ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
தேசிய மனித உரிமைகள் நிறுவனத்தின் செயற்திறன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணக்குழுவின் அலுவலகத்தை இலங்கையில் அமைப்பது தொடர்பான விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கடுமையாக மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 753 views
-
-
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 12 டிசம்பர் 2007 தமிழக காவல்துறையில் உளவுத்துறை என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் உதவியால் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த நபரும் தஞ்சாவூரில், அதுவும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டிலேயே 8 மாதங்கள் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் இங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அவர்கள் பல வகையிலும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் எனக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாளை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் அமைச்சர் பதவியைத் துறந்து, அரசிலிருந்து வெளியயேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமகன் தொண்டமான் தாயார். ஆனால், பிரதி அமைச்சர்கள் முத்து சிவலிங்கமும், செல்லச்சாமியுமே இ.தொ.கா. தலைமையை அரசைவிட்டு வெளியேறாமல் இழுத்துப்பிடிக்கின்றனர். இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசைக் கவிழ்ப்பது தொடர்பான திட்டங்கள், முயற்சிகள் எதிரணியால் முடுக்கி விடப்பட்டிருக்கும் பின்னணியில் இ.தொ.கா. இவ்விவகாரத்தில் தான் பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. கட்சிக்குள் நேற்றும் பல சுற்றுப் பேச்சுக்களில் அது ஈடுபட்டது. அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கைது செய்துவிட்டு அதே நேரத்தில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவழித் தமிழரான முரளிக்கு "திடீரென" வாகனத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசளித்ததாக காட்டிக்கொண்டமை ஒரு பிரச்சார உத்தி என்று பிரித்தானிய ஊடகமான "தி டெய்லிகிராப்" சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 686 views
-
-
இராணுவத் தீர்வு முயற்சியால் மரண ஓலங்களுக்கு முடிவோ நாட்டுக்கு விடிவோ கிடைக்காது [12 - December - 2007] * சிறுபான்மையினரை `போடுதடிகள்' என்று பெரும்பான்மையினர் நினைக்க இடமளிப்பது சாபக்கேடு வ.திருநாவுக்கரசு முத்தையா முரளிதரன் 709 ஆவது விக்கட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்து நாட்டுக்கு மிகுந்த பெருமையைத் தேடித்தந்துள்ளார். அதன் பொருட்டு அவர் ஜனாதிபதி மாளிகையில் வைத்து வெகுவாக கௌரவிக்கப்பட்டார். அடுத்தது குமார் சங்கக்கார "டெஸ்ட்" போட்டித் தொடரில் அதிகளவு ஓட்டங்களைப் பெற்று தற்போது உலகளாவிய ரீதியில் முதலாவது இடத்தினைப் பிடித்துள்ளார். அவர் படைத்துள்ள இந்த சாதனையும் நன்கு பாராட்டப்பட்டுள்ளது. எனவே, விளையாட்டுத்துறையினூடாக இலங்கை உலக வரை படத்தில் பொறிக்கப்படுவது …
-
- 0 replies
- 865 views
-
-
காவத்தமுனையில் மண்டையோடுகள் மீட்பு வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குழி ஒன்றில் இருந்து மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்குழியில் மண்டையோடுகள் தெரிந்ததை அறிந்த பிரதேசவாசிகள் நேற்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இம்மண்டையோடுகள் மீட்கப்பட்டன. இக்குழியின் அருகில் இருந்து சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இனம் தெரியாத ஆயுததாரிகள் ஆட்கடத்தல் சம்பங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே. இவ்வாறு …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐஸ்கிரீம் வியாபாரிகள்போல் குண்டு தாக்குதலை நடத்த புலிகள் திட்டம் பிரிகேடியர் நாணயக்கார எச்சரிக்கை வீரகேசரி நாளேடு துவிச்சக்கரவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் போன்று குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கும் வெடிபொருட்களை இடமாற்றம் செய்வதற்கும் விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களில் பெண் புலி உறுப்பினர்களே தலைமை தாங்குவதாகவும் புலிகள் இயக்கத்திற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவச் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், ஒர…
-
- 4 replies
- 1.6k views
-
-
