ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
சனி 02-06-2007 04:35 மணி தமிழீழம் [மோகன்] அக்கரைப்பற்றில் வெடிவிபத்து: 3 விசேட அதிரடிப் படையினர் பலி! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தம்பமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தற்செயலான வெடிவிபத்தில் 3 சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் அம்பாறை பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளனர். நன்றி பதிவு
-
- 0 replies
- 696 views
-
-
இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு: ஜேர்மனியில் கருத்தரங்கு [சனிக்கிழமை, 2 யூன் 2007, 04:54 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஜேர்மனி வொல்ப்பேர்க் சமூகவியல் கலாசாலையால் ஒழுங்கு செயப்பட்ட "இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு" என்னும் தலைப்பிலான கருத்தரங்கு ஜேர்மனி முல்கைம் நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை (30.05.07) நடைபெற்றது. இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரவலங்கள் குறித்து வெளியுலகத்துக்கு தெரிவிப்பதும், உதவி நிறுவனங்களின் பணியாளர்கள் எவ்வாறு இந்நிலைகளை எதிர்கொள்கிறார்கள், சமாதானத்துக்கான புதிய முயற்சிகளுக்கு வழியேதும் உண்டா என ஆராய்வதுமே இக்கருத்தரங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் ஜேர்மன், தமிழ்க் கல்வியாளர்கள்…
-
- 0 replies
- 769 views
-
-
புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கிய படை நடவடிக்கைக்கு படையினர் தாயார்: எந்நேரமும் யுத்தம் வெடிக்கலாம். யாழ் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் நிர்வாகப் பகுதிகள் நோகிய பாரிய படை நடவடிக்கைகளுக்கு சிறீலங்காப் படைகள் தாயராகிவிட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மராட்சி மற்றும் நாகர்கோவில் கிழக்கு முன்னரங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி எந்நேரமும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரச படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படை நடவடிக்கைக்கான கட்டளை கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து எந்நேரமும் வரலாம் எனவும் படையினரிர் எதிர்பாத்து காத்திருப்பதாகவும் கூறப்பட…
-
- 4 replies
- 2.2k views
-
-
இலங்கை விமானப்படையினர் மத்தியில் ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது. மூடிய அறையில் அடிக்கடி இரகசியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஆலோசனைக்காக நிபுணர்கள் அழைக்கப்படுகின்றனர். என்னதான் நடக்கின்றது விமானப்படையில்? வேளிப்படையாகப் பார்க்கும் போது, வான்புலிகளின் அச்சுறுத்தலை எப்படிச்சமாளிப்பது என்பதற்கான ஆலோசனைகளும் முன்னேற்பாடுகளும் இவை என்பது போலத் தெரிந்தாலும் உள்ளேயிருப்பது வேறு பிரச்சினை என்கிறார்கள் விடயம் தெரிந்தவர்கள். விமானப்படையுடன் தொடர்புடையவர்கள் எமது கொழும்புத் தொடர்பாளர்கள், சில பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் என்று நாம் ஒரு சுற்று விசாரணைகளில் ஈடுபட்டோம். அப்போது தெரியவந்த விசயங்கள் அதிர்ச்சியானவை. ஏதோ மர்ம நாவல் படிப்பது போல…
-
- 23 replies
- 5.9k views
-
-
கிழக்கை புலிகள் மீள கைப்பற்றும் முயற்சி - பிள்ளையான் வீரகேசரி இணையத்தளம் விடுதலைப்புலிகள் கிழக்கே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலப் பரப்புக்களை கைப்பற்றுவதற்கு பாரிய படை நகர்வை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி பிள்ளையன் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தொப்பிகல காட்டுப்பகுதிகளில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளிற்கு இரு வழிகள் உள்ளன ஒன்று இராணுவத்தினரிடணடையது மற்றது தமது உயிரை போக்குவது என பிள்ளையான் இவர்கள் தப்புவதாயின் கடல் வழியாகவே தப்பிச்செல்ல வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்
-
- 1 reply
- 2.8k views
-
-
ஓட்டோவில் சென்ற இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, நால்வர் காயம் வீரகேசரி நாளேடு அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் பலியானதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் பொத்துவில் சங்கமன் கந்த பிரதேசத்தைச் சேர்ந்த கே. சின்னத்தம்பி (22வயது) மற்றும் எஸ்.அம்பலம் (20 வயது) என்றழைக்கப்படும் இரு இளைஞர்களே பலியானவர்களாவர். அத்துடன் வெலிக்கந்த பகுதியைச் சேர்ந்த பி. பிரியதர்ஷன் (22வயது), சங்கமன் கந்த பகுதியைச்சேர்ந்த என். எஸ்.ராஜுகுமார் (18வயது), அம்பாறை கோமாரி பகுதியைச் சேர்ந்த எஸ்.பதிசுதன் (23வயது ), எஸ். மதியமுகன் (19 வயது )…
