ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143532 topics in this forum
-
புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம்: மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "தமது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தனியரசு இலக்கை அடைய உள்ளதாக பரப்புரை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு இது. தங்களது பயங்கரவாதத்தாலும் வன்முறைகளாலும் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் ஒடுக்கி வருகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்கியதோடு ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது: வைகோ. ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் குற்றம் சுமத்தியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் எற்படுத்தியுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகா தனது கடுமையான கண்டனத்தை இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அந்த கடிதத்தல் இந்திய கடற்படையும் ஸ்ரீலங்கா கடற்படையும் தொலைத் தொடர்பு பரிவாத்தனை ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கூட்டாக மேற்கொள்ள தீர்மானித…
-
- 1 reply
- 1.1k views
-
-
தொப்பிகல வெற்றிக் கொண்டாட்டம் மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கை [17 - July - 2007] * போரில் வெற்றியீட்டிய அசோக சக்கரவர்த்தி பின்னர் போரையே வெறுத்தவராக, பௌத்த தர்மத்தை பரப்புவதற்குத் தலைப்பட்டார். அதன் பொருட்டு அவர் மகிந்த, சங்கமித்த இருவரையும் இலங்கைக்கே அனுப்பிவைத்தார். இன்று இலங்கையில் பௌத்தம் முதன்மையானது. அதற்கு அதி உயர் ஸ்தானம் வழங்கப்படவேண்டும் என அல்லும் பகலும் அலட்டித் திரிபவர்கள்தான் நடைமுறையில் அந்த அற்புதமான தத்துவத்தினை மிதித்து வருகின்றனர். யுத்த வியாபாரிகளாக விளங்குகின்றனர். * பாடசாலைகள் தோறும் மாணவர்களுக்கு பாற்சோறும் தேநீரும் பரிமாறப்பட வேண்டுமென அதிபர்களுக்கு சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்தின் மத்தியிலும் கூட சமாதானத்தை …
-
- 2 replies
- 1.1k views
-
-
பாலித்த கோகன்ன தலைமையிலான உயர்மட்டக் குழு பாகிஸ்தான் பயணம் சிறீலங்கா வெளிவிகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தலைமையிலான உயர் மட்ட குழு ஒன்று இன்று பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்வது குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்து குறித்தும் இந்த குழுவினர் பாகிஸ்தானிய அரசாங்க தரப்புடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்த விடயங்களை அதிகரிப்பதற்கான முயற்சியே வெளிவிவாகர அமைச்சு செயலாளரின் பாகிஸ்தானிய விஜயத்தின் முக்கிய நோக்கம் என பாகிஸ்தான் வெளிவிவாகர அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு
-
- 0 replies
- 955 views
-
-
சிறீலங்கா அரசாங்க ஊடகப் பேச்சாளர் யார் என்பதில் முரண்பாடுகள் நீடிப்பு சிறீலங்கா அரசாங்கதின் ஊடகப் பேச்சாளர் யார் என்பது தொடர்பான முரண்பாடுகள் தொடர்கின்றன. அண்மையில் ஜேர்மனிய தூதுவருக்கு எதிராக தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ஜெராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருந்தார். எனினும் தமது அரசாங்கம் ஜேர்மனிய தூதுவருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே என்று சிறீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோஹி போகொல்லா…
-
- 1 reply
- 1k views
-
-
சட்டத்துறையின் முக்கிய பிரமுகர்கள் குறித்து புலனாய்வுத் துறையினரால் விசாரணைகள் ஆரம்பம் ஸ்ரீலங்காவின் சட்டத்துறையின் முக்கிய பிரமுகர்கள் குறித்து ஸ்ரீலங்கா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான நிமால் திஸநாயக்கா,ராஜா பெர்னாண்டோ,நிமால் காமினி அமரதுங்க,அன்டுரு சோமவன்ச,ஜகத் பாலபட்டபென்டி,ஸ்ரீரானி திலகவர்தன ஆகியோர் தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தவாறனது என்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் பங்குகளை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதை தடை செய்வது குறித்தும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகள் ஸ்ரீலங்கா அரசாங…
-
- 0 replies
- 812 views
-
-
