Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் கல்வியை தனியார் மயமாக்கும் மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இன்று முதல் ஜே.வி.பி.யின் பல்கலைக்கழக மாணவர்கள் "கறுப்பு வாரம்" கடைபிடிக்கின்றனர். மேலும் வாசிக்க

  2. நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட "உறவுகளைக் காப்போம்" நல்வாய்ப்புச் சீட்டிழுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க

  3. யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பொருட்களை நாகப்பட்டனம் கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் தானே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். யாழ் தீபகற்பத்தையும், இலங்கையின் இதர பகுதிகளையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால் யாழ் தீபகற்பத்திற்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை செல்வது தடைபட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் செயற்கையான உணவுப் பஞ்சம் உருவாக்கப்பட்டது. சரியான முறையில் உணவு, மருந்து கிடைக்காமல், ஏராளமான தமிழர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கிடைத்த உணவு…

  4. வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  5. யாழ்ப்பாணத்தில் சிறப்பு அடையாள அட்டைக்கான பதிவுகளை சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும் வாசிக்க

  6. இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்ற மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உதவிகளை வழங்க பொதுநல அமைப்புக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  7. சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்கும் கோரிக்கை வலுக்கிறது மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடர் இன்று சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆரம்பமாகின்றது. இச்சமயத்தில் இலங்கையில் மோசமாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றை அங்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தொட ரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத் தைப் பிடிக்கும் எனப் பல தரப்பினரும் எதிர் பார்க்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்று வரும் சட்டவிரோதமான ஆள்க…

  8. தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இன்னும் ஊக்கம் வேண்டும் நாடு மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் நிற்கின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல், இராணுவ, சமூக விவகாரங்களில் மிகச் சிக்கலானதொரு நேரத்தைத் தமிழினம் கடக்கும் வேளை இது. இந்தச் சமயத்தில் தேசிய ரீதியில் தமிழரினத்தின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களின் செயற்பாடும் போக்கும் சர்ச்சைக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம் இது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் 24 பிரதிநிதிகளில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்றைய இருவரான அரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரை ஒத்த தி. மகேஸ்வரன் எம். பியும் தமிழ்த…

  9. நாங்கள் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் சிறிலங்காப் படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி?: இளந்திரையன் போர்க்களத்தில் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் அரச படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார். சுவிசிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் "நிலவரம்" (07.09.07) ஏட்டின் 17 ஆவது இதழுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் அளித்துள்ள நேர்காணல்: http://www.eelampage.com/?cn=33340

  10. http://www.yarl.com/videoclips/view_video....52ed3d89a146b44

    • 3 replies
    • 1.5k views
  11. மகிந்த ராஜபக்சவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாளை திங்கட்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  12. திங்கள் 10-09-2007 02:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐக்கியதேசியக்கட்சியின் கண்டிபிரகடனத்தில் பொதுதேர்தலுக்கு கோரிக்கை ஐக்கிய தேசியக்கட்சியினர் கண்டி கெற்றம்பே ஸ்ரேடியத்தில் ஞாயிறு மதியம் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘கண்டித்தீர்மானத்தில்’ பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதா

  13. சிறிலங்கா அரசின் பாகுபாடான வெட்டுப்புள்ளிமுறை காரணமாக எமது இளந்தலைமுறை சோர்ந்துவிடக்கூடாது. அவர்கள் கல்வியில் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் நிதியை செலவிடுகின்றனர்" என்று நிதித்துறை வணிக ஒன்றியத்தலைவர் சொ.வெற்றியரசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  14. சிறிலங்கா வான் படையின் மிகையொலி வேகத்தாக்குதல் வானூர்திகள் இன்று மாலை வன்னிப் பகுதி மீது வட்டமிட்டுள்ளன. மேலும் வாசிக்க

  15. அரச வெற்றிடங்களை நிரப்புவதற்கு 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்படுகின்றது. ஜ வெள்ளிக்கிழமைஇ 7 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கிழக்கு மாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் உள்ள வெற்றிடங்களையும் குறிப்பாக கிராம உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் ஒருவர் மூன்று இலட்சம் ரூபா வரையான பணத்தை விண்ணப்பகாரர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஜெயானந்த மூர்த்தி சபையில் குற்றம்சாட்டினார். போட்டிப் பரீட்சையும் நேர்முகப் பரீட்சையும் வைத்து ஆட்கள் தெரிவு இடம்பெற்றாலும் அவ்வாறு தெரிவானவர்களிடம் பணம் பெறப்படுவதாகவும் அவர் எடுத்துக்கூறினார். வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விவாதத்தில் உள்நாட்டு அ…

