ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142802 topics in this forum
-
அனைத்துலக அளவிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி திரட்டலைத் தடுக்க தீவிரமாக முயற்சித்துவருகிறோம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமையன்று அவர் பேசியதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக நான் விளக்கி கூறினேன். புள்ளி விபரங்கள், தகவல்களை வழங்கினோம். அதன் அடிப்படையிலே புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டும் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த ஒருவரும் கனடாவில் பிரசாரங்களை மேற்…
-
- 1 reply
- 970 views
-
-
ராடார்களை இந்தியா வழங்கியமை பயங்கரவாத யுத்தத்தினை ஊக்குவிப்பதாகும்: செ.கஜேந்திரன் [வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007, 19:40 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்துக்கு ராடார்களை இந்திய அரசாங்கம் வழங்கியமையானது சிறிலங்காவின் பயங்கரவாத யுத்தத்தை ஊக்கப்படுத்துவதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்காவிற்கான யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சாடியுள்ளார். இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசுக்கு ராடர்களை இந்தியா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியினால் தமிழ் மக்கள் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சிறிலங்கா அரசானது சமாதான முயற்சிகளை புறந்தள்ளி விட்டு இராணுவத்தீர்வின் …
-
- 0 replies
- 675 views
-
-
உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான- மோசமான இடம் சிறிலங்காதான்: ஐ.நா. அதிகாரி சாடல் [வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007, 19:40 ஈழம்] [ப.தயாளினி] உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான- மோசமான இடமாக சிறிலங்காதான் உள்ளது என்று இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் சாடியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், துஸ்ப்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் …
-
- 0 replies
- 737 views
-
-
சிலாபம் நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நூற்றுக்கும்மேற்பட்ட வாக்கிடோக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் வந்த இவர் சிலாபம் நகரில் இறங்கிய சிறிது நேரத்திலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். மிகப்பெரிய பயணப் பொதியொன்றை இவர் தூக்கிச்சென்றுகொண்டிருந்தப
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே போன்ற ஒரு மோசமான இரட்டை வேடதாரியை உலகின் அரசியல் அரங்கு இதுவரை கண்டதே இல்லை! சிங்கள வெறித்தனத்தின் மறு உருவாகக் காட்சி அளிக்கும் அதிபர் ராஜபக்சே, எத்தகைய கோரத் தாண்டவத்தை (சுநபை டிக கூநசசடிச) கட்டவிழ்த்து விடுகிறார் என்பதற்கு அண்மைக் காலத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்த தமிழர்களை - (அவர்களில் பலரும் அங்கேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் குடியுரிமை உள்ள குடிமக்கள்) இராணுவத்தை ஏவிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றிடும் வெறித்தன நடவடிக்கையில் வெட்கம் சிறிதுமின்றி ஈடுபட்டதே சரியான சாட்சியமாகும். இலங்கை உச்சநீதிமன்றமும், அந்நாட்டு நாடாளுமன்றமும் (சிங்களர்களையே பெரிதும் கொண்ட அமைப்புகள்) `இது சட்ட விரோதம், நியாய விரோதம், மனித உரிமைப் பறிப…
-
- 2 replies
- 1.6k views
-
-
அக்கரைப்பற்று ஆலயயடி வேம்பு பகுதிகளில் மின்மாற்றிகளை மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இதனால் 3 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்துப்பாக்கி பிரயோகத்தையடுத்து குறித்த பகுதிக்கான மின் விநியொகம் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 835 views
-
-
யாழ். குடாநாட்டு மக்களின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர அரச அதிகாரிகளும் கல்விமான்களும் முன்வர வேண்டுமென யாழ். மாவட்ட பொதுஅமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்; யாழ். குடாநாட்டில் நாளும் பொழுதும் மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் பல்வேறு இராணுவ நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் இல்லாது அழிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டம், கடற்றொழில் தடை, பொருளாதார நெருக்கடிகள், உணவுத் தட்டுப்பாடு என பல்வேறு பாரிய பிரச்சினை…
-
- 0 replies
- 771 views
-
-
