Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் விமானங்களை வலை வீசி பிடிக்க முடியுமா? கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை கொண்டு கொள்வனவு செய்த விமானங்களை பயன்படுத்தியே இன்று புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டனர். அந்த விமானங்களை வலை வீசி பிடிக்க போவதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அப்படி வலை வீசி பிடிக்க முடியுமா? என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சி சார்பாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் விமானத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை சீர் குலைந்தமைக்கும் இந்த அரசாங்கம் பொறுப்…

  2. கொழும்பு ஊர்வலத்தில் ஜே.வி.பி – பொலிஸார் இடையே முறுகல். Written by Ellalan - May 10, 2007 at 10:09 AM கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளை சந்திக்க விரும்பும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு அவருடைய அலுவலக வாசலில் வந்து காத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போனது கண்டனத்துக்குரியது என ஜே. வி. பி.யின் விமல் வீரவன்ச தெரிவிதிருக்கின்றார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிலங்கா அரசுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரித்தானிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியும் ஜே. வி. பி. யினர் நேற்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது த…

  3. யாழ். எம்.பி. கஜேந்திரனை கைது செய்யவேண்டும் ஜாதிக ஹெல உறுமய [Thursday May 10 2007 01:27:12 AM GMT] [virakesari.lk] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரனை கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான எல்லாவல மேதானந்த தேரர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.எல்லாவல மேதானந்த தேரர் உரையாற்றுவதற்கு முன்பாக கஜேந்திரன் எம்.பி உரையாற்றினார். அவர் தமதுரையில், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளும் புலிகளிடம் இருக்கின்றன. அந்தப் படைகள் எமது மக்களின் உரிமைகளுக்காகவும், எதி…

  4. சு.க.யோசனையை சபையில் கிழித்தெறிந்தார் யாழ். எம்.பி அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனையை சபையில் கிழித்து எறிந்தார். கடந்த 50 ஆண்டுகாலத்திற்கு முன்னர் பரீட்சிக்கப்பட்டு கைவிடப்பட்ட யோசனையை சுதந்திரக்கட்சி மீண்டும் தூசிதட்டி கொண்டு வந்ததன் மூலம் அவர்களின் பேரினவாத சிந்தனை வெளிப்பட்டு நிற்கின்றது என்று கூறி காரசாரமாக விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்திபேரினவாதத்த

  5. யாழ். மாணவர்களின் பிரச்சினைகளை நன்கறிவேன்'' யாழ்ப்பாணம், மே 10 ""யாழ்.மாவட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் உள்ள பிரச்சினைகளை நன்கு அறிவேன்.'' யாழ்.வந்த அமெரிக்க ராஜாங்க அமைச் சர் றிச்சார்ட் பௌச்சர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகையில் இவ்வாறு கூறினார். யு.எஸ்.எயிட் நிறுவன உதவியுடன் நடத்தப்பட்டு வரும் இப் பயிற்சி வகுப்பில் பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது: யாழ்.மக்களின் துன்பதுயரங்களை நான் நன்கு அறிந்துள்ளேன். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மாணவர்கள் கல்வியைத் தொடர் வதில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை யும் நன்கு அறிந்துள்ளேன் என்றும் அவர் சொன்னார் uthayan

  6. மேலதிக பாதுகாப்பு கோரி மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் [புதன்கிழமை, 9 மே 2007, 17:08 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தனக்கு மேலதிக பாதுகாப்பு அளிக்கக் கோரி மகிந்த் ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் அக்கடிதத்துக்கு மகிந்தவிடமிருந்து எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்று சந்திரிகாவின் செயலாளர் பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராவுக்கு சந்திரிகாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நிமல் சந்திரசிறி, பாதுகாப்பு தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்துக்குப் பதில் அனுப்பியுள்ள விக்டர் பெரேரா, அதிகபட்சமாக 7 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்…

