Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மரண தண்டனையா? அல்லது 5 இலட்சம் அபராதத் தொகையா? நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு கடிதம் மூலம் எச்சரிக்கை. தாங்கள் விரும்பும் பட்சத்தில் மரண தண்டனைக்குப் பதிலாக இப்படியான பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற இறுதி எச்சரிக்கையுடன் தங்களிடமிருந்து அபராதத் தொகையைப் பெற்றுக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதுவிதமான விவாதமின்றி உடனடியாக ஐந்து இலட்சத்தினை அபராதப் பணத்தினை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு என்ற அமைப்பு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளது. அக்கடித்தின் விரிப்பு வருமாறு... பெயர் முகவரி திகதி தாங்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பயங்கரவாதிகளின் …

  2. Gjd;fpoik, 30 Nk 2007 ] [ yf;];kd; ] Nearly 80 pro-Pillaiyan cadres are held incommunicado in deplorable condition in camps run by Karuna supporters. Also 27 women, who are mostly mothers and wives of Pillaiyan supporters are detained illegally and held by Karuna's cadres. These detained women are wives and mothers of those Pillaiyan supporters who have left Amparai Batticaloa and joined Pillaiyan group in the Trincomalee district. A spokesman for Pillaiyan group told that the Karuna and Pillaiyan began attacking each other soon after Ajith, Devilkanth, Jeyanthan and Seelan joined with Pillaiyan group. The spokesman further said that when the cadres were on their way…

    • 0 replies
    • 674 views
  3. இலங்கை விமானப்படையினர் மத்தியில் ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது. மூடிய அறையில் அடிக்கடி இரகசியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஆலோசனைக்காக நிபுணர்கள் அழைக்கப்படுகின்றனர். என்னதான் நடக்கின்றது விமானப்படையில்? வேளிப்படையாகப் பார்க்கும் போது, வான்புலிகளின் அச்சுறுத்தலை எப்படிச்சமாளிப்பது என்பதற்கான ஆலோசனைகளும் முன்னேற்பாடுகளும் இவை என்பது போலத் தெரிந்தாலும் உள்ளேயிருப்பது வேறு பிரச்சினை என்கிறார்கள் விடயம் தெரிந்தவர்கள். விமானப்படையுடன் தொடர்புடையவர்கள் எமது கொழும்புத் தொடர்பாளர்கள், சில பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் என்று நாம் ஒரு சுற்று விசாரணைகளில் ஈடுபட்டோம். அப்போது தெரியவந்த விசயங்கள் அதிர்ச்சியானவை. ஏதோ மர்ம நாவல் படிப்பது போல…

  4. ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் [31 - May - 2007] கடந்த மார்ச் மாதம் இந்திய மீனவர்கள் புலிகள் இயக்கத்தினரால் பாக்கு நீரிணைக் கடல் பகுதியில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது பற்றி இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கையில், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அண்மையில் மிக மோசமான அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இதுவென்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களைப் புலிகள் இயக்கத்தினரே பிடித்துச் சென்று தடுத்து வைத்தார்கள் என்ற தகவல் வெளியானதைத…

  5. ஹெல உறுமயவின் `வாய்ப்பாடு' [31 - May - 2007] இனநெருக்கடிக்கு துரித தீர்வைக் கண்டு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகமும், உள்நாட்டிலுள்ள நியாய சிந்தை படைத்ததோரும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையில் தென்னிலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதிப்புக்குரியவர்களான பௌத்த மதகுருமாரின் ஜாதிக ஹெல உறுமய இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று இல்லை. தமிழ் மக்களுக்கு துயரங்கள், சிக்கல்கள் இருப்பதாக தமக்குத் தென்படவில்லையென்ற `வாய்ப்பாட்டை' மீண்டும் பாடியுள்ளது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் முளைவிட்ட இனநெருக்கடி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம்பெற்ற பின் அரச நிர்வாக இயந்திரம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளிடம் கைமாறிய பின…

