ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஒரு வாரத்தில் 1,000 பேர் கடத்தல்? சிறிலங்காவில் ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் பரப்பப்படுவதில் உண்மை ஏதும் இல்லை என்று அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கேகலிய ரம்புக்வெல, சில ஊடகங்கள் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் சிறிலங்காவின் நன்மதிப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டுவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இவை உண்மையல்ல. அதேபோல் பல முஸ்லிம்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார் அவர். ஆனால் எந்த ஊடக நிறுவனம் அத்தகைய செய்திகளை வெளியிட்டத…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைக் கைவிட ஜே.வி.பி. வலியுறுத்தல் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறியதாவது: அமெரிக்காவுடன் சிறிலங்கா அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட போது 14 பக்க இணைப்பையும் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர். பொதுமக்களிடம் அந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் மறைக்கிறது. மகிந்த சிந்தனையை மக்களிடத்தில் கையளித்த மகிந்த, இந்த நாட்டின் பாதுகாவலன் நான் என்றார். நாட்டின் உரிமையாளர் நானி…
-
- 0 replies
- 867 views
-
-
Posted on : 2007-06-07 "பரதேசி'களின் பிடியில் கொழும்பு அரச நிர்வாகம் அமெரிக்காவும் இலங்கையும் இந்த வருடத்தில் தமக்குள் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் பாதுகாப்பு சேவைகள் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி நாடாளுமன்றத்தில் கோரியிருக்கின்றது ஜே. வி. பி. தங்களை சிவப்பு வர்ணக் கோட்பாட்டைப் பிரதி பலிக்கும் இடதுசாரிகளாக அடையாளப்படுத்தும் ஜே. வி. பியினர், அதை உறுதிப்படுத்துவதற்காகவேனும
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழன் 07-06-2007 06:14 மணி தமிழீழம் [சிறீதரன்] நான்கு போராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் வவுனியா மேற்கு பாலமோட்டை களமுனையில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ம் லெப்பினன்ட் தமிழ்வேந்தன், 2ம் லெப்ரினன்ட் காவற்சுடர், வீரவேங்கை சோலைவேல், வீரவேங்கை அன்பரசன் ஆகிய நான்கு போராளிகளுமே வீரச்சாவை அணைத்துக் கொண்டவர்களாவர். pathivu
-
- 2 replies
- 1.2k views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி சிறப்பாக பேணுவதற்கு அரசாங்கம் முடிவு. போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி அதனை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங் கத்தின் உயர்மட்ட தரப்பினருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தால் போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டியேற்படும் என்று அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் காரணமின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படும் நிலைமையே காணப்படுகின்றது. நாட…
-
- 1 reply
- 963 views
-
-
உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மிகப்பெரும் கவனயீர்ப்பை செய்த மயுரன் அவர்கள் தனது நண்பர்களான அனு, சர்வா, கண்ணன், அஜந்தன், ஆதி, மாலன், ஜே, ஆகியோருடன் குழுவாக கனேடியத்தலைநகர் ஒட்டாவாவை நோக்கி நடைப்பயணம் ஒன்றை கடந்த மே மாதம் 22ம் திகதி ஆரம்பித்து இன்று 15 வது நாளாக 300 கிமீ தூரம் சென்றடைந்துள்ளனர். ரொரன்ரோ நாதன் பிலிப் சதுக்கத்தில் ஆரம்பித்து பிக்கரிங், ஏஜாக்ஸ், விற்பி, ஒசாவா, போமன்வில், நியுகாசில், போர்ற்கோப், கோபேர்க், ருரான்ரன், பெல்வில், கிங்ஸ்ரன், ஆகிய நகரங்களைக் கடந்து தற்போது புரோக்வில் நகரை அண்மித்துள்ளனர். நடந்து கடந்து வரும் நகரங்களில், நகரபிதாக்கள், காவல்துறை அதிகாரிகள், பழங்குடிமக்கள், மாணவர்கள், பல்லின மக்கள், அரசி…
-
- 6 replies
- 1.4k views
-
-
கொழும்பில் 58 இடங்களில் விமானஎதிர்ப்பு துப்பாக்கிகள் கொழும்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 58 இடங்களில் சிறீலங்கா படைகளால் விமான எதிர்ப்பு விமான துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்ந்த கட்டிடங்கள், தொடர்மாடிக் குடியிருப்புகள் சிலவற்றின் மீதும் இத்துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலேயே இவ் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 962 views
