ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
தடுமாறும் பொருளாதாரத்தை புலிகள் மேலும் தள்ளாட வைக்கலாம் மிகமோசமான பொருளாதார நெருக்கடிகளில் இலங் கைத்தீவு மூழ்கும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது. ஆனால் அந்தப் பேரிடர் பற்றிய விடயங்களை மூடி மறைத்து, தென்னிலங்கை மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இராணுவ வெற்றிகள் பற்றிய முழங்கல்களையும், பிரகடனங்களையும் முன்வைக்கின்றது கொழும்பு அரசு. இராணுவ வெற்றிகள் பற்றிய மாயைகள் கலைந்து, ஆரவாரங்கள் அடங்க, வயிற்றை வாழ்வை பிடுங்கும் அன்றாடப் பிரச்சினைகள் தம்மை பிணியாகப் பீடித்து உறுத்துவதை மக்கள் உணர்ந்தேயாக வேண்டியிருக் கும். அப்போதும் அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி, வேறுபுறம் சிரத்தையை வழி நடத்துவதற்காகப் புதிய ஆரவாரங்களை அரசு தேடும். தென்னிலங்கை மக்கள் ஏமாளிகளாக இருக்க…
-
- 0 replies
- 984 views
-
-
புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்கள் ஏற்படுத்தப்படாத குடும்பிமலை நடவடிக்கை ஒரு வெற்றியான நடவடிக்கை இல்லை என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிமலையை கைப்பற்றியதை பெருமெடுப்பில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (19.07.07) பலத்த பாதுகாப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு வரும் அரச தவைர் மகிந்த நல்ல நேரமான காலை 8.30 மணிக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட சிறிலங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வது: இணைத் தலைமைகள் அதிருப்தி மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்துள்ள தீர்வு யோசனைகள் குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமர்பித்துள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்றும் அதனை விட கூடுதல் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் வகையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும் இணைத்தலைமைகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகளின் மகாநாடு அண்மையில் நோர்வே தலைநகரில் நடைபெற்றது. …
-
- 0 replies
- 772 views
-
-
தொப்பிக்கல அரசியல் வியூகங்களுக்கான ஒரு புதிய களமுனை -டிட்டோ குகன்- இலங்கையின் தற்போதைய அரசியல் மேடையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்தாலும், அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டுமென்ற விடயத்தில் மட்டும் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துகளை கொண்டிருந்தாலும் அரசாங்கத்தை எதிர்ப்பதில் மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ ஒன்றுபட்டு விடுகின்றன. உதாரணமாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் தங்களுக்கிடையே அன்று தொடக்கம் இன்று வரை எப்போதுமே ஒத்துவராத கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் போதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்…
-
- 1 reply
- 904 views
-
-
புலிகளுக்கு உதவுவதாக தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையிடம் சிறிலங்கா முறைப்பாடு தமிழக மீனவர்களின் படகுகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்துகின்றனர் என்று இந்திய கடற்படையிடம் சிறிலங்கா கடற்படை முறையீடு செய்துள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்: தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து இருதரப்பினரும் ஆராய்ந்தனர். இந்தியாவிடமிருந்து சிறிலங்காவினால் கொள்வனவு செய்யப்பட்ட சுற்றுக் காவல் கலமான சயூராவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிறிலங்காவின் வடபகுதி கடற்படை கட்டளை தளபதி எஸ்.ஆர். சமரதுங்க, கொமாடோர் வான் ஹொல்டென், தமிழக கட…
-
- 0 replies
- 668 views
-
-
