ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார் நேற்றிரவு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு கொழும்பு, மே 9 இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்து சேர்ந்த மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச் சர் றிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். சமய மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும், அரச உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து, குடாநாட்டின் நிலைமை குறித்து கலந்துரையாடுவார் என்று தெரியவந்துள்ளது. அவர் நேற்றிரவு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகெல்லாகமவைச் சந்தித்து சமாதான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்துக் கலந்துரையாடினார். நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்கும் அவர் அன்று செய்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நோர்வேத் தூதுவரின் பயணத்திற்கு விடுதலைப் புலிகள் உத்தரவாதம் சாமாதான அனுசரனையாளர்களான நோர்வேத் தூதுவரின் கிளிநொச்சி பயணத்திற்கு தம்மால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது தடவையும் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் கைவிடப்பட்டதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்தனர். ஓமந்தையில் இருந்து எம்மால் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். நோர்வே தூதுவர் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆகியோரின் கிளிநொச்சிக்கான பயணத்தை பாதுகாப்பு காரணங்களை கூறி அரசு தடுத்துள்ளது. கிழக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஹிங்குராகொடவுக்கு சிறிலங்கா வான்படைத் தளம் மாற்றம்? [செவ்வாய்க்கிழமை, 8 மே 2007, 17:16 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து ஹிங்குராகொடவுக்கு சிறிலங்கா வான்படைத் தலைமையகம் மாற்றப்படக்கூடும் என தெரிகிறது. கட்டுநாயக்கவில் வான்படைத் தளம் இருப்பதால் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அது இலக்காகும் அதே நேரத்தில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க இம்முடிவை அரசாங்கம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் இறங்கி ஏறுவதற்கு கட்டுநாயக்க தவிர்ந்த ஏனைய வானூர்தி ஓடுபாதைகள் தகுதியானவை இல்லை. கிபீர் வானூர்திகள் இறங்கி ஏறுவதற்குரிய வகைய…
-
- 4 replies
- 1.9k views
-
-
'எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்': குமார் ரூபசிங்க "எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்" என்று சிறிலங்காவின் போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவரும், ஆய்வாளருமான குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் 'த ஐலன்ட்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "கடந்த மாதத்தில் அரசின் முக்கிய மையங்களை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பல தடவைகள் தாக்கிவிட்டு எதுவித சேதங்களும் இன்றி தளம் திரும்பிவிட்டன. முதாலாவது தாக்குதல் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நிகழ்த்தப்பட்டது. இது அதிகளவு சேதங்களை ஏற்படுத்தவில்லை. எனினும் அரசுக்கும், அன…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிராயச்சித்தம் செய்யுமா பிரிட்டன்? இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளுக்கு இடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத் துடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் உத் தேச மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக் கிடைக்க முன்னரே இந்த மாநாடு குறித்து பேச்சுகள் அடிபடும் ஆரம்ப நிலையிலேயே இத்தகைய முடிவை முந்திக் கொண்டு கொழும்பு விடுக்கும் என்று எண்ணப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதற்கென தனக்கென தனியான இராணுவத் தீர்வை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சி நிரல் ஒன்றை வகுத்து, அதன…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கில் மீண்டும் உணவுப் பற்றாக்குறை அபாயம்: உலக உணவு திட்டம் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு விநியோகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அது எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் உலக உணவு திட்ட அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் அப்பகுதி தலைவரான ஜெஃப் ரஃப்டிக் தெரிவித்துள்ளதாவது: புதிய நன்கொடைகள் இன்றி தற்போதுள்ள உணவுப் பொருட்கள் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. கொடையாளிகளினால் குறுகிய காலத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள் குறித்து நாம் திருப்பதி அடைந்துள்ளோம். ஆனால் நாம் நீண்டகால திட்டங்கள் குறித்து கவலை அடைந்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பதற்கு…
