ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
திருத்தந்தையின் தரிசனமாவது திருந்தி நடக்க வழிசெய்யுமா? ` இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக மீறப்பட்டு வருகின்றமை இன்று சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுகள் ஆயுதக்குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக மட்டுமல்லாமல், நாட்டின் அரசுக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவும் கூட பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுதான் இங்கு முக்கிய பிரச்சினை. அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், ஆட்கள் காணாமற் போகச் செய்தல், படுகொலை செய்யப்படல் என்று அராஜகங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கின்றன. இக்கொடூரங்களைத் தடுப்பதற்கு அரசுத் தரப்பு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசீனமாக நடந்து…
-
- 0 replies
- 574 views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினர் மீது கைக்குண்டு வீச்சு: ஒருவர் பலி வவுனியாவில் சிறிலங்காப் படைத்தரப்பினர் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா ஈரப்பெரியற்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற படையினர் மீது நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் ஆவார். -புதினம்
-
- 1 reply
- 628 views
-
-
'அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்காவில் மோதல்கள் அதிகரிப்பதற்கு காரணம்': ஜெனீவா அறிக்கை "அமெரிக்காவினால் அனைத்துலக ரீதியில் முன்னெடுக்கபட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்கா போன்ற பல நாடுகளின் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமடையக் காரணம். இந்த நாடுகள் அமெரிக்காவின் சொற்பதத்தை பயன்படுத்தி உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இராணுவத் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கியுள்ளன." நோர்வேயின் அகதிகளுக்கான சபையின் ஒரு பிரிவான உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கண்காணிப்பு மையம் ஜெனீவாவில் வெளியிட்ட தனது 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்திற்…
-
- 0 replies
- 677 views
-
-
தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்திலே சிந்திய இரத்தத்துக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கடும் குளிருக்குள் தங்கள் குருதியை உறைய வைத்து ஆற்றிய பணிக்குமான ?முதற் கட்ட அறுவடை? மிகச் சிறப்பான முறையில் நிறைவேறியுள்ளது. போராளிகள் மக்கள் என்னும் சமுத்திரத்துக்குள் நீந்தும் மீன்கள் என்பது பொருத்தமான நேரத்தில் புலனாகியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது. புலிகளினுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற ?இக்கட்டு சிந்தனை? சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிக…
-
- 5 replies
- 2.7k views
-
-
'நீ ஒரு விபச்சாரி' ஊடகவியளாளர் மீது கோத்தபாய பாய்ச்சல் [புதன்கிழமை, 18 ஏப்ரல் 2007, 19:33 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, இன்று தனது இத்தாலிய பயணத்திற்கு முன்னதாக சம்பிக்க லியனாராச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச நாளேட்டின் அசிரியரின் பாதுகாப்பில் கோத்தபாயா ராஜபக்ச எடுத்த அக்கறையை அவர் மிகைப்படுத்தி விட்டதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. நாளேட்டின் ஆசிரியர் மிரட்டப்பட்ட சம்பவம் எனது கவனத்துக்கு வந்துள்ளது. சிறிலங்கா இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
''17ஆவது ஆண்டில் புதிய பாய்ச்சலுக்காக காத்திருக்கும் சாள்ஸ் அன்ரனி படையணி'' - தெ.றஞ்சித்குமார்- விடுதலைப் போராட்டம் இன்று விடுதலைப்புலிகளின் படையணிகளோடும், புதிய படைணிகளின் அறிமுகங்களோடும் எதிரிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை ஆரம்பகால கட்டங்களில் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடாத்துவதற்கு ஈருருளிகளைக்கூட விடுதலைப்புலிகள் பயன்படுத்தியுள்ளனர். போராட்ட வளர்ச்சிக்கால கட்டங்களில் சிறிய குழுக்களாக பெரும் இராணுவ பலங்களின் நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் முகம் கொடுத்தார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் கெரில்லா ரீதியான நடவடிக்கையை மேற் கொண்டு, அடுத்த கட்டமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை தற்போதைய யுத்த நடவடிக்கைகள் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடையும் அபாயம் தோன்றியிருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் வெளிப்படுத்தியபோதும் இக் கணிப்பீட்டில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை. அப்பிரதேசங்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது எனத் தெரிவிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பொருளாதாரக் கணிப்பீட்டில் சேர்க்கப்படுமிடத்து இன்று உள்ளதைவிட வித்தியாசமான பெறுபேறுகளே காணப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இன்று தொடரும்…