மாத்தறை பறவைகள் சரணாலயத்தின் அருகில் வைத்து மொனறாகலை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவருடன் அருகில் நின்ற மற்றொரு வர்த்தகர் இச்சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். தாம் இருவரும் வியாபார அலுவலாக மாத்தறைக்கு வந்ததாகவும் சரணாலயம் அருகில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென வந்த வெள்ளைவான் எமக்கு அருகில் நிறுத்தப்பட்டதும், அதில் இருந்த சிலர் அந்த வர்த்தகரை பலவந்தமாக பிடித்துவானில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது கப்பம் கேட்பதற்காக கடத்தப்பட்டிருக்கலாம் என கடத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச் சம்ப…
-
- 0 replies
- 995 views
-
-
கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தலை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக் குழு தேவையற்றது என்று அந்நாட்டு அமைச்சர் லக்ஸ்;மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கில் குடிசார் நிர்வாகத்தை தேர்தல் மூலம் அமைக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் சில சக்திகள் அதனைக் குழப்ப முயற்சிக்கின்றன. கிழக்கில் நடைபெறப்போகும் தேர்தல் குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை. சிறிலங்காவின் சட்டம், நீதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே மகிந்த அரசாங்கம் இத்தேர்தலை நடத்துகிறது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறிலங்காவ…
-
- 0 replies
- 975 views
-
-
மகிந்தவின் சீன விஜயத்தின் போது 56 மில்லியன் ரூபா செலவு ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சீன விஜயத்திற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் 56 மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் வேண்டுகோளை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளரா ஜெராஜ் பெர்னாண்டோ புள்ளே இந்த தகவலை நேற்றுப் பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 7ம் திகதி வரை மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் சீனாவிற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த பயணத்தின் போது 192 பேர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. -பதிவு
-
- 1 reply
- 854 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் ஆலோசகரும் மகிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்சவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையே நடந்த மோதல் எது என்பது குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் பசில் ராஜபக்சவுடன் முறுகலுக்குக் காரணமாக இருந்த இ.தொ.கா. வின் பிரதித் தலைவர் முத்து சிவலிங்கம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவது என்று முடிவெடுத்துள்ளோம். மகிந்த அரசாங்கத்தை விட்டு நாங்கள் விலகவில்லை. அமைச்சுப் பதவிகளையே வேண்டாம் என்று கூறியுள்ளோம். ஆனால் அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த சட்டமூலங்களுக்கு குறிப்பாக அவசரகாலச் சட்ட மூலத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். அமைச்சுப்பொறுப்புக்களை ம…
-
- 13 replies
- 3.5k views
-
-
வவுனியாவில் அதிரடித் தாக்குதல் - இரு படையினர் பலி [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 09, 2007 - 05:45 AM - GMT ] வவுனியா மாவட்டம், மாமைலன்குளம் பகுதியில் படையினரின் நிலைகள் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாமைலன்குளப்பகுதியில் அமைந்திருந்த ஊர்காவல் படையினரின் நிலைகள் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள படைத்தரப்பு இதன்போது படையாள் ஒருவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரு படையினரும், மூன்று ஊர்காவல் படையினரும் காயமடைந்துள்ளதாகவும் விபரம் வெளியிட்டுள்ளது. காயமடைந்தோர் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசை தோற்கடித்து மக்கள் கட்சியை உருவாக்கும் காலம் வந்துவிட்டது. Written by Pandaravanniyan - Aug 09, 2007 at 10:21 AM ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மக்கள் விரோ அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கத்தை விரைவில் ஏற்படுத்துவோம். இன்றைய அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையினை மீறிவிட்டது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இன்றிருபபுது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமல்ல ஐ.தே.கட்சி அரசாங்கமேயாகும். மக்களை கவனிக்காத அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து புதியதொரு மக்களாட்சியினை உருவாக்கும் காலம் வந்துவிட்டது என்றம் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்…
-
- 0 replies
- 867 views
-
-