-
- 0 replies
- 997 views
-
-
வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 18:17 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆட்சேர்ப்பதற்கான முடிவு நாள் நேற்று வியாழக்கிழமையுடன் முடிவடைந்த போதிலும், அது எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் நாள் வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 5 அடி 4 அங்குல உயரமுள்ள, 8 ஆம் தரம் சித்தியடைந்த 18 தொடக்கம் 24 வயதான இளைஞர்கள் இந்த படைச்சேர்ப்புக்கு தகுதியானவர்கள் என இராணுவத் தலைமையகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. படையில் சேர விரும்புவோர் தமது தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாடசாலை விடுப்பு பத்திரம், உதவி அரச அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கிராம சேவையாளரின் சான்றிதழ், தற்காலிக காவல்துறை அறிக்கை, இரு நற்சான்றிதழ்கள், விளையாட்டு சான்றிதழ்கள் என்பவற்றுடன் பிர…
-
- 0 replies
- 788 views
-
-
வெள்ளி 01-06-2007 18:56 மணி தமிழீழம் [முகிலன்] மணலாறில் புலிகள் எறிகணைத் தாக்குதல்: பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ படுகாயம் மணலாறு பகுதியில் எறிகணைகள் வீழந்து வெடித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற 23-2 பிரிகேட் தளபதி படுகாயமடைந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளின் மோட்டார் அணியினரால் மணலாறுப் பகுதியான அதவதுநுவலப் பகுதில் உள்ள இராணுவ நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் நேற்று படைச்சிப்பாய் ஒருவர் காயமடைந்து மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர். நேற்று எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இராணுவ நிலைகளைப் பார்வையிடச் சென்ற பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மீதே இன்று விடுதலைப் புலிகள் தாக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளி 01-06-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] ஒட்டுக்குழு உறுப்பினர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி மீது தாக்குதல் - 6 பேர் பலி அம்பாறையில் இருந்து பொத்துவில் நோக்கி கருணா ஒட்டுக் குழுவினரை ஏற்றிச்சென்ற இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது “இன்ஸ்பெக்ரர் ஏற்றம்” பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நேற்றிரவு இம்பெற்ற இந்த தாக்குதலைத் தொடர்ந்து 3 உடலங்களை ஒட்டுக் குழுவினர் இன்று காலை கோமாரிப் பகுதிக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும், ஏனைய 3 உடலங்களும் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நேற்றைய இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், அவர்கள் பொதுமக்களா, அல்லது ஒட்டுக் குழவினரா என்பது தெரிய வரவில்லை. கர…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐ.தே.க. கடுமையான கண்டனம் [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலைக்குள் வெளியேற்றுமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும், அவர்களைக் கைது செய்வதற்கும் தேவையான சட்டதிட்டங்கள் …
-
- 2 replies
- 1.4k views
-
-
அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டின் ஷ்ரீலங்காவுக்கான முன்னாள் தூதுவராக பதவிவகித்த பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவுக்கு வந்திருப்பதாகவும் அவர் ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களை ஷ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஏற்பாட்டின் பேரிலேயே இங்கு வந்துள்ளதாகவும் அண்மையில் இந்திய பிரபல ஆங்கில நாளேடாகிய `த ஹிந்து' (The Hindu) தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கிக் கொண்டு இருப்பதாக `த ஹிந்து 'தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த இந்திய நாளேட்டில் மேலும் கூறப்பட்டிருக்கும் தகவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111 [01 - June - 2007] இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக பணியாற்றிவரும் நோர்வேயின் `தகுதி' பற்றி தென்னிலங்கையின் கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை கேள்வி எழுப்பியும் அந்த நாட்டை அனுசரணைப் பணியிலிருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்ற நிலையில், சமாதானத்தின்பால் அந்தத் தேசம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் குறித்து கேள்வி கேட்பதற்கு எவருக்குமே அருகதையில்லை என்பதை நிரூபிப்பது போன்று `எக்கனோமிஸ்ட்' என்ற வாரப் பத்திரிகையுடன் தொடர்புடைய பொருளாதார புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரங்களை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. உலக சமாதான சுட்டெண் பட்டியலில் மிகவும…
