ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது. வெளியே பேசிக்கொள்ளவும் விரும்பாமல், அதேவேளை அதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாமல் புலம் பெயர் நாடுகளிலுள்ள பல தேசியப்பற்றாளர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள். என்னுடன் உரையாடுகின்ற பல அன்பர்கள் தமது இந்தப் புதிய கவலையை பல வடிவங்களிலும் வெளியிட்டும் வருகின்றார்கள். அவர்களது அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பது போன்று, மேலும் பல செய்திகளும் அறிக்கைகளும் பல்வேறு தளங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. …
-
- 45 replies
- 6.3k views
-
-
படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் பலி மூதூர், பாலத்தடிச்சேனையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 1.10 மணியளவில் ரோந்து சென்ற படையினரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் பலியான இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை http://www.tamilwin.net/
-
- 0 replies
- 939 views
-
-
சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடத்தப்படும் அபாய நிலை உள்ளதால் இது தொடர்பில் அனைத்துலக சமூகம் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-
-
ஜப்பான் அரசாங்கம் விவசாய அவிபிருத்திக்கு என்று ஒதுக்கீடு செய்த 300 மில்லியன் ரூபா நிதியில் சிறிலங்கா அரசாங்கப் படை நடவடிக்கைக்காக உழவூர்திகளை கொள்வனவு செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 934 views
-
-
சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைக்க ரணில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பக்கம் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 867 views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலி மாவீரர்களினது ஆயுதங்களை செயலிழக்கச் செய்யுமாறு அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
.வெள்ளி 23-11-2007 17:15 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி! வவுனியா செட்டிக்குளத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படையினரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் செட்டிக்குளத்ததில் சிறீலங்கா கால்ரோந்து அணி மீதே விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 652 views
-
-
வெள்ளி 23-11-2007 17:11 மணி தமிழீழம் [செந்தமிழ்] புதுக்குடியிருப்பில் அகோர வான்வழித் தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வன்னியில் இன்று அகோர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று காலை 6.45 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் பறப்பினை மேற்கொண்ட இரு மிக் மிகையொலி வானூர்த்திகள் 14 குண்டுகளை புதுக்குடியிருப்புப் பகுதியில் வீசியுள்ளன. இதனால் அச்சமடைந்த பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. pathivu.com
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6acf9c726942a1e
-
- 1 reply
- 2.2k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தமிழ்ச் செயற்பாட்டாளரான அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டமைக்கு சிறிலங்கா திடீரென எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.1k views
-
-
மன்னார் மாவட்டம் பேசாலையில் அமைந்துள்ள காவல்துறை நிலையம் மீது இன்று காலை கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆறு படகுகளில் வந்த கடற்புலிகள் காலை 8.00 மணியளவில் காவல்துறை நிலையம் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதேவேளை தலைமன்னார் கடற்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை தாம் முறியடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ஒரு படகு சேதமடைந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.