-
- 6 replies
- 1.5k views
-
-
யுத்தநிறுத்த உடன்படிக்கையை ரத்தாக்க மேன்முறையீட்டு மனு - ஜே.வி.பி., ஹெல உறுமய, சிங்கள மகா சபா உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் [18 - April - 2007] -த.தர்மேந்திரா- யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தனித்தனியாக 3 மேன்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க, சிங்கள மகா சபையின் தலைவர் டாக்டர் பியசேன திசநாயக்க ஆகியோர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களுக்கு சட்டத் தகுதிப்பாடு கிடையாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்தே உயர்நீதிமன்றத்தில் மேன்ம…
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கையில் யே.வி.பி யினரின் பின்னணியில் புதிய ஆயதப்படை ஒன்று உருவாகியுள்ளது. தேசிய மக்கள் படை என்ற பேரில் உருவாகியுள்ள இந்தப் படையினருக்குப் பொறுப்பாக மேஜர் றத்னபிரிய என்பவர் பொறுப்பாக இருப்பதாகவும், கல்கிரியகம என்ற இடத்தில் இந்தப் படைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அறிய முடிகிறது. இந்தப் படையில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.nitharsanam.com/?art=22553
-
- 14 replies
- 3.6k views
-
-
கருணா குழுவினர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லை. Wednesday, 18 April 2007 கொழும்பில் வெளிவரும் ஆங்கில நாளிதழான டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராய்ச்சிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. டெய்லி மிரர் பத்திரிகையில் கருணாகுழுவினர் பற்றிய செய்திகளை பிரசுரிக்க வேண்டாமென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ள அதேவேளை கருணா குழுவினர் டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தல் அதற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளர் சுனந்த தேஷப்பிரிய தெரிவித்…
-
- 9 replies
- 2.6k views
-
-
'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை "எமது பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுப்பதன் மூலம் அது எதளையோ மறைக்க முயல்கின்றது" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு என அங்கு சென்றிருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் றொப் கோடன் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அது எதனையோ மறைக்க முயல்வதனை கா…
-
- 8 replies
- 1.9k views
-
-
புதன் 18-04-2007 21:03 மணி தமிழீழம் [மயூரன்] 3 மாதத்திற்கு பின்னரே படுவான்கரை மக்கள் மீள்குடியேற்றப்படுவர் - பசில் ராஜபக்ச படுவான்கரை மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் தலைமையில் கொழும்பு அரச செயலகத்தில் மட்டக்களப்பு அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் சந்தி்ப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டுக்களப்பு படுவான்கரை மக்களை மூன்று கட்டங்களாக மீளவும் குடியேற்ற சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ் மீள் குடியேற்றங்கள் எதிர்வரும் யூலை 30 நாளுக்குப் பின்னரே சாத்தியப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முதலாவது மீள் குடியேற்றம் வெல்லாவெளிப் பிரதேசத்திலும், இரண்டாவது மீள் குடியேற்றம் பட்ட…
-
- 0 replies
- 908 views
-
-
ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அரசாங்க அமைச்சர்களின் வார்த்தை பிரயோகங்கள் உள்ளன: சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம். - பண்டார வன்னியன் Wednesday, 18 April 2007 15:35 அமைச்சர்கள் மற்றும் பங்காளிகளின் வார்த்தைப் பிரயோகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசின் பங்காளர்களுடைய வார்த்தைப் பிரயோகம், அவர்களின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது அரசாங்கத் தலைவர்களும் அரசில் அங்கம் வகிப்பவர்களும் சுதந்திரமான ஊடகச் செயற்பாடுகளைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுதந்திர ஊடக இயக்கம் கூறுகிறது. கருணா குழுவினர் தொடர்பான செய்திகளை வெளியிடுவது பற்றி …
