை இல்லை சிறீ லங்கா விமானப்படை வட பகுதியில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு, பாதுகாப்பாக தளத்திற்கு திரும்பும் வலிமையை பெற்றிருக்கின்றது. ஆனால் இரவில் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல்; நடாத்தும் வலிமை விமானப்படைக்குக் கிடையாது என தெரிய வருகின்றது. இரவில் விமான எதிர்ப்புத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வலுவை சிறீ லங்காவிற்கு வழங்க பல நாடுகள் தயாராகயில்லை. அதற்கான காரணம் பாரிய நிதித் தேவையே என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஐ.எ.என்.எஸ் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். தமீழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அநுராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சு.க. ஆராய்வு வீரகேசரி வாரவெளியீடு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான அநுர பண்டாரநாயக்க கலந்துகொள்ளாமை குறித்து அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக மத்திய செயற்குழு கூடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் இம்மாத இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் அதன்போதே இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அதுவரை திட்டவட்டமாக எதனையும் க…
-
- 3 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தினுள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழித்துவிடுவேன் என சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்போன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா இராணுவத்தின் தலைமையகத்தினுள் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் உரையாற்றும் போது சரத்பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழிப்பேன் எனவும் அனைவரும் தமக்கு தங்களால் இயன்றளவு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். நீண்ட அவரது உரையில் அவர் படைத்துறையில் ஊழலை ஒழிக்க அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி : பதிவு
-
- 9 replies
- 2.2k views
-
-
வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் வெற்றி பெற்றமை யுத்தவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் கிடைத்த வெற்றி. மங்கள சமரவீர [sunday December 16 2007 03:20:01 PM GMT] [யாழ் வாணன்] வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் வெற்றி பெற்றமை யுத்தவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் கிடைத்த வெற்றி யென முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2008 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்ட பிரேரணையின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்களிப்பில் வெற்றிபெறுவோமென்ற நம்பிக்கை எங்களிடம் இறுதி நேரம் வரை இருந்தது. நாட்டு மக்களிடமும் இந்நம்பிக்கை நீடித்தது. எனினும், ஜே.வி…
-
- 0 replies
- 697 views
-
-
சென்னை (ஏஜென்சி, ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2007 (16:15) 'இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால் குற்றமா?' என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 'விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் திருமாவளவன் உள்பட யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கக் கூடாது' என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் காட்டமாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து திருமாவளவன் கூறியதாவது: இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. அதை மறுபடியும் நீட்டிக்கத்தான் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரஸ்சியாவில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதனைத் தொடர்ந்து ரஸ்சியாவின் உயர்மட்டப் படை அதிகாரிகள் குழு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவிற்குச் சென்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த இரு போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 920 views
-
-
இலங்கை பயங்கரமான நாடு அங்கு பணிக்கு செல்ல வேண்டாம். ஐநா பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் சர்வதேச பணியாளர்களர்கள் பணிபுரிவதற்கு உகந்த நாடு இலங்கை அல்ல. அது பயங்கரமான நாடுகளாக கருதப்படும் நாடுகளில் ஒன்று. எனவே இலங்கையில் எதுவித பணிகளையும் மேற்கொள்ள முனைய வேண்டாம் என்று சர்வதேச பணியாளர்களாக ஐநாவில் பணியாற்றும் 13000 பணியாளர்களுக்கு அடுத்த வாரம் அறிவித்தல் ஒன்றை ஐநா காரியாலய பணியாளர் சம்மேளனம் விடுக்க இருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமை செயலாளர் நாயகம் ஜோன் கொல்ம்ஸ் அவர்கள் இது குறித்து ரொயிட்டருக்கு தெரிவித்திருந்ததற்கு அரச தரப்பு அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டமையும் நினைவிருக்கலாம். …
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் 13 ஆவது படையணியாக 59 ஆவது படையணி விரைவில் களமிறக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் பிரகடனப்படுத்தப்படாத நான்காம் கட்ட ஈழப்போரில் இது பிந்திய இணைப்பாகும். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் உள்ள "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் தாக்குதலை நடத்திய சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.9k views
-
-
வடக்கு-கிழக்கில் உள்ள நெடுஞ்சாலைகளைப் பாதுகாப்பதற்கு ஊர்காவல் படையினரை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 824 views
-
-
ஈழவேந்தனை நீக்கியது சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்படும் - த.தே.கூ. ஈழவேந்தன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் சிறீலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சிறீலங்கா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்குத் தாக்கல் குறித்து தற்போது ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 2008ம் ஆண்டு வரவு - செலவு வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாள…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து வந்த சிறிலங்காத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன்னை ஹீத்துரு வானூர்தி நிலையத்தில் வரவேற்க வந்ததையும், அவரின் பெயரையும் பிரித்தானியா அதிகாரிகளின் விசாரணைகளின் போது கருணா தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவில் என்னை கொல்ல முயற்சித்தது பிராந்திய உளவு நிறுவனம்தான்- விடுதலைப் புலிகள் அல்ல: முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் சிறிலங்காவில் தன்னைக் கொல்ல முயற்சித்தது பிராந்திய நாடு ஒன்றின் முக்கிய உளவு நிறுவனம்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என்று சிறிலங்காவிற்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசீர் வலி மொகமட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள சிறிலங்கா ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையின் வடக்குப் பகுதிக்குக் கூட நான் சென்று உள்ளேன். விடுதலைப் புலிகள் என்னைக் கொல்ல நினைத்திருந்தால் எந்த நேரத்திலும் என்னைக் கொன்றிருக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கிளைமோர் மூலம் கொல்ல முயற்சித்ததாகக் கூறப்பட்ட போதும் அண்டை நாடு ஒன்றின் முக்கிய உள…
-
- 0 replies
- 747 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க முடியாது என்று அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 773 views
-