-
-
வியாழன் 07-06-2007 05:25 மணி தமிழீழம் [தாயகன்] இராணுவ நடவடிக்கையால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது - ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு உகந்தது அல்ல எனவும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அரசு உடனடியாக முன்வைக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பெல்ஜிய தலைநகர் பிறசல்சில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்திக்குழு மாநட்டில் இந்தக் கருத்துக்கள் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுனாமி மீள் கட்டுமானப் பணிகள் மற்றும் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களும் மனிதாபிமானப் பணிகளும் என இரண்டு கட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 949 views
-
-
கொலை, கடத்தல்களுடன் அரசிலுள்ள முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு - ஐ.தே.க, ஜே.வி.பி குற்றச்சாட்டு சிறீலங்காவில் இடம்பெறும் கொலை, கடத்தி கப்பம் பறித்தல் போன்ற செயற்பாடுகளுடன் அரசிலுள்ள முக்கியமானவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் குற்றம் சாட்டியுள்ளன. சுpறீலங்கா அரசு மனித உரிமைகளை முறையாகப் பேணி, இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனவும் இந்த இரண்டு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் செனவிரத்ன, இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, கொழும்பு டி..ஐ.ஜி றொஹான் அபயவர்த்தன, வான்படை முன்னாள் அதிகாரி நிஸாந்த கஜநாயக்க ஆகியோர் தற்போதைய கொலை, கடத்தல்களுக்குப் பொற…
-
- 1 reply
- 877 views
-
-
படைத்துறை உதவி, கூட்டுக் கடற்கண்காணிப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு சிறீலங்காவிற்கான இந்தியாவின் படைத்துறை உதவி, மற்றும் இந்திய - சிறீலங்கா கடற்படைகளின் கூட்டுக் கடற்கண்காணிப்பு திட்டம் என்பவற்றிற்கு, பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி இணைந்த கடற்கண்காணிப்பை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், சிறீலங்கா அரசிற்கு தேவையான படைத்துறை உதவிகளை தமது அரசு செய்யும் எனவும் எம்.கே. நாராயணன் கூறியிருந்தார். இந…
-
- 0 replies
- 775 views
-
-
ஜப்பானும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் - சிறீலங்கா அரசு ஜப்பான் அரசும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக விரைவில் தடை செய்து, நிதி முடக்கத்தை மேற்கொள்ளும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜப்பான் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய இருந்ததாகக் கூறினார். ஆனால் விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானப்பேச்சை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்பதால், ஜப்பான் அரசின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டதாகவும், கெஹெலிய ரம்புக்வெல விளக்கமளித்திருக்கின்றார். தற்பொழுது சிறீலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் சிறப…
-
- 0 replies
- 967 views
-
-
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் தந்திரம் அமெரிக்காவின் இரட்டை வேடம்! மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிக்கூடம் ஒன்றில் போரினால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த தமிழ்மக்கள் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 8 பொதுமக்கள் காயப்பட்டதாகவும் அவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் எனவும் காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடி முஸ்லிம்கள் 100 விழுக்காடு (37,815) பெரும்பான்மையாக வாழும் ஊராகும். மட்டக்களப்புக்குத் தெற்கே 7 கிமீ தொலைவில் உள்ளது. நார்வே ஏதிலி அவையின் அறிக்கைப்படி 2006 ஏப்ரலில் தொடங்கி திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் 314,378 பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.…
-
- 0 replies
- 1.3k views
-
-
