ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 18:17 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆட்சேர்ப்பதற்கான முடிவு நாள் நேற்று வியாழக்கிழமையுடன் முடிவடைந்த போதிலும், அது எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் நாள் வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 5 அடி 4 அங்குல உயரமுள்ள, 8 ஆம் தரம் சித்தியடைந்த 18 தொடக்கம் 24 வயதான இளைஞர்கள் இந்த படைச்சேர்ப்புக்கு தகுதியானவர்கள் என இராணுவத் தலைமையகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. படையில் சேர விரும்புவோர் தமது தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாடசாலை விடுப்பு பத்திரம், உதவி அரச அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கிராம சேவையாளரின் சான்றிதழ், தற்காலிக காவல்துறை அறிக்கை, இரு நற்சான்றிதழ்கள், விளையாட்டு சான்றிதழ்கள் என்பவற்றுடன் பிர…
-
- 0 replies
- 789 views
-
-
வெள்ளி 01-06-2007 18:56 மணி தமிழீழம் [முகிலன்] மணலாறில் புலிகள் எறிகணைத் தாக்குதல்: பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ படுகாயம் மணலாறு பகுதியில் எறிகணைகள் வீழந்து வெடித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற 23-2 பிரிகேட் தளபதி படுகாயமடைந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளின் மோட்டார் அணியினரால் மணலாறுப் பகுதியான அதவதுநுவலப் பகுதில் உள்ள இராணுவ நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் நேற்று படைச்சிப்பாய் ஒருவர் காயமடைந்து மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர். நேற்று எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இராணுவ நிலைகளைப் பார்வையிடச் சென்ற பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மீதே இன்று விடுதலைப் புலிகள் தாக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கை புலிகள் மீள கைப்பற்றும் முயற்சி - பிள்ளையான் வீரகேசரி இணையத்தளம் விடுதலைப்புலிகள் கிழக்கே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலப் பரப்புக்களை கைப்பற்றுவதற்கு பாரிய படை நகர்வை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி பிள்ளையன் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தொப்பிகல காட்டுப்பகுதிகளில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளிற்கு இரு வழிகள் உள்ளன ஒன்று இராணுவத்தினரிடணடையது மற்றது தமது உயிரை போக்குவது என பிள்ளையான் இவர்கள் தப்புவதாயின் கடல் வழியாகவே தப்பிச்செல்ல வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்
-
- 1 reply
- 2.8k views
-
-
புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கிய படை நடவடிக்கைக்கு படையினர் தாயார்: எந்நேரமும் யுத்தம் வெடிக்கலாம். யாழ் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் நிர்வாகப் பகுதிகள் நோகிய பாரிய படை நடவடிக்கைகளுக்கு சிறீலங்காப் படைகள் தாயராகிவிட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மராட்சி மற்றும் நாகர்கோவில் கிழக்கு முன்னரங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி எந்நேரமும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரச படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படை நடவடிக்கைக்கான கட்டளை கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து எந்நேரமும் வரலாம் எனவும் படையினரிர் எதிர்பாத்து காத்திருப்பதாகவும் கூறப்பட…
-
- 4 replies
- 2.2k views
-
-
வெள்ளி 01-06-2007 16:41 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படைகள் தங்கியிருப்பது தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் - எஸ். கஜேந்திரன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது சிறீலங்காவீன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அரசு கருதுவது போன்று தமிழர் தாயக பிரதேசத்தில் சிறீலங்காவின் சிங்கள அரச படைகள் தங்கியிருப்பது தமது உயிர் உடமைகளுக்கும், தமது தாயகத்திற்கும் அச்சுறுத்தல் தமிழ் மக்கள் கருதுகின்றனர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிலுள்ள தமிழ் மக்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள அரசு வடகிழக்கிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளுமாயின் வட கிழக்கிலிருந்து வந்து கொழும்பில் …
-
- 0 replies
- 914 views
-
-
வெள்ளி 01-06-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] ஒட்டுக்குழு உறுப்பினர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி மீது தாக்குதல் - 6 பேர் பலி அம்பாறையில் இருந்து பொத்துவில் நோக்கி கருணா ஒட்டுக் குழுவினரை ஏற்றிச்சென்ற இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது “இன்ஸ்பெக்ரர் ஏற்றம்” பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நேற்றிரவு இம்பெற்ற இந்த தாக்குதலைத் தொடர்ந்து 3 உடலங்களை ஒட்டுக் குழுவினர் இன்று காலை கோமாரிப் பகுதிக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும், ஏனைய 3 உடலங்களும் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நேற்றைய இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், அவர்கள் பொதுமக்களா, அல்லது ஒட்டுக் குழவினரா என்பது தெரிய வரவில்லை. கர…
-
- 2 replies
- 1.9k views
-
-
உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111 [01 - June - 2007] இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக பணியாற்றிவரும் நோர்வேயின் `தகுதி' பற்றி தென்னிலங்கையின் கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை கேள்வி எழுப்பியும் அந்த நாட்டை அனுசரணைப் பணியிலிருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்ற நிலையில், சமாதானத்தின்பால் அந்தத் தேசம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் குறித்து கேள்வி கேட்பதற்கு எவருக்குமே அருகதையில்லை என்பதை நிரூபிப்பது போன்று `எக்கனோமிஸ்ட்' என்ற வாரப் பத்திரிகையுடன் தொடர்புடைய பொருளாதார புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரங்களை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. உலக சமாதான சுட்டெண் பட்டியலில் மிகவும…
-
- 7 replies
- 1.8k views
-
-
Posted on : Fri Jun 1 5:42:24 EEST 2007 சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திரிகா வழியில் ராஜபக்வும்! அவரைப் பேட்டி கண்டு உரையாடிய அல்-ஜெஸீரா செய்தியாளர் "யுத்தம் மூலம் சமாதானத்தை அடை தல்' என்ற கொள்கைப் போக்கை முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவின் நிர்வாகம் முன் னெடுத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் கொள்கைப்போக்கை விளக்குவதற் கும் அந்த வாசகமே போதுமானது. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நீண்டநேரம் கலந்துரையாடி பேட்டி கண்ட "அல்ஜெஸீரா' செய்தி நிறுவன ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார். ரிமோர் நமிலி என்ற அந்தச் செய்தியா ளர் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார். அதன் பின்னர் வரைந்த செய்திக் கட்டுரை யில் அவர் தெரிவித்தவை வருமாறு: ""யுத…
-
- 1 reply
- 1.7k views
-
-
Date: 2007-06-01 வரலாற்று மெய் நிலைகளை புறக்கணிக்கும் தென்னிலங்கை ""இலங்கையில் "இனப்பிரச்சினை' அல்லது "தேசியப் பிரச்சினை' என்று எதுவுமே இல்லை. "இனப்பிரச்சினை' ஒன்று உருவாவதற்கு மக்கள் இன ரீதி யாக பிளவுபடுத்தப்பட்டு துருவப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் புலிகளின் பயங்கரவாதத்தால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டமை மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது. சிங்கள நாகரிகத்தின் தாயகம் ஸ்ரீலங்கா. அதனால் சிங்களவர்க்குரிய அவர்களுக்கு மட்டுமேயுரிய ஒரே தேசம் அது. இங்கு தமிழர்கள் வெறும் சிறுபான்மையினர் மட்டுமே. இங்கு அவர்கள் தனித் தேசம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றுக்கு உரிமை கோரமுடியாது. சரித்திர ரீதியாகவும் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் அப்படிக் கோருவதற்கு அவர்களுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐ.தே.க. கடுமையான கண்டனம் [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலைக்குள் வெளியேற்றுமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும், அவர்களைக் கைது செய்வதற்கும் தேவையான சட்டதிட்டங்கள் …
-
- 2 replies
- 1.4k views
-
-
போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியும் ஆற்றல் இந்த அரசாங்கத்துக்கு இல்லை: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த உடன்பாட்டை 2004 ஆம் ஆண்டிலிருந்து கிழித்தெறியப் போவதாகத் கூறிவரும் அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியிருக்கும், சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியவோ, அல்லது புதிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவோ அரசாங்கத்தினால் முடியாது எனவும் தெரிவித்தது. போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக அடுத்த ஓரிரு வாரத்தில் அரசின் முடிவு வெளியிடப்படும் என அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்…
-
- 0 replies
- 1k views
-
-
மணலாற்றில் மோட்டார் எறிகணைத் தாக்குதல்: சிங்கள குடியேற்றவாசிகள் தப்பியோட்டம் மணலாற்றில் உள்ள சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகாரி ஒருவர் உட்பட 5 படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை மணலாற்றில் உள்ள அதவதுநுவெவப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவல் நிலைகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்ட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை அடுத்து அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது. தப்பி…
-
- 0 replies
- 1.7k views
-
-
அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டின் ஷ்ரீலங்காவுக்கான முன்னாள் தூதுவராக பதவிவகித்த பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவுக்கு வந்திருப்பதாகவும் அவர் ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களை ஷ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஏற்பாட்டின் பேரிலேயே இங்கு வந்துள்ளதாகவும் அண்மையில் இந்திய பிரபல ஆங்கில நாளேடாகிய `த ஹிந்து' (The Hindu) தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கிக் கொண்டு இருப்பதாக `த ஹிந்து 'தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த இந்திய நாளேட்டில் மேலும் கூறப்பட்டிருக்கும் தகவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிங்களவர்களே தேசிய இனத்தவர் என்ற விடயம் இறுதி தீர்வில் கட்டாயம் இடம்பெறவேண்டும் வீரகேசரி நாளேடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் வெளியிடப்படுகின்ற இனப் பிரச்சினை தீர்வுக்கான இறுதி யோசனையில் சிங்கள மக்களே இந்த நாட்டின் தேசிய இனத்தவர் என்ற கோட்பாடு உட்படுத்தப்படவேண்டும். இல்லாவிடின் ஜாதிக ஹெல உறுமய கடுமையான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் மூலம் வெளிவரும் யோசனை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : ஜாதிக ஹெல…
-
- 1 reply
- 1.5k views
-
-