-
- 7 replies
- 1.8k views
-
-
Posted on : Fri Jun 1 5:42:24 EEST 2007 சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திரிகா வழியில் ராஜபக்வும்! அவரைப் பேட்டி கண்டு உரையாடிய அல்-ஜெஸீரா செய்தியாளர் "யுத்தம் மூலம் சமாதானத்தை அடை தல்' என்ற கொள்கைப் போக்கை முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவின் நிர்வாகம் முன் னெடுத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் கொள்கைப்போக்கை விளக்குவதற் கும் அந்த வாசகமே போதுமானது. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நீண்டநேரம் கலந்துரையாடி பேட்டி கண்ட "அல்ஜெஸீரா' செய்தி நிறுவன ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார். ரிமோர் நமிலி என்ற அந்தச் செய்தியா ளர் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார். அதன் பின்னர் வரைந்த செய்திக் கட்டுரை யில் அவர் தெரிவித்தவை வருமாறு: ""யுத…
-
- 1 reply
- 1.7k views
-
-
வெள்ளி 01-06-2007 16:41 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படைகள் தங்கியிருப்பது தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் - எஸ். கஜேந்திரன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது சிறீலங்காவீன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அரசு கருதுவது போன்று தமிழர் தாயக பிரதேசத்தில் சிறீலங்காவின் சிங்கள அரச படைகள் தங்கியிருப்பது தமது உயிர் உடமைகளுக்கும், தமது தாயகத்திற்கும் அச்சுறுத்தல் தமிழ் மக்கள் கருதுகின்றனர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிலுள்ள தமிழ் மக்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள அரசு வடகிழக்கிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளுமாயின் வட கிழக்கிலிருந்து வந்து கொழும்பில் …
-
- 0 replies
- 913 views
-
-
Date: 2007-06-01 வரலாற்று மெய் நிலைகளை புறக்கணிக்கும் தென்னிலங்கை ""இலங்கையில் "இனப்பிரச்சினை' அல்லது "தேசியப் பிரச்சினை' என்று எதுவுமே இல்லை. "இனப்பிரச்சினை' ஒன்று உருவாவதற்கு மக்கள் இன ரீதி யாக பிளவுபடுத்தப்பட்டு துருவப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் புலிகளின் பயங்கரவாதத்தால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டமை மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது. சிங்கள நாகரிகத்தின் தாயகம் ஸ்ரீலங்கா. அதனால் சிங்களவர்க்குரிய அவர்களுக்கு மட்டுமேயுரிய ஒரே தேசம் அது. இங்கு தமிழர்கள் வெறும் சிறுபான்மையினர் மட்டுமே. இங்கு அவர்கள் தனித் தேசம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றுக்கு உரிமை கோரமுடியாது. சரித்திர ரீதியாகவும் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் அப்படிக் கோருவதற்கு அவர்களுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களவர்களே தேசிய இனத்தவர் என்ற விடயம் இறுதி தீர்வில் கட்டாயம் இடம்பெறவேண்டும் வீரகேசரி நாளேடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் வெளியிடப்படுகின்ற இனப் பிரச்சினை தீர்வுக்கான இறுதி யோசனையில் சிங்கள மக்களே இந்த நாட்டின் தேசிய இனத்தவர் என்ற கோட்பாடு உட்படுத்தப்படவேண்டும். இல்லாவிடின் ஜாதிக ஹெல உறுமய கடுமையான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் மூலம் வெளிவரும் யோசனை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : ஜாதிக ஹெல…
-
- 1 reply
- 1.5k views
-
-
மரண தண்டனையா? அல்லது 5 இலட்சம் அபராதத் தொகையா? நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு கடிதம் மூலம் எச்சரிக்கை. தாங்கள் விரும்பும் பட்சத்தில் மரண தண்டனைக்குப் பதிலாக இப்படியான பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற இறுதி எச்சரிக்கையுடன் தங்களிடமிருந்து அபராதத் தொகையைப் பெற்றுக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதுவிதமான விவாதமின்றி உடனடியாக ஐந்து இலட்சத்தினை அபராதப் பணத்தினை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு என்ற அமைப்பு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளது. அக்கடித்தின் விரிப்பு வருமாறு... பெயர் முகவரி திகதி தாங்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பயங்கரவாதிகளின் …