-
- 0 replies
- 886 views
-
-
அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய்: கொளத்தூர் தா.செ. மணி அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத விடுதலைப் புலிகள் புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளார். குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிரு இதழில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ள கருத்து: யாரோ ஓர் ஆறுபேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் கடல்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதனை எப்படி முடிவு செய்தார்கள் என்று இதுவரை அரசுத் தரப்பு வெளியில் சொல்லவில்லை. ஈழத்தமிழ் பேசுவதாலேயே அவர்களை புலிகள் என்று சொல்லிவிட முடியாது. விடுதலைப்புலிகள் அப்பாவி சிங்களப் பொது மக்களைக்கூ…
-
- 7 replies
- 1.6k views
-
-
கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர். சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கொழும்பிற்கு செல்லவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.05.07) செல்லும் இவர், இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தை பேச்சு மேசைக்கு திரும்பும் படியாக கடுமையான ஒரு செய்தியை அவர் எடுத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளை ரிச்சர்ட் பெளச்சர் சந்திப்பதுடன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள்…
-
- 8 replies
- 2.8k views
-
-
பிரித்தானிய அரசின் நிதி முடக்கம் கவலை தரவில்லை - சிறீலங்கா அரசு உதாசீனம் பிரித்தானிய அரசு, சிறீலங்கா அரசிற்கு வழங்குவதாக உறுயளித்திருந்த 5.9 மில்லியன் அமெரிக்க டொலரில், எஞ்சியுள்ள 3 மில்லியன் அமெரிக்க டொலரை தற்பொழுது வழங்க முடியாது என, கடந்த வாரம் அறிவித்திருந்தது. பிரித்தானியாவின் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் கறத் தோமஸ் இந்த அறிவித்தலை விடுத்ததுடன், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்கா வெளிவிகார அமைச்சர் றோஹித போகொல்லகம, பிரித்தானிய அரசின் இந்த நிதி முடக்கத்தை தமது அரசு ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை எனவும், இதில் தமது அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை…
-
- 2 replies
- 1.2k views
-
-
மன்னார் தம்பனையில் படையினரின் நகர்வு முறியடிப்பு, ஒரு சிப்பாயின் சடலம் மீட்பு: 2 போராளிகள் வீரச்சாவு. மன்னார் தம்பனைக்கு மேற்காக உள்ள குறிச்சுட்டகுளத்தில் சிறிலங்காப் படையினரின் முன் நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் குறிச்சுட்டகுளம் பகுதியில் முன் நகர்வை மேற்கொண்டனர். இம் முன் நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். முறியடிப்புத் தாக்குதலில் போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலம் விடுதலைப் பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
துணை இராணுவக் குழுவினரை அடக்க சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம். சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலைகளை நிகழ்த்தி வரும் துணை இராணுவக் குழுவினரை கட்டுப்படுத்தி வைக்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தனது இலங்கைப் பயணத்தை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ரிச்சர்ட் பௌச்சர், இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வு காண முடியாது என்று தெரிவித்திருந்தார். தற்போதைய இலங்கைப் பயணத்தின் போது சிறிலங்கா மீது கடுமையான அழுத்தங்களை அமெரிக்கா செலுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருது…
-
- 2 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 8 மே 2007, 17:53 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் இரு வானூர்திகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. புதுக்குடியிருப்பு கர்ணன் குடியிருப்புப் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இரு மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் ஏழு பிள்ளைகளின் தாயாரான கர்ணன் குடியிருப்பைச் சேர்ந்த மாரிமுத்து கனகம்மா என்பவர் காயமடைந்துள்ளார். தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் உட்பட பயன்தரு மரங்கள் ஆகியன சேதமடைந்துள்ளன. புதினம்
