Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவின் ஆலோசனைகள் மூலம் வான்புலிகளை முறியடிக்க அரசு முயற்சி: கொழும்பு ஊடகம். சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை தற்போது மகிந்த அரசு தேடி எடுத்து செயற்படுத்த முற்பட்டுள்ளதாக சன்டே ரைம்ஸ் வாரஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் ஏட்டில் இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளதாவது: பாலாவியில் உள்ள பாதுகாப்பு அரனில் கடமையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத 3 விமானங்களை கண்டுள்ளனர். அவை தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தன, ஒரு விமானம் வெளிச்சத்துடன் அதிக உயரத்திலும், இரு வி…

  2. இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு [ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 11:35 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களை பிச்சைக்காரர்களைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துவதாக மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குற்றம்சாட்டியுள்ளார். அரச தலைவராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பில் இருந்த போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி மலையக பாடசாலைகளில் 300 ஆசிரியர்களை நியமனம் செய்து அதற்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு மகிந்தவின் அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு நடைபெறுவது குறித…

  3. ஈழமுரசுப் பத்திரிகையில் வந்த ஆக்கம் வாசிக்காதவர்களுக்காக இங்கே இணைக்கப்படுகிறது. சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது. -ச.சங்கரன்- உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் பெண் புலனாய்வாளர்களின் பங்கு 1998ம் அண்டு மொத்தப்புலனாய்வு மனித வளத்தில் 12வீதமாக இருந்தது என்றும், இது 2007ம் ஆண்டு 33வீதமா அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கம் தமது பெண் புலனாய்வாளருக்கான ஆட்கள் தெரிவினை …

    • 2 replies
    • 1.2k views
  4. பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு அண்மையில் பிரித்தானிய தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பிரித்தானிய உள்துறைச் செயலர் மேன்மை தங்கிய Dr. ஜோன் றெய்ட் ஐ சந்தித்திருந்தனர். இச் சந்திப்பில் இலங்கைத்தீவின் நெருக்கடி நிலை தொடர்பில் விவாதித்த தமிழ் பிரதிநிதிகள் சிறீலங்கா அரசின் பிரித்தானிய தமிழர் மீதான விசமப் பிரச்சாரம் தொடர்பின் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த உள்துறைச் செயலர் பிரித்தானிய ஊடகங்களில் வெளியான கடனட்டை மோசடி தொடர்பான செய்திக்கும் பிரித்தானிய அரசுக்கும் தொடர்பெதுவும் இல்லை என்றும் இச் செய்தியை பிரபலப்படுத்தும் தலையீட்டு அழுத்தங்கள் எதனையும் அரசு பிரயோகிக்கவில்லை என்றும் தெட்டத்தெளிவாக தெரிவித்தார். இ…

  5. இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ். செவ்வி: ஆணித்தரமான ஒரு செய்தியை தென்னிலங்கை மக்களுக்கு வழங்குவதே புலிகளின் நோக்கம் டி.பி.எஸ். ஜேயராஜ் அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வ…

    • 3 replies
    • 1.9k views
  6. விடுதலைப் புலிகளின் செயல்-கருணாநிதி அதிர்ச்சி ஏப்ரல் 29, 2007 சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலைப்புலிகள் கடத்திக் கொண்டு போயிருக்கும் செயல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில் விடுதலைப்புலிகள் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, விடுதலைப்புலிகளை ஆதரித்து தான் தீருவோம், எங்களை எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒரு கை பார்க்கிறோம் என்ற அறை கூவல் பிரபலமான நாளிதழில் வந்திருந்தது. மேலும் அதில் விடுதலைப்புலிகளை நாங்கள் என்றும் ஆதரிப்போம், இலங்கை இறுதி போர் நடந்து வருகின்றது. அதை ஆதரிப்போம் என்றிருக்கிறது. அ…

  7. மங்களவை வீழ்த்திய மகிந்தவின் "இடியப்பம்- மது" [ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 22:32 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலகத்திலும் உள்ளுரிலும் சிறிலங்கா அரசுக்கு தோன்றியுள்ள நெருக்கடிகள் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான மங்களவை வீட்டுக்கு அழைத்து இடியப்பமும் மதுவும் கொடுத்து அரவணைத்துள்ளார் மகிந்த ராஜபக்ச என்று கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. சண்டே லீடர் வார இதழின் அரசியல் ஆய்வில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தான் எந்த நேரமும் வெடித்துச் சிதறும் எரிமைலை ஒன்றின் மீது இருப்பது போல் உணர்ந்துள்ளார். நாட்டின் பல பிரிவுகளில் தோன்றியுள்ள நிர்வாகச் சீர்கேடுகள், மனித …

  8. நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?.நாங்கள் சிறிலங்கனா?