  7. மனித உரிமை மீறல்களை நிறுத்த வெளிநாடுகள் அக்கறையுடன் உதவ வேண்டும் பொது அமைப்புகள் பௌச்சரிடம் வலியுறுத்து யாழ்ப்பாணம்,மே 10 குடாநாட்டில் மோசமடைந்துள்ள கடத்தல், கொலைகள், கைதுகள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த வெளிநாடுகள் அக்கறையுடன் உதவ வேண்டும் என்று பொது அமைப்பு கள் வலியுறுத்தியுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஒரு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌசருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்கண்டவாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ். பஸ்ரியன் ஹோட்டலில் நடந்த இச் சந்திப்பில் பொது அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்திய முக்கிய விடயங்கள் வருமாறு: * குடாநாட்டில் ஊரடங்கு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த…

  8. இணைத்தலைமை நாடுகளின் மாநாடு நாளை சிறீலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை கொழும்பில் சந்திக்கவுள்ளனர். அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சிறீலங்காவிற்குப் பயணம் செய்துள்ள நிலையில், றிச்சட் பௌச்சர் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஜப்பான், நோர்வே, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத் தூதரகத்தை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை விடயத்தில் அண்மைக் காலமாக அமைதிப் போக்கை கடைப்பிடித்துவந்த இணைத்தலைமை நாடுகள், மீண்டும் தமது சமாதான முயற்சிகளையும், அதற்கான அழுத்தங்களையும் ஆரம்பித்துள்ளன. சிறீலங…

  9. யாழில் ரிச்சர்ட் பௌச்சர் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். யாழ். பலாலி வான்படைத் தளத்துக்கு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் சிறப்பு வானூர்தி மூலம் ரிச்சர்ட் பௌச்சர் சென்றடைந்தார். அதன் பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் பலாலி சிறிலங்கா படைத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுடன் ரிச்சர்ட் பௌச்சர் ஆலோசனை நடத்தினார். யாழ். அரச செயலகத்துக்குச் சென்று அரச அதிபர் கணேசையும் ரிச்சர்ட் பௌச்சர் சந்தித்துப் பேசினார். யாழ். மாவட்ட நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட இச்சந்திப்பில் அரசாங்க உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். யாழ். நிலைமைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்கப் …

  10. விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வரும் ராஜபக்ச குடும்பம்: ஐ.தே.க. [வியாழக்கிழமை, 10 மே 2007, 06:36 ஈழம்] [அ.அருணாசலம்] எந்தவொரு உருப்படியான இராணுவ திட்டங்கள் இல்லாமலும், உயர் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறாமலும் மகிந்த அரசாங்கம், போரை நடத்தி வருவதுடன், ராஜபக்ச குடும்பம் விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளை ராஜபக்ச குடும்பம் பலப்படுத்தி வருவதுடன் பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கம், பலவீனப்பட்டும் வருகின்றது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்க…

  11. 'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன் "எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது." தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: "குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகா…

  12. புதன் 09-05-2007 21:29 மணி தமிழீழம் [மயூரன்] பாராளுமன்றில் வான்புலிகளின் தாக்குதலுக்கு த.தே.கூ வாழ்த்துத் தெரிவிப்பு வான்புலிகளின் வான்வெளித் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்றது. இதனைதத் தொடர்ந்து பாராளுமன்றில் பெரும் அமளிதுமளி இடம்பெற்றது. இங்கு நிமால் சிறீ பாலடி சில்வாவுக்கும் ரவி கருணாயக்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இன்று வான்புலிகள் தொடர்பான விவாதம் மிகவும் சூடாக இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியினர் கொதித்த வண்ணம் காணப்பட்டனர். எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆளும் கட்சியால் சரியான பதில் வழங்க முடியாத நேரத்தில் தமிழ்த் தேசியக் கூ…

  13. பிரித்தானியாவுக்கு எதிரான பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றது - பிரித்தானிய இராஜதந்தரி கடந்தவாரம் இலங்கை இனப்பிரச்சினை மற்றும் அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விடயங்களை பிரித்தானிய பாராளுமன்றில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரனைக்கு பிரித்தானியா உத்தியோகபூர்வ கருத்துகளை இதுவரை வழங்கவில்லை, உத்தியோகபூர்வமாக சிறீலங்காவுடன் தொடர்புகளை பேணவில்லை என பிரித்தானிய இராஜதந்திரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறீலங்காவில் பிரித்தானியாவுக்கு எதிராக முன்னெடுக்கும் பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள் எந்தவகையிலும் அர்த்தமற்றது எனவும் இராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளார். பதிவு