புதன் 12-12-2007 22:02 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] மகாத்மா காந்தியின் பேத்தியார் சிறீ லங்காவிற்கு விஜயம் யப்பான் மற்றும் கம்பூச்சிய நாட்டைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும், இந்து மற்றும் இஸ்லாமிய சமயப் பெரியார்கள் முறையே இந்தியா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும், கிறிஸ்தவப் பெரியார்கள் நோர்வேயிலிருந்தும் மற்றும் சில மேற்கு நாடுகளிலிருந்தும் சிறீ லங்காவுக்கு வருகை தந்துள்ளனர். தென் ஆபிரிக்காவின் தேசிய காங்கிரசை பிரநிதித்துவப்படுத்தி மகாத்மா காந்தியின் பேத்தியார் எலா காந்தியும் இக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இச் சர்வ மதக்குழு இன்றும் நாளையும் யாழ்ப்பாண நூலகத்தில் இரண்டு பொதுக் கருத்தரங்குகளை நடத்துவர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&…
-
- 0 replies
- 973 views
-
-
புதன் 12-12-2007 22:11 மணி தமிழீழம் [தாயகன்] வான்படை ஒத்திகையால் வத்தளையில் குழப்பம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று இரவு அவதானிக்கப்பட்ட மின் விளக்குகள் எரியவிடாது பறந்த இரண்டு விமானங்களால் பதற்றம் தோன்றியுள்ளது. இரண்டு விமானங்களும் வானில் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வத்தளையின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு படையினரும் உசார் நிலையில் வைக்கப்பட்டதால் பதற்றம் இன்னும் அதிகரித்திருந்தது. ஆனால் தமது வான் படையின் விமானங்களே இரவுநேரப் பயற்சியில் ஈடுபட்டதாக கட்டுநாயக்க வான்படைக் கட்டுப்பாட்டு மையம் பின்னர் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 771 views
-
-
லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் விழிப்புலன் மாற்று வலுவுடைய போராளி அகமொழி எழுதிய மேஜர் பூவழகனின் வரலாற்றுப் பதிவான "மேஜர் பூவழகன் ஒரு வீர வரலாறு" நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 974 views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை கண்டல் பகுதியில் இன்று நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 905 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மிகப்பெரும் குழுவினர் ஜப்பான் சென்றமை குறித்து ஜப்பானிய ஊடகங்கள் தமது அதிர்ச்சிகளை வெளியிட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
கல்லா வெட்டுக்களாகும் கல்வெட்டுக்கள்-சு.சா.- 'கல்வெட்டுக்கள்" எனும் போது ஆதிகாலத்தில் தகவல்களை எதிர்காலச் சந்ததியினர் அறியும் பொருட்டு கற்களில் பொழிந்து வைத்தனர். அது தனிநபர் வரலாறுகளோ நாட்டின் வரலாறுகளாகவோ அமையும். 'இன்று கல்வெட்டு" எனும் பெயரில் நீத்தார் நினைவுகளை நினைவில் நிறுத்துவதற்கு புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. இவை சிறிய புத்தகங்களில் தொடங்கி ஐந்நூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்கள் வரை அமைகின்றன. இவை நீத்தாரின் குடும்பத்தவர்களாலோ நண்பர்களாலோ வெளியிடப்படுகின்றன. இதற்காகப் பெரும் நிதிச் செலவு செய்யப்படுகின்றது. பல புத்தகங்கள் சில பக்கங்களில் இறந்தவரின் வரலாற்றைக் கூறி ஏனைய பக்கங்களில் பயனுள்ள பல தகவல்கள் வெளியிடப் படுகின்றன. ஆனால் அப்புத…
-
- 0 replies
- 836 views
-
-
பலாத்காரமாக பௌத்த சின்னங்களை அழித்து கிழக்கில் காணிகளை முஸ்லிம்கள் சுவீகரித்துள்ளனர் - கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். எல்லாவெல மேதானந்த தேரர் [Wednesday December 12 2007 09:38:14 AM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த புராதன சின்னங்களை அழித்து பலாத்காரமாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை முஸ்லிம்களே சுவீகரித்துள்ளனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதில் உண்மையெதுவும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
குறைவான சுமை ஊர்திகளுக்கே இராணுவம் அனுமதி [புதன்கிழமை, 12 டிசெம்பர் 2007, 06:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி வந்து சேரவேண்டிய 755 சுமை ஊர்திகளில் 612 சுமை ஊர்திகளுக்கு மட்டும் சிறிலங்காப் படை ஓமந்தை சோதனை நிலையத்தில் அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி சுமை ஊர்தி சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உணவு மற்றும் எரிபொருள் வழங்கல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அரச செயலகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் முல்லைத்தீவுக்கு வந்து சேரவேண்டிய 330 சுமை ஊர்திகளில் 253 சுமை ஊர்திகளே உணவுப் பொருட்களுடன் வந்து சேர்ந்துள்ளன. 77 சுமை ஊர்திகளுக்கு சிறிலங்காப் படையினர் அனுமதி வழங்கவில்லை. புதினம்