கொழும்பில் சிறிலங்கா வான்படையின் திடீர் பயிற்சி சிறிலங்கா வான்படை இன்று காலை கொழும்பில் பாரியளவிலான பயிற்சியில் ஈடுப்பட்டனர். கொழும்புத் துறைமுகத்தில் இருந்து போர்க்கலங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு கடலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 19ஆம் நாள் நடைபெற உள்ள குடும்பிமலை வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை பயிற்சி இது என சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா வான்படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்ததையடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. - புதினம்
-
- 0 replies
- 1.3k views
-
-
பண்ணைக் கடலில் மிதந்த பொதியில் ஆயுதங்கள்! பண்ணைக் கடல் பகுதியில் மிதந்துகொண் டிருந்த மர்மப் பொதியொன்றிலிருந்து படை யினர் ஒரு தொகை ஆயுதப் பொருள்களை மீட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணி யளவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்மப் பொதியினுள் நிலக்கண்ணி வெடிகள் 03, 40 மில்லிமீற்றர் அளவுடைய கைக் குண்டு வகைகள் 06, ரி56 ரகத் துப்பாக்கி ரவைகள் 73, ரி56 ரகத் துப்பாக்கி 01, மின்சாரம் ஏற்றும் பற்றரிவகைகள் 32, 13 மீற்றர் நீளமான வயர்ச்சுருள்கள், "றிமோல்ட் கொண்ட்றோல்' கருவி 01 மற்றும் அடை யாள அட்டைகள் போன்றவை காணப் பட்டன என்று படையினர் தெரிவித்தனர். -உதயன்
-
- 1 reply
- 2.9k views
-
-
யுத்த அவலம் நீங்க முன்னர் தேர்தல் என்ற அபத்த நாடகமா? தொப்பிகல காட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டி, கிழக்கு மாகாணத்தை முழுதாக விடுவித்து விட்டதாக மார்தட்டுகின்றது மஹிந்தரின் அரசு. "தேசத்தை மீட்டமை' பற்றிய பிரகடனம் அடங்கிய வெற்றிப்பட்டயத்தை நாளை மறுதினம் கொழும்பில் பெரும் எடுப்பில் நடைபெறும் கொண்டாட்டத் திரு விழாவில் வைத்து, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டின் தலைவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு பீரங்கி வேட்டுகள் தீர்த்து வரவேற்பு அளிக்கப்படவிருக் கின்றது. அதேசமயம் சுமார் எண்ணூறு படையினர் பங்குகொள்ளும் அணி வகுப்பு மரியாதையையும் இந்த "வீர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரச்சினைக்கு நியாயவழித் தீர்வு காண மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்புத் தூதுக் குழுவிடம் தெரிவிப்பு இலங்கை இனப்பிரச்சினையை நியாயமான வழியில் தீர்த்து வைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முதலிடம் கொடுத்து அதனைத் தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டுமாறு அரசிடம் எடுத்துரைக்கவும் அந்த நாடுகள் தயாராக உள்ளன. இதுவரை எட்டு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் உயர் ராஜ தந் திரிகளையும் சந்தித்துப் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு வட்டாரங்களில் இருந்து இது அறியவந்தது. யுத்தத்தைத் தவிர்த்து அமைதிப் பேச்சு மூலம் இலங்கைப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுவதைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மீட்பு வெற்றி விழாவில் வைத்து அறிவிப்பாராம் கிழக்கு மாகாணத்தை முற்றாக புலி களின் பிடியிலிருந்து விடுவித்தமை தொடர் பான அரசின் வெற்றி விழா நாளை மறு தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும். அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள் ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பை விடுப்பார். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல் கள் அமைச்சர் கரு ஜயசூரிய இத்தகவ லைத் தெரிவித்தார். மீட்கப்பட்ட கிழக்கு மாகாணம் பல பகுதிகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின் அபிவிருத்திக்கும் பொறுப்பாக ஒவ்வொரு அமைச்சர் நியமிக்கப்படுவார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். நேற்று கொழும்பில் அரச தக…
-
- 3 replies
- 1.5k views
-
-