    • 6 replies
    • 2.4k views
  14. புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம்?: எதிர்க்கட்சி நா.உ. கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சி சார்பாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு கொள்வனவு செய்த வானூர்திகளைப் பயன்படுத்தியே இன்று விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்…

    • 2 replies
    • 950 views
  15. யாழில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு யாழ்பாணத்தில் காணாமல் போன பாடசாலை மானவர்கள் நால்வரையும் விடுவிக்குமாறு தமிழரசு கட்சியின் யாழ்மவட்ட பாராளுமன்ற உறுபினர்களும் யாழ் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இப்பாடசாலை மாணவர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை மாணவர்களும்,பொதுமக்களும் மேற்கொள்ளப்படுவார்களேன பாராளுமன்ற உறுபினர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ் நெட் இனையத்தளம் தெரிவித்துள்ளது. இதுவரை 4 பாடசாலை மாணவர்கள் வெள்ளை வான் ஆயுததாரிகளால் கடத்தப்படுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழு ஞாயிறன்று தெர்வித்துள்ளது. யாழ் இந்து கல்லூரி மாணவர்களான கொக்குவில் கி…

  16. சமாதான பேச்சு என்று கூறியே ரணில் புலிகளை அடக்கி வைத்திருந்தõர் ஆனால் ஜனாதிபதி யுத்தத்தை ஆரம்பித்து அவர்களை திறந்துவிட்டுள்ளார் விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் காரணமாக நாட்டு மக்கள் அச்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான காலத்தில் ரணில் தலைமையில் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடைத்து வைத்திருந்த புலிகளை இந்த அரசாங்கம் திறந்து விட்டுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/

    • 0 replies
    • 1.4k views
  17. கொழும்பில் அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவர் ரொவான் வில்லியம்ஸ் [புதன்கிழமை, 9 மே 2007, 20:54 ஈழம்] [ப.தயாளினி] இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரான ரொவான் வில்லியம் கொழும்பு வருகை தந்துள்ளார். தனது இலங்கைப் பயணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு இன்று புதன்கிழமை அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது: இலங்கையின் நிலைமைகளை அறிவதற்காக இங்கு வந்துள்ளோம். நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் இங்கு அமைதியை உருவாக்குவதற்கு எந்த வகையில் உதவுவது என முடிவெடுப்போம் என்றார். உலகம் முழுமைக்கும் உள்ள 77 மில்லியன் கிறிஸ்தவ அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவர் ரொவான் வில்லியம்ஸ் ஆவார். புதினம்

  18. கல்முனை அரிசி ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். [Wednesday May 09 2007 02:27:51 PM GMT] [யாழ் வாணன்] கல்முனை சாய்ந்தமருது பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கல்முனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவ்விபத்தில் சிறிலங்கா மின்சார சபைக்குச் சொந்தமான மின்மாற்றி தொகுதி ஒன்றும் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன தமிழ் வின்

  19. வெளிநாடுகள் தமது தீர்வுகளை இலங்கை மீது திணிக்கமுடியாது அவை அவசியமற்றவை என்கிறார் ஜனாதிபதி. இலங்கைப் பிரச்சினைக்கு வெளிநாடுகள் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது. சர்வதேசத்தினால் திணிக்கப்படும் தீர்வுகள் எமக்கு அவசியமற்றவை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அவர் இக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை மக்கள் இரத்தம் சிந்தியது போதும் அவர்கள் பலவகைகளாலும் பாதிக்கப்பட்டதும் போதும். இந்தப் பிரச் சினையை முடிவுக்குக்கொண்டுவந்தாக வேண்டும். அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே தீர்வு கண்டறியப்பட வேண்டும…

  20. விடுதலைப் புலிகளின் விமானங்களை "விமானப்படை' என அழைக்க வேண்டாம் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரம்புக்வெல வேண்டுகோள் கொழும்பு, மே,8 புலிகளுடைய விமானங்களை அவர்களது விமானப்படை என்று அழைக்காதீர்கள். ஊடகவியலாளர்களைப் பார்த்து இவ் வாறு வேண்டுகோள் விடுத்தார் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமாகிய கெஹலிய ரம்புக்வெல. இதனால் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட் டில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டு அது பின்னர் சர்ச்சையாக மாறியது. "இலங்கையில் சட்டபூர்வமாக ஒரு விமானப்படைதான் இருக்க முடியும். சில ஊடகங்கள் புலிகளின் விமானப்படை என குறிப் பிடுகின்றன. இது தவறு. ஊடகங்கள் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும்' என்று கெஹ லிய ரம்புக்வெல தெரிவித்தார். "அல்குவைதா' அமைப்பின் விமானங்களை "அல்குவைதா' வ…