-
- 1 reply
- 874 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு மிக் - 27 ரக வானூர்திகள் இன்றும் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. [Wednesday April 18 2007 02:41:03 PM GMT] [யாழ் வாணன்] புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. தமிழ்வின்
-
- 0 replies
- 726 views
-
-
ஏறாவூர் சந்திவெளி பகுதியில் இறங்குதுறை படகொன்று கவிழ்ந்ததில் சிலர் உயுரிழந்து இருக்கலாம் என நம்பபடுகிறது. [Wednesday April 18 2007 02:12:22 PM GMT] [யாழ் வாணன்] படகு கவிழ்ந்த்தில் சிலர் உயிரிழந்ததாகவும் சம்பவ ஸ்தளத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏறாவூர் பொலிஸ் நிலைய இடத்திலிருந்து 3 கூலங்கள் மீட்கப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்வின்
-
- 0 replies
- 620 views
-
-
விடயம்: சிறீலங்கா சனதிபதியின் வத்திக்கான் பயணம் நோக்கம்: சிறீலங்கா சனதிபதி எதிர்வரும் வெள்ளி 20.04.07ல் வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறீலங்காவின் மனிதவதை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவன ஈர்ப்பினைக் கோரும் நடவடிக்கை. படுகொலைகள் - காணமல் போதல் உட்பட்ட மனிதவதைகளை உடனடியாக சிறீலங்கா நிறுத்தல் வேண்டுமெனக் கோரியும், சர்வதேசக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளல், பயங்கரவாத தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம், ஏ-9 வீதி மூடப்படல் போன்ற விடயங்களை நீக்கும் உறுதிமொழியை சிறீலங்காவிடமிருந்து புனித பாப்பரசர் கோரல் வேண்டுமெனக் வேண்டுதல். வழிமுறை: புனித பாப்பரசருக்கு நேரிடையாகவும், வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கானிற்கான தூதுரகம்…
-
- 5 replies
- 1.9k views
-
-
குடாநாட்டை ஆக்கிரமித்துவரும் `கசிப்பு' இளைஞர்களும் பெருமளவில் அடிமையாகின்றனர் யாழ்குடா நாட்டிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மதுபான வகைகள் எதுவும் தென்னிலங்கையிலிருந்து எடுத்துவரப்படாத நிலையில் குடாநாட்டுக் "குடிமக்களின்" ஒரே தெரிவாக இன்று கசிப்பே உள்ளது. இதன் காரணமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை என்றுமில்லாதவாறு களை கட்டியுள்ளது. குடாநாட்டின் மூலை, முடுக்கெங்கும் கசிப்பு உற்பத்தி, விற்பனை எவ்வித தடைகளும் இடையூறுகளுமின்றி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணத்தில் தற்போது வெளிநாட்டு, உள்நாட்டு மதுபான வகைகளைப் பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. திக்கம் வடிசாலையில் உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாராயம் மட்டும்தான் மதுப்பிரியர…
-
- 3 replies
- 948 views
-
-
மனித உரிமை மீறல்களில் இலங்கை அலட்சியம் பாப்பரசருக்கு `ஹியூமன் றைற்ஸ் வோற்ச்' கடிதம் அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ஹியூமன் றைற்ஸ் வோற்ச் (Human rights watch) அமைப்பு இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான விபரங்கள் அடங்கிய கடிதமொன்றை பரிசுத்த பாப்பரசருக்கு அனுப்பியுள்ளது. இலங்கையில் ஆயுதப் பிணக்குகளில் ஈடுபட்டுள்ள தரப்பான அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்து அலட்சியப்படுத்தி நடந்து கொள்வதாக இக்கடிதத்தில் இவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அலட்சியப்படுத்தி செயற்படுவதாக விடுதலைப் ப…
-
- 3 replies
- 758 views
-
-
பொதுமக்கள் மீதான மோசமான தாக்குதல்கள் உட்பட அனைத்து வகையான தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம் -அமைச்சர் போகொல்லாகமவிடம் இத்தாலிய உப பிரதமர் இலங்கையின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு யோசனையை சர்வகட்சி மாநாடு மூலம் ஏற்படுத்திக் கொள்வதோடு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இது அடித்தளமாக அமையுமென்றும் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இத்தாலிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம அந்நாட்டின் உப பிரதமரும் வெளிநாட்டமைச்சருமான பெசிமோ டி அலேமாவை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இதன்போது இத்த…
-
- 0 replies
- 522 views
-
-