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 08-05-2007 16:57 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதிகள் ஒத்திவைப்பு இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான 2006 - 2007ம் ஆண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கும் நடவடிக்கை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ அறிவித்தள்ளது. கடந்த இரண்டு வாரமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் கல்வி சாரா ஊழியர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். நாளை புதிய மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு அனுமதிக்கும் செயல்பாடுகள் இடம் பெறுவதாக பல்கலைக்கழகத்திற்குத…
-
- 0 replies
- 851 views
-
-
செவ்வாய் 08-05-2007 16:14 மணி தமிழீழம் [மயூரன்] த.தே.கூ நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்படுகின்றன: பாராளுமன்றில் கேள்வி? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து கேள்வியெழுப்பிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மட்டக்களப்பு அம்பாலந்துறையில் தனது சொந்த வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளையும் மையப்படுத்தி சிறீலங்கா விடேச அதிரடிப்படையினர் பாரிய படை முகாமை ஒன்றை அமைந்து வருவதாகவும் இது மனித உரிமைளை மீறும் செயல் எனவும் இப்படைமுகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக…
-
- 0 replies
- 834 views
-
-
கம்பஹா, கணேமுல்லயில் தலையற்ற நிலையில் இரண்டு ஆண்களினதும் இரண்டு பெண்களினதும் முண்டங்கள் மீட்பு. கம்பஹா ,கணேமுல்ல பிரதேசத்தின் பொல்லத பகுதியில் அமைந்துள்ள குழியொன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் நான்கு சடலங்கள் நேற்றுக் காலை 10.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்களினதும் இரண்டு பெண்களினது சடலங்களுமே இவ்வாறு முண்டங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கணேமுல்ல பொலிசார் தெரிவித்தனர். இந்த நால்வரும் சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் சடலங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே கொலைசெய்யப்ட்டுள்ளதாகவும் இதனையடுத்து சடலங்கள் குழியினுள் போட்டு புதைக்கப் பட்டிருக்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 08-05-2007 15:45 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவில் இளைஞன் படையினரால் சுட்டுக்கொலை வவுனியாவில் இளைஞர் ஒருவர் சிறீலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உந்துறுளியில் வீதியால் சென்றுகொண்டிருந்த சமயமே அவ்விளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 765 views
-
-
ஐந்து படையினரின் சடலங்கள் புலிகளால் நேற்று ஒப்படைப்பு மன்னார்,மே8 மன்னார் வவுனியா வீதியை அண்டிய எல்லைப் புறக்கிராமங்களான பெரியதம்பனை மற்றும் பண்டிவிரிச் சான் பகுதிகளில் நேற்றுமுன்தினம் நடந்த மோதல்களின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஐந்து சிப் பாய்களின் சடலங்கள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக இராணுவத் தரப்பிடம் கையளிக்கப்பட்டன. நேற்றுமுன்தினம் காலைமுதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி படையினர் மேற் கொண்ட முன்னேற்ற முயற்சியை முறி யடித்து நடத்தப்பட்ட பதில் தாக்குத லின்போது இந்தச் சடலங்களை தாங் கள் கைப்பற்றினர் என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சனிக் கிழமை இரவு தெரிவித்தார். …
-
- 0 replies
- 904 views
-
-
வன்னியில் வேவு விமானம் அடிக்கடி பறப்பதாக கண்காணிப்புக் குழு குறை கூற முடியாது! மூக்கை நுழைப்பதாக அரசு குற்றச்சாட்டு கொழும்பு,மே8 விமானப் படையினரின் ஆளில்லா உளவு விமானங்கள் வன்னிப் பிரதேசத்தில் அடிக்கடி பறக்கின்றன என்று கூறுவதற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. வன்னிப் பகுதியில் விமானப் படையின் நடவடிக்கைகளை அரசு மேலும் அதிகரிக்கும். இதில் மூக்கை நுழைக்க யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல விசனம் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் நடைபெற்றது. அங்கு அமைச்சர் தொடர்ந்து தகவல் தருகையில் கூறியதாவது…
-
- 2 replies
- 1.6k views
-
-