  9. சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தியாவின் சுற்றுச்சூழல் அக்கறையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இலங்கையில் அத்திட்டம் பற்றிய கவலைக்கான காரணங்கள் பல. எனினும், ஒரு தமிழ் இடதுசாரிப் பத்திரிகையில் மட்டுமே அது பற்றிய சமூக அக்கறை மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. சில ஆங்கில ஏடுகளிலும் சூழலியல் பற்றிய அக்கறையுள்ள சிலர் ஒரு சில கட்டுரைகளை எழுதியிருந்தனர். கடற்படையினரின் தலைமைப்பீடத்தில் இலங்கையின் இறைமைக்கு இக் கால்வாய் ஒரு மிரட்டலாக அமையும் என்ற கவலையைத் தெரிவித்திருந்தாலும், அது பற்றிப் போதிய அழுத்தம் இல்லாததாலோ என்னவோ, இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் காத்திரமான எதிர்ப்பு எதையுமே தெரிவிக்கவில்லை. கண்துடைப்பாக இங்கே, இலங்கை…

  10. தமிழ்ப் பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதிக்கு உதவும் வகையில் தமிழ் அபிப்பிராய உருவாக்கம் தொடங்கியுள்ளதா? -(பீஷ்மர்) [29 - April - 2007] ஜனாதிபதி அவர்களுக்கு நிச்சயமாக இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, அவர் சிங்களத்துவத்தின் ஏகோபித்த முன்வைப்பு என்பதாகும். இன்றும் தான் ஜே.வி.பி., ஹெல உறுமயவின் எதிர்க்கப்பட முடியாத ஜனாதிபதியாவார். அதாவது சிங்களத்துவ நிலை பாடுகளுக்கு அடிப்படையில் அவர் முரண்படமாட்டார் என்பதற்கு சார்பான அபிப்பிராயமுண்டு. மற்றைய முகம், அவர் தமிழர்களின் பிரச்சினையையும் உணர்ந்தவர் என்ற நிலைப்பாடாகும். அமைச்சரவை நிலையில் ஒரேயொரு வட, கிழக்கு தமிழ் அமைச்சர் தான் இருந்தாலும் அவர் விடுதலைப் புலிகளை சாராத வட, கிழக்கு கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளவர். இந்…

  11. சென்னை: நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது. வெடிபொருள், இர…

  12. படுவான்கரையில் இடம் பெயர்ந்த மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு உடைமைகள் சூறை மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் இராணுவ நடவடிக்கையால் மக்கள் இடம் பெயர்ந்த அனைத்துப் பகுதிகளிலும் அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டு உடமைகள் முற்றாகச் சூறையாடப் பட்டுள்ளதுடன் சகல அரச அலுவலகங்களும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெல்லாவெளி பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள மீள் குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக வெள்ளிக்கிழமை படுவான்கரைப் பகுதிக்குச் சென்று திரும்பிய அரச அதிகாரிகளே இதனைத் தெரிவித்துள்ளனர். மாவட்ட மேலதிக அரச அதிபர் மகேசன் தலைமையில் சென்ற உயர் மட்ட அதிகாரிகள் அங்குள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளனர். படுவான்கரையில் பாலையடிவெட்டை, வெல்லாவெளி கண்டுமணி வித்த…

  13. கரவெட்டியில் இளைஞர் கடத்தல் கரவெட்டி குஞ்சர்கடைப் பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வெள்ளைவான் கும்பல், காயமடைந்த குறித்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளது. நேற்றுக்காலை 7.30 மணியளவில் குறித்த நபர் யாழ்.பருத்தித்துறை வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லையென யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தினக்குரல்