  6. Posted on : Thu May 31 5:35:59 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசு முடிவுசெய்யவேண்டிய காலம் வந்துவிட்டது இன்றைய தள நிலையில் அது அர்த்தமற்றதாகி விட்டதாக அறிவிப்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்துத் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கும் இன்றைய தள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகையால், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளோம். அரசாங்கத்தின் சார்பில் இந்தத் தக வலை வெளியிட்டார் அமைச்சர் ஹெகெ லிய ரம்புக்வெல. நேற்றைய ஊடகவ…

  7. Posted on : Thu May 31 5:40:46 EEST 2007 அநுராதபுரத்தில் இன்று பொசன் விழா; புலிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை அநுராதபுரத்தில் இன்று பொசன் போயா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் புலிகள் அங்கு குண்டுத்தாக்குதல் நடத்தலாம் என்றும் மக்கள் அங்கு விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச் சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க எச்சரித்திருக்கிறார். நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதா வது: புலிகள் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கொழும்பில் இரண்டு குண்டுத் தாக்குதல் களை நடத்தி விட்டனர். இரண்டு தாக்குதல்களும் மக் களைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இதுவரை விழிப்பாக இருந்ததன்…

  8. லக்பீம பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளர் மீது கடற்படையினர் தாக்குதல். லக்பீம பத்திகையின் புகைப்படப் பிரிவில் பணிபுரியும் சஞ்சீவ சின்ரக சிறீலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை தாக்கபட்ட இவர் கொழும்பு தேசிய பொது மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது பத்திகைப் பணிமனைக்குச் செல்லும் வழியில் உள்ள சிறீலங்காப் படையினரின் சோதனைவடியிலேயே இவர் தாக்கப்பட்டுள்ளார். சிறீலங்காப் கடற்படையினர் இலங்கை தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டபோது சஞ்சீவ சின்ரக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஊடவியலாளர் அடையாள அட்டையை காண்பித்த போது எழுந்த வாக்குவாதத்திலேயே இவர் படையினரால் தா…

  9. விடுதலைப் புலிகளுக்கு உதவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுக்கு நேரடியற்ற விதத்தில் உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படையினர் தமது எல்லைகளை மீறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். தேடுதல் மற்றும் கைது செய்தல் என்பன பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். கிழக்கில், விடுதலைப் புலிகள் தோல்வி கண்டதனால் தெற்கில் தாக்குதலை நடத்துகின்றனர்.…

  10. யாழ். நகரை மீட்க புலிகள் பெரும் திட்டம்; இந்தியாவிடம் ஏவுகணை கேட்கும் இலங்கை! மே 30, 2007 டெல்லி: யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால் பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்கும் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள் தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் இலங்கை அரசுக்கும்இ அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்க…

  11. வியாழன் 31-05-2007 05:37 மணி தமிழீழம் [மயூரன்] உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111வது இடத்தில் சிறீலங்கா உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111 இடத்தில் சிறீலங்கா வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. ஜி-8 நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சமாதான சுட்டெண் வரிசையில் அல்ஜீரியா தொடக்கம் சிம்பாவே வரையான 121 நாடுகள் பட்டியலிடப்பபட்டுள்ளன. நோர்வே 1வது இடத்திலும்இ அமெரிக்கா 96வது இடத்திலும்இ இந்தியா 109வது இடத்திலும்இ சிறீலங்கா 111வது இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன. வரிசை நாடுகள் மதிப்பெண் 1 Norway 1.357 2 New Zealand 1.363 3 Denmark …

    • 1 reply
    • 1.1k views
  12. வியாழன் 31-05-2007 01:57 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்ரர்.ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ இந்தியாவை சிறீலங்கா அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை சிறீலங்காவற்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். தீடீரென இந்தியாவிற்கு விஐயம் செய்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராயபக்ச இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவியானது சிறீலங்காவில் அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக உபயோகிக்கப்படும் எனவும் 6.5 கோடி இந்த…

  13. இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோ…

  14. மண்முனை, பட்டிப்பளை பகுதிகளில் மக்களை குடியேற்றும் பணி நாளை ஆரம்பம் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் எஸ். அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உள்ளூர் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்படி நாளை 1 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்ற…