  16. இந்தியாவிடம் ஈழத் தமிழர் இன்று எதிர்பார்ப்பது என்ன? என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேடு ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

  17. சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்ற போது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க

  18. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. கட்சிக்குள் பிளவுகள் தோன்றியுள்ளதாகவும், அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் எஸ்.தவராஜா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

  19. -விதுரன்- வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் அங்கு தங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் இறங்கியுள்ளனர். தாக்குதல் சமரை ஒருபுறம் தொடுத்தாலும் தற்காப்புச் சமர் குறித்தும் அவர்கள் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். மன்னார் சிலாவத்துறையில் கடந்தவாரம் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கையானது இதனை நன்கு தெளிவுபடுத்துகிறது. எதிரியை கொல்லைப்புறத்தில் வைத்துக் கொண்டு பெரும் படை நடவடிக்கைக்குச் செல்வது பேராபத்தென்பதை உணர்ந்தே, மிக நீண்ட காலத்தின் பின்னர் சிலாவத்துறை மற்றும் அதனையண்டிய பகுதிகளை படையினர் மீண்டும் கைப்பற்றினர். வடக்கை பொறுத்தவரை இன்று இரு பெரிய களமுனைகளுள்ளன. வன்னி மீதான படையெடுப்பு எப்படி அரசுக்கு முக்கியமோ …

  20. சிறிலங்கா வான்படைக்கான மிக் வானூர்தி கொள்வனவில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரின் நெருங்கிய உறவினரால உதயங்க வீரதுங்க ஆகியோர் எத்தகைய முறைகேடுகளைச் செய்தனர் என்று சிங்கள வார ஏடான "ஞாயிறு இருதின" அம்லப்படுத்தியுள்ளது. மேலும் வாசிக்க

  21. [09 - September - 2007] *திருச்சிக் கூட்டத்தில் வைகோ எச்சரிக்கை இந்திய மத்திய அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் கெடு கொடுக்கிறேன். அதற்குள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் எதிர்கால விளைவுகளும் விபரீதமாக இருக்கும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன் என்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். இலங்கைப் படையினரால் நடத்தப்படும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் படகு மூலம் அனுப்பும் தொடக்க நிகழ்வு திருச்சியில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , தமிழர் தேசிய இயக்கத் தலைவ…

  22. தனது அரசியல் ஆதாயங்களுக்காக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க, இராணுவ நடைவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தியிருந்தா

  23. [09 - September - 2007] -பீஷ்மர்- சென்றவாரம் பாராளுமன்றம் வட-கிழக்கு பற்றிய ஒரு சிறப்பு விவாதத்தினை நடத்தியபோது தொடக்க உரையை நிகழ்த்திய சம்பந்தன் வடக்கு - கிழக்கில் இராணுவமும் அரசு நிர்வாகமும் மேற்கொள்ளவுள்ள சில நடவடிக்கைகள் பற்றி வெட்ட வெளிச்சமாகவே பேசினார். பத்திரிகை நிருபர்கள் அப்பேச்சின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியது மாத்திரம் அல்லாது அடுத்த நாள் தமிழ் தினசரிகளில் சம்பந்தன் கூறிய சில விடயங்கள் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தன. அந்த உரை ஏற்படுத்திய தாக்கத்தின் தன்மை காரணமாக அரசாங்கம் அடுத்த நாளே அமைச்சவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகை மகாநாட்டிலும் சம்பந்தன் கூறியவற்றை அவை நடக்கப்போவதில்லையென்று மறுதலித்து கூறினார். பொறுப்புமிக்க ஒரு …

  24. [09 - September - 2007] பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினரின் திடீர் டில்லி விஜயம் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் கோதாபய குழுவினர் டில்லியில் வரவேற்கப்பட்டார்களா அல்லது வரழைக்கப்பட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கோதாபய குழுவினரின் விஜயம் தொடர்பாக இந்திய தரப்பு கடைப்பிடித்து வரும் மௌனமும் இதனை உறுதிப்படுத்துவதாகவேயுள்ளத

  25. வியாழன் 06-09-2007 02:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐரோப்பிய ஒன்றியம் அம்பாறையை மீள்நிர்மாணம் செய்வதற்கு 78 மில்லியன் யூரோ நிதியுதவு சிறீலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தலைவர் யூலியன் வில்சன் செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்ட அரசபிரதிநிதி கன்னங்கரவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் - அம்பாறை கூட்டுறவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியளவு வீதிகள் புனர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான பணமானது உள்ளுர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து இயங்கும் எட்டு உறுப்பினர்களுடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1.சியம்பலாந்துவ பொத்துவில் - அக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.