மீராவோடையில் தாக்குதல் தமிழ் இளைஞன் உயிரிழப்பு வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இராணுவ லெப்டினன்ட் ஒருவரும் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக்காலை 9.40 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மீராவோடை பகுதியைச் சேர்ந்த எம். கோகுலன் (27 வயது) என்றழைக்கப்படுபவரே பலியானவராவார். இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என தெரிவித்த பொலிஸார் இவரின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இராணுவ லெப்டினன்ட் லந்தலால் (32 வயது) என்றழைக்கப்படுபவர் வாழைச்சேனை வைத்தியசாலைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாடுகள் சிறிலங்காவின் போர்நடவடிக்கைகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் வரை மனிதஉரிமை மீறல்களைத் தடுக்க முடியாது. -மனோகரன்- இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சர்வதேசக்கவனம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்குச் சாதகமானதாக, நீதியின்பாற்பட்டதாக அமையுமா என்ற கேள்வி தற்போது பலதரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே வெளிச்சக்திகளின் தலையீடு அல்லது பங்கேற்பு என்பவற்றால் எந்த நன்மையும் பெறாத தமிழ்மக்கள் இப்போது புதிதாக உருவாகிவரும் வேறொரு கவனம் குறித்து இவ்வாறு சிந்திப்பது தவிர்க்க முடியாதது. இருபது ஆண்டுகளுக்கு முன்பான இந்தியத்தலையீடும் பின்னர் அண்மையில் நோர்வேயின் பங்கேற்பும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் எந்த முன்னேற்றத்தைய…
-
- 0 replies
- 916 views
-
-
புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவினுடையது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள் புங்குடுதீவில் உள்ள கடற் கரைப்குதியில் இராணுவச் சாக்கு ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதிகள் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளினுடையது என மரபணு (DNA) சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வியாழக்கிழமை மகரகம மருத்துவனையின் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் பகுதிகளும், ஜிம் பிறவுண் அடிகளாரினது பெற்றோரின் குருதி மாதிரிகளையும் தாம் பெற்றுள்ளதாகவும் விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் எனவும் மருத்துவமனையின் சட்டபூவமான அதிகாரி ஒருவர் முன்…
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிகளிடம் வான்வெளி படை இந்தியா விரும்பவில்லை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து சென்னை, மே 31- விடுதலைப்புலிகள் வான்வெளி தாக்குதலுக்குரிய சக்தியை பெற்றிருப்பதை இந்தியா விரும்பவில்லை என்று பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறினார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை செய்வதற்காக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று சென்னை வந்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழ்நிலைகளை பற்றியும், கப்பற்படையை பலப்படுத்துவது குறித்தும் பேசினோம். தூத்துக்குடி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் …
-
- 4 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 18:57 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் பல காலமாக இடம்பெற்று வரும் போர், அங்குள்ள சமூகங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அதிகரித்துள்ளது. இருதரப்பும் குற்றம் சுமத்தப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்களை கொண்டுள்ள அரசானது சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களையும், மதங்களையும் சிறுமைப்படுத்தி வருகின்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆய்வில் ஜோன் றுவிச் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தேங்காயை எரியும் பித்தளை எண்ணெய் விளக்கிற்கு அருகில் வைப்பதன் மூலம் சாதாரண மேசையை ஒரு இந்து சமய முறையுள்ள மேசையாக மாற்றியிருந்தனர். அங்கிருந்த பெண் எம்முடன் பேசும் போது தனது எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 19:54 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம…
-
- 11 replies
- 2.7k views
-
-
May 31, 2007 at 06:49 PM வத்தளை, ஹெந்தளை மற்றும் மாபொல பகுதிகளில் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்தே பாரிய அளவில் இந்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு வீடு வீடாக இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று போயா விடுமுறை தினம் ஆகையால் அனைவரும் வீட்டில் இருக்கும் மற்றும் வாகன போக்குவரத்துக்களும் குறைவாக இருக்கும் இந்த தருணத்தில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது தமது அடையாளங்களை நிரூபிக்க தவறியுள்ளனர் எனத் தெரிவித்து இதுவரை சுமார் 30மேற்பட்ட இளைஞர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
மணலாறில் எறிகணைத் தாக்குதல்: படைச் சிப்பாய் பலி! மேலும் ஒருவர் படுகாயம் மணலாறு ஆணைவிழுந்தான் பகுதி நோக்கி விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்தனர். காயடைந்த இருவரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் ஒருவர் சிகிற்சைகள் எதுவும் பலனின்றி உயிரிழந்தாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. பதிவு
-
- 0 replies
- 946 views
-
-
சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம…
-
- 22 replies
- 3.6k views
-
-
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு காணொளி
-
- 0 replies
- 1.5k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 17:22 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது: நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெ…
-
- 6 replies
- 1.4k views
-