வாகரையில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாயும், மகனும் சுட்டுப் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2007, 16:18 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு வாகரையில் இராணுவத்தினரால் தாயும் மகனும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முத்தையா சிவமணி (வயது 58), அவரது மகன் முத்தையா பாஸ்கரன் ஆகியோரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். கொல்லப்பட்ட இருவரும் தமது சொந்த இடமாகிய வாகரைப் பகுதியில் உள்ள பனிச்சங்கேணி, கோவிற்குடியிருப்பில் இருந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனையில் வசித்து வந்த போது படையினரால் வாகரைக்கு பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு…
-
- 2 replies
- 1.1k views
-
-
புதன் 18-04-2007 03:24 மணி தமிழீழம் [தாயகன்] கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு வன்னியில் பூநகரிக் கடற் பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. யாழ் குருநகர், பாசையூர், மற்றும் நாவாந்துறை கடற்றொழிலாளர்கள் நேற்று காலை கடலுக்குச் சென்றபோது, அவர்களுடன் கடற்றொழிலாளர்கள் போன்று 3 படகுகளில் 18 கடற் படையினர் சென்றிருந்தனர். வன்னி கடற் பரப்பை அண்டிய பகுதிகளில், வன்னியில் இருந்து சென்று தொழில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறீலங்காப் பட…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் மன்னிப்புச் சபை போராட்டம் நடத்துகின்றது: மகிந்த சமரசிங்க அனைத்துலக மன்னிப்புச் சபையினால் 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' என்ற போராட்டமானது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் நடத்தப்படுவதாக சிறிலங்காவின் மனித உரிமைககளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக மன்னிப்புச் சபையினால் நடத்தப்படும் போராட்டமானது சிறிலங்காவின் நற்பெயரை கெடுக்கும் முகமாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் அதிகளவில் பொது மக்களை கவர்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இதற்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம், அனைத்துலகத்தின் தரப்புக்களுடன் மனித உரிமை தொடர்பாக பேசி வருகின்றது.…
-
- 1 reply
- 956 views
-
-
இலங்கை விமானப்படை, கடற்படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் [18 - April - 2007] -கே.பி.மோகன்- இலங்கை விமானப் படைக்கும் ,கடற்படைக்கும் ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது எதிர்பார்த்த இலக்கு எட்டப்படாத நிலையிலேயே மீண்டும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை படை நடவடிக்கைகளுக்கு பெண்களிடமிருந்து அதிகளவு விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன
-
- 0 replies
- 826 views
-
-
இளைஞர்களின் சேஷ்டைகளைக் கண்டித்து குருநகர்ப் பகுதியில் மாணவர் ஆர்ப்பாட்டம் தமது சுதந்திரமான கற்றல் நட வடிக்கைக்கு இடையூறு விளைவிக்காமல் ஆதரவு வழங்குமாறு குருநகர்ப் பகுதியிலுள்ள இளைஞர்களிடம் கோரி குருநகர்ப்பகுதி யைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப் பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். இப்பேரணி திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலயத்திலி ருந்து ஆரம்பமாகி குருநகர் வீதிகளூடாகச் சென்று குருநகர் கல்விக் கழகம் முன்பாக அமைந் துள்ள குருநகர் புனித மலர்கள் கட்டடத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் அருட்சகோதரிகள், மாணவர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். குருநகர் ஆறாம் குறுக்கு வீதியின் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் பெண் கள் பாடசாலையி…
-
- 0 replies
- 712 views
-
-
எதிர்ப்பின் மத்தியிலும் கிழக்கில் தமிழர்கள் வேறு இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர் கூட்டமைப்பு கூட்டத்தில் கண்டனம் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல், வேறு இடங்களில் தொடர்ந்தும் குடியேற்றி வருகிறது. நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக நீண்டநேரம் ஆராய்ந்தனர். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகளை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி மக்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் அரசாங்கம் குடியேற்றி வருகிறது. இது குறித்துப் பலதடவைகள் அரசிடம் எடுத்துக் கூறியும் அது செவிசாய்ப்பதாக இல்லை என்று திருமலை …
-
- 0 replies
- 743 views
-