-
- 6 replies
- 3.1k views
-
-
Posted on : 2007-11-23 ஆட்சியின் நாணயக்கயிறை பிடித்திருக்கும் அதிகாரக் குழு "த லீடர்' வெளியீட்டகத்தின் அச்சகத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரி வித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, அது தொடர்பாகத் தாம் விடுத்த ஆங்கில அறிக்கை யில் ஒரு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருக் கிறார். அது இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக்க ஒன் றாக இருக்கின்றது. ""இன்று நாட்டை ஆளும் கும்பலினால் (ஒதணtச்) ஜன நாயக விழுமியங்களுக்கு மற்றோர் பேரடி விழுந்திருக் கின்றது'' என்று இந்தத் தாக்குதல் சம்பவத்தை விமர்சித்திருக்கின்றார் அவர். இந்த விமர்சனத்துக்கு அவர் தேர்ந்துள்ள சொல் "ஒதணtச்'. இது கவனிக்கத்தக்க ஓர் அம்சமாகும். ஆட்சி அதிகார…
-
- 0 replies
- 1k views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமனன் சிறீலங்கா குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு எதிராக அடிப்படை மனித உரிமைமீறல் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார். இன்று (வியாழக்கிமை) மாலை தொடுக்கப்பட்ட வழக்கில் 10 இலட்சம் ரூபா நட்டஈடாகத் தரவேண்டுமென வாமனனால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்னையும், தனது தாயாரையும் குற்றப்புலனாய்வுத் துறையினர் தமது வாகனத்தில் ஏற்றியதுடன், குற்றப் புலனாய்வுத்துறையின் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தமையால் தனது பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதை வாமனன் சுட்டிக்காட்டியுள்ளார். -Pathivu-
-
- 1 reply
- 1.3k views
-
-
தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் இசைப்பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆங்கிலப் பாடகரினால் பாடி "சுதந்திரக் கனவுகள்" (Dreams of Freedom) என்ற பெயரில் குறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறையில் புலிகளின் தாக்குதலில் மூன்று அதிரடிப்படையினர் பலி அம்பாறை வக்குமுட்டியாவில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இன்று வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற இத்தாக்குதலில் மூன்று சிறிலங்கா அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.puthinam.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழன் 22-11-2007 23:57 மணி தமிழீழம் [முகிலன்] தனியார் பேரூந்தில் குண்டு பொருத்தப்பட்ட ஆடை கண்டெடுப்பு கல்கிசை கிரிபத்கொட நோக்கி பயணம் செய்யும் 154 இலக்க பேரூந்தில் குண்டு பொருத்தப்பட்ட ஆடை ஒன்ற இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ் குண்டு பொருத்தப்பட்ட ஆடை பம்பலப்பிட்டி காவல்நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் இவ்வாகனத்தின் ஓட்டுனரும் நடத்துனரும் இக்குண்டு பொருத்தப்பட்ட ஆடையை கண்டதாகவும் பின்னர் காவல்துறையினர் அதனை செயலிழக்கச் செய்ததாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 22-11-2007 23:56 மணி தமிழீழம் [முகிலன்] மிதவாத தமிழர்களை அரவணைத்து அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை முன்வைக்குக - இந்தியா மிதவாத தமிழர்களை அரவணைத்து , அதிகாரப் பரவலாகக் திட்டத்தை முன்வைக்குமாறு, சிறீலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. உகண்டா தலைநகர் கம்பாலாவில், நேற்று சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, அதிகாரப் பரவலாக்க தீர்வு திட்டத்தை விரைவாக முன்வைத்து, இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரப் பரவலாகக் திட்டத்தை விரைவாக அமுல்ப் படுத்தப்படுவதன் ஊடாகவே, தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை, நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சிறலங்கா அரசா…
-
- 6 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சியின் வீடு மீது இன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ள்ளன. எனினும் இச்சம்பவத்தில் அவர் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட மாணவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 979 views
-
-
பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கேள்விகளுக்கு இனிமேல் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் அலுவலகத்தை மூட வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து இந்திய நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பெரியார் திராவிடர் கழகத்தின் ஆட்சிக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 875 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் "எல்லாளன் நடவடிக்கை"யில் அநுராதபுர சிறிலங்கா வான் படைத்தளத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளிப்படம் இன்று காண்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 6.2k views
-
-
போரில் விரைவான வெற்றி குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வளர்க்கும் அரசின் பிரசாரங்கள் [21 - November - 2007] * அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அல்லது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பலம்வாய்ந்த, உறுதியான சமாதான இயக்கமொன்று எம்மிடம் இல்லை. எமது எதிர்க்கட்சி ராஜபக்ஷ அரசாங்கத்தைவிட கூடுதலான அளவுக்கு போரில் நாட்டமுடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கிறது. கடுமையான இனக்குரோதச் சூழ்நிலைகளின் கீழ் சிவில் சமூக இயக்கங்கள் மிகவும் பலவீன மடைந்தவையாகக் காணப்படுகின்றன. கொழும்பிலும் வன்னியிலும் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானம் எடுக்கும் செயன்முறைகளில் தீர்க்கமான முறையில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய சர்வதேச சக்திகளும் …
-
- 1 reply
- 1.3k views
-