Posted on : 2007-08-09 எல்லாவற்றுக்கும் குற்றச்சாட்டு தமிழர்களின் தரப்பின் மீதுதான் நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் உடலின் எந்தப் பாகத்தில் பட்டாலும், நாய் காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள். அப்படித்தான் இன்று தென்னிலங்கை அரசியல் கலாசாரமும். எந்த அரசியல் பிரச்சினையாயினும் தமக்கு சுய லாபம் ஈட்டுவதற்காக அவ்விடயத்தைத் தமிழர் தலையில் - இப்போதைய நிலையில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியான புலிகள் மீது - போடுவதுதான் தென் னிலங்கை அரசியல்வாதிகளின் சாமர்த்தியம். 'செட்டியார் நட்டம் ஊர் மேலே' என்பது போல - 'செல்லும் - செல்லாதது எல்லாம் செட்டியாரிடம்' என்பது போல - எல்லா விடயங்களிலும் குற்றத்தைப் புலிகள் மீது போட்டு தங்களை அரசியல் சுத்தவாளிகளாகக் காட்டுவத…
-
- 0 replies
- 1k views
-
-
தேரரின் ஆடம்பரக் காரும் அரசியல் சர்ச்சையும் இன்று நாட்டு மக்களை எண்ணற்ற பிரச்சினைகள் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் எந்தவொன்றையுமே தணிப்பதற்கான வழிவகைகளைக் காண்பதற்கு வக்கில்லாத அரசியல்வாதிகள் தங்களது சந்தர்ப்பவாத கட்சி அரசியலை நடத்துவதற்கு கூட, மக்களின் குறைந்த பட்ச ஆதரவையேனும் பெறுவதற்கு பயன்படுத்தக்கூடிய பிரச்சினை எதுவென்பதை தெரிவுசெய்ய முடியாதவர்களாக இருக்கும் பரிதாபத்தைக் காண்கின்றோம். தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் அனுமதிப் பத்திரத்தை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மெத்தானந்த தேரர் துஷ்பிரயோகம் செய்ததாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐ.நா. அதிகாரி இன்று இலங்கை வருகை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் இன்று பங்கேற்கிறார். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் ஹோல்ம்ஸ் அங்கு மனிதாபிமான நிலைமைகளை ஆராய்கிறார். தொடர்ந்து மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்துக்கு புதன்கிழமை அவர் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்கா அரச தலைவர்…
-
- 8 replies
- 1.6k views
-
-
10 ஆயிரம் குளங்கள் புணரமைப்புத் திட்டத்தில் ஜேவிபியால் பல லட்சம் ரூபாக்கள் மோசடி ஜே.வி.பியினால் ஆரம்பிக்கப்பட்ட 10000 குளங்களை புணரமைக்கும் திட்டத்தில் முறை கேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுர குமார திஸநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்த காலத்தில் விவசாய அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில் பல இலட்சக்கணக்கான ரூபாய பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இடம்பெற்ற முறை கேடுகள் குறித்து பூரண விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் முடிவில் முன்னாள் அமைச்சர் அனுர குமார திஸநாயக்காவால் மேற்கொள்ளப்பட்ட முறை கேடுகள் முழுமையாக …
-
- 0 replies
- 888 views
-
-
மூதூரில் மூன்றாம் கட்டை மலையடி அகழ்வாராய்ச்சிப் பகுதியாக அறிவிப்பு இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூரை அடுத்துள்ள ஒரு சிறிய குன்றுப் பகுதி அகழ்வாராய்வு பகுதியாக திடீரென அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதியில் பல காலமாக கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்தப் பகுதியில் காணப்படுவதாகக் கூறப்படும் சிதிலங்கள் தமது மதங்களுக்கு உரியவை என்று பௌத்த, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதப்பிரிவினர் சிலர் உரிமை கோரியுள்ளனர். இந்த மலைப்பகுதி அகழ்வாராய்ச்சி திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டதாக திருகோனமலை அரச அதிபரால் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக மூதூர் பிரதேச செயலர் எம். ஏ. …
-
- 0 replies
- 919 views
-
-
வடபோர் முனையில் கடற்புலிகளை முறியடிக்க சர்வதேச உதவியை நாடும் அரசு தெற்கில் திடீர் அரசியல் மாற்றங்களேற்படலாமென்ற நிலை தோன்றியுள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் அரசிலிருந்து விலகிவிட எத்தனித்து வருவதால் எவ்வேளையிலும் அரசு பெரும்பான்மை பலத்தையிழந்து ஆட்சி கவிழலாமென்றதொரு நிலைமையேற்பட்டுள்ளது. இதனை ஆட்சியாளர்களும் எதிர்பார்த்திருப்பதால் அடுத்த தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அரசிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து பாராளுமன்றம் எவ்வேளையிலும் கலைக்கப்படலாமென்றதொரு நிலைமை உருவானது. இ.தொ.கா. திடீர் பல்டி அடித்து, மீண்டும் அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்ததன் மூலம் அரசு கவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்த மீதான மக்களின் வெறுப்பின் அளவை தேசிய காங்கிரசின் பேரணி எடுத்துக்காட்டியுள்ளது: "தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகை கொழும்பில் ஜூலை 26 ஆம் நாள் நடைபெற்ற தேசிய காங்கிரசின் முதலாவது பொதுப் பேரணியில் அது ஏறத்தாழ 50,000 மக்களை கவர்ந்திருந்தது. இது மகிந்த அரசு மீதான நம்பிக்கையீனத்தின் அளவை வெளிக்காட்டியிருந்தது என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகை தனது பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முழு விபரம் வருமாறு: சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசு மற்றுமொரு பின்னடைவை சந்தித்துள்ளது. அரசில் இணைந்திருந்த சிறுபான்மைக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. அது உறுதியானால், அண்மைய மாதங்களில் நாடாளுமன்றத்தில் அரச…