வெளிநாடுகளில் ரணில் தெரிவிக்கும் கருத்து நாட்டைச் சீரழிப்பதற்கே வழிகோலும் விமல் வீரவன்ஸ ஆவேசம் கொழும்பு,மே8 ""ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க வெளிநாடுகளுக்குச் சென்று வெளியிட்டுவரும் கருத்துக்கள் நாட்டைச் சீரழிப்பதற்கே வழிகோலும்''. இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளு மன்ற குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள் ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதா வது: ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களை அற்பத்தன மாக அசாதாரணமாக தேசத்துரோகமானவையாக விவரிக்க முடியும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசு டன் …
-
- 0 replies
- 934 views
-
-
கருணா-பிள்ளையான் மோதலால் மட்டக்களப்பில் வீடுகள் உடைப்பு!! ஜ திங்கட்கிழமைஇ 7 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ பிள்ளையானின் முக்கிய நபர்களான சித்தாமாஸடர் வீடு, கல்விக்கந்தோருக்கு அருகில் இருக்கிறது. கருணாவின் மொட்டை மாமா தலைமையில் சென்ற குழு இவரது வீட்டுக்குச் சென்று விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எடுக்க முடியாத பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்றனர். இதே குழு, சிங்களவாடி அனுமான் கோவிலுக்கு அருகில் இருக்கும் சீலனின் வீட்டுக்குச் சென்று பெறுமதி மிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அடித்து நொறுக்கிவிட்டு சீலனின் மனைவியைக் கடத்திச் சென்றுள்னர் என்று தெரியவருகிறது. 3ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் சீலன் காயமடைந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத…
-
- 2 replies
- 944 views
-
-
அரியநேத்திரன் வீட்டில் படை முகாம் சிறப்புரிமைப் பிரச்சினை கிளப்புவார் கொழும்பு, மே 08 மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரனின் வீட்டின் உள்ளும் அவரது உறவினர்களின் வீடுகளின் உள்ளேயும் விசேட அதிரடிப்படையினர் அத்துமீறி நுழைந்து முகாம் அமைத்திருப்பது தொடர்பாக அரியநேத்திரன் இன்று நாடாளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றவுள்ளார். அதற்கான அனுமதியை வேண்டி சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவ
-
- 0 replies
- 851 views
-
-
பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார் கொழும்பு,மே8 பிரித்தானிய நடாளுமன்றத்தில் நடந்த விவாதம் எந்தவகையிலும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்தார். அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தி யாளர் மாநாட்டில் அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பது சாதாரண விட யமாகும். அந்தவகையிலேயே பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் நடந்த விவாதத்தையும் நோக்குகிறோம். பயங்கரவாதம் தொடர்பில் இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துக்கு விளக் கியிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார். அதேவேளை கொழும்பில் உள்ள வெளிநா…
-
- 0 replies
- 856 views
-
-
பிரிட்டனின் முத்தரப்பு மாநாட்டில் அரசு கலந்துகொள்ளமாட்டாது! அமைச்சர் ரம்புக்வெல நேற்று அறிவிப்பு கொழும்பு, மே 08 இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட விவாதம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அரசு அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருக்கும் அரச பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை அரசு நோர்வே புலிகள் தரப்புகளை இணைத்து நடத்தப்படவிருக்கும் மாநாட்டில் இலங்கை அர…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா: சண்டே லீடர் "இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்." மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
செவ்வாய் 08-05-2007 02:18 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பு மாநகரசபை கட்டடத்தில் வெடிகுண்டு புரளி கொழும்பு மாநகர சபைக்கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளியை அடுத்து பெரும்பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நேற்று பிற்பகல் சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளுக்கு குண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உள்நுழைந்த படையினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு கட்டிடத்தை சோதனையிட்டுள்ளனர். எனினும் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததையடுத்து மாலையுடன் பதற்றம் தணிந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 1.1k views
-