  14. வங்காலைப் பகுதியில் கைதான 2 மீனவர்களை காணவில்லை மன்னார் வங்காலைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் படையினரால் கைது செய்யப்பட்ட இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் வங்காலை - நானாட்டான் வீதியில் வங்காலையிலிருந்து மாவிலங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தோமஸ்புரி பகுதியிலுள்ள இராணுவ முகாமில் வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி கேள்வியுற்ற இருவரதும் உறவினர்கள் உடனடியாக இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்த போது, அது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதெனவும் தாங்கள் எவரையும் கைது செய்யவில்லையென்றும் கூறியுள்ளனர். இதேநேரம், வங்…

  15. தடை தளர்த்தப்பட்ட சிறிது நேரத்தில் கடலுக்கு சென்ற மீனவர் மீது ஷெல் தாக்குதல் - யாழ். கடல் நீரேரியில் ஒருவர் பலி யாழ். கடல் நீரேரியில் நேற்று சனிக் கிழமை காலை பெருமளவு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி நடத்தப்பட்ட பலத்த ஷெல் தாக்குதலில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 11 நாட்களுக்கு முன் கடல் நீரேரிப் பகுதியில் இடம்பெற்ற மோதலொன்றையடுத்து நேற்று வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்றுக்காலை மீண்டும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து கொழும்புத்துறை, பாஷையூர் மீனவர்கள் பெருமளவானோர் தொழிலுக்குச் சென்றிருந்தனர். கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே கரையோர பகுதிகளிலிருந்து கடல் நீரேரி நோக்கி …

  16. பலாலி வான் தாக்குதல் குறித்து அரசாங்கம் கண்காணிப்புக் குழுவிடம் முறையிடவில்லை -பேச்சாளர் ஒமர்ஸன் கூறுகிறார் `பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலையடுத்து அரசாங்கம் சம்பவம் பற்றி எங்களிடம் முறையிடவுமில்லை. நாங்கள் அங்கு செல்ல அனுமதி கேட்கவுமில்லை' என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஒமர்ஸன் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலின் பின்னர் பலாலி படைத்தளம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததாவென கேட்ட போதே ஒமர்ஸன் இவ்வாறு கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை புலிகள் நடத்திய இத் தாக்குதலினால் மயிலிட்டி பகுதியில் 6 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் காயமடைந்ததாகவ…

  17. கொழும்பின் நுழைவாசல்களை வழிமறித்து தீவிர சோதனை - வெடிகுண்டுடன் வாகனம் வந்திருப்பதாக சந்தேகம் கொழும்பு மாநகரின் சகல நுழைவாயில்களும் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் வழிமறிக்கப்பட்டு தலைநகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் பயணிகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதால

  18. "மனிதஉரிமை மீறல்களை கட்டுப்படுத்தாமல் சர்வதேசத்திடம் உதவிகளை எதிர்பார்க்கும் சிறிலங்கா'' -சி.ஆதித்தன்- இலங்கைத்தீவில் சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டு தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்துடன் 1878 நாட்களாகின்றன. இந்த நீண்ட காலப்பகுதியில் தமிழ் மக்கள் சமாதானப் முன்னெடுப்பில் நம்பிக்கை வைத்து புதிய வசந்தத்திற்காக எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருந்தவைகள் யாவும் நிறைவேறியனவா? இழந்துவிட்ட வசந்த காலத்தை, காணாமல் போன கணவனை, தூக்கிச் செல்லப்பட்ட பிள்ளைகளை, இழந்துவிட்ட பூர்வீக நிலத்தை, சொத்துக்களை, சுகங்களை, யுத்த மோகத்தால் நிறைவேறாத கனவுகளையென தமிழ் மக்கள் ஏராளமான வேதனைகளை மனதில் சமந்து புரிந்துணர்வு ஒப…

    • 0 replies
    • 550 views
  19. ''இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள்'' -நா.யோகேந்திரநாதன்- இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம் பெறுவது ஒரு போர்கால நடைறையாகத் தொடர்ந்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதும், தமிழக அரசு மத்திய அரசுக்கு முறைப்பாடு செய்வதும், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு வாக்களிப்பதும் வழமையான சம்பவங்கள். ஆனால், மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை அது மட்டுமன்றி அண்மைக்காலத்தில் இடம் பெற்ற தாக்குதல்களில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்தன. இதன் காரணமாக தமிழகமே கொதித்தெழுந்தது. மத்திய அரசு கூட உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய அளவிற்…