-
- 4 replies
- 1.9k views
-
-
போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியும் ஆற்றல் இந்த அரசாங்கத்துக்கு இல்லை: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த உடன்பாட்டை 2004 ஆம் ஆண்டிலிருந்து கிழித்தெறியப் போவதாகத் கூறிவரும் அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியிருக்கும், சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியவோ, அல்லது புதிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவோ அரசாங்கத்தினால் முடியாது எனவும் தெரிவித்தது. போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக அடுத்த ஓரிரு வாரத்தில் அரசின் முடிவு வெளியிடப்படும் என அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளிடம் வான்வெளி படை இந்தியா விரும்பவில்லை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து சென்னை, மே 31- விடுதலைப்புலிகள் வான்வெளி தாக்குதலுக்குரிய சக்தியை பெற்றிருப்பதை இந்தியா விரும்பவில்லை என்று பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறினார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை செய்வதற்காக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று சென்னை வந்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழ்நிலைகளை பற்றியும், கப்பற்படையை பலப்படுத்துவது குறித்தும் பேசினோம். தூத்துக்குடி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஜப்பான் பிரதம மந்திரிக்கு ஒரு மடல் ஜப்பான் நாடு தான் அதிகளவில் இலங்கை அரசுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. இதனைக் குறைக்க உடனடியாக பின்வரும் கடிதங்களில் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக அனுப்பவும் கடிதம் 1 Subject- Sri Lanka, conflict and foreign aid Body- Dear Prime Minister of Japan Japan provides more than 60% of foreign aid to Sri Lanka. Sri Lanka is the most militarised country in South Asia- a 'democracy' more militarised than military-ruled Pakistan! Northeast Sri Lanka has been devastated by 30-year war. Sri Lanka has been more under Emergency rule than under democracy rule since 'independence'. Sri Lanka will need a lot of foreign ai…
-
- 2 replies
- 1.9k views
-
-
மணலாற்றில் மோட்டார் எறிகணைத் தாக்குதல்: சிங்கள குடியேற்றவாசிகள் தப்பியோட்டம் மணலாற்றில் உள்ள சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகாரி ஒருவர் உட்பட 5 படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை மணலாற்றில் உள்ள அதவதுநுவெவப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவல் நிலைகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்ட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை அடுத்து அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது. தப்பி…
-
- 0 replies
- 1.7k views
-
-
வியாழன் 31-05-2007 01:57 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்ரர்.ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ இந்தியாவை சிறீலங்கா அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை சிறீலங்காவற்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். தீடீரென இந்தியாவிற்கு விஐயம் செய்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராயபக்ச இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவியானது சிறீலங்காவில் அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக உபயோகிக்கப்படும் எனவும் 6.5 கோடி இந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோ…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ். நகரை மீட்க புலிகள் பெரும் திட்டம்; இந்தியாவிடம் ஏவுகணை கேட்கும் இலங்கை! மே 30, 2007 டெல்லி: யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால் பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்கும் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள் தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் இலங்கை அரசுக்கும்இ அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்க…
-
- 2 replies
- 969 views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 17:22 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது: நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெ…
-
- 6 replies
- 1.4k views
-