-
- 0 replies
- 609 views
-
-
அரசாங்கத்திலிருந்து விலகிய இ.தொ.க தனித்துவமாக செயற்படுவதற்கு முடிவு வீரகேசரி நாளேடு முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தனித்துவமாக இயங்குவதற்கு முடிவுசெய்துள்ளது. கொட்டகலையில் நேற்று கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா. விலகியதுடன் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட எம்.பி.க்கள் நேற்று முன்தினம் தமது அமைச்சுப் பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தனர். இ.தொ.கா.வின் திடீர் முடிவினையடுத்து அரசாங்க தரப்பிலிருந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை எதுவும் கைகூ…
-
- 9 replies
- 1.8k views
-
-
சட்டவிரோதக் கொலை, காணாமற் போகச் செய்தல் போன்ற கொடூரங்களுக்கு இலங்கை அரசைக் கடுமையாகச் சாடும் மனித உரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது. [Monday August 06 2007 06:50:03 AM GMT] [யாழ் வாணன்] இன்று இலங்கையில் இடம்பெறும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆள்களை வல்வந்தமாகக் காணாமற்போகச் செய்தல் மற்றும் அதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அர சைப் பொறுப்பாக்கி, கடுமையாகக் குற்றம் சுமத்தும் நீண்ட அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது. பிரபல்யம் பெற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம்(human rights watch) என்ற நிறுவனமே இந்த அறிக் கையை இன்று பகிரங்கப்படுத்தவிருக்கின்ற
-
- 7 replies
- 1.7k views
-
-
மன்னாரில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர் வானூர்திகள் குண்டுத் தாக்குதல் [புதன்கிழமை, 8 ஓகஸ்ட் 2007, 20:01 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் தெற்கு சிலாபத்துறை பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இன்று சிறிலங்கா வான் படையின் கிபீர் வானூர்திகள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. சிலாபத்துறை கொக்குப்படையான் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் மூன்று கிபீர் ரக வானூர்திகள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தின. இத்தாக்குதலில் பொதுமக்களின் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன. மன்னாரின் தெற்குப்பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்விடங்களை இலக்கு வைத்தே குண்…
-
- 0 replies
- 836 views
-
-
வடக்கில் புலிகளை தோற்கடிப்பதை தடுப்பதற்கு உலக ஏகாதிபத்தியவாதிகள் கடும் சூழ்ச்சி வீரகேசரி நாளேடு கிழக்கு மாகாணத்தில் புலிகளை தோற்கடித்துள்ள இராணுவம் வடக்கிற்கு சென்று விடக்கூடாது என்பதில் சர்வதேச சமூகம் மிகஅவதானமாக இருக்கின்றது என்பதுடன் வடக்கில் புலிகள் தோற்கடிக்கப்படுவதனை தடுக்க உலக ஏகாதிபத்தியவாதிகள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர், என்று ஜே.வி.பி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். பாரதூரமான மனித நேய நெருக்கடி கொண்ட நாடாக சர்வதேச சமூகத்திடம் இலங்கையை சித்தரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போது அதனை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் முதுகெலும்பு இல்லை, எனினும் எங்கோ செல்கின்ற பாம்பை நாட்டிற்குள் புகுத்தி கொண்டு குடையுது குடை…
-
- 1 reply
- 1.9k views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 4 சிறப்பு அதிரடிப்படையினர் பலி [புதன்கிழமை, 8 ஓகஸ்ட் 2007, 19:15 ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் இன்று தாக்குதல் நடவடிக்கைக்காக இறங்கிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தரப்பில் நால்வருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் இன்று புதன்கிழமை நண்பகல் தொடங்கி 1 மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலில் நால்வருக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பல படையினர் காயமடைந்துள்ளனர். இதனிடையே அம்பாறையில் பிறிதொரு இடத்தில் நடைபெற்ற மோதலில் ஐந்து அதிரடிப்படையினர் காய…
-
- 2 replies
- 1.4k views
-