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஐ.தே.க. அமைக்கும் பொதுக்கூட்டணிக்கு இ.தொ.கா., மு.கா. ஆதரவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை மலரச் செய்யும்வகையில் பொதுக்கூட்டணி அமைக்கும் ஐ.தே.க.வின் முயற்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முழுமையான ஆதரவினை வழங்கும் என்று நம்புகின்றோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்து விரக்தியில் இருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களை ஆளும் தரப்புக்கு இழுக்க தீவிர முயற்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தம்பக்கம் இழுத்தெடுக்கும் தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அறியவருகிறது. இதனை அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்திய அதேவேளை, அமைச்சர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டனர். கிழக்கில் அரசாங்கம் தனது முழுக்கட்டுப்பாட்டினை நிலைநாட்டி, அங்கிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் நிலையிலேயே கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்தெடுத்து அமைச்சுப் பதவி வழங்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. கிழக்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டுள்ளதால் அரசாங்கத்துடன் இணையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …
-
- 3 replies
- 1.5k views
-
-
Posted on : 2007-07-15 புலிகளைச் சீண்டித் தூண்டும் அரசுத் தரப்பின் கிண்டல்கள் நடக்கவே முடியாத இரண்டு விடயங்கள் குறித்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அறிவித் திருக்கின்றார். * கிழக்கை இராணுவ ரீதியில் வெற்றி கொண்டு மிகவும் பலம் வாய்ந்த நிலையில் அரசு இருக்கின்றது. இந்தப் பின்னணியில் நிபந்தனையற்ற முறையில் புலி களுடன் பேச்சு நடத்த அரசு தயார். * கிழக்கு மாகாணத்தை முழுதாக மீட்டுள்ள அரசு, அடுத்த மூன்று மாதத்திற்குள் அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளது. புலிகளும் அரசுடன் சமாதானம் செய்து கொண்டு அத்தேர்தலில் நிற்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். இவ்வாறு இரண்டு அம்சங்களைக் கூறியிருக்கின் றார் அமைச்சர் ஜெயராஜ். தொப்பிகல மீட்புடன் பலத்தின் உச்சிய…
-
- 3 replies
- 2.3k views
-
-
பாலமோட்டை இராணுவ ஊருவல் அணி மீது தாக்குதல்- ஒருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:18 ஈழம்] [தாயக செய்தியாளர்] வவுனியா பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊடுருவல் அணிமீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு அவரது சடலமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பாலமோட்டைப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டபோது அதனை விடுதலைப்புலிகள் முறியடித்தனர். இதில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஓருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட இராணுவத்தினின் சடலம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரி56வகைத்துப்பாக்கி ஒன்றும் தொலைத்தொடர்புக்கருவி ஒன்றும் விடுதலைப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
பருத்தித்துறை தும்பளையில் கிளைமோர் தாக்குதல்: ஆசிரியர் பலி, இராணுவ உத்தியோகஸ்தர் படுகாயம். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளையில் 52ம் படைப்பிரிவின் உயரதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவரை பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை ஆசிரியர் ஒருவர் கோவிலுக்கு சென்றுவிட்டு அவ்வழியால் திரும்பும் போது அதிர்ச்சியில் இறந்துள்ளதாகவும் இறந்தவர் 51 அகவையுடைய மணியம் கணவதிப்பிள்ளை எனவும் சைவப்பிரகாச மகா வித்தியாலய ஆசிரியர் எனவும் தெரியவருகிறது. -Pathivu-
-
- 9 replies
- 2k views
-
-
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது சிறிலங்காவின் கிபீர் வானூர்தி [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 19:32 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் கிபீர் வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சுட்டுவீழ்த்தினர். வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு மேலாக இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் இன்று சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான கிபீர் வானூர்தியின் பாகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது. நொறுங்கிய நிலையில் வானூர்தி, சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் …
-
- 39 replies
- 9.3k views
-
-