  15. கட்டுநாயக்க வான்பரப்பில் விமானப்படையினர் ஒத்திகை வீரகேசரி நாளேடு கட்டுநாயக்க வான் பரப்பில் நேற்றிரவு விமானப்படையினர் விமானத் தாக்குதல் எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மின்விளக்குகள் அணைக்கப்பட்ட விமானங்களை வானில் பறக்கவிட்ட விமானப்படையினர், படைத்தளத்திலிருந்து வானை நோக்கி விமான தாக்குதல் எதிர்ப்பு கருவிகளை இயக்கினர். இதனால், வான் பரப்பில் பெரும் வெளிச்சம் தென்பட்டதுடன், பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்களும் கேட்டன. இதன்காரணமாக கட்டுநாயக்க உட்பட அதனையண்டிய பிரதேங்களில் பதற்றம் நிலவியது. பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து, விமானப் படையினர் ஒத்திகையில் ஈடுபடுவதாக மக்களுக்கு பொலிஸார் தெரியப்படுத்தினர். முன்னறிவிப்பு செய்யப்படாமல் ஒத்திகையில் ஈடுபட்…

  16. புறக்கோட்டையில் குண்டுப்புரளி வீரகேசரி நாளேடு புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தையில் உள்ள பௌத்த விஹாரைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியது. நடைபாதை வியாபாரிகள், ஊழியர்கள், பயணிகள் எனப் பலரும் அச்சம் காரணமாக பதறியடித்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அதில் குண்டுக்குப் பதில் செங்கல்லே இருந்தது. இதனையடுத்து, புறக்கோட்டை பிரதேசம் வழமைக்குத் திரும்பியது. எனினும், சன நடமாட…

  17. வியாழன் 31-05-2007 01:30 மணி தமிழீழம் [சிறீதரன்] உயிலங்குளம் சோதனைச் சாவடி மீளதிறப்பு மன்னார் மாவட்டத்திற்கும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கும் இடையேயான சோதனைச்சாவடி புதன்கிழமை காலை 9 மணிக்கு மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஒருவாரகாலமாக இவ்சோதனைச்சாவடி சிறீலங்கா படையினரால் மூடப்பட்டிருந்தமையும் இதனால் பெருமளவிலான பொதுமக்கள் பலநெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தமை தெரிந்ததே. இதேவேளை இச்சோதனைச்சாவடியானது வாரத்தில் திங்கள்;, புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மாத்திரமே திறந்திருக்கும் எனவும் தெரியவருகிறது. பதிவு

  18. ஸ்ராண்டட் பத்திரிகையின் உரிமையாளர் கைது [புதன்கிழமை, 30 மே 2007, 18:44 ஈழம்] [க.திருக்குமார்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிதித் தொடர்புகளை வைத்திருந்ததாகக் கூறி கொழும்பில் இருந்து வெளிவரும் ஸ்ராண்டட் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரான ரிரான் அலஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபரான ரிரான் அலசிடம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பின்னர் சுகவீனம் காரணமாக நவலோக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைச் சுற்றிவர 15-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நிற்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. puthinam

  19. இன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....6c3f678819b6e05

  20. கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தல்: தூதரகங்களில் முறைப்பாடு. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்படுவது தொடர்பாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்களில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டதன் தொடர்ச்சியாக முஸ்லிம் வர்த்தகர்களும் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாட்டு தூதரகங்களை அணுகியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், அந்த நாடுகள் தமது அழுத்தங்களை அரசு மீது பிரயோகித்து இதனை உடனடியாக நிறுத்த முன்வரவேண்டும் என கேட்டுள்ளனர். இது தொடர்பாக அதிக கவனங்களை செலுத்துவதாக இ…