மீனவர்கள் கடத்தல், சிங்களர் உதவியுடன் "ரா" உளவுத்துறை நடத்திய நாடகம், தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பு, முன்னுக்குப்பின் முரணான செய்திகள் - முழுப்பொய்கள் - சி.கனகரத்தினம் தமிழக மீனவர்கள் கடத்தல், சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை வரிசைப்படுத்தி ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். 4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி (தினமணி மார்ச் 30: சிங்களக் கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி …
-
- 1 reply
- 1.1k views
-
-
06.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....c05f3d8ab658c55
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....56240b2ff0100bd
-
- 0 replies
- 780 views
-
-
வலுவான அரசாங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதுள்ள தேர்தல் முறைமை தடையாகவுள்ளது வீரகேசரி நாளேடு பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்த அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து அறியப்படவேண்டும். இதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம். தற்போதுள்ள தேர்தல் முறைமையை விட, புதிய தேர்தல் முறைமையில் உள்ள அனுகூலங்கள், சிறப்புகள் மற்றும் நன்மைகள் தொடர்பில் மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயகக் குழுவின் முக்கியஸ்தரும் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையினால் ஊழல், மோசடிகள் அதிகம் இடம்பெறுவதாகவும் வலுவான அரசாங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற…
-
- 0 replies
- 729 views
-
-
பிரச்சினைக்கான இறுதி தீர்வு யோசனை இரண்டு மாதங்களுக்குள் வெளியிடலாம் வீரகேசரி நாளேடு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பொதுவான இறுதித் தீர்வு யோசனை இன்னும் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 13 அரசியல் கட்சிகள் இதுவரை தமது தீர்வு யோசனைகளை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ளன என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜே.வி.பி. மட்டுமே இதுவரை தீர்வு யோசனையை சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் நாட்டை ஆட்சி செய்கின்ற பிரதான இரண்டு கட்சிகளும் தீர்வு யோசனைகளை சமர்ப்பித்துள்ளதால் பொதுவான இறுதித் தீர்வை வெளியிடுவதில் சிக்கல்கள் எற்படாது என்றும் அவர் கூறினார்.…
-
- 2 replies
- 826 views
-
-
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன - இரா.சம்பந்தன் வீரகேசரி நாளேடு கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் அன்றாடம் கொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவசரகாலச் சட்டம் மக்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்கின்றது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் சபையில் குற்றம் சாட்டினார். அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட்டு இனப் பிரச்சினை தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய இரா. சம்பந்தன் எம்.பி. கடந்தகால அரசியல் வரலாறுகளை ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
எம்.கே.நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலையே சிறிலங்கா நடத்துகிறது: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 6 யூன் 2007, 20:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலைத்தான் நடத்துகிறோம் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: மூத்த சகோதரர் போன்றது இந்தியா. சீனா, பாகிஸ்தானிடன் ஆயுதம் வாங்க வேண்டாம் என்று இளைய சகோதரரிடம் சொல்வதற்கு இந்தியாவுக்கு உரிமை உண்டு. இளைய சகோதரருக்கு மூத்த சகோதரர் உதவாவிட்டால் இதர உறவு நிலை சகோதரர்களிடம் (பாகிஸ்தான், சீனா) செல்வோம். சிறிலங்காவுக்கு இந்தியா இராணு…
-
- 2 replies
- 1k views
-
-