திருகோணமலையில் புலிகளின் வான் தாக்குதல் நடைபெறக் கூடும்: கொழும்பு ஆங்கில ஊடகங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 13:34 ஈழம்] [சி.கனகரத்தினம்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான த நேசனில் வெளியாகியுள்ள செய்தி: சிறிலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளைத் தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் கடந்த வியாழக்கிழமையன்று பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதுகாப்பு சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்பிமலையில் புதன்கிழமையன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக "அதிர்ச்சிகள்" காத்திருக்கின்றன: புலிகளின் இராணுவப் பேச்சாளர். சிறிலங்காவுக்கு மேலதிக அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமான த நேசனுக்கு இராசையா இளந்திரையன் அளித்துள்ள நேர்காணல்: சிறிலங்கா அரசாங்கமானது இரண்டு தடங்களில் பயணிக்கிறது. போர் ஒருபுறம் என்றும் மறுபுறம் அமைதி என்றும் கூறிவருகிறது. இரண்டையும் அடையக்கூடிய சாத்தியம் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் இல்லை என்கின்றனர். புலிகள் எங்கும் இருப்பார்கள். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் நாம் நிலைகொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்குத் தெரியாது. சிறிலங்கா அரசாங்கமானது …
-
- 2 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான விமானம் திருகோணமலை கடற்பிரதேச பகுதியில் பறந்ததாக ராடார் உறுதிப்படுத்தியதோடு இலங்கை கடற்படையினரும் உறுதி செய்துள்ளனர். பல பொதுமக்களும் இதனை கண்டுள்ளனர். Tiger aircraft flies over Trincomalee! http://www.lankatruth.com/full_story/2007/...20070714_01.htm
-
- 3 replies
- 1.9k views
-
-
தொப்பிக்கல நடவடிக்கையும் தொடரப்போகும் தாக்குதல்களும்! [15 - July - 2007] *குடும்பிமலை (தொப்பிகல) அரச படைகளால் கைப்பற்றப்பட்டமை குறித்தும் அதன் பின்னர் தொடரக்கூடிய இராணுவ முன்னெடுப்புகள் குறித்தும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில்: சோ.ஜெயமுரளி கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த தொப்பிகல (Baron's Cap) எனும் கடைசி பலம்மிக்க தளத்தையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றிவிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அலட்டிக்கொள்ளாத அறிவிப்…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஞாயிறு 15-07-2007 12:21 மணி தமிழீழம் [சிறீதரன்] முன்னாள் விமானப்படை அதிகாரி கஜநாயக்கா உயிருக்கு அச்சுறுத்தல் ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. தற்போது குற்றப்புலனாய்வு துறையின் விசாரணையில் உள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியான கஜநாயக்கா விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் விடுதலை செய்யப்பட்டால் அவரை படுகொலை செய்யவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணையின் போது ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய அரசாங்க தரப்பு முக்கியஸ்தர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 15-07-2007 12:19 மணி தமிழீழம் [சிறீதரன்] ஏ.எச்.எம் பௌசியும் அவருடைய மகனான நவ்சாட் பௌசியும் ஐக்கிய தேசிய கட்சியில்? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தரும் எரிபொருள் துறை அமைச்ருமான ஏ.எச்.எம் பௌசியும் அவருடைய மகனான நவ்சாட் பௌசியும் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பொரல பிரதேச அமைப்பாளர் பதவியை ஏ.எச்.எம் பௌசிக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை மிது பௌசி கடுமையான அதிருப்தி அடைந்துள்ளதாகவும் விரைவில் அவர் கட்சி மாறுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கில் தேர்தல் நடத்த சாத்தியமே இல்லை: பவ்ரெல் சாடல் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 10:43 ஈழம்] [சி.கனகரத்தினம்] கிழக்குப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமே இல்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரெல் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தேர்தல் ஆணையமோ தேர்தல் நடத்துவது குறித்து தனித்து முடிவெடுத்துவிட முடியாது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கிழக்கில் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பான ப…
-
- 0 replies
- 904 views
-
-