திருமலையில் வர்த்தக வலயம் - பொதுமக்களின் காணிகள் அபகரிக்கும் திட்டம் திருகோணமலையில் வர்த்தக வலயம் அமைத்து, வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி, பொதுமக்களின் காணிகளை அபகரிக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. திருகோணமலை துறைமுகப் பகுதியில் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் வர்த்தக வலயம் அமைக்கப்பட இருப்பதாகவும், அதில் வெளிநாடுகள் பல மில்லியன் ரூபாய்களை முதலிட இருப்பதாகவும், சிறீலங்கா முதலீட்டு சபை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிழக்கில் 10 முதல் 30 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 வருடங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் சிறீலங்கா முதலீட்டு சபை கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டுள்ளது. அமெரிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் திருவிழாவாகும் குடும்பிமலை படை நடவடிக்கை -அருஸ் (வேல்ஸ்) இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையின் பெரும்பாலான தினசரிகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மேற்குப் பகுதியான குடும்பிமலை (தொப்பிக்கல) வெற்றிவிழா தொடர்பான செய்திகளே அதிகம் காணப்படுகின்றன. எப்போதும் தென்னிலங்கையின் அரசியல் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கும் போது படைநடவடிக்கைகள் முதன்மைப் படுத்தப்படுவதுண்டு. அதன் வெற்றி விழாக்களும் பெரும் எடுப்பில் நடத்தப்படுவதுண்டு. தற்போது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஏனைய கட்சிகளுடன் மேற்கொள்ளும் சூறாவளி சந்திப்புக்கள், வெளிநாட்டு பயணங்கள்,…
-
- 0 replies
- 1.3k views
-
-
'இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஈடுபடுத்தும் சதி' - இலங்கையுடன் தகவல் தொடர்பு இணைப்பா? இந்தியஇலங்கை கடற்படைகளுக்கு இடையே மேற்கொள்ளப் படவிருப்பதாக கூறப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை அரசுக்கு இந்தியா எந்த வகையிலும் உதவக்கூடாது என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியக் கடற்படையும், இலங்கை கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்குத் தொலை தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், கடந்த 13 ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்தி…
-
- 4 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:26 ஈழம்] [கொழும்பு நிருபர்] திருகோணணமலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் கேரத் அபயவீர அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 16 replies
- 3.5k views
-
-
பாலமோட்டையில் சிறப்பு இராணுவப் படையினர் விரட்டியடிப்பு: 4 இராணுவத்தினர் பலி- 6 பேர் காயம் [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:19 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டையில் இன்றும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு இராணுவப் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புத் தாக்குதல் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது விடுதலைப் புலிகள் அவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் அவர்களுக்கு இழப்புக…
-
- 1 reply
- 1.6k views
-
-
திங்கள் 16-07-2007 18:53 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய கடற்படை ஆலோசகர் கப்டன் பிரசாத் சிங் யாழ் விஜயம் யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய கடற்படை ஆலோசகர் கப்படன் பிரசாத் சிங் யாழ் குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வானூர்த்தி மூலம் பலாலி கூட்டுப்படைத் தளம் சென்றடைந்த இவர் காங்கேசன்துறை கடற்படைத் தளம் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீயுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரியவருகிறது. pathivu
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் கடத்தல்; சாரதி சுட்டுக் கொலை நமது நிருபர் வடமாகாண சபையின் பிரதம செயலாளரும், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருமாகிய எஸ்.ரங்கராஜனின் தாயாரது மரணவீட்டிற்குச் சென்ற இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் ஞாயிறன்று கடத்தப்பட்டு, சாரதி அன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிகுளத்தில் வசித்து வந்த வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளரின் தாயார் மரணமடைந்ததையடுத்து, அவரது இறுதிக்கிரியைகள் ஞாயிறன்று பண்டாரிகுளத்தில் நடைபெற்றன. இறந்தவரின் உறவினராகிய இந்து கலாசார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன…
-
- 0 replies
- 1.7k views
-
-
வடக்கு - கிழக்கு பிரச்சினை? [16 - July - 2007] தென்னிலங்கை அரசியலை இப்போது தொப்பிகல பிரதேசமே ஆக்கிரமித்து நிற்கிறது. இப்பிரதேசத்தை கடந்த வாரம் இராணுவத்தினர் கைப்பற்றியதை அடுத்து கிழக்கு மாகாணம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகரான வகையில் தேசிய அளவிலான வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பிரதான வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் தொப்பிகலவில் சாதித்ததைப் போன்ற மகத்தான வெற்றியை அரசாங்கப் படைகள் இதுவரை கண்டதில்லை…