தியாகி பொன். சிவகுமாரனின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரபாகரன்: வெ.இளங்குமரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட எழுச்சிக்கு வித்திட்ட உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் கனவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். "புலிகளின் குரல்" வானொலியில் இது தொடர்பாக வெ. இளங்குமரன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு: உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆயுதக் கொள்வனவு விவகாரம்: சிங்களவர் எதிர்ப்பும் தமிழரின் எச்சரிக்கையும். சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது சரியே என்ற கருத்துருவாக்கத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரடியாகக் களம் இறங்கியுள்ளார். புதுடில்லியில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் சென்னைக்குப் பறந்து வந்து மீண்டும் சென்னையிலும் கருணாநிதியை சந்தித்த எம்.கே.நாராயணன், "இராணுவ தளபாடங்களை இந்தியா அளிக்காவிட்டால், சீனா அல்லது பாகிஸ்தானிடம் அவற்றை பெறப்போவதாக சிறிலங்கா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. நம்மை சிறிலங்கா அணுகினால் அது குறித்து பரிசீலித்து மு…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியா இலங்கைக்கு இரண்டு எம்.ஜ 17 ரக உலங்கு வானூர்திகளை வழங்கியுள்ளது. சிறீலங்காவுக்கு இரு எம்.ஜ 17 ரக உலங்கு வானூர்திகளை இந்தியா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விரு உலங்கு வானூர்த்திகளும் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொலன்னாவை எண்ணெய் மற்றும் எரிவாயுக் குதங்கள் மீதான வான்புலிகளின் தாக்குதலை அடுத்து இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்ட இவ்விரு உலங்கு வானூர்திகளையும் சிறீலங்காப் விமானப் படையினர் பயன்படுத்தி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதேநேரம் மிக இரகசியமான முறையில் இந்தியா இலங்கைக்கான ஆயுத தளபாடங்களையும் விமானமூலம் இறக்கி வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஏ.எம் 32 ரக விமானங்கள் ஆயுத தளபாடங்களுடன் பல தடவகைள்…
-
- 0 replies
- 987 views
-
-
இலங்கையில் இயற்கை அழிவை விட நிர்வாக சீரழிவுகளே அதிகமுள்ளன : ஜரோப்பிய நடாளுமன்றம். இலங்கையில் இயற்கைச் சீரழிவை விட நிர்வாக நடைமுறைச்சிக்கலே அதிகம் காணப்படுகின்றன என நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுவின் பகிரங்க விசாரணைக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. பிரஸெல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டடத்தில் பகிரங்க விசாரணைக் கூட்டம் நேற்று ஆரம்பமானது. இதில் குறிப்பாக இலங்கை இந்தோனேசிய நாடுகளில் ஆழிப்பேரலை அனர்த் தத்திற்குப் பின்னரான மீள் கட்டமைப்பு, மனித உரிமைகள், மனிதாபிமான உதவிகள் குறித்து பொது விசாரணைகள் ஆரம்பமாகின. ஆழிப்பேரலைக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு குறித்த விவாதம் முதலில் நடைபெற்றது. இலங்கை அரசின் சார்பில் …
-
- 2 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி. வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை 8.50 மணியளவில் கால்ரோந்து அணி மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. தாக்குதலையடுத்து அப்பகுதிகள் யாவும் முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தியபோது தாக்குதலை நடத்திய தாக்குதலாளிகள் யாரும் பிடிபடவில்லை என்பது இங்கே குறிப்பிடக்கூடியதாகும். -Pathivu-
-
- 1 reply
- 935 views
-
-
Written by Ellalan - Jun 06, 2007 at 02:04 PM சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்குடன் நேற்று கொழும்பு வந்தடைந்த ஜப்பானிய விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி வன்னிக்குச் செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது. தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் புனர்வாழ்வுப்பணிகள் ஆகியன தொடர்பாக ஜனாதிபதி மற்றும் தரப்புகளை அகாஷி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்த இருக்கின்றார். மட்டக்களப்புக்கு செல்லும் அவர் அங்கு இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வார். வடக்கில் வன்னியில் இப்போதும் நிலவும் பாதுகாப்பு நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு அவர் கிளிநொச்சி செல்லமாட்டார் என்று அவரே கூறியதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்…
-
- 2 replies
- 1.7k views
-