    • 0 replies
    • 946 views
  20. ''விடுதலைப்புலிகளை இலகுவாக கையாள முடியாமலிப்பதே சிங்கள அரசுகளுக்குள்ள பிரச்சினை'' -மனோகரன்- அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தீர்மானிக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் இப்போது சிறிலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தெரிவித்தார். இன்றைய சூழலில் அவர் சொல்வது ஒருவகையில் சரிதான். சிறிலங்காவில் இப்பொழுது அரசியலும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. ஏன் இராணுவ நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கின்றது. அரசியலைப் பொறுத்து இந்த மாதிரித் தேக்கங்கள் சிலபோது ஏற்படுவது உண்டு. ஆனால், அது நாட்டைப் பாதிக்காத வகையில் ஒரு இடைமா…

    • 0 replies
    • 1k views
  21. வான்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்கவிலிருந்து வான்படைத் தளம் மாற்றம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வர்த்தக வானூர்தி நிலையத்தை அண்மித்த வான்படைத் தளத்தை வேறுபகுதிக்கு சிறிலங்கா அரசாங்கம் மாற்றக்கூடும் எனத் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி விவரம்: கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு ஒரு மாதம் சரியாக கடந்த நிலையில் மீண்டும் கட்டுநாயக்கவில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் அச்சம் ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு தளத்தையும் வான்புலிகள் தாக்கிவிட்டு திரும்பியுள்ளனர். இந்…

    • 1 reply
    • 1.7k views
  22. பிடுங்கி எடுப்பதைத் தவிர தமிழருக்கு வேறு ஏது வழி? தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டடைகள் தாம்" என்று சில வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல இருகட்சிகளுமே செயற்படுகின்றன. பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அணி திரட்டி, அவர்களின் ஐக்கியத்தைத் தனது வலிமையாக்கிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலங்காலமாகத் தான் பின்பற்றி வரும் சிங்களத் தேசியவாத இரும்புப் பிடியில் இருந்து சற்றேனும் விலகுவாதாக இல்லை. அதன் சிங்களத் தேசியக் கடுங்கோட்பாட்டுப் பிடிக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கின்றது மஹிந்த ராஜபக்ஷவின் திமிர்த்தனத் தலைமை. இ…

  23. விடுதலைப் புலிகளின் டிவி, ரேடியோ முடக்கம் ஏப்ரல் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளி பரப்பை அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் முடக்கிவிட்டது. படை பலத்துடன் திகழும் விடுதலைப் புலிகள் தங்களுக்கென வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் வைத்துள்ளனர். இவற்றின் மூலம் ஈழம் குறித்த செய்திகளையும், போர் குறித்த செய்திகளையும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். ஆண்டுதோறும் மாவீரர் தினத்தின்போது பிரபாகரன் உரையாற்றுவதை நேரடியாகவும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலமாக இந்த ஒளி, ஒலிபரப்பு நடந்து வந்தது. இவற்றை முடக்க வேண்டும் என இலங்கை அரசு…

  24. இறுதிச் சுற்றில் சிறிலங்கா நுழைந்தால் மகிந்த மேற்கிந்திய தீவு பயணம். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளில் சிறிலங்கா அணி இறுதிச் சுற்றுக்கு தெரிவானால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். பார்படோஸ்ன் ஹென்சிங்ரன் ஓவல் மைதானத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. நான்கு நாள் பயணமாக இத்தாலி சென்றுள்ள மகிந்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியூசிலாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்வார் இதனிடையே சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று…

  25. மகிந்த முகம் கொடுக்கும் யுத்தங்கள் -வேலவன்- சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு சட்டத்தரணி. 1994 ஆம் ஆண்டுக்கு முன் அதாவது அவர் ஆளும் கட்சி பா.உ. ஆக முன் 17 வருடங்கள் மனித உரிமை அமைப்புக்களுடன் பலமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். அதாவது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தரணிகள் மையத்தின் இயக்குநர். காணாமல் போனோரின் பெற்றோர் சங்கத்தலைவர். ஆனால் முன்னாள் சனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிலும் அதிகமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீதுதான் எழுந்துள்ளன. அதிலும் இது தொடர்பில் ஏனையோர் சந்தித்த சர்வதேச அழுத்தங்களை விட அதிகமான அழுத்தங்கள் இவர் மீது போடப்படுகின்றன. முன்னாள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.