-
- 0 replies
- 1.7k views
-
-
விகாரையை புனரமைக்க பணம் கொடுக்கததால் எல்லாவல மேதானந்த தேரருக்கு கொலை அச்சுறுத்தல் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9.30 மணியளவின் தொலைப்பேசிஊடாகவே இந்த மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த விஹாரையிலுள்ள விகாராதிபதி ஒருவர் பௌத்த விஹாரையை புனரமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாவை கோரியதாகவும் பல விஹாரைகளை புனரமைக்கவிருப்பதனால் அவ்வளவு பெரிய தொகையை தன்னால் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதணையடுத்தே தன்னை கொலைச்செய்ய…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகள் பதிலடிகொடுக்க முனைந்தால் அதனை எதிர்கொள்ள படைத்தரப்புத் தாயார் எனச்சவால் விடுத்துள்ளமை ரம்புக்கலவின் அறியாமையைக் காட்டுகிறது. புலிகள் பதிலடி கொடுக்க முனைந்தால் அதனைச்சந்திக்க படையனர் தயாரென பாதுகாப்பு விவகாரங்களுக்காகப் பேசவல்லவரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பது புலிகளின் போரியல் வரலாற்றை அறிநிதிருக்கவில்லை அல்லது மறந்துவிட்டுப்பேசுகிறார் என எண்ணவேண்டியுள்ளது. குடும்பிமலையைக் கைப்பற்றியவுடன் கிழக்கு மாகானத்தை முழமையாக படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டன
-
- 1 reply
- 2.3k views
-
-
புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது மிலேனியம் சிற்றியில் செயல்பட்டு வந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் ஆழ ஊடுருவி தாக்கும் பிரிவினை ஐக்கிய தேசிய கட்சி அம்பலப்படுத்தியமை போன்று தற்போதைய அரசும் படைத்துறை புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பிலும் அதன் புற நகர் பகுதிகளிலும் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து குற்றப் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஸ்ரீலங்கா புலனாய்வு துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்யது வருவது தமது செயல்பாடுகளை பாதிக்கும் என புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பின் பாதுகாப்பை …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் யாழ் குடாநட்டின் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளும் படையினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மேற்கொள்ளப்படும் எறிகணைகள் பளை எசன் எழுதுமட்டுவாள் மற்றும் மிருசுவில் போன்ற பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாகவும் இந்த பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் செறிவாக குவிக்கப்பட்டுள்ளதால் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா இரா…
-
- 1 reply
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முயல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியாவின் ஓமந்தை சோதனை சாவடி ஊடாக வன்னிக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மது ஸ்ரீலங்கா இராணுவம் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வன்னி பெருநிலப் பரப்பிற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை இரண்டு வாரங்களுக்கு போதுமான அத்தியாவசியப் பொருட்களே கையிருப்பில் இருப்பதாகவும் இராணுவ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருட்கள் தடையின்றி எடுத்துவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடக்கே வெடிக்கப் போகும் யுத்தம்! -விதுரன் - விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கு அரசு அவசரப்படவில்லை. அவர்களைத் தோற்கடித்த பின்பே பேச்சுகள் சாத்தியமென அரசு கூறுவதன் மூலம் வடக்கே பாரிய படை நடவடிக்கை மூலம் பலமானதொரு நிலையிலேயே பேச்சுக்குச் செல்ல அரசு முனைகிறது. இதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சமாதானமென்பது சாத்தியப்படாததொன்றென்பதால் இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக புலிகள் எச்சரித்திருப்பதன் மூலம் இனியெப்போதும் பலவீனமானதொரு நிலையில் பேச்சுகளுக்குச் செல்லப் போவதில்லையென்பதை புலிகளும் உணர்த்தியுள்ளனர். வடக்கில் நடைபெறப்போவதாக எதிர்பார்க்கப்படும் போர் இனிமேல் வடக்குடன் மட்டும் நின்றுவிடமாட்டாது…
-
- 0 replies
- 1.9k views
-