    • 4 replies
    • 1.4k views
  21. புதன் 30-05-2007 20:03 மணி தமிழீழம் [மயூரன்] மடு முன்னரங் நிலைகளில் மோதல் - 5 படையினர் பலி இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் சிறீலங்கா படையினர் வவுனியா மன்னார் முன்னரங் நிலைகளில் இருந்து மடுநோக்கி மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.இதன்போது சிறிலங்கா படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& தம்பனை ஊடான இராணுவ முன்னகர்வு முறியடிப்பு Written by Ellalan - May 30, 2007 at 06:52 PM மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ம…

  22. படையினரின் ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் இயக்கச்சியில் பொதுமகன் பலி. இன்று காலை 7 மணியளவில் இயக்கச்சிப் பகுதி நோக்கி படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார். பலியானவர் பாலசுப்ரமணியம் என தெரியவந்துள்ளது. Civilian killed in SLA artillery attack in Iyakkachchi A civilian was killed Wednesday morning around 7:00 a.m. in Iyakkachchi, north of the Elephant Pass (A:naiyi'ravu) as Sri Lanka Army (SLA) intensified artillery shelling hitting the houses in the village, civilians who fled the area said. The victim, a male, was identifed as Balasubramaniam. Iyakkachchi, located 6 km north of the Elephant Pass (EPS) in Pachchilaippa'…

  23. தென்மராட்சி நோக்கி படையினரையும், போர்த்தளபாடங்களையும் நகர்த்தும் படையினர். தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களுக்கு நேற்று முன்தினமிரவு 8.00 மணியிலிருந்து அதிகாலை 1.00 வரை பாரிய போர்த்தளபாடங்களும் டாங்குகளும் ஏ-9 பிரதான சாலை வழியாக நகர்த்தப்பட்டு இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய ஊர்திகள் பிரதான இப்பாதை வழியாக நகர்ந்ததால் ஊர்திகள் செல்லும் சத்தம் இப்பிரதேசம் எங்கும் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கும் மக்கள் இப்போர்த தளபாடங்கள் படைத்தளங்களுக்கு நகர்த்தப்பட்ட சமயம் தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களிலிருந்தும் கிளாலி படைத்தளத்தில் இருந்தும் படையினரால் அரசகட்டுபாடற்ற பிரதேசங்களை நோக்கி சரமாரியாக எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற…

    • 4 replies
    • 2k views
  24. மர்ம படகுகள் குறித்த அச்சத்தால் படையினர் கடலை நோக்கி தாக்குதல். வேலனை கடற்பிரதேசத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2.00 மணியளவில் கடற்படைமுகாமிலிருந்தும் கடற்படையின் டோராப் பீரங்கிப் படகிலிருந்தும் சரமாரியான துப்பாக்கி பிரயோகங்களும் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்று இருப்பதாக இப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடலில் சில மர்ம படகுகள் நடமாடியதாகவும் இதனைத் தொடர்ந்து குறித்த படகுகள் தொடர்பான அச்சத்தால் கலக்கமடைந்த படைத்தரப்பு கடற்பகுதியை நோக்கி தாக்குதலை மேற்கொண்டு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தின் கடற்படைபரப்பின் மீது காலை 6.00 மணியளவில் இரு தடவைகள் படை உலங்கு வானூர்தி இரண்டு கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் இப்பிரதேச மீனவர்கள் தெரி…

  25. புதன் 30-05-2007 06:04 மணி தமிழீழம் [தாயகன் சிறீலங்காவிற்கான இராஜதந்திர அலுவலகம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பலஸ்தீனத்தில் அமைக்கப்பட இருப்பதாக, துணை வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா தெரிவித்துள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு பலஸ்தீன அரசிடம் இருந்து தமது வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்திருப்பதாகவும், றமாலாவில் அமைக்கப்படவுள்ள முதலாவது அலுவலகத்தின் இராதந்திரியாக ரி. ஜயசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் பைலா கூறினார். பலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக தூதரகம் அமைக்கும் எண்ணம் தற்பொழுது இல்லை எனவும், துணை வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா தெரிவித்தார். முதலில் அமைக்கப்படவுள்ள இராஜதந்திர அலுவலகத்திற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் அதி…

    • 0 replies
    • 861 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.