  21. ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்குப் பயணம் சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை நாளை மறுதினம் மேற்கொள்ள இருக்கின்றார். சீன அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்படும் இநதப் பயணத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேலும் சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர். இலங்கையின் தற்கால அரசியல், பாதுகாப்பு, மற்றும் சிறீலங்கா அரசு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியினர் சீன அரசிற்கு எடுத்துக்கூற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு

  22. வெல்லாவெளியில் கால்ரோந்து அணி மீது தாக்குதல்: அதிரடிப்படை அதிகாரி பலி! அம்பாறை வெல்லாவெளிப் பகுதியில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் கால் ரோந்து அணிமீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கைக்குண்டுத் தாக்குகுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.20 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். கொல்லப்பட்ட அதிகாரியின் சடலம் களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் தேடுதல் நடத்தப்பட்ட போது தாக்குதலாளிகள் எவரும் இதுவரை பிடிபடவில்லை பதிவு

  23. யாழ் படை உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிபருடன் ரிச்சாட் பெளச்சர் சந்திப்பு அமெரிக்காவின் இராஜங்க துணைச் செயலர் ரிட்சாட் பெளச்சர் இன்று யாழ் குடாநாட்டுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று காலை பலாலி கூட்டுப்படைத் தளத்திற்கு விமான மூலம் சென்ற ரிச்சாட் பெளச்சர் அங்கு படை உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பலாலியிலிருந்து உலங்கு வானூர்த்தி மூலம் யாழ் நகரம் சென்ற ரிட்சாட் பெளச்சர் அங்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் அவர்களைச் சந்தித்து யாழ் குடாநாட்டு நிலமைகளை அறிந்துகொண்டார். சந்திப்பின் போது யாழ் குடாநாட்டின் நிலமைகள் குறித்த அறிக்கை ஒன்றையும் கே.கணேஸ் அவர்கள் ரிச்சாட் பெளச்சரிடம் கையளித்துள்ளார். இதில் குறிப்பாக கல்வி மற்…

    • 2 replies
    • 1.1k views
  24. இலங்கைக்கு ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் ஆயுத உதவியை பிரிட்டன் வழங்குகிறது. அதைப்பற்றி எவரும் கூச்சலிடவில்லையே என்கிறார் சுரேஷ் கொழும்பு, மே 9 இலங்கைக்கு ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் யுத்த தளபாடங்கள் போன்றவற்றை வழங்க பிரிட்டிஷ் நாடாளுமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினைபற்றி ஆராய்வது தொடர்பாக பிரிட் டிஷ் நாடாளுமன்றம் தீர்மானம் எடுத்தமைபற்றி நேற்று நாடாளு மன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை இடம்பெற்ற பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: இலங்கைப் பிரச்சினையை ஆராய்வதற்கு பிரிட்…

    • 2 replies
    • 1.7k views
  25. கொழும்பில் இரண்டு இளைஞர்கள் கடத்தல் கொழும்பில் நேற்றிரவு இரண்டு தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தெஹிவளை பதிய மாவத்தையில் வசித்த 26 வயதுடைய சற்குணராஜா சசீந்திரன் அவரது வேலைத் தளமான வெள்ளவத்தை, விஹாரை வீதியிலுள்ள சன்றைஸ் தொலைத்தொடர்பு நிலையத்தில் வைத்து நேற்றிரவு 11.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கொட்டஹேன மேஃபீல்ட் என்ற இடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து 29 வயதுடைய றொபின் றூஸ்ரர் என்ற மற்றொரு இளைஞர் நேற்றிரவு 10.00 மணியவில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். வெள்ளை சிற்றூந்தில் சென்ற 6ற்கும் மேற்பட்ட ஆயுத தாரிகளே இவர்களைக் கடத்திச் சென்றிருப்பதாக, பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.