Posted on : Sun Jul 15 8:12:50 EEST 2007 சமஷ்டி முறையிலான தீர்வைக் கொண்டு வந்தாலேயே தமிழர்களும் தொப்பிகல வெற்றியை அனுபவிக்கலாம் நீதி அமைச்சர் டிலான் பெரேரா தொப்பிலக வெற்றி தமிழ் மக்களுக்கும் வெற்றியாக அமைய வேண்டுமானால் இந்திய மாதிரியை ஒத்த சமஷ்டி முறையை கொண்டுவர நடவடிக்கை முயற்சி எடுக்கப்படவேண்டும். நீதி அமைச்சர் டிலான் பெரேரா மேற் கண்டவாறு கருத்து வெளி யிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தொப்பிகல முகாமை மீட்டமைக்கான வெற்றியை சிங்கள மக் கள் கொண்டாடலாம். மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ஆனால் அதனால் பயன் எது வும் ஏற்படமாட்டாது. தொப்பிகல வெற்றி யதார்த்தமாக வேண் டுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களுக்கா…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் ஐ.நா. பயணத்தின் போது மனித உரிமை அவலங்களை அம்பலப்படுத்த அனைத்துலக அமைப்புக்கள் முடிவு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச செல்லும்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் அவலங்களை அம்பலப்படுத்த பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக்கூட்டத்துக்கு பங்கேற்க செப்ரெம்பர் மாதத்தில் மகிந்த ராஜபக்ச வாசிங்ரன் செல்லும்போது சிறிலங்கா தொடர்பிலான விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது. செப்ரெம்பர் 25 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் தொடங்குகிறது. பாரிய அளவிலான அரசியல் மற்றும் ஊடக முக்கியத்துவம் வா…
-
- 0 replies
- 842 views
-
-
லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது. லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர். தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர…
-
- 10 replies
- 2.2k views
-
-
ஞாயிறு 15-07-2007 00:37 மணி தமிழீழம் [மயூரன்] வான்புலிகள் அச்சத்தால் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையின் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மத்திய மலைநாட்டின் கண்டி நகரில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்க அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்படடிருந்தது. கடந்த 12ம் திகதியும் நேற்றும் விடுதலைப்புலிகளின் வான் படைக்கு சொந்தமான விமானங்கள் வான்பறப்பில் ஈடுபட்டமை அவதானிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினரால் கண்டியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த கருத்தரங்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஞாயிறு 15-07-2007 05:05 மணி தமிழீழம் [சிறீதரன்] தென்மராட்சியில் எறிகணைப்பரிமாற்றத்தில் சிறீலங்காபடையினர் பலர் பலி? வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் எறிகணை வீச்சுப்பரிமாற்றத்தில் அநேக சிறீலங்கா படையினர் தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் இதுதொடர்பில் எதுவித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. விடுதலைப்புலிகளின் எறிகணைகள் சிறீலங்கா இராணுவத்தின் எழுதுமட்டுவாள்இ உசன், மிருசுவில் பகுதிகளில் விழுந்து வெடித்திலேயே பலத்த சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 574 views
-
-
ஞாயிறு 15-07-2007 03:45 மணி தமிழீழம் [மயூரன்] இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் விரைவில் - சிறீலங்கா சமாதானச் செயலகம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் விரைவில் முன்வைக்கப்படும் என சிறீலங்கா சமாதான செயலகம் அறிவித்துள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் இலங்கையில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுதிட்டம் விரைவில் வெளியிடப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் நீண்ட அறிக்கை ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 767 views
-
-
சனி 14-07-2007 23:37 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் அறிவித்தலை அடுத்து சிறீலங்கா பொருளாதராத்தில் பாரிய தாக்கம் ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப்புலிகள் அறிவித்துற்றமை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று தீடிரென வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி 111 ரூபா 80 சதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சில தினங்களில் டொலரின் பெறுமதி 120 ரூபாவரை உயர்வடையும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை பங்கு பரிவர்தனையும் நேற்றைய தினம் மிகவும் மந்தமடைந்துள்ளதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. …
-
- 1 reply
- 1.7k views
-