-
- 0 replies
- 692 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் செம்மலைப்பகுதி மீது சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சில் "அப்பாவி பொதுமக்கள்" இருவர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 587 views
-
-
தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர்தான் எனினும் பயங்கரவாதிகள் அனைவரும் தமிழர்களே என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும், பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-
-
ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கிவரும் கடன் தொகை 31 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
பிள்ளையான் குழு மகிந்தவின் ஏவலாளிகயாவும் கைக்கூலியாகவும் செயற்படுகின்றது - ரணில். மகிந்த அரசாங்கத்தின் கைக்கூலியாக பிள்ளையான் குழு இயங்குவதாக ஜக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இன்று ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகோத்தாவில் வைத்து உரையாற்றிய ரணில் விக்கிரசிங்க, பிள்ளையான் குழு தன்னிச்சையாக இயங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மாறாக பிள்ளயைான் குழு மகிந்த அரசாங்கத்தின் ஏவலாளியாகவும் கைக்கூலியாகவும் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார் Pathivu
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவில் தேசிய நாடாளுமன்றத்தை அமைக்க தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 825 views
-
-
அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்வதற்கு மன்னிப்புக் கிடையாது என்று அரச பயங்கரவாதத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
தற்போது கிடைத்த செய்தியின் படி அமைச்சர் ரவூப் ஹகிம் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு நாடாளுமன்ற எதிர்த் தரப்புக்கு வரிசையில் அமர்ந்தள்ளார். இவருடன் பசீர் சேகுதாவுத்,ஹஸன் அலி,பய்சால் காசிம் ஆகியோரும் அரசை விட்டு விலகி எதிர்த்தரப்பு ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக அறியவருகின்றது. ஜானா
-
- 0 replies
- 950 views
-
-
பிரதம நீதியரசர் உரைத்த நீதி தலைவர்களின் காதுகளில் விழுமா? 12.12.2007 யுத்த முனைப்பிலும் போர்த் தீவிரத்திலும் அவா கொண்டு அலையும் இலங்கை அரசுக்கு நல்ல சூடு கொடுக்கும் விதத்தில் முக்கிய கருத்து ஒன்றை முன்வைத்திருக்கின்றார் இலங்கையின் பிரதம நீதியரசர் சரத் நந்தன சில்வா. அதுவும் ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகள், இராஜ தந்திரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என உயர்மட்டத்தினர் பிரசன்னமாகியிருந்த சபையில் சர்வதேச மனித உரிமைகள் தினம் தொடர்பான நிகழ்வில், இலங்கையின் மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவையும்வைத்துக்கொண்
-
- 1 reply
- 959 views
-
-
சீன நாட்டு அமைச்சர் இன்று இலங்கை வருகை சீனக் கட்டுமானத்துறை அமைச்சர் வான்ங் கு அன்ங்ரா ஓ இன்று இலங்கைக்கு வரவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் வருகைதரவுள்ள சீன அமைச்சர் 15 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதம மந்திரி ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரையும் இவர் சந்திப்பார். மேலும், சீனா உதவியளித்துள்ள தனியார் மற்றும் அரசதுறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு விஜயம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதேவேளை, இலங்கையிலுள்ள சீன வர்த்தக மற்றும் கட்மானக் கம்பனிகளின் பிரதிநிதிகளையும் இவர் சந்திக்க…
-
- 0 replies
- 735 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ 'குடியரசுத்' தலைவரில்லை 'கொடிய அரசு" தலைவர் என்று த.தே.கூட்டமைப்பின் பா.உ எம்.கே. ஈழவேந்தன் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று பேசும் போதே இதனை அவர் தெரிவித்தார். மேலும் அண்மையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசத்தைச் சொந்தவர்கள் சுமார் 3,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் எண்ணிக்கயைல்ல முக்கியம். அரசின் செயற்பாடுகள்தான் முக்கியம். மஹிந்த குடியரசுத் தலைவர் அல்ல. அவர் ஒரு கொடிய அரசுத் தலைவர். இவ்வாறான நிலையில் 14ம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கின்றது. இதில் அரசை ஆதரித்து வாக்களித்தால் வரலாறு வசைபாடும். எதிராக வாக்களித்தால் வரலாறு புகழ்பாடும். தமிழாகளுக்கு அநீதி இழைக்கப்படும் போது, அரசிலிர…
-
- 5 replies
- 2.1k views
-